டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

சீனியர் சிட்டிசன்கள் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கான இன்கம் டேக்ஸ் ஸ்லாப்கள்

சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கான இன்கம் டேக்ஸ் ஸ்லாப்களைப் பற்றி அனைத்தும் அறிந்துகொள்ளுங்கள்

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி, நாட்டில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 10.38 கோடியாகும், இது 2026 ஆம் ஆண்டில் 17.32 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளைப் பார்க்கும்போது, அடுத்து எழும் கேள்வி பொருளாதார, சமூக மற்றும் மிக முக்கியமாக, சுகாதார சவால்கள் ஆகும்.

இத்தகைய பொறுப்புகளை கருத்தில் கொண்டு, சீனியர் சிட்டிசன்கள் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கான வரி விதிப்புக்கான விலக்கு லிமிட் 2015-2016 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து திருத்தப்பட்டுள்ளது. மேலும், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கான இன்கம் டேக்ஸ் பெனிஃபிட்களும் 60 வயதிற்குட்பட்ட நபர்களை விட கணிசமாக அதிகமாக உள்ளன.

ஆனால் இந்தியாவில் யார் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களாக கருதப்படுகிறார்கள்? சரி வாங்க பார்க்கலாம்.

இந்தியாவில் சீனியர் சிட்டிசனாகக் கருதப்படுபவர் யார்?

வருமான வரியின் படி, ஒரு மூத்த குடிமகன் என்பது நிதியாண்டின் எந்த நேரத்திலும் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட, ஆனால் 80 வயதிற்கும் குறைவான ரெசிடென்ட்.

இந்தியாவில் சூப்பர் சீனியர் சிட்டிசனாக கருதப்படுபவர் யார்?

ஒரு சூப்பர் சீனியர் சிட்டிசன் என்பவர் நிதியாண்டில் எந்த நேரத்திலும் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இன்டிவிஜுவல் ரெசிடென்ட்.

சீனியர் சிட்டிசன்கள் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களின் ஸ்லாப்புகள், அவர்களின் விலக்குகள் மற்றும் பொருந்தக்கூடிய டேக்ஸ் பெனிஃபிட்கள் ஆகியவை பின்வரும் விவரங்களில் அடங்கும்.

சீனியர் சிட்டிசன்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்

[சோர்ஸ்]

2023-24 நிதியாண்டிற்கான சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கான இன்கம் டேக்ஸ் ஸ்லாப்கள் (மதிப்பீட்டு ஆண்டு 2024-25)

மத்திய பட்ஜெட் 2023 நியூ டேக்ஸ் ரெஜிமின் கீழ் வயது வித்தியாசமின்றி அனைத்து தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கும் ஒரே இன்கம் டேக்ஸ் ஸ்லாப்களை முன்மொழிந்தது. அதாவது, ஏப்ரல் 1, 2023 முதல், 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சீனியர் சிட்டிசன்கள் மற்றும் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சீனியர் சிட்டிசன்கள் நியூ டேக்ஸ் ரெஜிமின் கீழ் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு இணையான வரிகளை செலுத்த வேண்டும்.

 

2023-24 நிதியாண்டுக்கான இன்கம் டேக்ஸ் ஸ்லாப்கள் (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) - நியூ டேக்ஸ் ரெஜிம் (சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கும் ஒரே மாதிரி)

நியூ டேக்ஸ் ரெஜிமின் கீழ், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட டேக்ஸ் பேயர் 2023-24 நிதியாண்டிற்கான கொடுக்கப்பட்ட டேக்ஸ் ரேட்களைப் பின்பற்ற வேண்டும்.

