டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

இந்தியாவில் பச்சிளங் குழந்தைகள்/பிறந்த குழந்தைகளுக்கான பாஸ்போர்ட்கள்

(Source: wise.com)

பாஸ்போர்ட் விண்ணப்ப முறை என்பது இந்தியாவில் போதியளவு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டுக்கு செல்லும் பெரும்பாலான பயணிகள் அதைப் பற்றிய விவரங்களை நன்றாகவே அறிந்திருக்கின்றனர். இருப்பினும், குழந்தைக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை வரும் போது, பெரும்பாலானோருக்கு குழப்பங்கள் ஏற்படுகிறது என்பதே நிதர்சனம்.

பிறந்த குழந்தைக்கான பாஸ்போர்ட் என்றால் என்ன? உங்கள் குழந்தைக்கு எவ்வாறு பாஸ்போர்ட் பெறுவீர்கள்?

இது போன்ற பல கேள்விகள் உங்களுக்கு இருந்தால் தொடர்ந்து படிக்கவும். இந்தக் கட்டுரை இந்தியாவில் குழந்தைக்கான பாஸ்போர்ட் பற்றிய எல்லா கேள்விகளுக்குமான பதிலை வழங்கும்.

பச்சிளங் குழந்தை /பிறந்த குழந்தைக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவில் பிறந்த குழந்தைக்கான பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது உள்ள பல்வேறு படிகளைப் புரிந்துகொள்வதற்கு முன், இந்த ஆவணத்தில் உள்ள தகவல்கள் என்னவென்று பார்க்கவும்.

எந்தவொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் குழந்தைபாஸ்போர்ட்டுகளுக்கான வயது வரம்புகளே. விண்ணப்பிக்கும் போது உங்கள் குழந்தையின் வயது 4 க்கும் கீழ் இருந்தால், அவர்/அவள் இந்த ஆவணத்தைப் பெற தகுதி பெறுவார்கள். அதை அவர்கள் சார்பாக பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர்களால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்தியாவில் பிறந்த குழந்தைக்கான பாஸ்போர்ட் விண்ணப்பம் என்பது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்முறைகள் மூலம் நடைபெறுகிறது. இந்த இரண்டு செயல்முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் நீங்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்முறைகள் இரண்டையும் தெரிந்துகொள்ளலாம்.

பிறந்த குழந்தைகளுக்கு ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவும்

பிறந்த குழந்தைக்கு ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டுமெனில், நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் பின்வருமாறு -

 • படி 1: பாஸ்போர்ட் சேவா கேந்திரா வலைத்தளத்தைப் பார்க்கவும்.

 • படி 2: இந்தப் போர்ட்டலில் துல்லியமான தகவல்களை வழங்கி கணக்கைப் பதிவுசெய்யவும். உங்கள் இமெயில் ஐடிக்கு அனுப்பப்பட்டிருக்கும் இணைப்பின் மூலம் இந்தக் கணக்கைச் சரிபார்க்கவும்.

 • படி 3: இந்த பி.எஸ். கே (PSK) கணக்கில் உங்கள் விவரங்கள் மூலம் உள்நுழையவும்.

 • படி 4: ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் மாற்று விண்ணப்பம் 1 அல்லது மாற்று விண்ணப்பம் 2 என்பதில் ஒன்றைத் தேர்வு செய்யவும். முதல் விருப்பம் உடனடியாக ஆன்லைன் படிவத்தை நிரப்ப உதவும், இரண்டாவது விருப்பம் இந்தப் படிவத்தை பதிவிறக்கம் செய்து நீங்கள் ஓய்வாக இருக்கும் நேரத்தில் நிரப்ப உதவும்.

 • படி 5: நீங்கள் ஆன்லைன் படிவத்தை மாற்று 1 இன் கீழ் நேரடியாக சமர்ப்பிக்கலாம். நீங்கள் மாற்று விண்ணப்பம் 2 ஐத் தேர்வுசெய்தால், நிரப்பப்பட்ட படிவத்தை எக்ஸ்.எம்.எல்(XML) வடிவத்தில் சேமிக்க வேண்டும். அதன் பிறகு, நீங்கள் மாற்று விண்ணப்பம் 2 என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த அதே பிரிவில் அதைப் பதிவேற்றவும்.

 • படி 6: அதற்கான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, ஸ்லாட் நேரத்தை முன்பதிவு செய்யவும்.

குழந்தைக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை இத்துடன் நிறைவடைகிறது.

இருப்பினும், இது உங்களுக்கு ஒத்துவரவில்லை எனில், பாஸ்போர்ட் பெற ஆஃப்லைன் விண்ணப்பங்களையும் அரசாங்கம் அனுமதிக்கிறது.

