டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

இன்கம் டேக்ஸ் ஆக்ட் செக்ஷன் 40ஏ(2): செலவினங்களுக்கு டிஸ்அலவன்ஸ் விளக்கப்பட்டது

இன்கம் டேக்ஸ் ஆக்ட் செக்ஷன் 40ஏ(2) ஒரு தனிநபரோ அல்லது ஒரு நிறுவனமோ எக்ஸ்பென்ஸ்களை டிடக்ஷன்களாக கிளைம் செய்வதை இன்கம் டேக்ஸ் ஆபிசர் டிஸ்அலோ செய்வதற்கு அனுமதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்திற்கு செய்யப்படும் பேமென்ட்கள் நியாயமற்றவை அல்லது சம்பந்தப்பட்ட சர்வீசஸ்கள், பொருட்கள் அல்லது வசதிகளின் நியாயமான சந்தை மதிப்பை விட அதிகமாக இருக்கும் என்று அவர் நம்பும்போது இது நடைமுறைக்கு வருகிறது. இந்த பகுதியைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.

செக்ஷன் 40ஏ(2) இன் கீழ் எந்த டிடெக்ஷன் டிஸ்அலோ செய்யப்படவில்லை?

டிரான்ஸாக்ஷன் பின்வரும் மூன்று நோக்கங்களை பூர்த்தி செய்யும் போது இன்கம் டேக்ஸ் ஆக்ட் செக்ஷன்40ஏ(2) பொருந்தும்:

  • பேமென்ட் என்பது எந்த வகையான எக்ஸ்பென்டிசரும் ஆகும்.
  • இன்கம் டேக்ஸ் ஆக்ட் குறிப்பிட்டுள்ளபடி "குறிப்பிட்ட நபர்களுக்கு" பேமெண்ட் செய்யப்படுகிறது அல்லது செலுத்தப்பட வேண்டும்.
  • சர்வீசஸ்கள், பொருட்கள் அல்லது நியாயமான மார்க்கெட் வேல்யூவை விட அதிகமாக எக்ஸ்பென்சஸ் ய்யப்பட வேண்டும்.

[ஆதாரம்]

செக்ஷன் 40ஏ(2) இல் சப்ஸ்டான்ஷியல் இன்ட்ரெஸ்ட் & ஸ்பெசிஃபைடு பர்சன் என்றால் என்ன?

தனிநபர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, சப்ஸ்டான்ஷியல் இன்ட்ரெஸ்ட் கொண்ட ஒரு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர், மதிப்பீட்டு அலுவலரால் அடையாளம் காணப்பட்ட சர்வீஸஸ்கள் அல்லது பொருட்களின் எஃப்.எம்.வி (FMV)-ஐ விட அதிகமான அமௌன்ட்டைச் செலுத்துவார்.

இரண்டாவதாக, அந்த நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் பணம் செலுத்தும் பல்வேறு வகை "ஸ்பெசிஃபைடு பர்சன்களின்" பட்டியல் உள்ளது, மேலும் அந்த செலவை ஒரு டிடக்ஷனாக கிளைம் செய்ய முடியாது.

1. சாப்ஸ்டான்ஷியல் இன்ட்ரெஸ்ட்

ஒரு நபர் பெரும்பான்மை பங்கைக் கொண்டிருக்கும்போது மற்றும் ஒரு நிறுவனத்தில் 20%-க்கும் அதிகமான வோட்டிங் ரைட்ஸைக் கொண்டிருக்கும்போது சப்ஸ்டான்ஷியல் இன்ட்ரெஸ்ட் பொருந்தும். இல்லையெனில், அத்தகைய நிறுவனம் ஈட்டும் இலாபத்தில் குறைந்தபட்சம் 20% பெற்று, சப்ஸ்டான்ஷியல் இன்ட்ரெஸ்ட் வைத்திருக்கும் ஒரு நபர். இந்த இரண்டாவது நிலைமையில் தனியுடைமை, தனிநபர்களின் அமைப்பு மற்றும் நபர்களின் சங்கங்கள் ஆகியவற்றைக் கருதுகிறது.

2. ஸ்பெசிஃபைடு நபர்கள்

இன்கம் டேக்ஸ் ஆக்ட் பட்டியலிடப்பட்டுள்ள "குறிப்பிட்ட நபர்" ஒரு நிறுவனமாகவோ அல்லது தனிநபராகவோ இருக்கலாம்.

ஸ்பெசிஃபைடு நபர்களின் பட்டியலில் யார் சேர்க்கப்பட்டுள்ளனர்?

