இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கவும்
Instant Policy, No Medical Check-ups

இந்தியாவில் இருந்து மலிவான ஐரோப்பிய டெஸ்டினேஷன்ஸ்

அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் வாழ்த்துக்கள் - இந்தியாவில் இருந்து சிறந்த மலிவான ஐரோப்பா டெஸ்டினேஷன்ஸின் பட்டியலைப் பாருங்கள்!

பயண ஆர்வலர்களாக, ஐரோப்பிய நாடுகளை பார்க்க விரும்பாதவர்கள் யார் இருக்க முடியும்? பசுமையான அடையாளங்களால் சூழப்பட்ட வசீகரிக்கும் நிலப்பரப்பு இருக்கிறது, இதை விட உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? எக்ஸ்பென்ஸ்கள் தான் தொடர்ந்து தடையாக உள்ளது.

ஆனால், இந்தியாவில் இருந்து பத்து மலிவான ஐரோப்பிய டெஸ்டினேஷன்ஸின் பட்டியல், அதற்கான காஸ்ட், விசா ரெக்கியூர்மெண்ட் மற்றும் லேண்ட்மார்க்குகள் உங்களிடம் இருந்தால் என்ன செய்வீர்கள்?

சரி, இது ஒரு நல்ல செய்தி இல்லையா? ஏனென்றால் நாங்கள் உங்களுக்காக ஒரு பட்டியலைத் தொகுத்துள்ளோம்!

பட்ஜெட்டில் உங்களுக்கு வாழ்நாள் அனுபவத்தை வழங்கும் ஐரோப்பாவின் சிறந்த நாடுகளின் பட்டியல் இங்கே:

  • லாட்வியா 
  • ஜார்ஜியா
  • அல்பேனியா
  • பல்கேரியா
  • செக் குடியரசு
  • ஹங்கேரி
  • ஸ்லோவாக்கியா
  • ருமேனியா
  • குரோஷியா

இந்த நாடுகள் எக்ஸ்பென்ஸ்கள் வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ள. இந்த நாடுகள் அதன் விசிடர்களுக்கு ஒரு முழுமையான பேக்கேஜை வழங்குகின்றன - இயற்கை, மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் இயற்கை, உணவு, பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரங்கள் என அந்த பேக்கேஜ் நிறைந்திருக்கும்.

இருப்பினும், இந்தியாவில் இருந்து மலிவான ஐரோப்பிய நாட்டிற்கு வரவிருக்கும் பயணத்தைப் பற்றி நீங்கள் பகல் கனவு காணத் தொடங்குவதற்கு முன், நீங்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் உங்களிடம்அவசியம் இருக்க வேண்டிய ஒன்று என்ன தெரியுமா - அது விசா!

சுற்றுலாப் பயணிகளுக்கான விசா ரெக்கியூர்மெண்ட் நீங்கள் செல்லும் ஐரோப்பிய நாட்டைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, நீங்கள் ஷெங்கன் பகுதியில் அமைந்துள்ள நாடுகளுக்கு பயணம் செய்தால், ஒரு காமன் எண்ட்ரி மற்றும் எக்ஸிட் ரெக்கியூர்மெண்ட் உள்ளது.

மேலும், ஷெங்கன் நாடுகளுக்கு சென்றால் நீங்கள் கட்டாயமாக ஒரு டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு ஷெங்கன் நாட்டிற்குச் செல்லவில்லை என்றாலும், ஒரு டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது உங்கள் பயணங்களை நிதி ரீதியாக பாதுகாக்க அனுமதிக்கும்.

இப்போது, இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு விசிட் செய்ய சிறந்த மற்றும் மலிவான பத்து நாடுகளைப் பற்றி ஒரு விரைவான பார்வையைப் பெறுங்கள்!

உணவு, தங்குமிடம் (1 நாள்) மற்றும் விமான டிக்கெட்டுகள் (1 வழி மட்டும்) ஆகியவற்றுக்கான மொத்த எக்ஸ்பென்ஸ்கள் அசென்டிங் ஆர்டரில் நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதோ எங்கள் புதுமையான வழிகாட்டி புத்தகம் உங்கள் வசம்!\

இந்தியாவில் இருந்து 9 பட்ஜெட் ஐரோப்பிய டெஸ்டினேஷன்கள்

1. லாட்வியா

பால்டிக் கடல், ரஷ்யா, லிதுவேனியா, எஸ்டோனியா மற்றும் பெலாரஸ் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது லாட்வியா நாடு. இந்த பகுதி அழகிய அடையாளங்கள் மற்றும் நகர்ப்புற காட்சிகளின் சரியான கலவையாகும்.

