டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதற்கான போலீஸ் சரிபார்ப்பு

இந்தியாவில் பாஸ்ப்போர்ட் பெறுவதற்கு போலீஸ் சரிபார்ப்பு என்பது முக்கிய படி என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்த பாதுகாப்பு நடவடிக்கை ஒருவர் தனக்கு புதிய அல்லது பாஸ்போர்ட்டை மீண்டும் பெற விண்ணப்பித்த பிறகு நடத்தப்படுகிறது. இருப்பினும், இந்த விதிக்கும் சில விதிவிலக்குகளும் இருக்கின்றன.

இந்தக் காரணி ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்தைப் பொறுத்தது. 

மேலும் அறிந்துகொள்ள வேண்டுமா?

பாஸ்போர்ட்பெறுவதற்கான போலீஸ் சரிபார்ப்புப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.

இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதற் கான போலீஸ் சரிபார்ப்பு நடைபெறும் போது என்ன நடக்கும்?

பாஸ்போர்ட் பெறுவதற்கான போலீஸ் சரிபார்ப்பில் விண்ணப்பதாரரின் அடையாளமும் முகவரி ஆதாரமும் சரிபார்க்கப்படுகிறது. பொதுவாக, உங்கள் உள்ளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி இந்தச் செயல்முறையைச் செய்வார்.

இந்தச் சரிபார்ப்பு செயல்முறையானது மாநிலம் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப மாறுபடும். உங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை உறுதிப்படுத்திக்கொள்ள போலீஸ் அதிகாரி உங்கள் முகவரிக்கு வந்து பார்வையிடுவார். உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களைக் காட்ட வேண்டியிருக்கும்.

கூடுதலாக, பாஸ்போர்ட் சேவா வலைத்தளத்தில் அருகிலுள்ள உள்ளூர் காவல் நிலையத்தை நீங்கள் கண்டறியலாம். இது பாஸ்போர்ட்டை மீண்டும் பெறுவதற்கான போலீஸ் சரிபார்ப்பு செயல்முறையை ஒழுங்கமைக்க உதவும்.

சரிபார்த்த பிறகு, போலீஸ் அதிகாரி ஒப்புகை அறிக்கையை வழங்குவார். அதைத் தொடர்ந்து அந்தந்த காவல் நிலையத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்ட போலீஸ் சரிபார்ப்பு அறிக்கையை (PVR-பிவிஆர்) பெற்ற 3 நாட்களுக்குள் பாஸ்போர்ட் அலுவலகம் உங்கள் பாஸ்போர்ட்டை அனுப்பும்.

இப்போது, கட்டாய போலீஸ் சரிபார்ப்பின் வகைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

பாஸ்போர்ட் பெறுவதற்கான போலீஸ் சரிபார்ப்புப் வகைகள்

போலீஸ் சரிபார்ப்பில் 2 முதன்மை முறைகள் உள்ளன:

 

பாஸ்போர்ட்பெறுவதற்கான போலீஸ் சரிபார்ப்பு வகை நோக்கம்
பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன் போலீஸாரின் சரிபார்ப்பு விண்ணப்பதாரரின் முகவரி அதிகார வரம்பிற்குள் வரும் காவல் நிலையம் இந்தச் சரிபார்ப்புச் செயல்முறையைச் செய்கிறது. ஒருவர் சமர்ப்பித்த பெயர், வயது, முகவரி உள்ளிட்ட விவரங்களை அதிகாரி சரிபார்க்கிறார்.
பாஸ்போர்ட் வழங்கிய பின் போலீஸாரின் சரிபார்ப்பு விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் வழங்கப்பட்ட பின்னர் இந்தச் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.

விண்ணப்பதாரர் தனது தற்போதைய பாஸ்போர்ட் காலாவதியாவதற்கு முன்பே புதுப்பித்தல் விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவதற்கு போலீஸ் சரிபார்ப்புத் தேவையில்லை.

பொதுவாக, பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன் போலீஸார் சரிபார்ப்பு என்பது அனைவருக்குமே கட்டாயமானது. இருப்பினும், இணைப்பு G யின் படி தடையில்லா சான்றிதழ் அல்லது இணைப்பு A இன் படி அடையாள சான்றிதழ் வழங்கும் அரசு ஊழியர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

இப்போது, ஒழுங்கமைக்கப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான போலீஸ் சரிபார்ப்பை எப்படி தொடங்குவது என்பதை அறிந்து கொள்வோம்.

ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான போலீஸ் சரிபார்ப்பு செயல்முறைக்கான படிகள்

பாஸ்போர்ட் அதிகாரியிடமிருந்து அறிவிப்பைப் பெற்ற பிறகே சம்பந்தப்பட்ட காவல் நிலையம் சரிபார்ப்பை நடத்துகிறது. பாஸ்போர்ட் சேவா வலைத்தளத்திலும் போலீஸ் சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். 

பாஸ்போர்ட் பெறுவதற்கான போலீஸ் சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்கும் படிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

  • படி 1: பாஸ்போர்ட் சேவா வலைத்தளத்தைப்" பார்க்கவும், பிறகு “இப்போதே பதிவு செய்க” என்பதை கிளிக் செய்யவும்.

  • படி 2: பதிவு செயல்முறையை முடித்த பிறகு குறிப்பிட்ட  ஐடி-யைப் பயன்படுத்தி உள்நுழையவும்.

  • படி 3: "போலீஸ் அனுமதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அது அதற்கான படிவத்திற்கு வழிகாட்டும். உரிய விவரங்களுடன் படிவத்தை நிரப்பவும்.

  • படி 4: "கட்டணம் செலுத்துக மற்றும் அப்பாயிண்ட்மெண்ட் திட்டமிடுக" விருப்பத்தை கிளிக் செய்து தொகையைச் செலுத்தவும்.

  • படி 5: "விண்ணப்ப ரசீதை அச்சிடு" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இது விண்ணப்ப குறிப்பு எண் ஏஆர்என் உடனான ரசீதை உருவாக்கும். நீங்கள், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் (SMS) அறிவிப்பைப் பெறுவீர்கள்.

அப்பாயிண்ட்மெண்ட் தேதியில் நீங்கள் ஆர்பிஓ(RPO) அல்லது பி.எஸ்.கே(PSK) விற்கு செல்ல வேண்டும். குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

பாஸ்போர்ட் பெறுவதற்கான போலீஸ் சரிபார்ப்பிற்குத் தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட் பெறுவதற்கான போலீஸ் சரிபார்ப்புக்கான ஆவணங்களின் பட்டியல் பின்வருமாறு-

  • வாக்காளர் ஐடி 

  • ஆதார் எண்

  • உறுதிமொழிப் பத்திரம்

  • நிரந்தர கணக்கு எண் (PAN - பான்) 

பாஸ்போர்ட் வழங்கப்பட்ட பின்னர் போலீஸ் சரிபார்ப்பிற்காக இந்த ஆவணங்களை உங்கள் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் போலீஸ் சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்பட வேண்டியதில்லை.

பாஸ்போர்டிற்கான போலீஸ் சரிபார்ப்பு நிலையை எப்படி சரிபார்ப்பது?

பாஸ்போர்ட் பெறுவதற்கான போலீஸ் சரிபார்ப்பு எப்படி செய்யப்படுகிறது என்பதைத் தவிர, செயல்முறை நிலையைக் கண்காணிக்கும் செயல்முறையையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

பொதுவாக, போலீஸ் சரிப்பார்த்த பின்னர் வெவ்வேறு நிலைகளை வழங்குகிறார்கள்.  பாஸ்போர்ட் சேவா வலைத்தளத்தில் இத்தகைய அறிவிப்புகளையும் நீங்கள் கண்காணிக்கலாம்.

சரிபார்ப்பு நிலைகளின் வகைகள் பின்வருமாறு -

  • கிளியர்- விண்ணப்பதாரரின் பதிவில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை இந்நிலை குறிக்கிறது. 

  • அட்வர்ஸ் - இந்நிலை விண்ணப்பதாரர் வழங்கிய தகவலில் சில முரண்பாடுகளை போலீசார் கண்டறிந்துள்ளனர் என்பதைக் குறிக்கிறது. இதனால் விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம். இந்நிலையைத் தவிர்க்க, விண்ணப்பதாரர் சரியான தகவல்களை வழங்க வேண்டும் மற்றும் எந்தவொரு கிரிமினல் குற்றமும் இல்லாமல் இருக்க வேண்டும்.

