மாவட்ட பாஸ்போர்ட் பிரிவு, குடிமக்கள் சேவை மையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விரைவு அஞ்சல் மையத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதாக இருந்தால், விண்ணப்பப் படிவத்தில் உங்கள் புகைப்படத்தை ஒட்டும்போது பின்வரும் வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றவும்:
- 4.5 செமீ நீளம் x 3.5 செமீ அகலம் கொண்ட ஒரு கலர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை ஒட்டவும்.
- புகைப்படத்தின் பின்னணி நிறம் வெண்மையாகவும், உங்கள் ஆடையின் நிறம் டார்க்காகவும் இருக்க வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாக்ஸில் புகைப்படம் பொருத்தப்பட வேண்டும்.
- உங்கள் முகம் நன்கு தெரியும்படியும் மற்றும் கண்கள் திறந்த நிலையிலும் புகைப்படத்தில் இருக்க வேண்டும். உங்கள் தலையின் நிலை சரியாக இருக்க வேண்டும் மற்றும் முகத்தின் ஓரங்கள் மற்றும் காதுகள் தெரியுமாறு புகைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- புகைப்படத்தில் நீங்கள் கலர் அல்லது கருப்புக் கண்ணாடி அணிந்து எடுத்து இருந்தால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது.
- கணினியில் அச்சிடப்பட்ட புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் உயர்தர புகைப்படத் தாளில் அச்சிடப்பட்ட புகைப்படங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
- உங்கள் தலைமுடி கண்களை மறைக்கக்கூடாது.
- கண்கண்ணாடி மீது பளபளப்பாக வெளிச்சம் மின்னினால் அதையும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
- சேதமடைந்த புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
- மத நோக்கங்களுக்காக மட்டுமே தலையை தலைப்பாகை அந்த மத வழக்கத்திற்கு ஏற்றதைக் கொண்டு மூடுவது அனுமதிக்கப்படுகிறது.
- புகைப்படத்தில் உங்கள் முகத்திலோ அல்லது பின்னணியிலோ நிழல்கள் இருக்கக்கூடாது.
- குழு புகைப்படங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
- ஒட்டப்பட்ட புகைப்படத்தில் கையொப்பம் இட வேண்டாம்.
குறிப்பு: பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்தால் புகைப்படங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
எனவே, பாஸ்போர்ட் விண்ணப்பப் படிவத்தை எவ்வாறு நிரப்புவது என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். அதைப் பற்றித் தெரிந்துகொள்வது, எந்தத் தொந்தரவும் இல்லாமல் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கான செயல்முறையை ஒழுங்குப்படுத்தும்.