டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

பான் கார்டுடன் ஃபார்ம் 26ஏ.எஸ் (AS) டவுன்லோடு செய்து பார்ப்பது எப்படி?

ஃபார்ம் 26ஏ.எஸ் (AS) இன் தன்மை மற்றும் பயன்பாடு குறித்து பரவலாக குழப்பம் நிலவுகிறது. இது தனிநபர்கள் சுமக்க வேண்டிய கூடுதல் வரிவிதிப்பு வடிவம் என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் உண்மையில், இது வரி தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வருடாந்திர அறிக்கையாகும்.

தனிநபர்கள் ஐ.டி (IT) பான் அறிமுகத்துடன் ஃபார்ம் 26 ஏ.எஸ் (AS) ஐ எளிதாக டவுன்லோடு செய்து பார்க்கலாம் இ-ஃபைலிங் போர்டல்.

இருப்பினும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில கூடுதல் தகவல்கள் உள்ளன!

ஃபார்ம் 26ஏ.எஸ் (AS) என்றால் என்ன?

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இன்கம் டேக்ஸ் துறை ஃபார்ம் 26 ஏ.எஸ் (AS) ஐ வருடாந்திர தகவல் அறிக்கையாக ரீவேம்ப் செய்தது. இப்போது, இது குறிப்பிட்ட பண டிரான்ஸாக்ஷன்கள், டேக்ஸ் பேமெண்ட்ஸ், டேக்ஸ் பேயரால் மேற்கொள்ளப்பட்ட முடிக்கப்பட்ட நடவடிக்கைகள், டி.டி.எஸ்(TDS)/டி.சி.எஸ் (TCS) விவரங்கள் உள்ளிட்ட கோரிக்கை மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் விவரங்கள் தொடர்பான டேட்டாவைக் கொண்டுள்ளது.

ஆன்லைனில் ஃபார்ம் 26 ஏ.எஸ் (AS)-ஐ டவுன்லோடு செய்வது எப்படி?

உங்கள் ஐ.டி.ஆர் (ITR)-ஐ தாக்கல் செய்வதற்கு முன், உங்கள் அக்கவுண்ட்டில் டெபாசிட் செய்யப்பட்ட டேக்ஸ் அமௌன்ட்டை சரிபார்க்க ஒரு முறை ஸ்டேட்மெண்ட்டைப் படிக்க வேண்டும். ஐ.டி.ஆர் (ITR) ஃபார்ம் 26ஏ.எஸ் (AS) என்றால் என்ன என்று இப்போது உங்களுக்குத் தெரியும், அதை அணுகுவதற்கும் தேவையான தகவல்களைப் பெறுவதற்கும் எளிதான வழியைப் பார்ப்போம்.

ஆன்லைனில் 26ஏ.எஸ் (aS) ஐ நீங்கள் காண இரண்டு வழிகள் உள்ளன -

  • நீங்கள் நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்தலாம், அங்கு உங்கள் பேங்க் அகௌன்ட் உங்கள் பான் உடன் இணைக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக, உங்கள் பேங்க் என்.எஸ்.டி.எல் (NSDL) உடன் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் சரிபார்த்து அத்தகைய வசதிகளை வழங்க வேண்டும்.
  • நீங்கள் இன்கம் டேக்ஸ் துறையின் இ-ஃபைலிங் வெப்சைட்டைப் பயன்படுத்தலாம் மற்றும் பான், பிறந்த தேதி அல்லது இணைக்கப்பட்ட தேதி போன்றவற்றுடன் ஃபார்ம் 26 ஏ.எஸ் (AS) ஐ பார்க்கலாம்.

உங்கள் வருடாந்திர இன்ஃபர்மேஷன் ஸ்டேட்மெண்ட் காபியை வைத்திருக்க விரும்புகிறீர்களா? அதை டவுன்லோடு செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றவும்.