எனவே, இடைக்கால கிராமங்கள், மிஸ்டிக் காடுகள் மற்றும் அழகான கடற்கரைகள் நிறைந்த இடத்தில் உங்கள் விடுமுறையை செலவிட விரும்பினால், இந்தியாவில் இருந்து ஐரோப்பாவில் பயணம் செய்ய உங்கள் மலிவான நாடு லாட்வியாவாக இருக்கட்டும்.

உணவு மற்றும் தங்குமிடம் காஸ்ட்:

  • சராசரியாக சாப்பாட்டுக்கு 1008 ரூபாயும், போக்குவரத்துக்கு 790 ரூபாயும் (ஒரு நாளைக்கு) செலவாகிறது. 
  • தங்குமிடம் - அறை வாடகை தோராயமாக ரூ.1500 முதல் ரூ.3000 வரை இருக்கும். 

ஃப்ளைட் சார்ஜஸ்- தோராயமாக ரூ.20,000 முதல் ரூ.33,500 வரை இருக்கும். குறைக்கப்பட்ட ஃப்ளைட் சார்ஜஸை கருத்தில் கொண்டு லாட்வியாவுக்கு ஃப்ளைட்களை முன்பதிவு செய்ய சிறந்த மாதம் மே ஆகும்.

முக்கிய அட்ராக்ஷன்கள் – இந்நாட்டில் கண்டு ரசிப்பதற்கு நிறைய இருக்கிறது. அவை பின்வருமாறு.. 

  • லாட்வியன் வெனிஸ் அல்லது குல்டிகா,
  • பழமையான நகரம் செசிஸ்,
  • கிளாசிக்கல் ருண்டேல் அரண்மனைகள்,
  • வென்ட்ஸ்பில்ஸ், ஐரோப்பாவில் உள்ள பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாகும்.

பிரபலமானது - ரொமான்டிக் பிளேஸ் நிறைந்து இருக்கும் லாட்வியா தம்பதிகளுக்கான சிறந்த இடமாக இருக்கிறது. உங்கள் அன்புக்குரியவருடன் அந்நாட்டில் இருக்கும் அழகான மற்றும் ரம்மியமான காட்சியை என்ஜாய் பண்ணுங்க!

டிராவல் இன்சூரன்ஸ் - ஒரு அடல்ட்டுக்கு ஒரு நாளைக்கு ரூ.177 (+ 18% ஜி.எஸ்.டி) பெயரளவு பிரீமியத்துடன் லாட்வியாவுக்கு $ 50,000 சம் இன்சூர்டுடன் டிஜிட்டிலிருந்து டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறலாம்.

2. ஜார்ஜியா

ஜார்ஜியா தெற்கு ஐரோப்பாவிற்கான சிறந்த அறிமுகமாகும். அற்புதமான இயற்கைக் காட்சிகள், கம்பீரமான கலாச்சார முக்கியத்துவம் மற்றும் தூய்மையான வனப்பகுதி என இந்த நாடு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகும். வரலாற்று ஆர்வலர்கள் முதல் மலையேற்றம் வரை, ஜார்ஜியா அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றைக் கொண்டுள்ளது.

உணவு மற்றும் தங்குமிட காஸ்ட்- ஒரு நாளில் ஒரு நபருக்கான உணவு மற்றும் தங்குமிட ரேட்களைப் பாருங்கள் -

  • உணவு மற்றும் போக்குவரத்து - உணவு ஒரு நாளைக்கு தோராயமாக ரூ.625 மற்றும் உள்ளூர் போக்குவரத்து 10 பயணங்களுக்கு ரூ.2,057 செலவாகிறது.
  • தங்குமிடம் - இங்கு தங்குமிட சார்ஜஸ் ரூ.800 முதல் ரூ.3500 வரை உள்ளது.

ஃப்ளைட் சார்ஜஸ் – சராசரியாக ரூ.18,720 முதல் ரூ.25,000 வரை இருக்கிறது. மலிவான மாதம் என்றால் பிப்ரவரியில் ஆரம்பகால ஃப்ளைட் முன்பதிவுகளுடன் உங்கள் பயணத்தை பட்ஜெட்டுக்கு ஏற்றதாக மாற்றுங்கள்!

 முக்கிய அட்ராக்ஷன்கள் - ரம்மியமான இயற்கையின் சின்னமான ஜார்ஜியாவில்,

  • தி கல்லாவே கார்டன்ஸ்,
  • ஸ்டோன் மவுன்டெயின் பார்க்,
  • அமிக்கலோலா பார்க்,
  • கம்பர்லேண்ட் ஐலேண்ட் நேஷனல் சீஷோர்,
  • கோல்டன் ஐல்ஸ் ஆஃப் ஜார்ஜியா,
  • ஒகேஃபெனோக்கி நேஷனல் வைல்டுலைஃப் ரிஃப்யூஜ், போன்றவை.

