எஸ்.ஐ.பி கால்குலேட்டர்
மாதாந்திர முதலீடு
நான் முதலீடு செய்ய விரும்புகிறேன் (ஆண்டுகளில்)
நான் முதலீடு செய்து இருப்பேன் (ஆண்டுகள்)
எதிர்பார்க்கப்படும் வருவாய் விகிதம்
முறையான முதலீட்டுத் திட்டம் எஸ்.ஐ.பி கால்குலேட்டர்
தகுந்த சொத்து வகைகளில் முதலீடு செய்வது, நிதித் தொகுப்பை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாகும். எஸ்.ஐ.பி கால்குலேட்டர் போன்ற ஆன்லைன் கருவிகள் தனிநபர்களுக்கு இந்த செயல்முறையை எளிதாக்க மட்டுமே உதவுகின்றன. இத்தகைய கருவிகள் முதலீடு செய்வதற்கு முன் விரிவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்விற்காக செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும்.
அதே நேரத்தில், இத்தகைய கால்குலேட்டர்கள் தனிநபர்கள் தங்கள் எஸ்.ஐ.பி முதலீடுகளில் உகந்த வருமானத்தை உறுதிப்படுத்த உதவுகின்றன.
இந்த ஆன்லைன் கால்குலேட்டரில் "என்ன" செய்வது "எப்படி" செய்வது என்பது இன்னும் தெரியவில்லையா?
எஸ்.ஐ.பி கால்குலேட்டர் என்றால் என்ன?
எஸ்.ஐ.பி முதலீட்டு கால்குலேட்டர் என்பது ஒரு ஆன்லைன் கருவியாகும், இது தனிநபர்கள் எஸ்.ஐ.பி மூலம் தங்கள் முதலீட்டு வருவாயை மதிப்பிட அனுமதிக்கிறது.
நீங்கள் ஏற்கனவே அல்லது சாத்தியமான பரஸ்பர நிதி முதலீட்டாளராக இருந்தால், அத்தகைய நிதி திட்டங்களில் முதலீடு செய்வதற்கான 2 வழிகளில் முறையான முதலீட்டுத் திட்டம் எஸ்.ஐ.பி என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இது இன்று மிகவும் விரும்பப்படும் முதலீட்டு வழிமுறையாகும். இந்த முறை தனிநபர்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, மற்றும் வருடாந்திர போன்ற வழக்கமான இடைவெளியில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது.
இந்த ஆன்லைன் கால்குலேட்டர் எஸ்.ஐ.பி முதலீடுகள் மூலம் உங்கள் சாத்தியமான வருவாய் ஈட்டுதல் பற்றிய பார்வையைப் பெற உதவும். இது, நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு முன், தகவலறிந்து முடிவை எடுக்க உங்களுக்கு உதவும்.
இது சம்பந்தமாக, பல முதலீட்டாளர்கள் முறையான முதலீட்டுத் திட்ட கால்குலேட்டரின் செயல்திறனை மதிப்பிட விரும்பலாம். இங்கே, இந்த ஆன்லைன் கருவி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது பயனர்கள் தாங்கள் ஏற்கனவே கணித்த முடிவுகளைப் புரிந்துகொள்ள உதவும்.
எஸ்.ஐ.பி கால்குலேட்டர் எப்படி வேலை செய்கிறது?
எஸ்.ஐ.பி (SIP) கால்குலேட்டர் ஒரு பயனரிடமிருந்து குறிப்பிட்ட முதலீட்டு விவரங்களைக் கோருகிறது. முதலீட்டுத் தொகை, எதிர்பார்க்கப்படும் வருவாய் விகிதம், மொத்த முதலீட்டு காலம் போன்றவை இதில் அடங்கும். பின்னர், இந்த கருவி தேவையான முடிவுகளை உருவாக்க ஒரு கணித சூத்திரத்தில் அத்தகைய தரவைப் பயன்படுத்துகிறது.
எஸ்.ஐ.பி (SIP) கால்குலேட்டர் சூத்திரத்தை பின்வருமாறு குறிப்பிடலாம்:
A = [P x {(1+i)n – 1} x (1+i)] / i
எங்கே,
A = முதலீடு முதிர்வு காலத்தின் போது நீங்கள் பெறும் இறுதித் தொகை,
P = குறிப்பிட்ட கால முதலீட்டுத் தொகை,
i = குறிப்பிட்ட கால வட்டி விகிதம், மற்றும்
n = செலுத்தப்பட்ட மொத்த தொகை
எஸ்.ஐ.பி ரிட்டர்ன் சூத்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், ஆன்லைன் கருவி மொத்த முதலீடு, இறுதி எதிர்பார்க்கப்படும் வருமானம் மற்றும் நிகர வருமானத்திற்கான முடிவுகளைக் காண்பிக்கும்.