எடுத்துக்காட்டுகளைத் தொடர்ந்து யாரெல்லாம் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதற்கான பட்டியல் இங்கே:

1. மதிப்பீட்டாளர் தனிநபர்களாக இருந்தால்

இன்கம் டேக்ஸ் ஆக்ட்1961-இன் செக்ஷன்2(41) இன் படி ரிலேட்டிவ்ஸ் பின்வருமாறு:

  • உடன்பிறந்தவர்கள்
  • ப்ரைமரி ஸ்டேக்ஹோல்டரின் மனைவி
  • தாத்தா, பாட்டி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட ஒரு குடும்பத்தின் வாரிசு அல்லது மூத்தவர்

மேலே குறிப்பிடப்பட்ட இந்த நபர்களில் யாராவது ஒரு நிறுவனத்தில் சப்ஸ்டான்ஷியல் இன்ட்ரெஸ்ட் கொண்டிருக்கும்போது சம்பந்தப்பட்ட செக்ஷன் பொருந்தும்.

உதாரணமாக:

அசோக் தனது தொழிலை செய்து வருகிறார். தனது நெருங்கிய உறவினருக்குச் சொந்தமான நிறுவனத்தில் அவருக்கு 22% ஷேர்கள் உள்ளன. திரு அசோக் தனது ரிலேட்டிவுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு ஒரு அமௌன்ட் செலுத்தினால், அந்த நிறுவனம் ஒரு "ஸ்பெசிஃபைடு பர்சன்" ஆகும். இந்த வழக்கில், செக்ஷன் 40ஏ(2) பொருந்தும்.

[ஆதாரம்]

2. வரி செலுத்துபவர் ஒரு நிறுவனம்/என்டர்பிரைஸ்/கம்பெனி/இந்து அன்டிவைடட் ஃபேமிலி அல்லது நபரின் சங்கமாக இருந்தால்

அத்தகைய மதிப்பீட்டாளருக்கான குறிப்பிட்ட நபர் நிறுவனத்தின் இயக்குநர், நிறுவனத்தின் ஷேர்ஹோல்டர் அல்லது எச்.யு.எஃப் (HUF) அல்லது சங்கத்தின் உறுப்பினர் ஆவார். இருப்பினும், ஸ்பெசிஃபைடு பர்சன் அத்தகைய டைரக்டர், பார்ட்னர் மற்றும் மெம்பரின் எந்தவொரு ரிலேட்டிவையும் உள்ளடக்கியது.

உதாரணமாக:

எக்ஸ்ஒய்இசட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் ஏபிசி லிமிடெட் என்ற நிறுவனத்தில் சுமார் 40% ஷேர்களைக் கொண்டுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு நிறுவனங்களும் சப்ஸ்டான்ஷியல் டிரான்ஸாக்ஷன்களை எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்கின்றன. இதை பொருத்தவரையில், நிறுவனம் ஏபிசி லிமிடெட் எக்ஸ்ஒய்இசட் லிமிடெட்டுக்கு ஒரு "ஸ்பெசிஃபைடு பர்சன்".

எக்ஸ்ஒய்இசட் லிமிடெட்க்கு ஏபிசி லிமிடெட் வழங்கிய எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் ஃஎப்.எம்.வி (FMV) விட அதிகமாக இருப்பதாக மதிப்பீட்டு அதிகாரி அடையாளம் கண்டால், செக்ஷன் 40ஏ(2) படி அத்தகைய அதிகப்படியான கொடுப்பனவை மதிப்பீட்டு அதிகாரி அனுமதிக்கலாம்.

டைரக்டரின் நெருங்கிய ஃபேமிலி மெம்பர், பகுதிநேர அல்லது முழுநேர பிசினஸ் பார்ட்னர் அல்லது மெம்பர் தானாகவே ஒரு நிறுவனத்தில் சப்ஸ்டான்ஷியல் இன்ட்ரெஸ்ட்டை கொண்டிருப்பதைக் கவனிக்கவும். அத்துடன், மேலே குறிப்பிட்டுள்ள தரப்பினரின் ரிலேட்டிவ் ஒருவர் மதிப்பீட்டாளர் நிறுவனம் பெனிஃபிட்களை பெறும் ஷேர் வைத்திருந்தால், அது சப்ஸ்டான்ஷியல் இன்ட்ரெஸ்ட்டாக அடையாளம் காணப்படும்.

