டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

நகல் பாஸ்போர்ட்டை எவ்வாறு பெறுவது - அதற்கான செயல்முறை விளக்கப்பட்டுள்ளது

பாஸ்போர்ட் என்பது ஒரு முக்கியமான ஆவணமாகும். அது காலாவதியாகும் முன் புதுப்பிக்கப்பட வேண்டும். நீங்கள் அதை தொலைத்துவிட்டால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பாஸ்போர்ட்டுகள் சேதமடைதல் அல்லது தொலைந்துபோதல் போன்ற சமயங்களில் நகல் பாஸ்போர்ட் பெறுவதற்கு வேறு செயல்முறை உள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.

இந்தியாவில் நகல் பாஸ்போர்ட்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

பாஸ்போர்ட் தொலைந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராத சமயங்களில் யாராவது நகல் பாஸ்போர்ட்டைப் பெற விரும்பினாலோ அதைப் பெறுவதற்கு அவர்கள் எளிதாக ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் வழியைப் பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை ஒருவர் அறிந்திருக்க வேண்டும்.

நகல் பாஸ்போர்ட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

நகல் பாஸ்போர்ட்டுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த செயல்முறை இங்கே உள்ளது. நகல் பாஸ்போர்ட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் பாஸ்போர்ட் சேவா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

படி 1: பாஸ்போர்ட் சேவா போர்ட்டலில் பதிவு செய்யவும்.

படி 2: தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளிட்டு புதிய கணக்கை உருவாக்கவும், பின்னர் பாஸ்போர்ட் சேவா கணக்கை செயல்படுத்துவதற்கான இணைப்பைப் பெறுவீர்கள்.

படி 3: நகல் பாஸ்போர்ட்டுக்கான ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்.

படி 4: படிவத்தை சமர்ப்பிக்கும் முன், விவரங்களை மீண்டும் சரிபார்க்கவும்.

படி 5: நீங்கள் ஒரு அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். பாஸ்போர்ட் சேவா வலைத்தளம் மூலம் உங்கள் பாஸ்போர்ட் விண்ணப்ப நிலையை கண்காணிக்க இதைப் பயன்படுத்தவும்.

நகல் பாஸ்போர்ட்டுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஆஃப்லைன் மூலம் நகல் பாஸ்போர்ட்டை தாக்கல் செய்ய, கீழே உள்ள நடைமுறையைப் பின்பற்றலாம் -

படி 1: படிவங்கள் மற்றும் உறுதிமொழிகள் பிரிவின் கீழ் மின்னணு படிவத்தைப் பதிவிறக்கவும்.

படி 2: புதிய பாஸ்போர்ட் வேண்டுமா அல்லது இந்திய பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3: மின்னணு படிவத்துடன் போலீஸ் அனுமதிச் சான்றிதழை (PCC) பதிவிறக்கம் செய்து அச்சிடவும்.

படி 4: பழைய பாஸ்போர்ட் புத்தக எண், பிறந்த தேதி, வயது, முகவரி, பெயர், இந்திய பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்கக் கோருவதற்கான காரணம் போன்ற தேவையான விவரங்களுடன் படிவத்தை நிரப்பவும்.

படி 5: முகவரிச் சான்று, அடையாளச் சான்று மற்றும் பழைய பாஸ்போர்ட் புத்தகம் போன்ற ஆவணங்களுடன் படிவத்தை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.

இந்தியாவில் நகல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவதற்கு நீங்கள் விண்ணப்பிக்கும்போது, நார்மல் செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். அதற்குத் தேவையான ஆவணங்கள்:

  • பாஸ்போர்ட் தொலைந்து போதல் அல்லது சேதமடைந்தது பற்றிய விவரங்களுடன் உறுதிமொழிப் பத்திரம் (எழுத்துப்பூர்வ ஆவணம் ‘எல்’ (Annexure ‘L’))
  • தடையில்லாச் சான்றிதழ் (எழுத்துப்பூர்வ ஆவணம் ‘எம்’ (Annexure ‘M’)) அல்லது முன் தகவல் கடிதம் (எழுத்துப்பூர்வ ஆவணம் ‘என்’(Annexure ‘N’))
  • தற்போதைய முகவரிக்கான சான்று- வேலை செய்யும் நிறுவனத்திடம் இருந்து சான்றிதழ், தொலைபேசி பில், வருமான வரி, வரிவிதிப்பு உத்தரவு, தண்ணீர் பில், எரிவாயு இணைப்பு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வாழ்க்கை துணையின் பாஸ்போர்ட் நகல், பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தம்
  • எஃப்ஐஆர் அறிக்கை
  • பிறந்த தேதிக்கான சான்று - உயர்நிலை பள்ளி சான்றிதழ், நகராட்சி அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்.
  • பழைய பாஸ்போர்ட்டின் இசிஆர் நகல் மற்றும் நான் இசிஆர் பக்கங்களின் நகல் (கடைசி மற்றும் முதல் பக்கங்கள்).
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

உங்கள் பழைய பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பாஸ்போர்ட் எண், வழங்கப்பட்ட இடம், வழங்கப்பட்ட தேதி மற்றும் காலாவதி தேதி போன்ற விவரங்களும் விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நகல் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு கட்டணம் தேவை

பாஸ்போர்ட் தொலைந்து போனால், நகல் பாஸ்போர்ட்டுக்கு ஒருவர் விண்ணப்பிக்கலாம். கீழே உள்ள அட்டவணை விண்ணப்ப நடைமுறையின் கட்டண அமைப்பைக் குறிக்கிறது.

வகை விண்ணப்பக் கட்டணம் கூடுதல் தட்கல் கட்டணம்
பாஸ்போர்ட் மீண்டும் வழங்குதல் அல்லது புதிய பாஸ்போர்ட் (36 பக்கங்கள்) 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் ₹ 1,500 ₹ 2,000
பாஸ்போர்ட் மீண்டும் வழங்குதல் அல்லது புதிய பாஸ்போர்ட் (60 பக்கங்கள்) 10 ஆண்டு செல்லுபடியாகும் ₹ 2,000 ₹ 2,000
5 ஆண்டுகள் அல்லது ஒருவர் 18 வயது எட்டும் வரை செல்லுபடியாகும் வகையில் சிறார்களுக்கான புதிய பாஸ்போர்ட் (36 பக்கங்கள்) வழங்குதல் அல்லது பாஸ்போர்ட் மீண்டும் வழங்குதல் ₹ 1,000 ₹ 2,000
பாஸ்போர்ட் தொலைந்து போகும்போது, திருடப்பட்டால் அல்லது சேதமடையும் போது மீண்டும் வழங்குதல் (36 பக்கங்கள்). ₹ 3,000 ₹ 2,000
பாஸ்போர்ட் தொலைந்து போகும்போது, திருடப்பட்டால் அல்லது சேதமடையும் போது பாஸ்போர்ட் மீண்டும் வழங்குதல் (60 பக்கங்கள்). ₹ 3,500 ₹ 2,000
போலீஸ் அனுமதி சான்றிதழ் ₹ 500 NA
தனிப்பட்ட விவரங்களை மாற்ற அல்லது இசிஆர் (ECR)-ஐ நீக்குவதற்காக பாஸ்போர்ட்டை மாற்றுதல் (36 பக்கங்கள், 10 ஆண்டுகள் செல்லுபடியாகும்) ₹ 1,500 ₹ 2,000
தனிப்பட்ட விவரங்களை மாற்ற அல்லது இசிஆர் ஐ நீக்க பாஸ்போர்ட் மாற்றுதல் (60 பக்கங்கள், 10 ஆண்டுகள் செல்லுபடியாகும்) ₹ 2,000 ₹ 2,000
சிறார்களுக்கான தனிப்பட்ட விவரங்களை மாற்ற அல்லது இசிஆர் ஐ நீக்க பாஸ்போர்ட் மாற்றுதல் (36 பக்கங்கள், 5 ஆண்டுகள் செல்லுபடியாகும்). ₹ 1,000 ₹ 2,000
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவைப்படும் கட்டணங்களைத் தவிர, ஒருவர் விண்ணப்பிக்கக்கூடிய சந்தர்ப்பங்களையும் அறிந்திருக்க வேண்டும். மேலும் அறிய படிக்கவும்.