சில வலைத்தளங்களில், நீங்கள் எதிர்பார்க்கும் வருடாந்திர வருவாய் விகிதம் மற்றும் விருப்பமான முதலீட்டு அதிர்வெண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் எதிர்பார்க்கும் ஆண்டு வருமான விகிதம் 12%, மேலும் 60 மாத காலத்திற்கு மாதந்தோறும் ரூ.1000 முதலீடு செய்ய வேண்டும் என வைத்துக் கொள்வோம்.
அப்படியானால், ‘i’ என்பது 12%/12, அதாவது 1% என கணக்கிடப்படும்.
எஸ்.ஐ.பி சூத்திரத்தில் உள்ள மற்ற மதிப்புகளை மாற்றினால், மொத்த முதலீடு ரூ.60,000-க்கு பெறப்படும் தொகை ரூ.82,487 ஆக இருக்கும். எனவே, சாத்தியமான வருவாய் ஆதாயம் ரூ.22,487 ஆகும்.
இந்த எஸ்.ஐ.பி (SIP) ரிட்டர்ன் கால்குலேட்டர் செலவு விகிதம் மற்றும் வெளியேறும் சுமை போன்ற காரணிகளைக் கருத்தில் கொள்ளாது என்பதை நினைவில் கொள்ளவும். இந்தக் காரணிகள் உங்கள் நிகர வருமானத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, உங்கள் உண்மையான வருமானம் கால்குலேட்டரின் முடிவுகளிலிருந்து வேறுபடலாம்.
ஆயினும்கூட, இதுகுறித்து சிறிதும் ஐடியா இல்லாமல் இருப்பதை விட சில ஐடியாக்களை வைத்திருப்பது சிறந்தது, இல்லையா?
எஸ்.ஐ.பி வருமானத்தை மேனுவலாக கணக்கிட, குறிப்பிட்ட சூத்திரத்தைப் பயன்படுத்தலாம். இருப்பினும், ஆன்லைன் கருவியைப் பயன்படுத்துவது செயல்முறையை மிகவும் எளிமையாகவும் துல்லியமாகவும் செய்ய உதவலாம்.
ஆன்லைன் கால்குலேட்டர் மூலம் எஸ்.ஐ.பி ஐ எவ்வாறு கணக்கிடுவது?
ஆன்லைன் கால்குலேட்டரைப் பயன்படுத்தி எஸ்.ஐ.பி (SIP) வருமானத்தை எவ்வாறு கணக்கிடுவது என்பது உங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்றால், இங்கே படிப்படியான வழிகாட்டி உள்ளது.
படி 1: நீங்கள் தேர்ந்தெடுத்த ஏ.எம்.சி (AMC)- இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும். எஸ்.ஐ.பி (SIP) கால்குலேட்டருக்கான ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
படி 2: உங்களுக்கு விருப்பமான முதலீட்டுத் தொகையை உள்ளிடவும்.
படி 3: மாதாந்திர, காலாண்டு போன்ற ஆப்ஷன்களில் இருந்து முதலீட்டின் அதிர்வெண்ணைத் தேர்வு செய்யவும்.
படி 4: மொத்த முதலீட்டு காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 5: நீங்கள் எதிர்பார்க்கும் வருமான விகிதத்தை உள்ளிடவும்.
படி 6: "கணக்கிடு" அல்லது வேறு ஏதேனும் அதற்கு நிகரான பட்டனை கிளிக் செய்யவும்.
மேலே உள்ள தகவலைப் பயன்படுத்தி, ஆன்லைன் எஸ்.ஐ.பி கால்குலேட்டர் பின்வரும் முடிவைக் காண்பிக்கும்.
- மொத்த முதலீட்டுத் தொகை
- எதிர்பார்க்கப்படும் மொத்த வருமானம்
- நிகர வருவாய் ஆதாயம்
பயனுள்ள நிதி நிர்வாகத்திற்கு உதவக்கூடிய பல பயன்பாடுகளுக்கு முதலீட்டாளர்கள் மேற்கண்ட முடிவுகளைப் பயன்படுத்தலாம்.
இந்த பயன்பாடுகள் என்ன என்பதை அறிய வேண்டுமா?