மிகவும் பிரபலமானது – இது தங்கள் லைஃபின் அன்றாட நெருக்கடியிலிருந்து ஒரு வாரம் நிவாரணம் தேடும் தம்பதிகளுக்கு ஏற்றது.

டிராவல் இன்சூரன்ஸ்- அடல்ட்டுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.177 (18% ஜி.எஸ்.டி சேர்க்காமல்) தேவைப்படும் மற்றும் $ 50,000 சம் இன்சூர்டை வழங்கும் டிஜிட்டிலிருந்து ஒரு இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுங்கள்.

3. அல்பேனியா

சமீபகாலம் வரை, அல்பேனியாவின் மலைகள் வெளியாட்களுக்கு மூடப்பட்டதாக வதந்திகள் பரவின.

மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்நாட்டின் கனவு கடற்கரைகள் மற்றும் சிறப்பான லேண்ட்ஸ்கேப் தங்கள் லைஃபின் பரபரப்பிலிருந்து விடுபட விரும்புவோருக்காக திறக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் தங்குமிட காஸ்ட்- நீங்கள் இந்த அழகான நாட்டில் ஒரு நாளை செலவிட திட்டமிட்டால், தினசரி எக்ஸ்பென்ஸ்களின் எஸ்டிமேட் இங்கே தரப்பட்டுள்ளது -

  • உணவு மற்றும் போக்குவரத்து - தனிநபர்கள் உணவுக்கு ரூ.1152 மற்றும் உள்ளூர் போக்குவரத்திற்கு ரூ.841 செலவிட வேண்டியது இருக்கும்.
  • தங்குமிடம் - அல்பேனியாவின் நகரங்களில் தங்குமிடக் கட்டணம் ஒரு நாளைக்கு ரூ.2500 முதல் ரூ.4000 வரை இருக்கலாம்.

ஃப்ளைட் சார்ஜஸ்- உங்கள் ஃப்ளைட் டிக்கெட்டுகள் ஒரு நபருக்கு தோராயமாக ரூ.33,000 முதல் ரூ.50,000 (ஒரு வழி மட்டும்) வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். உங்கள் டிக்கெட்டுகளை நீங்கள் பிப்ரவரியில் முன்பதிவு செய்வதைக் கருத்தில் கொண்டு அவற்றின் எக்ஸ்பென்ஸ்களைக் குறைக்கலாம்.

 முக்கிய அட்ராக்ஷன்கள் - இந்த நாடு பிரமிக்க வைக்கும் மலைத்தொடர்கள், பளபளக்கும் ஏரிகள் போன்றவற்றை கொண்டிருக்கிறது. இதனுடன் இணைந்த மற்ற இடங்கள் -

  • தர்மி, 
  • டூர்ஸ், 
  • ஹிமரே
  • சரண்டே, 
  • ஷ்கோத்ரா, முதலியன

மிகவும் பிரபலமானது –அல்பேனியாவுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்துச் செல்லுங்கள்! அதன் சூழல் தங்கள் வழக்கமான உலக வாழ்க்கையிலிருந்து ஓய்வு எடுக்கத் திட்டமிடும் குடும்பங்களுக்கு ஏற்றது.

டிராவல் இன்சூரன்ஸ்-அடல்ட்டுக்கு ஒரு நாளைக்கு ரூ.177 (18% வரி) பிரீமியத்துடன், டிஜிட்டின் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியில் 50,000 டாலர் கணிசமான சம் இன்சூர்டை அனுபவிக்கவும். பெஸ்ட் டீல் என்ன தெரியுமா? வசதியான மற்றும் தொந்தரவில்லாத கிளைம் செயல்முறை!

4. பல்கேரியா

பல்கேரியாவில் கடந்த 2001ம் ஆண்டு அசாதாரண சூழல் நிலவியது. அதிக பணவீக்கம், ஊதிய பற்றாக்குறை என கடும் சவாலை எதிர்கொண்டது. ஆனால், இப்போது பல்கேரியா சிறந்த இயற்கை சூழல் கொண்ட நாடாக திகழ்கிறது.

விசித்திரமான மலைகள், சோவியத் ஆட்சியின் எச்சங்கள், மணற்பாங்கான கடற்கரைகள், கருங்கடலை அரவணைக்கும் அற்புதம் ஆகியவற்றால் நாடு நிச்சயம் ஒரு ட்ரீட்டாக இருக்கும்!

