டிஜிட் பார்ட்னராக மாறுங்கள்
35,000+ பார்ட்னர்கள் டிஜிட்டுடன் 674 கோடி + சம்பாதித்துள்ளனர்.

ஆன்லைனில் இன்சூரன்ஸை எப்படி விற்கலாம்?

இந்த நேரத்தில், நிறைய பேர் கூடுதல் வருமானம் ஈட்ட மாற்று தொழில் வாய்ப்புகள் மற்றும் பகுதி நேர வேலைகளைத் தேடுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, இன்சூரன்ஸை ஆன்லைனில் விற்பனை செய்வதாகும்.

இந்தியாவில், இன்சூரன்ஸை விற்க இரண்டு முக்கிய வழிகள் உள்ளன:

1. இன்சூரன்ஸ் ஆலோசகர்

இன்சூரன்ஸ் ஆலோசகர் என்பது ஒரு குறிப்பிட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பதிவுசெய்து, வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசிக்களை விற்கும் பணியாகும். உரிமைகோரல்களைச் செய்வதற்கும், மேலும் பலவற்றைச் செய்வதற்கும் உதவுவதற்காக அவர்களுடன் இணைந்திருப்பவர் ஆவர். ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, உங்கள் உரிமத்தைப் பெறுவதற்கும் ஆலோசகராவதற்கும் நீங்கள் பயிற்சித் திட்டத்தில் கலந்துகொண்டு தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

2. ஒரு பாயிண்ட் ஆஃப் சேல் பர்சன் (POSP)

பி.ஓ.எஸ்.பி (POSP) என்பது ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) ஆல் 2015 இல் உருவாக்கப்பட்ட இன்சூரன்ஸ் ஆலோசகர்களுக்கான புதிய வகை உரிமம் ஆகும். நீங்கள் இன்னும் பரிந்துரைக்கப்பட்ட பயிற்சித் திட்டத்திற்கு உட்பட்டு ஆன்லைன் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியிருக்கும். அதை முடித்து உரிமம் பெறும்போது, நீங்கள் பல இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசிக்களை, லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் வகைகளில் (மோட்டார் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ், டிராவல் இன்சூரன்ஸ் மற்றும் பல உட்பட) விற்க முடியும்.

இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்குப் பல நிறுவனங்களில் இருந்து பலவிதமான ஆப்ஷன்களையும், பல்வேறு இன்சூரன்ஸ் திட்டங்களையும் நீங்கள் வழங்கலாம். நீங்கள் பல நிறுவனங்களின் பாலிசிக்களை விற்க ஒரு இன்சூரன்ஸ் இடைத்தரகர் அல்லது தரகருடன் பணிபுரியலாம் அல்லது ஒரே நிறுவனத்தில் வேலை செய்யலாம். எனவே, பாரம்பரிய இன்சூரன்ஸ் ஆலோசகரை விட அதிகமான ஆப்ஷன்கள் இங்கே உங்களுக்கு உள்ளன.

காப்பீட்டு POSP ஆக எப்படி?

நாம் பார்த்தது போல், பி.ஓ.எஸ்.பி (POSP) (அல்லது பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் பர்சன்) என்பது லைஃப் இன்சூரன்ஸ், மோட்டார் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் பல வகைகளில் பல நிறுவனங்களின் இன்சூரன்ஸ் தயாரிப்புகளை விற்க சான்றளிக்கப்பட்டவர் ஆவார்.

பி.ஓ.எஸ்.பி (POSP) ஆவற்கு, ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) வழங்கிய குறைந்தபட்ச கல்வித் தகுதிகளை நீங்கள் பூர்த்தி செய்து, கட்டாயப் பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும்.

  • பி.ஓ.எஸ்.பி (POSP) ஆவதற்குத் தேவையான தகுதிகள்: இன்சூரன்ஸ் ஏஜென்டாவதற்கு சில அடிப்படைத் தேவைகள் உள்ளன. நீங்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். நீங்கள் செல்லுபடியாகும் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு மற்றும் உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கையும் வைத்திருக்க வேண்டும்
  • பி.ஓ.எஸ்.பி (POSP) ஆகுவதற்கான நடைமுறை: பி.ஓ.எஸ்.பி (POSP) ஆகித் தொடங்க, நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பதிவுசெய்ய வேண்டும் அல்லது ஒரு இன்சூரன்ஸ் இடைத்தரகரிடமாவது பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) வழங்கும் 15 மணி நேர கட்டாயப் பயிற்சியை முடிக்க வேண்டும். நீங்கள் பயிற்சியை முடித்து, பரிந்துரைக்கப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், இன்சூரன்ஸ் பாலிசிக்களை விற்பனை செய்வதற்கான (பி.ஓ.எஸ்.பி (POSP) வழிகாட்டுதல்களின்படி) உரிமத்தைப் பெறுவீர்கள்.