அப்படி என்றால், தொடர்ந்து படியுங்கள்!
எஸ்.ஐ.பி கால்குலேட்டரின் பயன்கள் என்னென்ன?
எஸ்.ஐ.பி கால்குலேட்டரின் முதன்மைப் பயன்பாடானது முதலீட்டாளர்கள் தங்கள் எஸ்.ஐ.பி முதலீடுகளைத் திறம்பட திட்டமிட உதவுகிறது.
ஒரு தனிநபரின் நிதி இலக்கைப் பொறுத்து, பங்கு மற்றும் கடன் கருவிகளை உள்ளடக்கிய மியூச்சுவல் ஃபண்ட் வகைகளில் முதலீடு செய்யலாம். ஈக்விட்டி சார்ந்த நிதிகள் அதிக ஆபத்து மற்றும் வருமானத்தை உள்ளடக்கியிருந்தாலும், பத்திரங்கள் போன்ற கடன்சார்ந்த முதலீடுகள் சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன. இரண்டின் எதிர்கால செயல்திறன் சந்தை நிலவரங்களைப் பொறுத்தது.
எஸ்.ஐ.பி களின் முறையான விநியோகம், பொருளாதார தாக்கங்களுக்கு எதிராக உங்கள் முதலீடுகளை சரிசெய்வதால் போதுமான வருமானத்தை உறுதி செய்வதற்கு இந்த வகை முதலீடு ஒரு சிறந்த வழியாகும்.
ஆன்லைன் எஸ்.ஐ.பி கால்குலேட்டரைக் கொண்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டுத் திட்டத்தில் சிறந்த ஐடியாவை உருவாக்குவதன் மூலம் வருவாயை பெருக்கலாம்.
வெவ்வேறு முதலீட்டு நிலைமைகளுக்கு எதிராக சாத்தியமான வருமானத்தை சரிபார்க்க பயனர்கள் உள்ளீட்டு மதிப்புகளை மாற்றலாம். அதன்படி, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மிகவும் பொருத்தமான விவரங்களை அவர்கள் இந்த கால்குலேட்டரில் பெறலாம்.
இருப்பினும், எஸ்.ஐ.பி கால்குலேட்டரின் நன்மைகள் இன்னும் இருக்கிறது!
எஸ்.ஐ.பி கால்குலேட்டரின் நன்மைகள்
எஸ்.ஐ.பி கால்குலேட்டர் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களுக்கும் புதிய முதலீட்டாளர்களுக்கும் எவ்வாறு பயனளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள பின்வரும் பட்டியலைப் பார்க்கவும்.
- வேகமான மற்றும் துல்லியமான முடிவுகள்: சிக்கலான சூத்திரத்தைப் பயன்படுத்தி மேனுவலாகக் கணக்கிடுவது நேரத்தை எடுத்துக்கொள்ளும். அதே நேரத்தில், அது பிழைகள் நிறைந்ததாக இருக்கக்கூடும். மாறாக, ஒரு ஆன்லைன் எஸ்.ஐ.பி (SIP) கால்குலேட்டர் சில நொடிகளில் துல்லியமான முடிவுகளை உங்களுக்கு வழங்கும்.
- பரவலாக கிடைக்கும் தன்மை: கிட்டத்தட்ட அனைத்து ஏ.எம்.சி களும் தங்கள் வலைத்தளத்தில் எஸ்.ஐ.பி (SIP) வருமானத்தைக் கணக்கிடுவதற்கான ஆன்லைன் கால்குலேட்டர் கருவியை வழங்குகின்றன. ஆர்வமுள்ள நபர்கள் தங்களுக்குத் தேவையான முடிவுகளை உடனடியாகத் தெரிந்துகொள்ள, அத்தகைய வலைத்தளங்களைப் பார்வையிடலாம்.
- கட்டணமில்லாதது: வலைத்தளங்கள் அத்தகைய ஆன்லைன் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு எந்தக் கட்டணத்தையும் வசூலிப்பதில்லை.
- வசதியான பயன்பாடு: பயனர்கள் முன்பு குறிப்பிட்டது போல் சில எளிய விவரங்களை மட்டுமே வழங்க வேண்டும். இந்த வழியில், முதலீட்டில் கிடைக்கும் வருவாய் குறித்து அதிகம் அறியாத தனிநபர்கள் கூட கால்குலேட்டரின் முடிவுகளைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமான முதலீட்டு முடிவுகளை எடுக்க முடியும்.