உணவு மற்றும் தங்குமிட காஸ்ட் - மலிவு விலை காரணமாக உணவு மற்றும் தங்குமிடத்திற்கு அதிகம் செலவு ஆகாது - 

  • உணவு மற்றும் போக்குவரத்து - ஒரு நாளைக்கு உணவின் விலை தோராயமாக ரூ.920 ஆகும். உள்ளூர் போக்குவரத்துக்கு சுமார் ரூ.533 தேவைப்படுகிறது.
  • ஹோட்டல் தங்குமிடங்கள் - பல்கேரியாவுக்கு ஒரு நாள் பயணம் செய்ய நீங்கள் தங்குமிடுவதற்கு மொத்தம் ரூ.900 முதல் ரூ.2000 வரை செலுத்த வேண்டியிருக்கும்.

ஃப்ளைட் சார்ஜஸ்– -ஒரு வழிக் கட்டணம் ரூ.16,000 முதல் ரூ.20,000 வரை இருக்கும் என்று எஸ்டிமேட் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் பல்கேரியாவுக்கான டிக்கெட்டுகள் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

முக்கிய அட்ராக்ஷன்கள் - பல்கேரியா முக்கியமாக போல்டு அண்டு பியூட்டிஃபுல் நிலப்பரப்புகளால் வகைப்படுத்தப்படுகிறது, அவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன -

  • க்ருஷுனா ஃபால்ஸ், 
  • விடோஷா மவுன்டெயின், 
  • கோப்ரிவிஷ்டிட்சா டவுனின் வளைந்த சாலைகள், 
  • இப்போது அபான்டன்ட் புஸ்லுட்சா நினைவுச்சின்னம் போன்ற தலைசிறந்த படைப்புகள். 

மிகவும் பிரபலமானது – இந்த இடம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தம்பதிகளை ஒருசேர கவரும் சொர்க்கம் ஆகும். நீங்கள் தனியாகவோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து ஹிப்னாடிஸம் செய்ய விரும்புகிறீர்களா - அது உங்கள் விருப்பம் தான்! 

டிராவல் இன்சூரன்ஸ்- டிஜிட்டின் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுங்கள், ஒரு அடல்ட்டுக்கு ஒரு நாளைக்கு ரூ.177 (18% ஜி.எஸ்.டி தவிர) பெயரளவு பிரீமியத்திற்கு எதிராக $ 50,000 சம் இன்சூர்டை பெறுங்கள்.

5. செக் குடியரசு

1989-இல் சோவியத் யூனியனின் வீழ்ச்சி செக் குடியரசு மற்றும் அதன் தலைநகரான பிராக் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமடைந்ததன் தொடக்கத்தைக் குறிக்கிறது.

ஐரோப்பாவின் மிகவும் கவர்ச்சிகரமான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த தலைநகரம் இடைக்காலத்தில் கிட்டத்தட்ட சேதமடைந்து போயிருந்தது - கோதிக் கட்டிடக்கலை 14 ஆம் நூற்றாண்டின் சார்லஸ் பிரிட்ஜ் உடன் ஒரு உன்னதமான காட்சியை கொண்டிருக்கிறது.

உணவு மற்றும் தங்குமிட காஸ்ட்- கடந்த கால பயணிகளின் பதிவுகளின்படி, இந்தியாவில் இருந்து ஐரோப்பாவின் மலிவான இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாட்டிற்கு பயணம் செய்ய அவர்கள் தயாராக இருக்க வேண்டும் -

உணவு மற்றும் போக்குவரத்து - சராசரியாக, சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளைக்கு உணவுக்கு சுமார் ரூ.1200 மற்றும் உள்ளூர் போக்குவரத்திற்கு ரூ.570 செலவிடுகின்றனர்.

· தங்குமிடம் - செக் குடியரசின் தங்குமிடக் கட்டணம் ஒரு இரவுக்கு ரூ.3200 முதல் ரூ.5500 வரை இருக்கலாம்.

ஃப்ளைட் சார்ஜஸ்- சராசரியாக ரூ.18,490 முதல் ரூ.68,116 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் ஃப்ளைட் டிக்கெட்டுகளில் மிகக் குறைந்த விலையைப் பெறலாம்.

முக்கிய அட்ராக்ஷன்கள் - ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை விரும்புபவர்களுக்கு, செக் குடியரசு அதன் பன்முக சுற்றுலா அட்ராக்ஷன்களை கருத்தில் கொண்டுள்ளது. பட்டியல் பின்வருமாறு -

  • செயின்ட் பார்தலோமியூ கத்ரீடல், 
  • தி ரெனாய்சன்ஸ்-ஸ்டைல் டவுன் ஹால், 
  • தி கிரேட் சினகாக், 
  • மொராவியன் கார்ஸ்ட்
  • ஏ ரெனாய்சன்ஸ் ஸ்டைல் காஸ்டில் இன் லிடோமிஸ்ல்
  • ஒலோமுக் காஸ்டில்ஸ், முதலியன. 