உதாரணமாக:

எக்ஸ்ஒய்இசட் லிமிடெட் என்று பெயரிடப்பட்ட நிறுவனத்தின் டைரக்டரின் உடன்பிறப்பு, ஏவிசி லிமிடெட் என்ற மற்றொரு நிறுவனத்திடமிருந்து 20%-க்கும் அதிகமான இலாபத்தின் ஷேரைப் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். எக்ஸ்ஒய்இசட் லிமிடெட் மற்றும் ஏவிசி லிமிடெட் இடையே பிசினஸ் டிரான்ஸாக்ஷன் நடந்தால், ஏவிசி லிமிடெட் எக்ஸ்ஒய்இசட் லிமிடெட் நிறுவனத்திற்கு "ஸ்பெசிஃபைடு பர்சன்" என வகைப்படுத்தப்படுகிறது.

[ஆதாரம்]

3. பிற டேக்ஸ்பேயர்ஸ்

டேக்ஸ்பேயரின் பிசினஸ் அல்லது பிசினஸில் வைட்டல் இன்ட்ரெஸ்ட்டை வெளிப்படுத்தும் நபர்கள் "ஸ்பெசிஃபைடு பர்சன்ஸ்".

உதாரணமாக:

எக்ஸ்ஒய்இசட் லிமிடெட் நிறுவனத்தில் அலோக் 30% ஈக்விட்டி வைத்துள்ளார். இந்த இருவருக்கும் இடையில் ஏதேனும் பிசினஸ் டிரான்ஸாக்ஷன்கள் இருந்தால், திரு அலோக் ஒரு "ஸ்பெசிஃபைடு பர்சன்".

தேர்டு பார்ட்டி நிறுவனத்தில் ஸ்டிராங் இன்ட்ரெஸ்ட்டை வெளிப்படுத்தும் இந்து அன்டிவைடட் ஃபேமிலி, தனிநபர்களின் அமைப்பு மற்றும் நபர்களின் சங்கங்கள் "ஸ்பெசிஃபைடு பர்சன்ஸ்".

உதாரணமாக:

திரு. அலோக் இயக்கும் அலோக் எண்டர்பிரைசிலிருந்து கிடைக்கும் இலாபத்தில் 30% ஏசிவி லிமிடெட் பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். அலோக் எண்டர்பிரைஸின் கூற்றுப்படி, ஏசிவி லிமிடெட் ஒரு "ஸ்பெசிஃபைடு பர்சன்" என்று கருதப்படுகிறது. எனவே, அலோக் எண்டர்பிரைஸ் ஏசிவி லிமிடெட் நிறுவனத்திற்கு செலுத்தும் எந்தவொரு பேமெண்டும் செக்ஷன்40ஏ(2) இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள புரொவிஷன்களுக்கு இணங்க வேண்டும்.

இது இன்கம் டேக்ஸ் ஆக்ட் செக்ஷன் 40ஏ(2) பற்றியது. இதைப் பற்றி அறிந்துகொள்வது டேக்ஸ்பேயர் எக்ஸ்பென்டிசர் குறித்து கவனமாக இருக்கவும், எதிர்காலத்தில் லீகல் இன்கன்வீனியன்ஸை தவிர்க்கவும் உதவும்.

[ஆதாரம்]

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

செக்ஷன் 92பி.ஏ. (BA) இன் படி டிரான்ஸாக்ஷன்கள் செய்யப்பட்டால் பிரிவு 40ஏ(2) இன் கீழ் அனுமதிக்கப்படாத டிடெக்ஷன்கள் செல்லுபடியாகுமா?

ஆம், இன்கம் டேக்ஸ் ஆக்ட் செக்ஷன்40ஏ(2) இன் கீழ் செலவினங்களுக்கான தடைகள் செக்ஷன் 92பிஏ (BA) இல் குறிப்பிடப்பட்டுள்ள சில டிரான்ஸாக்ஷன்களுக்கு செல்லாது என்று கருதப்படுகிறது. ஐ.டி.ஏ.வி (ITA) செக்ஷன் 92 எஃப் (F)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி டிரான்ஸாக்ஷன் ஆர்ம்ஸ் லென்த் பிரைசில் தீர்மானிக்கப்படும்போது இது செல்லுபடியாகும்.

பிசினஸ் அல்லது புரொபஷனல் நிறுவனங்கள் தங்கள் தொழில்களில் ஏற்படும் எக்ஸ்பென்டிசர்ஸுக்கு கிளைம் கோர முடியுமா?

ஆம், சம்பாதித்த வருமானத்திலிருந்து செய்யப்பட்ட செலவுகளை பிசினஸ்கள் கிளைம் கோரலாம். இருப்பினும், இன்கம் டேக்ஸ் ஆக்ட் செக்ஷன் 40ஏ(2) ஒரு பிசினஸ் ஓனர் ஒரு "ஸ்பெசிஃபைடு பர்சனுக்கு" அதிகப்படியான தொகையை செலுத்தும்போது பொருந்தும்.