இன்கம் டேக்ஸ் ஸ்லாப்கள் டேக்ஸ்ஷேஷன் ரேட்
₹3,00,000 வரை இல்லை
₹3,00,001 முதல் ₹6,00,000 வரை ₹3,00,000க்கு மேலான உங்களின் மொத்த வருமானத்தில் 5%
₹6,00,001 முதல் ₹9,00,000 வரை ₹15,000 + ₹6,00,000க்கு மேலான உங்களின் மொத்த வருமானத்தில் 10%
₹9,00,001 முதல் ₹12,00,000 வரை ₹45,000 + ₹9,00,000க்கு மேலான உங்களின் மொத்த வருமானத்தில் 15%
₹12,00,001 முதல் ₹15,00,000 வரை ₹90,000 + ₹12,00,000க்கு மேலான உங்களின் மொத்த வருமானத்தில் 20%
₹15,00,000க்கு மேல் ₹1,50,000 + ₹15,00,000க்கு மேலான உங்களின் மொத்த வருமானத்தில் 30%

[சோர்ஸ்]

2023-24 நிதியாண்டுக்கான சீனியர் சிட்டிசன்களுக்கான இன்கம் டேக்ஸ் ஸ்லாப்கள் (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) - ஓல்டு டேக்ஸ் ரெஜிம்

2023-23 நிதியாண்டிற்கான ஓல்டு ரெஜிமை தேர்ந்தெடுக்கும் 60 அல்லது அதற்கு மேற்பட்ட ஆனால் 80 வயதிற்குட்பட்ட சீனியர் சிட்டிசன்கள் கொடுக்கப்பட்ட இன்கம் டேக்ஸ் ரேட்களைப் பின்பற்ற வேண்டும்.

 

இன்கம் டேக்ஸ் ஸ்லாப்கள் டேக்ஸ்ஷேஷன் ரேட்
₹3,00,000 வரை இல்லை
₹3,00,001 முதல் ₹5,00,000 வரை ₹3,00,000க்கு மேலான உங்களின் மொத்த வருமானத்தில் 5%
₹5,00,001 முதல் ₹10,00,000 வரை ₹10,000 + உங்களின் மொத்த வருமானத்தில் ₹5,00,000க்கு மேல் 20%
₹10,00,000க்கு மேல் ₹1,10,000 + உங்களின் மொத்த வருமானத்தில் ₹10,00,000க்கு மேல் 30%

கூடுதலாக, சீனியர் சிட்டிசன்களுக்கு கணக்கிடப்பட்ட வரித் தொகைக்கு பொருந்தும் 4% கூடுதல் சுகாதார மற்றும் கல்வி செஸ் விதிக்கப்படும்.

[சோர்ஸ்]

2023-24 நிதியாண்டிற்கான சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கான இன்கம் டேக்ஸ் ஸ்லாப்கள் (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) - ஓல்டு டேக்ஸ் ரெஜிம்

சூப்பர் சீனியர் சிட்டிசன் செக்ஷனின் கீழ் வரும் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட தனிநபர்களுக்கு 2023-24 நிதியாண்டுக்கான ஓல்டு டேக்ஸ் ரெஜிமின் கீழ் டேக்ஸ்ஷேஷன் ரேட் பின்வருமாறு:

இன்கம் டேக்ஸ் ஸ்லாப்கள் டேக்ஸ்ஷேஷன் ரேட்
₹5,00,000 வரை இல்லை
₹5,00,001 முதல் ₹10,00,000 வரை ₹5,00,000க்கு மேல் உங்கள் மொத்த வருமானத்தில் 20%
₹10,00,001க்கு மேல் ₹10,00,000க்கு மேல் உங்கள் மொத்த வருமானத்தில் 30%

சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் கணக்கிடப்பட்ட வரி தொகையில் கூடுதலாக 4% சுகாதார மற்றும் கல்வி செஸ் செலுத்த வேண்டும். 

[சோர்ஸ்]

2022-23 நிதியாண்டுக்கான சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கான இன்கம் டேக்ஸ் ஸ்லாப்கள் (மதிப்பீட்டு ஆண்டு 2023-24)

முந்தைய 2022-23 நிதியாண்டிற்கான 31, ஜூலை 2023 வரை இன்கம் டேக்ஸ் ஃபைல் செய்ய வேண்டிய 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட டேக்ஸ் பேயர் பின்வரும் இன்கம் டேக்ஸ் ஸ்லாப்களைப் பின்பற்ற வேண்டும். இந்த ஸ்லாப்புகள் பட்ஜெட் 2023 க்கு முன்பு மட்டுமே பொருந்தும்.