  • ஸ்டெப் 1: இன்கம் டேக்ஸ் துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு சென்று உங்களைப் பதிவுசெய்து ப்ராசஸைத் தொடங்குங்கள்.
  • ஸ்டெப் 2: அடுத்து, உங்கள் பயனர் ஐ.டி (ID) (ஆதார் அல்லது பான் எண்ணை) உள்ளிடவும். இப்போது பாதுகாப்பான அணுகலை உறுதிப்படுத்த வழங்கப்பட்ட செக் பாக்ஸைத் தேர்ந்தெடுத்து பாஸ்வோர்டை எண்டர் செய்யவும்.
  • ஸ்டெப் 3: மெனுவிலிருந்து 'இ-ஃபைல்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 'இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன்ஸ்' என்பதைக் கிளிக் செய்து, பின்னர் டிராப்டவுனிலிருந்து தொடர்ந்து 'ஃபார்ம் 26 ஏ.எஸ் (AS) காணவும்.
  • ஸ்டெப் 4: அடுத்து, ஒரு டிஸ்கிளைமர் பாப் அப் தோன்றும், நீங்கள் தேர்டு பார்ட்டி வெப்சைட்டிற்கு திருப்பிவிடப்படுவீர்கள் (டிரேசஸ் போர்ட்டல்) அதை மேலும் ப்ரொசீட் செய்ய நீங்கள் கன்ஃபார்ம் செய்ய வேண்டும். இப்போது, ப்ராசஸை முடிக்க இங்கே அசெஸ்மெண்ட் ஆண்டு மற்றும் பார்மெட்டைத் தேர்வுசெய்யவும்.

நீங்கள் அதை ஆன்லைனில் பார்க்க விரும்பினால், எச்.டி.எம்.எல் (HTML) ஃபார்மெட்டைத் தேர்வு செய்யவும். டிரேஸஸ் வெப்சைட்டில் இருந்து 26 ஏ.எஸ் (AS) டவுன்லோடு செய்து, பின்னர் உங்கள் டேக்ஸ் கிரெடிட் ஸ்டேட்மெண்ட்டின் பல்வேறு பகுதிகளைப் பார்க்க விரும்பினால், ஃபார்மட் பி.டி.எஃப் (PDF) ஆக விட்டு விடுங்கள்.

ஃபார்ம் 26 ஏ.எஸ் (AS)-இல் உள்ள டிஃபரென்ட் பார்ட்கள் யாவை?

ஃபார்ம் 26 ஏ.எஸ் (AS) ஏ முதல் எச் வரை மொத்தம் 8 பார்ட்களைக் கொண்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட டேக்ஸ் காம்போனன்ட் தொடர்பானவை. இது போன்ற;

பார்ட் 1: சோர்ஸில் டிடக்ட் செய்யப்பட்ட டேக்ஸ் விவரங்கள் டி.டி.எஸ் (TDS)

டி.டி.எஸ் (TDS) வெப்சைட்டில் ஃபார்ம் 26 ஏ.எஸ் (AS)-ஐ பார்க்கும்போது, பென்ஷன் வருமானம், சம்பளம், இன்ட்ரெஸ்ட் வருமானம் போன்றவற்றில் டி.டி.எஸ் (TDS) பற்றிய அனைத்து தகவல்களையும் நீங்கள் காண்பீர்கள். இது கலெக்ஷன் அக்கவுண்ட் நம்பர் (TAN) மற்றும் எத்தனை டி.டி.எஸ் (TDS) டெபாசிட் மற்றும் சப்ட்ராக்டட் ஆகியவற்றுடன் டேக்ஸ் டிடெக்ஷன் டீடைல்ஸையும் காட்டுகிறது.

பார்ட் 2: சோர்ஸில் டேக்ஸ் டிடெக்ஷன் டீடைல்ஸ் 15 ஜி & 15 எச்

ஃபார்ம் 15ஜி மற்றும் 15எச் ஆகியவை தனிநபர்களால் பயன்படுத்தப்படும் செல்ஃப் டிக்ளாரேஷன் ஃபார்ம்கள் ஆகும், இது அவர்களின் மொத்த வருமானம் டேக்ஸ் விதிக்கக்கூடிய வரம்பிற்கு கீழே இருந்தால், சில வகையான வருமானத்தின் மீது சோர்ஸில் டேக்ஸ் டிடெக்ஷன் (TDS) தவிர்க்க பயன்படுகிறது, இது டேக்ஸ்பேயருக்கு நிவாரணம் அளிக்கிறது.