  • இன்கம்ப்ளீட்- இந்நிலை விண்ணப்பதாரரால் வழங்கப்பட்ட தகவல்கள் முழுமையாகவில்லை என்பதைக் காட்டுகிறது. சரிபார்ப்பு அறிக்கையைப் போலீசார் சரியாக நிரப்பவில்லை என்றாலும் நிலை இன்கம்ப்ளீட் என்று காட்டலாம். சில சூழ்நிலைகளில், ஒருவர் அவர் குறிப்பிட்டுருக்கும் முகவரியில் நீண்ட காலம் வசிக்கவில்லை என்றால் சரிபார்ப்பு இன்கம்ப்ளீட் என்றும் காவல்துறை முத்திரை குத்தலாம். 

வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி ஒரு அறிக்கையை எழுதுவார்.

'அட்வர்ஸ்' அல்லது 'இன்கம்பிளீட்' குறிப்புடன் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்த தெளிவு பெற விண்ணப்பதாரர் போலீஸ் நிலையத்தை அணுகலாம்.

இருப்பினும், போலீஸ் சரிபார்ப்பு தேவைப்படாத நிகழ்வுகளும் உள்ளன.

போலீஸ் சரிபார்ப்புத் தேவைப்படாத புதிய பாஸ்போர்ட்களுக்கான வழக்குகள்

சில சூழ்நிலைகளில், ஒருவர் புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தாலும் போலீஸ் சரிபார்ப்புக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், இது பாஸ்போர்ட் அலுவலகத்தின் முடிவைப் பொறுத்தது.

அத்தகைய வழக்குகளில் பின்வருபவை அடங்கும் -

  • பாஸ்போர்ட் காலாவதியாவதற்கு முன்பு மீண்டும் விண்ணப்பித்தால், அத்தகைய பாஸ்போர்ட்டுகளுக்கு போலீஸ் சரிபார்ப்புத் தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் தடையில்லா சான்றிதழ் மற்றும் போலீஸ் சரிபார்ப்பு சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

  • மேலும், இணைப்பு "B" மூலம் "அடையாள சான்றிதழ்" எனப்படும் ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் அரசு, சட்டப்பூர்வ அமைப்பு அல்லது பொதுத்துறை ஊழியர்களுக்கு போலீஸ் சரிபார்ப்புத் தேவையில்லை.

  • டிப்ளோமெடிக் அல்லது அலுவலக பாஸ்போர்ட்டுகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்குச் சாதாரண பாஸ்போர்டிற்குப் போலீஸ் சரிபார்ப்புத் தேவையில்லை. இருப்பினும், அவர்கள் இணைப்பு "B" மூலம் அடையாள சான்றிதழைச்  சமர்ப்பிக்க வேண்டும்.

பாஸ்போர்டிற்கான போலீஸ் சரிபார்ப்பில் என்ன நடக்கிறது என்பது குறித்த சந்தேகங்களை தீர்க்க மேற்கூறிய விஷயங்கள் உங்களுக்கு உதவும். புதுப்பிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் விதிமுறைகளைக் கண்டறிய அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா வலைத்தளத்தைச் சரிபார்க்க பரிந்துரைக்கிறோம்.

இது பாஸ்போர்டிற்கான போலீஸ் சரிபார்ப்பு ஓழுங்குமுறையைச் சீராக்க உதவும்.

இந்தியாவில் பாஸ்போர்டிற்கான போலீஸ் சரிபார்ப்பு தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

65 வயதுடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் பெறுவதற்கு போலீஸ் சரிபார்ப்புத் தேவையா?

65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள், சிறார்கள், அரசு ஊழியர்களுக்கு போலீஸ் சரிபார்ப்புத் தேவையில்லை.

பாஸ்போர்ட் வழங்கப்படுவதற்கு முன்பு போலீஸ் சரிபார்ப்பு நடைபெறும் வழக்குகளில், பாஸ்போர்ட் அனுப்ப பாஸ்போர்ட் அலுவலகம் எத்தனை நாட்கள் எடுக்கும்?

சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திலிருந்து சாதாரண விண்ணப்பங்களுக்கான "பரிந்துரைக்கப்பட்ட" போலீஸ் சரிபார்ப்பு அறிக்கையை பி.வி.ஆர் பெற்ற மூன்று நாட்களுக்குள் உங்களுக்கு பாஸ்போர்ட் அலுவலகம்  பாஸ்போர்ட்டை அனுப்பும். இருப்பினும், தட்கல் திட்டத்தின் கீழிருக்கும் விண்ணப்பங்களுக்கு இது பொருந்தாது.

சிறார்களுக்குப் போலீஸ் சரிபார்ப்புத் தேவையா?

இல்லை. 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு போலீஸ் சரிபார்ப்புக் கட்டாயமில்லை.