மிகவும் பிரபலமானது – இந்த இடம் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் பொருத்தமானது. இந்த இரண்டு வகையான பயணிகளின் ஆர்வத்தையும் பூர்த்தி செய்யும் வகையில், நாடு அதன் பரவலான கலாச்சார இடங்களை கொண்டிருக்கிறது!

டிராவல் இன்சூரன்ஸ்- ஒரு அடல்ட்டுக்கு ஒரு நாளைக்கு ரூ.177 (18% ஜி.எஸ்.டி சேர்க்காமல்) என்ற பெயரளவிலான பிரீமியத்தில் டிஜிட் டிராவல் இன்சூரன்ஸை நீங்கள் தேர்வு செய்யலாம் மற்றும் $ 50,000 சம் இன்சூர்டை பெறலாம்.

6. ஹங்கேரி

ஹங்கேரி அதன் கட்டிடக் கலையால் பயணிகளை பிரமிக்க வைக்கும் நாடாகத் திகழ்கிறது. மேலும் இசை, ஓவியங்கள் மற்றும் எம்பிராய்டரி ஆகியவற்றை உள்ளடக்கிய பணக்கார நாட்டுப்புற பாரம்பரியங்களை கொண்ட நாடாகும்.

அதனுடன், அதன் அதிநவீன சமையல், உலகப் புகழ்பெற்ற ஒயின்கள், என உங்களை பிரமிக்க வைக்கும் பல விஷயங்கள் உள்ளன!

உணவு மற்றும் தங்குமிட காஸ்ட்- திட்டமிடப்பட்ட பயணத் திட்டங்களுடன், சுற்றுலாப் பயணிகள், அந்நாட்டில் ஒரு நாள் செலவுக்கும் தயாராக இருக்க வேண்டும் -

  • உணவு மற்றும் போக்குவரத்து - உணவின் தோராயமான சராசரி காஸ்ட் ஒரு நாளைக்கு சுமார் ரூ.750 ஆக இருக்கலாம். போக்குவரத்து காஸ்ட் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் ரூ.700 ஆகும்.
  • தங்குமிடம் - இந்த நாட்டில் ஒரு சுற்றுலாப் பயணிக்கான ஹோட்டல் சார்ஜஸ் ரூ.3000 முதல் ரூ.4000 வரை இருக்கலாம்.

ஃப்ளைட் சார்ஜஸ்- இதன் விலை ரூ.19,589 முதல் ரூ.32,595 வரை உள்ளது. மார்ச் மாதத்தில் ஹங்கேரிக்கான டிக்கெட்டுகள் ஒப்பீட்டளவில் மலிவானவை. 

முக்கிய அட்ராக்ஷன்ஸ் - சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அனைத்து விஷயங்களையும் ஹங்கேரி தன்னகத்தே கொண்டிருக்கிறது. இங்கு -

  • டெப்ரெசென்
  • கியோர்
  • ஹார்டோபேகி நேஷனல் பார்க்
  • ஹெவிஸ்
  • பெக்ஸ், முதலியன

மிகவும் பிரபலமானது – சுற்றுலாப் பயணிகள் மற்றும் தம்பதிகளுக்கு ஏற்ற இந்த நாடு, அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் பல்வேறு சுற்றுலாத் தலங்களை கொண்டிருக்கிறது.

டிராவல் இன்சூரன்ஸ்-ஒரு அடல்ட்டுக்கு ஒரு நாளைக்கு ரூ.177 (18% ஜி.எஸ்.டி சேர்க்காமல்) பிரீமியம் செலுத்தி டிஜிட்டின் டிராவல் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுங்கள்.

7. ஸ்லோவாக்கியா

நீதிக்கதைகளின் தேசம் - சிறப்பான கோட்டைகள் மற்றும் மலைகள் ஆகியவை ஸ்லோவாக்கியாவை நோக்கி பயணிகளை ஈர்க்கிறது.

குறைவாக பார்வையிடப்படும் கிழக்கில் பல விசித்திரமான தேவாலயங்கள் இருந்தாலும், அடிக்கடி வருகை தரும் அதன் தலைநகரான பிராட்டிஸ்லாவன் சமகால கலாச்சாரத்தில் ஜொலிக்கும் ஒரு பழைய நகரமாகும்.

