"80CCD என்றால் என்ன" என்பதைப் பற்றி நீங்கள் அறிந்தவுடன், அதன் 2 செக்ஷன்களைப் பற்றி அறிந்து கொள்வோம்:
இன்கம் டேக்ஸ் ஆக்ட்டின் செக்ஷன் 80CCD (1) என்றால் என்ன?
80CCD இன்கம் டேக்ஸ் ஆக்ட்டின் இந்த சப்செக்ஷன் என்.பி.எஸ் முதலீட்டுக்கு எதிரான டேக்ஸ் டிடெக்ஷன்களில் கவனம் செலுத்துகிறது.
இப்போது, 80CCD (1) இன் பின்வரும் விதிகளைக் கவனியுங்கள்:
- அதிகபட்ச டிடெக்ஷன்: உங்கள் மொத்த ஊதியத்தில் 10% வரை (பேசிக் + டியர்னெஸ் அலவன்ஸ்)
- சுயதொழில் புரிபவர்களுக்கு: அதிகபட்ச டிடெக்ஷன் லிமிட் அவரது மொத்த வருமானத்தில் 20% வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிதியாண்டில் அதிகபட்ச டிடெக்ஷன் உச்சவரம்பு ரூ. 1,50,000 ஆகும்.
நோட்: அடல் பென்ஷன் யோஜனா ஸ்கீமிற்கும் இதே போன்ற டிடெக்ஷன் ஸ்கீம் பொருந்தும்.
- 80CCD 1(B) க்கான திருத்தம்
2015 ஆம் ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் 80CCD 1(B) இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இங்கு, நீங்கள் சுயதொழில் புரிபவராக இருந்தாலும் சரி அல்லது சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சரி, நீங்கள் ரூ. 50,000 கூடுதல் டேக்ஸ் டிடெக்ஷன் பெறலாம். இருப்பினும், இது 80CCD டிடெக்ஷன் லிமிட்டை ரூ. 2,00,000 ஆக உயர்த்தியது.
இன்கம் டேக்ஸ் ஆக்ட்டின் கீழ் செக்ஷன் 80CCD (2) என்றால் என்ன?
இந்த செக்ஷன் முதன்மையாக பி.பி.எஃப் மற்றும் ஈ.பி.எஃப் தவிர என்.பி.எஸ் ஸ்கீமிற்கு ஒரு முதலாளி அளித்த பங்களிப்புகளைப் பற்றி விவாதிக்கிறது. முதலாளியின் பங்களிப்புக்கு அதிகபட்ச வரம்பு உள்ளது. இது ஊழியரின் பங்களிப்பை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். இங்கு, ஊதியம் பெறும் நபர்கள் மட்டுமே டேக்ஸ் டிடெக்ஷன்களை அனுபவிக்க தகுதியுடையவர்கள். செக்ஷன் 80CCD (1)க்கு மேல் இந்த செக்ஷனின் கீழ் நீங்கள் இந்த டிடெக்ஷன் பெறலாம். ஒரு ஊழியராக, நீங்கள் கிளைம் செய்யக்கூடிய அதிகபட்ச டிடெக்ஷன் இங்கே:
மேக்சிமம் டிடெக்ஷன்:
- ஊழியரின் ஊதியத்தில் 10% வரை (பேசிக் + டியர்னெஸ் அலவன்ஸ்) முதலாளியின் பங்களிப்புக்கு சமம்.
- மத்திய அரசு ஊழியரில், நீங்கள் ஊதியத்தில் (பேசிக் சாளரி + டியர்னெஸ் அலவன்ஸ்) 14% டேக்ஸ் டிடெக்ஷன் பெறுகிறீர்கள்.
[சோர்ஸ்]