2022-23 நிதியாண்டுக்கான சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கான இன்கம் டேக்ஸ் ஸ்லாப்கள் (மதிப்பீட்டு ஆண்டு 2023-24)-நியூ டேக்ஸ் ரெஜிம்

2022-23 நிதியாண்டில், சீனியர் சிட்டிசன்கள் (அதாவது, 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது உள்ளவர்கள் ஆனால் 80 வயதுக்கு குறைவானவர்கள்) மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கான (அதாவது, 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) இன்கம் டேக்ஸ் ஸ்லாப்கள் பின்வருமாறு:

இன்கம் டேக்ஸ் ஸ்லாப்கள் டேக்ஸ்ஷேஷன் ரேட்
₹2,50,000 வரை இல்லை
₹2,50,001 முதல் ₹5,00,000 வரை ₹2,50,000க்கு மேல் 5%
₹5,00,001 முதல் ₹7,50,000 வரை ₹12,500 + ₹5,00,000க்கு மேல் 10%
₹7,50,001 முதல் ₹10,00,00 வரை ₹37,500 + ₹7,50,000க்கு மேல் 15%
₹10,00,001 முதல் ₹12,50,000 வரை ₹75,000 + ₹10,00,000க்கு மேல் 20%
₹12,50,001 முதல் ₹15,00,000 வரை ₹1,25,000 + ₹12,50,000க்கு மேல் 25%
₹15,00,000க்கு மேல் ₹1,87,500 + ₹15,00,000க்கு மேல் 30%

[சோர்ஸ்]

2022-23 நிதியாண்டுக்கான சீனியர் சிட்டிசன்களுக்கான இன்கம் டேக்ஸ் ஸ்லாப்கள் (மதிப்பீட்டு ஆண்டு 2023-24)- ஓல்டு டேக்ஸ் ரெஜிம்

60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மற்றும் 80 வயதிற்குட்பட்ட சீனியர் சிட்டிசன்கள் 2022-23 நிதியாண்டில் கொடுக்கப்பட்ட ஓல்டு டேக்ஸ் ரெஜிம் ரேட்களைப் பின்பற்ற வேண்டும்:

இன்கம் டேக்ஸ் ஸ்லாப்கள் டேக்ஸ்ஷேஷன் ரேட்
₹3,00,000 வரை இல்லை
₹3,00,001 முதல் ₹5,00,000 வரை ₹3,00,000க்கு மேலான உங்களின் மொத்த வருமானத்தில் 5%
₹5,00,001 முதல் ₹10,00,000 வரை ₹10,000 + உங்களின் மொத்த வருமானத்தில் ₹5,00,000க்கு மேல் 20%
₹10,00,000க்கு மேல் ₹1,10,000 + உங்களின் மொத்த வருமானத்தில் ₹10,00,000க்கு மேல் 30%

கணக்கிடப்பட்ட வரித் தொகைக்கு பொருந்தும் 4% சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரியும் விதிக்கப்படும்.

[சோர்ஸ்]

2022-23 நிதியாண்டிற்கான சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கான இன்கம் டேக்ஸ் ஸ்லாப்கள் (மதிப்பீட்டு ஆண்டு 2023-24) - ஓல்டு டேக்ஸ் ரெஜிம்

31, ஜூலை 2023 வரை இன்கம் டேக்ஸ்ஃபைல் செய்ய, 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் கொடுக்கப்பட்ட டேக்ஸ்ஷேஷன் ரேட்டை பின்பற்ற வேண்டும்:

இன்கம் டேக்ஸ் ஸ்லாப்கள் டேக்ஸ்ஷேஷன் ரேட்
₹5,00,000 வரை இல்லை
₹5,00,001 முதல் ₹10,00,000 வரை ₹5,00,000க்கு மேல் உங்கள் மொத்த வருமானத்தில் 20%
₹10,00,001க்கு மேல் ₹10,00,000க்கு மேல் உங்கள் மொத்த வருமானத்தில் 30%

கணக்கிடப்படும் வரித் தொகையில் கூடுதலாக 4% சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரியும் பொருந்தும்.