உணவு மற்றும் தங்குமிட காஸ்ட்கள்- ஸ்லோவாக்கியாவில் மலிவு விலையில், உணவு மற்றும் தங்குமிடம் கிடைக்கிறது. இதனால், நீங்கள் இது குறித்து அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை!

  • உணவு மற்றும் போக்குவரத்து - ஒரு நாளைக்கு தோராயமாக ரூ.2000 ஆகும் (உணவுக்கு ரூ.650 மற்றும் உள்ளூர் போக்குவரத்திற்கு ரூ.500 ஆகலாம்).
  • தங்குமிடம் - ரூ.3500 முதல் ரூ.4500 வரை ஆகலாம்.

ஃப்ளைட் சார்ஜஸ்- சுமார் ரூ.19,000 முதல் ரூ.30,000 வரை விலை நிர்ணயம் உள்ளது - பிப்ரவரியில் நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் ஸ்லோவாக்கியாவுக்கு மலிவான டிக்கெட்டுகளைப் பெறலாம்.

முக்கிய அட்ராக்ஷன்கள்- ஐரோப்பாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நாடு பலருக்கும் பிடித்தமான நாடாக திகழ்கிறது.

  • ஒரவா காஸ்டில், 
  • பர்தேஜோவ், 
  • கோசிஸ்
  • ஸ்லோவாக் பாரடைஸ் நேஷனல் பார்க், முதலியன.

மிகவும் பிரபலமானது – அதன் வரலாற்று ரீதியிலான இடங்களுடன், ஸ்லோவாக்கியா குடும்பங்கள் மற்றும் தம்பதிகளுக்கு ஏற்றது. 

டிராவல் இன்சூரன்ஸ்- டிஜிட்டின் டிராவல் இன்சூரன்ஸ் ரூ.177 மலிவு பிரீமியம் மற்றும் 18% ஜி.எஸ்.டி (GST) (அடல்ட்டுக்கு ஒரு நாளைக்கு) மற்றும் காப்பீட்டாளருக்கு $ 50,000 கணிசமான இன்சூரன்ஸ் அமெளன்ட்டை வழங்குகிறது.

8. ருமேனியா

வசீகரிக்கும் மடாலயங்கள் மற்றும் கரடுமுரடான ஸ்டோன் தேவாலயங்கள் ருமேனியா முழுவதும் இருக்கும் மலைகளின் அழகிய நிலப்பரப்பைக் குறிக்கின்றன. ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நதியான டானியூபின் கரை கருங்கடல் வரை கொண்டு செல்லும்.

கட்டிடக்கலை அதிசயங்களால் சூழப்பட்ட ருமேனியா, பட்ஜெட்டில் சிறந்த ஐரோப்பிய பயண இடங்களில் ஒன்றாகும்.

உணவு மற்றும் தங்குமிட காஸ்ட்கள் -ருமேனியாவுடன், நெருக்கடியான வரவு செலவுத் திட்டத்திற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

  • உணவு மற்றும் போக்குவரத்து - உணவு மற்றும் உள்ளூர் போக்குவரத்திற்கான தோராயமான விலை ஒரு நாளைக்கு ரூ.1000 வரை ஆகலாம்.
  • ஹோட்டல் தங்குமிடங்கள் - ஒரு நபர் ஒரு நாளைக்கு தங்கும் ஹோட்டல் பொருத்தமான வசதிகளுடன் ரூ.2800 முதல் ரூ.4600 வரை செலவாகலாம்.

ஃப்ளைட் சார்ஜஸ்- தோராயமாக ரூ.16,899 முதல் ரூ.30,000 வரை இருக்கும். ருமேனியாவுக்கான ஃப்ளைட் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய சிறந்த நேரம் மார்ச் மாதம் ஆகும்.

முக்கிய அட்ராக்ஷன்கள் - டிரான்சில்வேனியாவைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகளைப் போல், ருமேனியாவில் உங்கள் மீது காட்டேரிகள் பாய காத்திருக்கவில்லை! இருப்பினும், இது இடைக்கால காஸ்டில்ஸ், அழகிய ஆல்பைன் சீனரி, விசித்திரமான கிராமங்கள் போன்றவைகளை கொண்டுள்ளன. நீங்கள் இதையெல்லாம் அனுபவிக்க முடியும் -

  • வாசர் வேலி ஃபாரஸ்ட்ரி ரெயில்வேயில் உள்ள ரொமான்ஸ் ஆஃப் வின்டேஜ் கேஜ் ரயில்கள்
  • டானியூப் டெல்டாவில் இயற்கையை அதன் சிறந்த முறையில் அனுபவிக்கவும்
  • டிரான்சில்வேனியன் ஆல்ப்ஸில் உள்ள காட்டுப்பூக்களில் மனதை தொலைத்து விடுங்கள்

-பட்டியல் முடிவில்லாதது...

