Thank you for sharing your details with us!
மேனேஜ்மென்ட் லையபிளிட்டி இன்சூரன்ஸ் என்றால் என்ன?
மேனேஜ்மென்ட் லையபிளிட்டி இன்சூரன்ஸ் (இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் இன்சூரன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது உங்கள் நிறுவனத்தையும் அதன் மேனேஜர்கள், இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்களின் தவறுகள் அல்லது செயற்பாடுகளினால் எழும் கிளைம்கள் காரணமாக ஏற்படும் எந்தவொரு நிதி இழப்புக்களிலிருந்தும் பாதுகாக்கும் ஒரு வகை பாலிசியாகும்.
எடுத்துக்காட்டாக, பிசினஸ் நடவடிக்கைகளை நிர்வகிக்கும்போது அல்லது நடத்தும்போது இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் என்ற முறையில் இந்த நபர்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் பாகுபாடு, துன்புறுத்தல், மோசடி அல்லது தவறான பணிநீக்கம் ஆகியவற்றிலிருந்து ஏற்படக்கூடிய நிதி இழப்புகளிலிருந்து உங்கள் பிசினசையும் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளையும் பாதுகாக்க இது உதவும்.
இது போன்ற சூழ்நிலைகளில், ஒரு மேனேஜ்மென்ட் லையபிளிட்டி இன்சூரன்ஸ் அனைத்து வகையான கணிக்க முடியாத மற்றும் பெரிய கவரேஜ் கிளைம்களுக்கு எதிராக கூடுதலான கவரேஜை வழங்குகிறது, அத்துடன் ஒரு வழக்கு காரணமாக ஏற்படும் சில இழப்புகளையும் கவர் செய்கிறது.
உங்களுக்கு மேனேஜ்மென்ட் லையபிளிட்டி இன்சூரன்ஸ் ஏன் தேவை?
நிறுவனம் அல்லது அதன் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து துன்புறுத்தல் மற்றும் மோசடி போன்ற தவறுகள் அல்லது நடவடிக்கைகள் காரணமாக கணிக்க முடியாத மற்றும் பெரிய பொறுப்பு கிளைம்களிலிருந்து பாதுகாக்க, பெரிய மற்றும் சிறிய அனைத்து அளவிலான பிசினஸ்களுக்கும் உதவ மேனேஜ்மென்ட் லையபிளிட்டி இன்சூரன்ஸ் உள்ளது. ஆனால் உண்மையில் உங்களுக்கு ஏன் அது தேவை?
மேனேஜ்மென்ட் லையபிளிட்டி இன்சூரன்ஸ் எதை கவர் செய்யும்?
நீங்கள் ஒரு மேனேஜ்மென்ட் லையபிளிட்டி இன்சூரன்ஸ் பெறும்போது, உங்கள் பிசினஸ் பாதுகாக்கப்படும்....
எது கவர் செய்யப்படவில்லை?
டிஜிட்டில் உள்ள நாங்கள் வெளிப்படைத்தன்மையை நம்புவதால், நீங்கள் கவர் செய்யப்படாத சில சந்தர்ப்பங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மேனேஜ்மென்ட் லையபிளிட்டி இன்சூரன்ஸ் எவ்வளவு செலவாகும்?
உங்கள் மேனேஜ்மென்ட் லையபிளிட்டி இன்சூரன்ஸ் பிரீமியம் எவ்வளவு செலவாகும் என்பது பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது:
- உங்கள் பிசினஸின் தன்மை மற்றும் வகை மற்றும் அது செயல்படும் தன்மை
- நிறுவனத்தின் ஒரு பகுதியாக எத்தனை மேலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்
- எம்ப்ளாயீஸின் எண்ணிக்கை
- உங்கள் நிறுவனத்தின் அளவு
- உங்கள் பிசினஸ் அமைந்துள்ள இடம்
- உங்கள் பிசினஸிற்கு எதிராக கடந்த கால கிளைம்கள்
- நிறுவனத்தின் மதிப்பிடப்பட்ட வருவாய் மற்றும்/அல்லது இலாபம்
- மொத்த சொத்துக்களின் எண்ணிக்கை
- நீங்கள் தேர்ந்தெடுக்கும் லையபிளிட்டியின் லிமிட்
இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கக்கூடிய பிற காரணிகள் நிறுவனத்தின் வயது, அதன் நிதி ஸ்திரத்தன்மை, அதன் வர்த்தக முறைகள் மற்றும் ஷேர்ஹோல்டர்கள்.
எந்த பிசினஸ்களுக்கு மேனேஜ்மென்ட் லையபிளிட்டி இன்சூரன்ஸ் தேவை?
மேலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான இன்டர்னல் அல்லது எக்டர்னல் கிளைம்களிலிருந்து உங்க பிசினஸிற்கு பாதுகாப்பு தேவைப்பட்டால், இந்த இன்சூரன்ஸ் பெறுவதன் மூலம் நீங்கள் பயனடையலாம். அவை சிறியதோ அல்லது பெரியதோ பெரிய லையபிளிட்டி கிளைம்களிலிருந்து பாதுகாக்க அனைத்து அளவுகளின் பிசினஸ்களுக்கும் மேனேஜ்மென்ட் லையபிளிட்டி இன்சூரன்ஸ் முக்கியமானது. இருப்பினும், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் இல்லாத நிறுவனங்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் பல போன்ற சில பிசினஸ்கள் மேனேஜ்மென்ட் லையபிளிட்டி இன்சூரன்ஸுக்கு தகுதியற்றவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.