பார்ட் 3: செக்ஷன் 194பி/ செக்ஷன் 194ஆர்-இன் உட்பிரிவு (1) இன் உட்பிரிவு (1)- இன் விதிகளின் கீழ் டிரான்ஸாக்ஷன்களின் டீடைல்ஸ்/ செக்ஷன்194எஸ்-இன் உட்பிரிவு (1) வரை

பார்ட் 4: செக்ஷன் 194ஐ.ஏ (IA) இன் கீழ் அசையா ப்ராபர்டி விற்பனைக்கு டிடக்ட் செய்யப்பட்ட டேக்ஸ்கள்

ஃபார்ம் 26ஏ.எஸ் (AS) இன் இந்த பிரிவில் ஒரு ப்ராபர்டியை வாங்கும்போது நீங்கள் டிடக்ட் செய்த மற்றும் டெபாசிட் செய்த டி.டி.எஸ் (TDS) தொடர்பான தகவல்கள் அடங்கும்.

பார்ட் 5: ஃபார்ம்-26கியூ.இ (QE) (விர்ச்சுவல் டிஜிட்டல் அசெட்)-படி செக்ஷன்194எஸ்-இன் உட்பிரிவு (1) இன் கீழ் டிரான்ஸாக்ஷன்களின் டீடைல்கள்

ஃபார்ம்-26 கியூ.இ (QE) படி, செக்ஷன் 194எஸ்-இன் துணைப் பிரிவு (1)-இன் ஏற்பாட்டின் கீழ் டிரான்ஸாக்ஷன்கள், குறிப்பாக விர்ச்சுவல் டிஜிட்டல் ப்ராபர்டிகள் விற்பவர்களுக்கு தொடர்புடையவை, அவர்கள் அத்தகைய ப்ராபர்ட்டிகளை மாற்றும்போது ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் டி.டி.எஸ் (TDS) டிடக்ட் செய்ய வேண்டும்.

பார்ட் 6: சோர்ஸில் கலெக்ட் செய்யப்பட்ட டேக்ஸ் டீடைல்கள் (TCS)

இந்த பகுதியில் அவர்கள் விற்ற சில ப்ராடக்ட்களின் விற்பனையாளரால் சேகரிக்கப்பட்ட டி.சி.எஸ் (TCS) பற்றிய இன்ஃபர்மேஷன்கள் உள்ளன. டி.சி.எஸ் (TCS) என்பது அடிப்படையில் விற்பனையாளர்கள் குறிப்பிட்ட பொருட்களின் விற்பனையின் போது செலுத்துபவர்கள் அல்லது வாங்குபவர்களிடமிருந்து வசூலிக்கும் இன்கம் டேக்ஸ் ஆகும். எனவே, டேக்ஸ் கலெக்ட் செய்பவர்களின் டீடைல்ஸ், கலெக்ட் செய்யப்பட்ட டோட்டல் அமெளன்ட், செலுத்தப்பட்ட மொத்த அமௌன்ட் போன்றவற்றை இந்த பார்ட்டில் காணலாம்.

பார்ட் 7: செலுத்தப்பட்ட ரீஃபண்ட் டீடைல்ஸ்

இந்த பார்ட்டில் டேக்ஸ் பேயரால் பெறப்பட்ட டேக்ஸ் ரீஃபண்ட்கள் (ஏதேனும் இருந்தால்) அதை பற்றிய டீடைல்கள் உள்ளன. கூடுதலாக, அந்த குறிப்பிட்ட ரீஃபண்ட் செய்யப்பட்ட அசெஸ்மெண்ட் ஆண்டு பற்றிய தகவல்களும் இதில் உள்ளன. இதில் செலுத்தப்பட்ட அமௌன்ட், பணம் செலுத்தும் முறை மற்றும் தேதி ஆகியவை அடங்கும்.