மிகவும் பிரபலமானது – அதன் இயற்கை அழகில் உள்ள பன்முகத்தன்மை ஐரோப்பா சுற்றுப்பயணத்திற்கு செல்லும் தம்பதிகளிடையே இது ஒரு பிரபலமான இடமாக மாறியுள்ளது. 

டிராவல் இன்சூரன்ஸ்- டிஜிட்டின் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுங்கள், இது குறைந்தபட்சம் $50,000 சம் இன்சூர்டு உடன், ஒரு அடல்ட்டுக்கு ஒரு நாளைக்கு ரூ.177 (18% ஜிஎஸ்டி சேர்க்காமல்) பாக்கெட்டுக்கு ஏற்ற பிரீமியமாக இருக்கும்.

9. குரோஷியா

நீங்கள் மத்திய தரைக்கடல்-கற்பனை நிறைந்த-கடற்கரைகளைத் தேடுகிறீர்களானால், குரோஷியா உங்களுக்கு ஏற்ற சிறந்த இடம்! சபையர் வாட்ர், அற்புதமான ஐலேண்ட்-ஸ்பெக்கில்டு கோஸ்ட்லைன் கொண்டிருக்கிறது குரோஷியா.

கூடுதலாக, டைவிங், செயிலிங், ஸ்னோர்கெல்லிங், கயாக்கிங் மற்றும் பாய்மரப்பயணம் போன்ற சாகச விளையாட்டுகளையும் நீங்கள் செய்து பார்க்கலாம்- எனவே நீங்கள் அங்கு செல்லலாம்!

உணவு மற்றும் தங்குமிட காஸ்ட்- இப்போது நீங்கள் இந்த இடத்தைப் பார்வையிடுவது உறுதியாகிவிட்டது அல்லவா, அடுத்து அந்த இடத்தின் உணவு மற்றும் தங்குமிடத்தின் சார்ஜகள் பற்றிய எஸ்டிமேட்டைப் பெறுங்கள் -

  • உணவு மற்றும் போக்குவரத்து - சராசரியாக, ஒரு நாளுக்கான உணவு மற்றும் போக்குவரத்து சார்ஜகள் தோராயமாக ரூ.2200 ஆக இருக்கலாம்.
  • தங்குமிடம் - குரோஷியாவில் ஒரு நாள் செலவழிப்பதற்கான தங்குமிட காஸ்ட் ரூ.2000 முதல் ரூ.3500 வரை அதிகரிக்கிறது.

ஃப்ளைட் சார்ஜஸ்- தோராயமாக ரூ.32,000 முதல் ரூ.38,000 வரை ஆகலாம் (ஒரு வழிக்கு மட்டும்). ஃப்ளைட் டிக்கெட்டுகளை எடுக்க மலிவான மாதம் பிப்ரவரி ஆகும்.

முக்கிய அட்ராக்ஷன்கள் - அழகிய கிராமங்களும், கம்பீரமான கடற்கரையும் அமைந்திருப்பது இந்த நாட்டின் வசீகரமாக இருக்கிறது. இந்த வசீகர தோற்றத்திற்கு பங்களிக்கும் இடங்கள் பின்வருமாறு-

  • இஸ்ட்ரியா, 
  • ஸ்லாவோனியா, 
  • ஜதர் ரீஜியன், 
  • தி ஸ்பிரிட் ரீஜியன், போன்றவை

மிகவும் பிரபலமானது – சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றது, குரோஷியா ஒரு சுற்றுலாப் பயணிக்கு சொர்க்கமாகத் திகழும்! கடற்கரைகளில் அமர்ந்திருக்கும் போது மலிவான தினசரி எக்ஸ்பென்ஸ்களையும் அமைதியான இயற்கையையும் அனுபவியுங்கள்!

டிராவல் இன்சூரன்ஸ்- டிராவல் இன்சூரன்ஸை டிஜிட்டிலிருந்து பெறுங்கள், ஒரு அடல்ட்டுக்கு ஒரு நாளைக்கு ரூ.177 (18% ஜி.எஸ்.டி சேர்க்காமல்) பிரீமியம் செலுத்தவும், $50,000 சம் இன்சூர்டை நீங்கள் அனுபவிக்கவும்!

இன்டெர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸை ஏன் வாங்க வேண்டும்?

உங்கள் பயணம் எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து எவ்வளவு பாதுகாப்பானது? ஃப்ளைட் தாமதம், காணாமல் போன லக்கேஜ், சாகச விளையாட்டு விபத்துகள், இதுபோன்ற பட்டியல் முடிவற்றது! எனவே, நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.

