டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

தடுப்பூசி சான்றிதழுடன் பாஸ்போர்ட்டை எவ்வாறு இணைப்பது?

(ஆதாரம்: india.com)

உயர்கல்வி அல்லது வேலைக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா?

ஆம் எனில், எந்தவிதமான சிரமத்தையும் தவிர்க்க, தடுப்பூசி சான்றிதழுடன் பாஸ்போர்ட்டை விரைவில் இணைக்கவும்.

ஏனென்றால், கோவிட்-19 நோய்த்தொற்றைக் குறைக்கும் நோக்கில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்களுக்கு இந்திய அரசாங்கம் இந்த நடவடிக்கையை கட்டாயமாக்கியுள்ளது. உங்கள் தடுப்பூசி சான்றிதழுடன் உங்கள் பாஸ்போர்ட் இணைக்கப்பட்டிருந்தால், தடுப்பூசி நிலை சரிபார்ப்பின்போது அல்லது புறப்படும் போது உதவியாக இருக்கும்.

இந்த செயல்முறைக்கான விரிவான வழிமுறைகளை நீங்கள் அறிய விரும்பினால், தொடர்ந்து படிக்கவும்!

தடுப்பூசி சான்றிதழுடன் பாஸ்போர்ட்டை இணைப்பதற்கான படிகள்?

கோவின்  ஆப் அல்லது அதன் வலைத்தளம் வழியாக தடுப்பூசி சான்றிதழை உங்கள் பாஸ்போர்ட்டுடன் எளிதாக இணைக்கலாம். 

அதில் உள்நுழைந்த பிறகு பின்வரும் படிகளுக்கு நீங்கள் செல்லலாம் - 

  • படி 1: "கணக்கு விவரம்" டாபில் இருந்து "ஒரு சிக்கலை எழுப்பவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • படி 2: கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து, "பாஸ்போர்ட் விவரங்களைச் சேர்" என்பதைத் தேர்ந்தெடுத்து தொடரவும்.
  • படி 3: திருப்பிவிடப்பட்ட பக்கத்தில், பாஸ்போர்ட் விவரங்களைச் சேர்க்க விரும்பும் உறுப்பினரின் பெயரைக் கிளிக் செய்யவும்.
  • படி 4: அடுத்து, பயனாளியின் பாஸ்போர்ட் எண்ணை சரியாக நிரப்பி, உரையாடல் பெட்டியில் டிக் செய்யவும். "சமர்ப்பி" என்பதை அழுத்தவும்.

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.

இதைத் தொடர்ந்து, கோரிக்கை வெற்றிகரமாக புதுப்பிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் மற்றொரு அறிவிப்பைப் பெறுவீர்கள்.

தடுப்பூசி சான்றிதழுடன் பாஸ்போர்ட்டை இணைக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அதற்கு சில வினாடிகள் மட்டுமே ஆகும் என்பதால் உறுதியாக இருங்கள்.

நீங்கள் கோவின்னில் பதிவு செய்யவில்லை என்றால், தடுப்பூசி போடுவதற்கு முன் பதிவு செய்யும் போது உங்கள் புகைப்பட அடையாளச் சான்றாக உங்கள் பாஸ்போர்ட்டைத் தேர்வு செய்யலாம். நீங்கள் இன்னும் சில மாதங்களில் வெளிநாடு செல்ல திட்டமிட்டால் இது ஒரு நல்ல வழியாக இருக்கும்.

பாஸ்போர்ட்டுடன் இணைக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழில் உள்ள தகவலை எவ்வாறு திருத்துவது என்பதை இப்போது கற்றுக்கொள்வோம்.

தடுப்பூசி சான்றிதழுடன் பாஸ்போர்ட்டை இணைப்பதன் முக்கியத்துவம்

ஒரு நபரை விமானத்தில் ஏற அனுமதிக்கும் முன் விமான நிலைய அதிகாரிகள் தடுப்பூசி நிலையை சரிபார்க்கிறார்கள். இது கோவிட்-19 நெறிமுறைகளையும் பயணிகளின் பாதுகாப்பையும் பராமரிப்பதற்கான முன்னெடுப்பு ஆகும்.

ஒரு அறிக்கையின்படி கல்வி, வேலைகள் அல்லது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியக் குழு வெளிநாடு செல்லும்போதும் அனைத்து பயணிகளும் பாஸ்போர்ட்டை தடுப்பூசி சான்றிதழுடன் இணைக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்தது.

உங்கள் பாஸ்போர்ட்டை தடுப்பூசி சான்றிதழுடன் இணைக்கும்போது, தடுப்பூசியின் டோஸ், தடுப்பூசியின் தொகுதி எண் போன்ற முக்கிய விவரங்கள் புதுப்பிக்கப்படும்.

