டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

இன்கம் டேக்ஸ் ஆக்ட்டின் செக்ஷன் 80DD

இன்கம் டேக்ஸ் ஆக்ட், 1961 இன் சில செக்ஷன்கள் உள்ளன, இது டேக்ஸ் விதிக்கப்படுவதற்கு முன்பு ஒட்டு மொத்த இன்கமிலிருந்து டிடெக்ஷன்களை அனுமதிக்கிறது. மாற்றுத் திறனாளியின் மருத்துவச் செலவுகளைக் கருத்தில் கொண்டு டிடெக்ஷன்கள் கிடைக்கின்றன. அத்தகைய ஒரு செக்ஷன் இன்கம் டேக்ஸ் ஆக்ட்டின் 80DD ஆகும். அதைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்!

செக்ஷன் 80DD என்றால் என்ன?

இன்கம் டேக்ஸ் ஆக்ட், 1961 இன் செக்ஷன் 80DD மாற்றுத் திறனாளிகள் அல்லது மாற்றுத் திறனாளியைச் சார்ந்திருப்பவரின் மருத்துவச் செலவுக்கு டிடெக்ஷன் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த பிரிவில் மாற்றுத் திறனாளிகளுக்காக வாங்கப்பட்ட இன்சூரன்ஸ் பிளானிற்கான பிரீமியம் செலுத்துதலும் அடங்கும்.

செக்ஷன் 80DD இன் கீழ் டிடெக்ஷன் கிளைம் செய்வதற்கு யார் தகுதியானவர்கள்?

செக்ஷன் 80DD இன் கீழ் டேக்ஸ் டிடெக்ஷன் கிளைம் செய்ய தகுதியான தனிநபர்கள் அல்லது குழுக்களின் பட்டியல் பின்வருமாறு:

  • மாற்றுத் திறனாளிகளைச் சார்ந்திருப்பவர்களின் மருத்துவச் செலவுகளை நிர்வகிக்கும் இந்தியாவில் வசிப்பவர்.
  • மாற்றுத் திறனாளிகளைச் சார்ந்திருப்பவர்களின் மருத்துவச் செலவுகள், பயிற்சி அல்லது மறுவாழ்வுச் செலவுகளை நிர்வகிக்கும் எந்தவொரு இந்து கூட்டு குடும்பமும் (எச்.யூ.எஃப்).

[ஆதாரம்]

செக்ஷன் 80DD இன் கீழ் என்னென்ன டிடெக்ஷன்கள் கிடைக்கின்றன?

செக்ஷன் 80DD இன் கீழ் கிடைக்கும் டிடெக்ஷன்கள் இயலாமையின் தன்மையைப் பொறுத்தது. இவற்றில் பின்வருவன அடங்கும்,

  • மாற்றுத்திறன் கொண்ட ஒரு சார்பு நபருக்கு ரூ. 75,000 வரை டேக்ஸ் டிடெக்ஷன் கிடைக்கிறது (40% க்கும் அதிகமான ஆனால் 80%க்கும் குறைவாக).
  • கடுமையான இயலாமை (80% அல்லது அதற்கு மேற்பட்ட) கொண்ட ஒரு தனிநபருக்கு ₹ 1,25,000 வரை டேக்ஸ் டிடெக்ஷன் கிடைக்கிறது. இது ஒருவர் கிளைம் செய்யக்கூடிய அதிகபட்ச 80DD லிமிட் ஆகும்.

பின்வரும் செலவுகளுக்கு இந்த டிடெக்ஷன்கள் பொருந்தும்:

  • செவிலியர், மாற்றுத் திறனாளி சார்ந்த தனிநபரின் மறுவாழ்வு போன்ற மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள்.
  • மாற்றுத் திறனாளிகளைச் சார்ந்திருப்பவர்களைக் கவனித்துக் கொள்வதற்காக குறிப்பிட்ட இன்சூரன்ஸ் பாலிசிகள் அல்லது ஸ்கீம்களை பர்ச்சேஸ் செய்வதற்காக லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் அல்லது வேறு ஏதேனும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தப்படும் அமௌன்ட்.

[ஆதாரம் 1]

[ஆதாரம் 2]

செக்ஷன் 80DD இன் கீழ் டிடெக்ஷன் கிளைம் செய்வதற்கு மாற்றுத்திறன் கொண்டோராக யார் தகுதி பெறுகிறார்கள்?

மாற்றுத்திறன் கொண்டோருக்கான (சம வாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம், 1995 இன் செக்ஷன் 2 இன் செக்ஷன் (1) இல் இயலாமையின் வரையறை கூறப்பட்டுள்ளது. இதில் ஆட்டிசம், பெருமூளை வாதம் மற்றும் பல குறைபாடுகள் (அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட) உள்ள நபர்கள் மாற்றுத்திறன் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். இருப்பினும், அவர்கள் டேக்ஸ் டிடெக்ஷன் கிளைம் செய்ய குறைந்தபட்சம் 40% இயலாமையைக் கொண்டிருக்க வேண்டும்.

மறுபுறம், சார்பு (செக்ஷன் 80DD இன் கீழ்) என்பது வாழ்க்கைத் துணை, குழந்தைகள், பெற்றோர், உடன்பிறப்புகள், இந்து கூட்டுக் குடும்பம் (எச்.யூ.எஃப்) உறுப்பினர்களைக் குறிக்கிறது.