பார்ட் 8: 194ஐ.ஏ (IA)/194ஐ.பி(IB) /194எம் / 194எஸ் (ப்ராபர்டியை வாங்குபவர் /டெனன்ட் ஆஃப் ப்ராபர்டி / கான்ட்ராக்டர்ஸ் அல்லது ப்ரொஃபஷனல்ஸ்/ விர்ச்சுவ் டிஜிட்டல் அசெட்டை வாங்குபவருக்கு பேமெண்ட் செய்யும் நபர்)

194ஐஏ (IA), 194ஐபி (IB), 194 எம் மற்றும் 194 எஸ் பிரிவுகளின் கீழ் சோர்ஸில் டிடக்ட் செய்யப்பட்ட டேக்ஸ் (TDS) முறையே ப்ராபர்டி வாங்குபவர்கள் / டெனன்ட், கான்ட்ராக்டர்கள்/ ப்ரொஃபஷனல்களுக்கு பேமெண்ட் செய்யும் நபர்கள் மற்றும் விர்ச்சுவல் டிஜிட்டல் ப்ராபர்டிகளை வாங்குபவர்கள் போன்ற பல்வேறு வகை டேக்ஸ் செலுத்துவோருக்கு பொருந்தும், டேக்ஸ் கம்ப்ளையன்ஸ் மற்றும் கலெக்ஷனை உறுதி செய்கிறது.

பார்ட் 9: ஃபார்ம் 26கியூ.இ (QE) (விர்ச்சுவல் டிஜிட்டல் அசெட்டை வாங்குபவருக்கு) செக்ஷன் 194S இன் உட்பிரிவு (1) இன் கீழ் டிரான்ஸாக்ஷன்ஸ்/டிமாண்ட் பேமெண்ட்களின் டீடைல்ஸ்

ஃபார்ம் 26 கியூ.இ (QE) படி, செக்ஷன் 194எஸ்-இன் உட்பிரிவு (1) இன் விதியின் கீழ் டிரான்ஸாக்ஷன்கள்/ டிமாண்ட் பேமெண்ட்கள் விர்ச்சுவல் டிஜிட்டல் அசெட்களை வாங்குபவர்களுக்கு பொருந்தும், அவர்கள் அத்தகைய பேமெண்ட்களைச் செய்யும்போது பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தில் டி.டி.எஸ் (TDS) டிடக்ட் செய்ய வேண்டும்.

பார்ட் 10: டி.டி.எஸ் (TDS) / டி.சி.எஸ் (TCS) டிஃபால்ட்கள்* (ப்ராசஸிங் ஆஃப் ஸ்டேட்மெண்ட்ஸ்)

டி.டி.எஸ் (TDS)/டி.சி.எஸ் (TCS) டிஃபால்ட்கள் என்பது ஷார்ட் டிடக்ஷன், இன்ட்ரெஸ்ட் பேமெண்ட் டிஃபால்ட்கள், லேட் ஃபைலிங் ஃபீஸ் உள்ளிட்ட சமர்ப்பிக்கப்பட்ட டேக்ஸ் டிடெக்ஷன் அல்லது கலெக்ஷன் ஸ்டேட்மென்ட்களில் உள்ள டிஸ்கிரிபான்சிஸ் ஆஃப் எரர்ஸைக் குறிக்கிறது. இங்கே, நீங்கள் டேக்ஸ் டிஃபால்டர்கள் பற்றிய தகவல்களைக் காண்பீர்கள். மேலும், ஸ்டேட்மெண்ட்களின் ப்ராசஸிங் தொடர்பான எரர்ஸ், செக்ஷன் 234இ-இன் கீழ் லேட் ஃபீஸ் போன்றவற்றைப் பற்றிய விவரங்களை நீங்கள் காணலாம். பான் எண் மூலம் ஃபார்ம் 26ஏ.எஸ் (AS)-ஐ டவுன்லோடு செய்து, அதன் காபியை வைத்துக் கொண்டு பிடித்தவரைத் தொடர்பு கொண்டு ஏதேனும் டிஸ்க்ரிபன்சி இருந்தால் விளக்கம் கேட்பது நல்லது.