மருத்துவ அவசரநிலைகளும் இந்த பட்டியலின் ஒரு பகுதியாக இருப்பதால், இவை அனைத்திற்கும் நிதி பாதுகாப்பை வழங்கும் உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் மட்டுமே நீங்கள் வாங்கினால் போதுமானது.

இருப்பினும், நீங்கள் டிஜிட் போன்ற இந்தியா முழுவதும் உள்ள சிறந்த இன்சூரன்ஸ் வழங்குநர்கள் மீது உங்கள் கவனத்தை வைத்திருங்கள்.

உங்கள் இன்சூரன்ஸிலிருந்து நீங்கள் பெறக்கூடிய சில நன்மைகள் பின்வருமாறு -

  • மருத்துவ அவசர காலங்களில் நிதி பாதுகாப்பை வழங்குதல்.
  • பெர்சனல் லையபிளிட்டியை பொருத்தமட்டில் நிதி செக்யூரிட்டி வழங்கப்படுகிறது.
  • போக்குவரத்து, அவசர பணத் ரெக்கியூர்மெண்ட்கள், பயண ரத்துகள் போன்ற பயணம் தொடர்பான அவசரநிலைகளின் போது நிதி உதவியை வழங்குதல்.

இந்த வழிகளில், டிஜிட் இன்சூரன்ஸ் உங்கள் சிறந்த தேர்வாக இருக்கலாம் -

  • பல்வேறு பிளான்கள், மற்றும் 
  • நாமினல் பிரீமியம் ரூ.177 முதல் தொடங்குகிறது (18% ஜி.எஸ்.டி சேர்க்காமல்) 
  • சுமார் 179 நாடுகளை கவர் செய்கிறது.

இத்தகைய பாலிசிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்து ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் நீங்கள் பிஸியாக இருக்கும்போது, தொந்தரவில்லாத மற்றும் காகிதமற்ற ஒரு எளிய கிளைம் செயல்முறையின் மூலம் நீங்கள் நிதி ரீதியாக பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்கிறது!

இத்தகைய நிதி ஆதாரங்கள் மற்றும் இந்தியாவில் இருந்து மலிவான ஐரோப்பிய இடங்களின் பட்டியலுடன், உங்கள் பயணத் திட்டங்களுக்காக நீங்கள் ஏன் இன்னும் காத்திருக்கிறீர்கள்?

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஷெங்கன் பகுதியின் கீழ் வரும் நாடுகள் எவை?

ஷெங்கன் பகுதியின் கீழ் மொத்தம் 26 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, நார்வே, ஸ்வீடன், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து போன்றவை இதில் அடங்கும்.

ஐரோப்பாவைச் சுற்றிப் பயணிக்க யூரயில் ஒரு வசதியான ஆப்ஷனா?

ஆம், யூரெயில் குளோபல் பாஸ் வாங்குவது ஆஸ்திரியா, பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், போர்ச்சுகல், ருமேனியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பாவின் 33 நாடுகளுக்கு இடையில் வரம்பற்ற ரயில் பயணத்தை எளிதாக்குகிறது.

நான் ஷெங்கன் நாடுகளுக்குச் செல்லப் போகிறேன் என்றால் நான் டிராவல் இன்சூரன்ஸைப் பெற வேண்டுமா?

ஆம், நீங்கள் ஒரு ஷெங்கன் நாட்டிற்கு பயணம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் விசா அங்கீகரிக்கப்படுவதை உறுதிப்படுத்த நீங்கள் ஒரு டிராவல் இன்சூரன்ஸ் பிளான் பெற வேண்டும். ஷெங்கன் விசா சுற்றுலாப் பயணிகளுக்கு 30,000 யூரோக்கள் வரை நிதி பாதுகாப்பை வழங்கும் ஒரு மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசியைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இது கிட்டத்தட்ட ஒரு ஆணையாகும்.

பயணிகளின் செக் அல்லது ஃபாரெக்ஸ் கார்டைப் பயன்படுத்துவது அதிக சாத்தியமா?

பயணிகளின் செக் கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்டன, மேலும் பெரும்பாலான பயணிகள் பயணத்தின் போது எக்ஸ்பென்ஸ்களை சமாளிக்க ஃபாரெக்ஸ் கார்டுகளை தேர்வு செய்ய விரும்புகிறார்கள். இந்த மல்டி கரன்சி கார்டுகள் ப்ரீபெய்டு மற்றும் உலகெங்கிலும் கிட்டத்தட்ட எல்லா நகரங்களில் செல்லுபடியாகும்.