நகல் பாஸ்போர்ட்டுக்கு ஒருவர் எப்போது விண்ணப்பிக்கலாம்?

பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவதற்கு விண்ணப்பிக்கும் செயல்முறையே பாஸ்போர்ட் தொலைந்து போகும்போது மற்றும் சேதமடையும் போதும் பின்பற்ற வேண்டிய செயல்முறை ஆகும். நகல் பாஸ்போர்ட்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கக்கூடிய சில சூழ்நிலைகள் பின்வருமாறு:

  • சேதமடைந்த பாஸ்போர்ட்

சேதமடைந்த பாஸ்போர்ட்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:

  • பகுதி சேதமடைந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பெயர், புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் எண் ஆகியவை அப்படியே உள்ளன அல்லது அதை அடையாளம் காண முடியும்.
  • முழுவதுமாக சேதமடைந்த பாஸ்போர்ட், விவரங்களை மீட்டெடுக்க முடியாது.

உங்கள் பாஸ்போர்ட் பகுதியாக சேதமடைந்திருந்தால், தட்கல் முறையின் மூலம் பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவதற்கு விண்ணப்பிக்கலாம். மறுபுறம், உங்கள் பாஸ்போர்ட் முற்றிலும் சேதமடைந்திருந்தால், பாஸ்போர்ட்டைப் பெற நீங்கள் பாஸ்போர்ட் சேவா கேந்திராவிடம் புகாரளிக்க வேண்டும் என்பதால், தட்கலின் கீழ் பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க கோர முடியாது.

  • பாஸ்போர்ட் தொலைந்துபோதல் 

இந்தியாவில் உங்கள் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டால், காவல் நிலையத்திலும் பாஸ்போர்ட் அலுவலகத்திலும் புகாரளிக்க வேண்டும். நீங்கள் வெளிநாட்டில் வசிக்கிறீர்கள் என்றால், உடனடியாக இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் பாஸ்போர்ட் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குமாறு விண்ணப்பிக்கவும்.

போலீஸ் சரிபார்ப்பு கட்டாயமில்லாத இடங்களில் பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவதற்கு 7 வேலை நாட்கள் ஆகலாம். போலீஸ் சரிபார்ப்பு தேவைப்பட்டால், அதற்கு 30 வேலை நாட்கள் ஆகலாம்.

உங்கள் விண்ணப்பங்களை நார்மல் முறை அல்லது தட்கல் முறையின் கீழ் சமர்ப்பிக்கலாம். தட்கல் முறையில் நகல் பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் அதிகம். விண்ணப்பத்தை அனுப்புவதற்கு சுமார் 30 நாட்கள் ஆகும். ஏதேனும் சந்தேகங்களுக்கு 1800 258 1800 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது பாஸ்போர்ட் சேவா போர்ட்டலைப் பார்வையிடலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்தியாவில் தொலைந்து போன பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க எவ்வளவு காலம் ஆகும்?

நகல் பாஸ்போர்ட்டை அனுப்புவதற்கான விண்ணப்ப நடைமுறை முடிய 30 நாட்கள் வரை ஆகலாம். தட்கல் முறையில் விண்ணப்பிக்கும்போது, இதற்கான செயல்முறை பொதுவாக 15 நாட்களுக்குள் முடிவடையும்.

பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவை ஒன்றா?

புதுப்பித்தலின் போது, உங்கள் தற்போதைய பாஸ்போர்ட்டில் மாற்றங்கள் செய்யப்படும். மறுபுறம், உங்களுக்கு புதிய பாஸ்போர்ட் தேவைப்படும் போது பாஸ்போர்ட் மீண்டும் வழங்கப்படுகிறது.

பழைய பாஸ்போர்ட் இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை பெற முடியுமா?

ஆம். உங்கள் பாஸ்போர்ட் கார்டு மற்றும் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் புத்தகத்தை புதுப்பிக்க விரும்பினால், உங்களின் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும்.