ஒன்றாக, மாற்றுத்திறன் கொண்ட சார்புடையவர்கள் 40% இயலாமையைக் கொண்ட எந்தவொரு தனிநபரையும் (வாழ்க்கைத் துணை, குழந்தைகள், பெற்றோர், உடன்பிறப்புகள், இந்து கூட்டுக் குடும்ப (எச்.யூ.எஃப்) உறுப்பினர்) குறிக்கின்றனர் (அதிகாரப்பூர்வ மருத்துவ அதிகாரியால் சான்றளிக்கப்பட்டது).

குறிப்பு: இன்கம் டேக்ஸ் ஆக்ட்டின் செக்ஷன் 80DD இன் கீழ் டிடெக்ஷன் டேக்ஸ் செலுத்துபவரின் மாற்றுத்திறன் கொண்ட சார்புகளுக்கு கிடைக்கிறது, டேக்ஸ் செலுத்துபவருக்கு அல்ல.

இயலாமையின் வரையறை தனிநபர்களுக்குத் தெளிவாகத் தெரியும் என்பதால், செக்ஷன் 80DDயின் கீழ் வரும் இயலாமையின் வெவ்வேறு இயல்புகளைக் தெரிந்துகொள்வோம். இந்த பிரிவின் கீழ், இன்கம் டேக்ஸ் ஆக்ட்டின் செக்ஷன் 80DD இன் கீழ் பின்வரும் வகையான இயலாமை மற்றும் கடுமையான இயலாமை கருத்தில் கொள்ளப்படுகிறது.

  • பார்வையின்மை
  • செவித்திறன் குறைபாடு
  • தொடர்புத்திறன் குறைபாடு (ஆட்டிசம்)
  • மன வளர்ச்சி குறைபாடு
  • இடப்பெயர்ச்சி குறைபாடு
  • குறைந்த பார்வைத்திறன்
  • மன நோய்
  • பெருமூளை வாதம்
  • தொழுநோய்-குணப்படுத்தப்பட்டது

[ஆதாரம் 1]

[ஆதாரம் 2]

செக்ஷன் 80DD இன் கீழ் டிடெக்ஷன்களை எவ்வாறு கிளைம் செய்வது?

செக்ஷன் 80DD டிடெக்ஷன் கிளைம் செய்ய விரும்பும் நபர்கள் டேக்ஸ் டிடெக்ஷன் கிளைம் செய்யும் போது ஒரு மருத்துவ சான்றிதழை (அதிகாரப்பூர்வ மருத்துவ அதிகாரியால் வழங்கப்பட்டிருக்கவேண்டும்) சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அவர்கள் படிவம் 10-1A, ஐ.டி.ஆர் ஆவணங்கள், சுய அறிவிப்பு மற்றும் பிற அத்தியாவசிய ஆவணங்களை வழங்க வேண்டும்.

மாற்றுத்திறன் கொண்டோருக்கான மருத்துவச் சான்றிதழை எங்கு பெறலாம் என்று யோசிக்கிறீர்களா?

மாற்றுத்திறன் கொண்டோரைச் சார்ந்தோருக்கான மருத்துவச் சான்றிதழை தனிநபர்கள் பின்வரும் நபர்களிடமிருந்து பெறலாம் -

  • ஒரு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) அல்லது பொது அறுவை சிகிச்சை நிபுணர் (சிவில் சர்ஜன்).
  • நரம்பியல் துறையில் டாக்டர் ஆஃப் மெடிசின் (எம்.டி) பட்டம் பெற்ற ஒரு நரம்பியல் நிபுணர்.
  • குழந்தை நரம்பியல் நிபுணர், டாக்டர் ஆஃப் மெடிசின் (எம்.டி)யில் நரம்பியல் நிபுணரின் சமமான பட்டம் பெற்றவர் (குழந்தைகளுக்கு பொருந்தும்). 

மேற்கூறிய கட்டுரை செக்ஷன் 80DD இன் கீழ் டிடெக்ஷன்கள் பற்றிய விரிவான யோசனையை வழங்குகிறது. இந்த விவரங்களைப் படித்து, இந்த பிரிவின் கீழ் டேக்ஸ் டிடெக்ஷன்களுக்கு விண்ணப்பிக்கவும். நினைவில் கொள்ளுங்கள், 80U இன் கீழ் டிடெக்ஷன் ஒரு மாற்றுத்திறன் கொண்ட நபர்களுக்கு பொருந்தும்; மறுபுறம், 80DD என்பது மாற்றுத்திறன் கொண்ட சார்புடைய பராமரிப்பிற்கு பொறுப்பேற்கும் டேக்ஸ் செலுத்துவோருக்கு பொருந்தும். எனவே, இந்த இரண்டு செக்ஷன்களின் கீழ் தனிநபர்கள் ஒரே நேரத்தில் டேக்ஸ் டிடெக்ஷன் கிளைம் செய்ய முடியாது.

[ஆதாரம்]

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்தியாவில் குடியில்லாத இந்தியர்கள் செக்ஷன் 80DD இன் கீழ் டேக்ஸ் டிடெக்ஷன்களுக்கு கிளைம் செய்ய முடியுமா?

இல்லை, இந்தியாவில் குடியில்லாத இந்தியர்கள் செக்ஷன் 80DD இன் கீழ் டேக்ஸ் டிடெக்ஷன்களுக்கு கிளைம் செய்ய முடியாது. 

[ஆதாரம்]

டிடெக்ஷனின் அளவு மருத்துவ செலவுகள் அல்லது சார்ந்துள்ள மாற்றுத் திறனாளியின் வயதைப் பொறுத்ததா?

இல்லை, பிடித்தத்தின் அளவு மருத்துவ செலவுகள் அல்லது மாற்றுத் திறனாளியின் இயலாமையின் தீவிரத்தை பொறுத்தது.

[ஆதாரம்]