26ஏ.எஸ் (AS) டேக்ஸ் கிரெடிட் அறிக்கை பற்றிய சமீபத்திய அப்டேட்கள் யாவை?

சி.பி.டி.டி (CBDT) (சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டேக்ஸஸ்) அறிமுகப்படுத்திய ஃபார்ம் 26ஏ.எஸ் (AS) ஃபைல் செய்வதில் சில புதிய மாற்றங்களை நீங்கள் காணலாம். அவற்றைப் பாருங்கள்!

  • ஃபார்ம் 26ஏ.எஸ் (AS) ஷேர்களை வாங்குதல், கிரெடிட் கார்டு பேமெண்ட்கள், ஃபாரீன் கரன்சி, கேஷ் பேமெண்ட், கூட்ஸ் அண்ட் சர்வீஸ்களின் கேஷ் பேபெண்ட் உள்ளிட்ட அனைத்து வகையான டிரான்ஸாக்ஷன்களின் காம்ப்ரிஹென்சிவ் தகவல்களைக் கொண்டிருக்கும்.
  • பான் எண்ணுடன் ஃபார்ம் 26 ஏ.எஸ் (AS)-ஐ பார்க்கும்போது டேக்ஸ்பேயரின் மொபைல் எண், ஆதார் எண், மின்னஞ்சல் ஐ.டி (ID) போன்றவற்றை இப்போது காணலாம்.
  • இது ஒரு லைவ் 26 ஏ.எஸ் (AS) ஃபார்மாக இருக்கும், இது ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் அப்டேட் செய்யப்படும்.

இந்த மாற்றங்கள் அனைத்திற்கும் பின்னால் உள்ள முக்கிய நோக்கம் டேக்ஸ் ஃபைலிங் முறையில் டிரான்ஸ்ஃபரன்சியை ஏற்படுத்துவதாகும். இத்தகைய ஃபைனான்ஷியல் தகவல்களைக் கண்காணிப்பது ஐ.டி.ஆர் (ITR) ஃபைல் செய்யும் போது டிஸ்க்ரிபன்சிகளை தவிர்ப்பதை எளிதாக்குகிறது.

இப்போது இன்கம் டேக்ஸ் ஃபார்ம் 26 ஏ.எஸ் (AS) டவுன்லோடு ப்ராசஸ் ஒரு இ-ஃபைலிங் போர்ட்டலைத் தொடங்குவதன் மூலம் எளிமையானது, உங்கள் டேக்ஸ் ஆப்ளிகேஷன்ஸ், டிரான்ஸாக்ஷன் டீடைல்கள் போன்றவற்றை சில நிமிடங்களுக்குள் சரிபார்க்கலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நீங்கள் இந்தியாவுக்கு வெளியே வசிக்கிறீர்கள் என்றால் ஃபார்ம் 26 ஏ.எஸ் (AS) பயன்படுத்த முடியுமா?

ஆம், நீங்கள் என்.ஆர்.ஐ (NRI) சர்வீஸ்களுக்கு டிரேஸஸ் வெப்சைட்டில் டவுன்லோடு செய்ய வேண்டும், மேலும் ஃபார்ம் 26 ஏ.எஸ் (AS) பார்க்கவும், டவுன்லோடு செய்யவும், இ ஃபைலிங் செய்யவும் அதே வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

ஃபார்ம் 26 ஏ.எஸ் (AS)-இல் நான் எவ்வாறு கரெக்ஷன்களை செய்யலாம்?

உங்கள் ஃபார்ம் 26 ஏ.எஸ் (AS)-ல் ஏதேனும் பிழைகள் தென்பட்டால், நீங்கள் நேரடியாக இன்கம் டேக்ஸ் துறையைத் தொடர்பு கொண்டு சரிசெய்யக் கோர வேண்டும்.