[சோர்ஸ்]

ரூ. 50 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் கட்டணம்

சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன் ரூ. 50 லட்சத்துக்கு மேல் வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் கொண்டிருந்தால், ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்த 2023-24 நிதியாண்டிற்கான பின்வரும் கூடுதல் கட்டணத்தின்படி வரி மதிப்பிடப்படுகிறது.

டேக்சபிள் இன்கம் சர்சார்ஜ்
₹50 லட்சத்திற்கு மேல் ஆனால் ₹1 கோடிக்கு கீழே 10%
₹1 கோடிக்கு மேல் ஆனால் ₹2 கோடிக்கு கீழே 15%
₹2 கோடிக்கு மேல் 25%

2022-23 நிதியாண்டில் (மதிப்பீட்டு ஆண்டு 2023-24), ரூ. 5 கோடிக்கு மேல் வருமானம் மீதான அதிகபட்ச கூடுதல் கட்டணம் 37% ஆக இருந்தது, இது 1, ஏப்ரல் 2023 முதல் நடைமுறைக்கு வரும் மத்திய பட்ஜெட் 2023 ஆல் 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். 

[சோர்ஸ்]

60 அல்லது அதற்கு மேற்பட்ட ஆனால் 80 வயதிற்குட்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு இன்கம் டேக்ஸ் விலக்குகள்

மத்திய பட்ஜெட் 2023க்கான நியூ டேக்ஸ் ரெஜிமின் நிதியாண்டு 2023-24 இன் கீழ் இன்கம் டேக்ஸ் ஸ்லாப்களை மாற்றியமைத்த பிறகு, சீனியர் சிட்டிசன்களுக்கான அடிப்படை விலக்கு லிமிட்கள் இரண்டு வரி முறைகளுக்கும் ஒரே மாதிரியாக மாறின, இது ரூ. 3 லட்சமாகும். 2022-23 நிதியாண்டில், நியூ டேக்ஸ் ரெஜிமிற்கான அடிப்படை விலக்கு லிமிட் ரூ. 2.5 லட்சமாக இருந்தது.

80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு இன்கம் டேக்ஸ் விலக்குகள்

இரண்டு வரி விதிப்பு முறைகளிலும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு அடிப்படை விலக்கு லிமிட்கள் வேறுபட்டவை. மத்திய பட்ஜெட் 2023 நியூ ரெஜிமின் கீழ் பேசிக் இன்கம் எக்செம்ப்ஷன் லிமிட்டை ரூ. 3 லட்சமாக முன்மொழிந்தது, இது 2022-23 நிதியாண்டில் ரூ. 2.5 லட்சமாக இருந்தது. 

ஓல்டு டேக்ஸ் ரெஜிமின் கீழ், அவர்கள் இரண்டு நிதியாண்டுகளுக்கும் ரூ. 5 லட்சம் வரை அடிப்படை வருமான விலக்கு கிளைம் செய்யலாம்.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு இன்கம் டேக்ஸ் பெனிஃபிட்கள் கிடைக்காது

சீனியர் சிட்டிசன்கள் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் 2023-24 நிதியாண்டுக்கான நியூ டேக்ஸ் ரெஜிமை தேர்வுசெய்தால், அவர்கள் சில இன்கம் டேக்ஸ் பெனிஃபிட்களைத் துறக்க வேண்டும், அவை பின்வருமாறு:

  • ஹவுஸ் ரென்ட் அலவன்ஸ் (எச்.ஆர்.ஏ)
  • லீவ் டிராவல் அலவன்ஸ் (எல்.டி.ஏ)
  • புரொபஷனல் டேக்ஸ்
  • தொழில் வழங்குனரின் ஸ்பெஷல் அலவன்ஸ், கன்வேயன்ஸ் அலவன்ஸ், ரீலொக்கேஷன் அலவன்ஸ், தொழில் செய்யும் காலத்தில் நாளாந்த செலவுகள்
  • செக்ஷன் 24 இன் கீழ் வீட்டுக் கடனுக்கான வட்டி 
  • சில்ட்ரன் எஜுகேஷன் அலவன்ஸ் 
  • ஹெல்ப்பர் அலவன்ஸ்
  • 80C, 80D, 80E, 80TTB போன்ற அத்தியாயம் VI-A இன் கீழ் டிடெக்‌ஷன். அறிவிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் மற்றும் 80JJAA ஆகியவற்றின் கீழ் பிடித்தம் தவிர

இந்தியாவில் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கான இன்கம் டேக்ஸ் பெனிஃபிட்கள்

இந்த விலக்குகளிலிருந்து நீங்கள் குறிப்பாக பயனடையக்கூடிய முக்கிய பகுதிகளில் ஒன்று சுகாதாரம். நாட்டில் அதிகரித்து வரும் சுகாதார செலவுகள் காரணமாக, சிகிச்சை பெறுவதற்கான நிதி பொறுப்பை ஓரளவு குறைக்கக்கூடிய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு அரசாங்கம் டேக்ஸ் பெனிஃபிட்களை வழங்கியுள்ளது. 

2022-23 மற்றும் 2023-24 நிதியாண்டுகளில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தனிநபர்கள் பெறக்கூடிய சில பொதுவான டேக்ஸ் டிடெக்ஷன்கள் மற்றும் பெனிஃபிட்கள் பின்வருமாறு. 

  • ஸ்டாண்டர்டு டிடெக்‌ஷன்

60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தில் 'சம்பளத்திலிருந்து வருமானம்' என்ற தலைப்பின் கீழ் ரூ. 50,000 நிலையான பிடித்தம் கிளைம் செய்யலாம். குடும்ப ஓய்வூதியதாரர்கள் ரூ. 15,000 வரை நிலையான விலக்கு கிளைம் செய்யலாம்.

  • செக்ஷன் 80DDB இன் கீழ் விலக்கு

2018-19 மத்திய பட்ஜெட்டில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, சீனியர் சிட்டிசன்கள் குறிப்பிட்ட கடுமையான நோய்களின் மருத்துவ செலவுக்கு ₹ 1 லட்சம் வரை விலக்கு கிளைம் செய்யலாம்.

[சோர்ஸ்]

ஹெல்த் இன்சூரன்ஸ்

இன்கம் டேக்ஸ் ஆக்ட்டின் செக்ஷன் 80D இன் கீழ், சீனியர் சிட்டிசன்கள் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு ₹ 50,000 வரை விலக்கு கிளைம் செய்யலாம், இது மற்ற நபர்களுக்கு ₹ 25,000 ஆகும்.

[சோர்ஸ்]

  • சேவிங்ஸிலிருந்து இன்ட்ரெஸ்ட்

செக்ஷன் 80TTBயின் கீழ், சேவிங்ஸ் பேங்க் அகௌன்ட்கள், பேங்க் டெபாசிட்கள், போஸ்ட் ஆபிஸ் டெபாசிட்கள் அல்லது கூட்டுறவு வங்கிகள் அஞ்சலகம் மற்றும் பேங்க் டெபாசிட்களிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானத்தின் மீதான விலக்கு 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு ரூ. 10,000 லிருந்து சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ. 50,000 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பெனிஃபிட் பல்வேறு நிலையான மற்றும் தொடர்ச்சியான வைப்புத் திட்டங்களிலிருந்து வட்டி வருமானத்திற்கும் பொருந்தும்.

[சோர்ஸ்]

  • ரிவர்ஸ் மார்ட்கேஜ் ஸ்கீம்

இந்த ஸ்கீமின் கீழ், சீனியர் சிட்டிசன்கள் தங்கள் வீட்டை வாழ்நாள் முழுவதும் அடமானம் வைத்து பெறும் வழக்கமான தவணைகளுக்கு வருமான வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது.