பிறந்த குழந்தைகளுக்கான ஆஃப்லைன் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்

எல்லா பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களிழும்  பெரியோர்களுக்கான பாஸ்போர்ட்டுக்கு வாக்-இன் விண்ணப்பங்களை அனுமதிப்பதில்லை என்றாலும், மைனர் மற்றும்  குழந்தை பாஸ்போர்ட்டுகளுக்கு இந்த வசதி அனுமதிக்கப்படுகிறது. எனவே, ஆஃப்லைன் செயல்முறை பின்வருமாறு -  

 • படி 1: நீங்கள் விண்ணப்பித்த பாஸ்போர்ட் சேவை கேந்திரா/தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா/பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் செல்லவும்.

 • படி 2: தேவையான விவரங்களைக் கொண்டு விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

 • படி 3: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும்.

 • படி 4: குழந்தை பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய கட்டணங்களை செலுத்தவும்.

குழந்தை பாஸ்போர்ட்டுக்கு எப்படி, எங்கு விண்ணப்பிப்பது என்பது இப்போது உங்களுக்குத் தெரியும், இந்த செயல்முறை முடிவடைவதற்குத் தேவையான பல்வேறு ஆவணங்களைப் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிறந்த குழந்தைக்குத் தேவைப்படும் பாஸ்போர்ட் ஆவணங்கள்

முறையான ஆவண சமர்ப்பிப்பு இல்லாமல் குழந்தை பாஸ்போர்ட் செயல்முறை முழுமையடையாது. இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான சில முக்கியமான ஆவணங்கள் பின்வருமாறு -

 • அந்தந்த மாநகராட்சி வழங்குகிய சம்பந்தப்பட்ட குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.

 • முகவரிச் சான்றாகபெற்றோரின் பாஸ்போர்ட்டில் ஒன்றே போதிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.

 • குழந்தையின் பாஸ்போர்ட் அளவிலான படங்கள் என்பது மற்றொரு முக்கிய குழந்தை பாஸ்போர்டுக்கான ஆவணமாகும்.

 • பாஸ்போர்ட் சேவா கேந்திராவிலிருந்து சேகரிக்கப்பட்ட இணைப்பு H படிவத்தை நிரப்பவும்.

 • ஏற்பாடு ரசீது

குழந்தையின் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான கட்டண அமைப்பு

குழந்தை பாஸ்போர்ட்டுக்கு தேவையான ஆவணங்களை அறிந்துகொள்வதோடு, கட்டணத்தின் அமைப்பைப் புரிந்துகொள்வதும் முக்கியம்.

பொதுவாக, இந்தியாவில் மைனருக்கு வழக்கமான பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் ₹ 1000 மற்றும் தட்கல் கட்டணம் ₹ 2000 ஆகும்.

 

குழந்தை பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்களுக்கான செயல்முறை நேரம்

குழந்தை பாஸ்போர்ட் செயல்முறைக்கான நேரங்கள் சில காரணிகளின் அடிப்படையில் மாறுபடும். வெற்றிகரமான விண்ணப்பத்திற்குப் பிறகு, பெற்றோர்/பாதுகாவலர்கள் உறுதிப்படுத்தலுக்கான ரசீது அல்லது அறிவிப்பைப் பெற வேண்டும். பொதுவாக, இந்த உறுதிப்படுத்தலுக்குப் பிறகு 4-7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும்.

சில சூழ்நிலைகளில், உங்கள் குழந்தையின் பாஸ்போர்ட்டைப் பெறுவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலைகளைக் கையாள தேவையான அனைத்தையும் அறிந்து நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்களுக்கு தேவையான விவரங்களை அறிந்துகொள்ள இந்த கட்டுரை உங்களுக்கு உதவியது என்று நம்புகிறோம்!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்கள் வாழ்க்கைத்துணை வெளிநாட்டில் இருந்தால், குழந்தைக்கு பாஸ்போர்ட் எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பத்தின் போது உங்கள் வாழ்க்கைத் துணை வெளிநாட்டில் இருந்தால், இந்தச் செயல்முறையை பூர்த்திச் செய்ய கையொப்ப வடிவிலான அவரது ஒப்புதல் தேவைப்படும். படிவத்தின் இணைப்பு D இன் கீழ் இந்த குறிப்பிட்ட விவரங்களைப் பார்க்கலாம்.

ஆஃப்லைன் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் போது உங்கள் பிறந்த குழந்தையும் பி.எஸ்.கே-வுக்கு வர வேண்டுமா?

இல்லை, ஆஃப்லைன் விண்ணப்ப செயல்முறைக்குப் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் போது உங்கள்  மகன் அல்லது மகள் பிஎஸ்கே-க்கு வர வேண்டிய அவசியமில்லை. பெற்றோர்களின் வருகை மட்டுமே போதுமானது.

குழந்தைக்கான பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறையில் போலீஸ் சரிபார்ப்பு செய்யப்படுமா?

இல்லை, பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருமே அவர்களது வாழ்க்கைத் துணையின் பெயர் அச்சடிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை வைத்திருந்தால் போலீஸ் சரிபார்ப்பு தேவையில்லை.