மேலும், இந்த கோவின் தடுப்பூசி சான்றிதழ் விமான நிலையத்தில் ஸ்கேன் செய்யப்படும். தொழில்நுட்ப ரீதியாக, விமான நிலைய அதிகாரிகள் அங்கீகாரத்திற்காக கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி தடுப்பூசி சான்றிதழ்களில் கியூஆர் (QR) குறியீடுகளை ஸ்கேன் செய்வார்கள்.

தடுப்பூசி சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட்டை இணைப்பதற்கான வழிகளைத் தேடும் நபர்கள் பின்வரும் பிரிவில் விவாதிக்கப்பட்ட படிகளிலிருந்து பயனடையலாம்.

தடுப்பூசி சான்றிதழில் தகவல்களை எவ்வாறு புதுப்பிப்பது?

சான்றிதழில் மாற்றங்களைப் புதுப்பிக்க இந்தப் படிகளைப் பின்பற்றவும் -

1. கோவின்னின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் ஓடிபி (OTP) மூலம் உள்நுழையவும்.

2. அதன் முகப்புப் பக்கத்தில் “ஒரு சிக்கலை எழுப்பு” என்பதைக் கிளிக் செய்து, திருப்பிவிடப்பட்ட பக்கத்தில் “சான்றிதழில் திருத்தம்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3. அடுத்து கீழ்வரும் மெனுவிலிருந்து சம்பந்தப்பட்ட நபரைத் தேர்ந்தெடுத்து, அனைத்து திருத்தங்களையும் புதுப்பிக்கவும். அடுத்து, "சமர்ப்பி" என்பதைக் கிளிக் செய்யவும்.

இந்த செயல்முறையை வெற்றிகரமாக முடித்த பிறகு, நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளீர்கள் என்பதை நிரூபிக்க இந்த இணைக்கப்பட்ட சான்றிதழின் நகலை விமான நிலைய அதிகாரியிடம் காட்ட வேண்டும்.

கோவின் போர்ட்டலில் இருந்து இந்தச் சான்றிதழைப் பதிவிறக்குவதற்கான செயல்முறை கீழே விவாதிக்கப்படுகிறது.

பாஸ்போர்ட்டுடன் இணைக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழின் நகலை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?

தடுப்பூசி சான்றிதழுடன் பாஸ்போர்ட்டை இணைப்பதற்கான செயல்முறையை முடித்த பிறகு பின்வரும் படிகளில் கோவின் செயலி மற்றும் போர்ட்டலில் இருந்து இணைக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை நீங்கள் பதிவிறக்கலாம் -

1. டாஷ்போர்டில், முதல் மற்றும் இரண்டாவது டோஸ் பற்றிய தகவல்களைக் காணலாம். இந்தச் சான்றிதழைப் பதிவிறக்க, பொருந்தக்கூடிய விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

2. பதிவிறக்க இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இந்தச் சான்றிதழின் பிடிஎஃப் (PDF) படிவத்தை நீங்கள் பெறலாம்.

உங்கள் பாஸ்போர்ட்டை தடுப்பூசி சான்றிதழுடன் எளிதாக இணைக்க மேலே விவாதிக்கப்பட்ட படிகளைப் பின்பற்றவும். 

அதிக சிரமமின்றி வெளிநாடுகளுக்குச் செல்லவும், அதே நேரத்தில் கோவிட் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் இது உதவும்.

தடுப்பூசி சான்றிதழுடன் பாஸ்போர்ட்டை இணைப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது பாஸ்போர்ட் இணைக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை மொபைல் எண் இல்லாமல் பதிவிறக்கம் செய்ய முடியுமா?

இல்லை, தடுப்பூசி சான்றிதழை பதிவு செய்து பதிவிறக்கம் செய்ய மொபைல் எண்ணை வழங்க வேண்டும்.

எனது பாஸ்போர்ட் இணைக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை கோவின் தவிர வேறு எந்த செயலியிலிருந்தும் பதிவிறக்க முடியுமா?

ஆம், இந்த தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்க, ஆரோக்ய சேது செயலியை சரிபார்த்து, கோவின் டாபைக் கிளிக் செய்யவும். அரசு வாட்ஸ்அப் எண்ணுக்கு செய்தி அனுப்புவதன் மூலமும் இந்தச் சான்றிதழை நீங்கள் பெற முடியும்.

பாஸ்போர்ட் மற்றும் தடுப்பூசி சான்றிதழை இணைக்க வேண்டுமா?

வேலை அல்லது கல்விக்காக வெளிநாடு செல்லும் தனிநபர்களுக்கு, கோவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட விவரங்களை பாஸ்போர்ட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசு கட்டாயமாக்கியிருக்கிறது.