எனவே, இதுபோன்ற இன்கம் டேக்ஸ் பெனிஃபிட்கள் மூலம், நாட்டின் மூத்த மற்றும் சூப்பர் சீனியர் குடிமக்கள் மீதான வரிச் சுமையைக் குறைக்க அரசாங்கம் முயற்சித்துள்ளது. எனவே, உங்கள் வருமான வரியைச் செலுத்துவதற்கு முன், உங்கள் பொற்காலங்களில் நீங்கள் நிதி ரீதியாக சுயாதீனமான வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்ய பொருந்தக்கூடிய டேக்ஸ் ஸ்லாப்கள், விலக்குகள் மற்றும் அடுத்தடுத்த டேக்ஸ் பெனிஃபிட்களை அறிந்து கொள்ளுங்கள்.

இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்

சீனியர் சிட்டிசன்களுக்கான இன்கம் டேக்ஸ் ஸ்லாப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் உடல்நலம் தொடர்பான ஏதேனும் டேக்ஸ் பெனிஃபிட்களை பெற முடியுமா?

எந்தவொரு மருத்துவ காப்பீட்டு பாலிசியிலும் காப்பீடு செய்யப்படாத 80 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சுகாதார பரிசோதனைகளுக்கு ஐடி சட்டத்தின் செக்ஷன் 80D இன் கீழ் ரூ. 50,000 வரை விலக்கு கிளைம் செய்யலாம். 

[சோர்ஸ்]

சீனியர் சிட்டிசன்கள் தங்கள் இன்கம் டேக்ஸ் ரிட்டர்னை ஃபைல் செய்யக்கூடிய ஃபார்ம் என்ன?

ஓய்வூதியம் அல்லது குடியிருப்பு சொத்து அல்லது பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் மூலம் ஊதியம் அல்லது வருமானம் பெறும் சீனியர் சிட்டிசன்கள் தங்கள் இன்கம் டேக்ஸ் கணக்கை ஃபைல் செய்ய ஐ.டி.ஆர் -1 ஐப் பயன்படுத்தலாம். வருமானத்தில் நீண்ட மற்றும் குறுகிய கால மூலதன ஆதாயங்கள் இருந்தால், மேலே உள்ள நிகழ்வுகளைத் தவிர, தனிநபர்கள் தங்கள் வருமானத்தை ஐ.டி.ஆர்- 2 மூலம் ஃபைல் செய்ய வேண்டும்.

சீனியர் சிட்டிசன்கள் என்.ஆர்.ஐ.க்கள் செக்ஷன் 87A இன் கீழ் டேக்ஸ் ரிபேட் கிளைம் செய்ய தகுதியானவர்களா?

இல்லை, இன்கம் டேக்ஸ் ஆக்ட்டின் செக்ஷன் 87A இன் கீழ் விலக்குகளைப் பெற தனிநபர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய முதல் அளவுகோல்களில் ஒன்று, அவர்கள் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். எனவே, இந்தியாவில் குடியிருப்பு அல்லாதவர்கள் செக்ஷன் 87A இன் கீழ் டேக்ஸ் ரிபேட் கிளைம் செய்ய முடியாது. சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் உடல்நலம் தொடர்பாக ஏதேனும் டேக்ஸ் பெனிஃபிட்டை பெற முடியுமா?

எந்தவொரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியிலும் இன்சூர் செய்யப்படாத 80 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சுகாதார பரிசோதனைகளுக்கு ஐ.டி சட்டத்தின் செக்ஷன் 80D இன் கீழ் ரூ. 50,000 வரை விலக்கு கிளைம் செய்யலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு டேக்ஸ் பெனிஃபிட்டை பெற முடியுமா?

ஆம், ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவ காப்பீட்டு பாலிசிகளுக்கு டேக்ஸ் பெனிஃபிட்டை பெறலாம். இருப்பினும், நீங்கள் பொருந்தக்கூடிய தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் டேக்ஸ் பெனிஃபிட்களைப் பெற அனைத்து பிரீமியங்களும் செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.