எனவே, இந்த அடிப்படை நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் எவரும் பி.ஓ.எஸ்.பி (POSP) ஆக பதிவு செய்யலாம். நீங்கள் ஆன்லைனில் இன்சூரன்ஸ் பாலிசிக்களை விற்கலாம் மற்றும் வழங்கலாம் என்பதால், இந்த வேலைக்குத் தேவையானது ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் மற்றும் நல்ல இணைய இணைப்பு மட்டுமே.

கூகுள் லிஸ்ட்டிங், வலைத்தள உருவாக்கம் போன்ற ஆன்லைன் தளங்களை அமைத்தல், கூகுள், பேஸ்புக் பக்கங்கள், விளம்பரங்கள், மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ் (SMS), வாட்ஸ்அப் போன்ற பிற ஆன்லைன் தளங்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க நீங்கள் சில முயற்சிகளை செய்யலாம் மற்றும் பலவற்றையும் செய்ய முடியும். எல்லாவற்றையும் பற்றிய சிறிய விவரங்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பி.ஓ.எஸ்.பி (POSP)-க்கும் சாதாரண இன்சூரன்ஸ் விற்பனையாளருக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டிற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஒரு இன்சூரன்ஸ் ஏஜென்ட், அவர்கள் தொடர்புடைய நிறுவனத்தின் இன்சூரன்ஸ் திட்டங்களை மட்டுமே விற்க முடியும். மேலும் அவர்கள் லைஃப் இன்சூரன்ஸை விற்க உரிமம், ஜெனரல் இன்சூரன்ஸை விற்க உரிமம் அல்லது இரண்டையும் விற்க ஒரு கூட்டு உரிமம் பெறலாம்.

மறுபுறம், ஒரு பி.ஓ.எஸ்.பி (POSP) ஏஜென்ட் இன்சூரன்ஸ் திட்டங்களை மேற்கூறிய அனைத்து வகை இன்சூரன்ஸ் மற்றும் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்தும் விற்க முடியும். இருப்பினும் அவ்வாறு செய்ய அவர்கள் ஒரு இன்சூரன்ஸ் இடைத்தரகர் அல்லது தரகருடன் பதிவு செய்து இருக்க வேண்டும்.

யார் பி.ஓ.எஸ்.பி (POSP) ஆக முடியும்?

அடிப்படை அளவுகோல்களை (18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்) பூர்த்தி செய்யும் எந்த ஒரு நபரும் பி.ஓ.எஸ்.பி (POSP) ஆகலாம். எனவே இது புதியவர்களுக்கான சிறந்த வாய்ப்பு.

மேலும், இந்தப் பணியை நீங்கள் பகுதி நேரமாகச் செய்ய முடியும் என்பதால், கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஏற்கனவே வேலையில் இருந்து இன்னும் பல விஷயங்களைச் செய்ய விரும்புபவர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

பி.ஓ.எஸ்.பி (POSP) ஆனால் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்?

பி.ஓ.எஸ்.பி (POSP) ஆக உங்கள் வருமானம், நீங்கள் வேலை பார்க்கும் நேரத்தை பொருத்து அமையாமல், நீங்கள் விற்பனை செய்யும் பாலிசிக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும். எனவே, உங்களுக்கான நிலையான வருமானம் அல்லது அதிகபட்ச வருமானம் என்பது ஒன்று கிடையாது. இதில் அதிகப்படியான வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக, ஒரு பி.ஓ.எஸ்.பி (POSP) ஆக நீங்கள் எவ்வளவு அதிகமான பாலிசிக்களை விற்பனை செய்கிறீர்களோ, எத்தனை பாலிசி புதுப்பிப்புகளை பெறுகிறீர்களோ, உங்களது வருமானம் அதற்கு ஏற்றாற்போல அதிகமாக இருக்கும்.

பி.ஓ.எஸ்.பி (POSP) ஆக பதிவு செய்ய நான் என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்?

பி.ஓ.எஸ்.பி (POSP) ஆக பதிவு செய்ய, பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்:

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழின் நகல்
  • பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு நகல் (முன்புறம் மற்றும் பின்புறம்)
  • உங்கள் பெயருடன் கூடிய கேன்சல்டு செக் ஒன்று
  • ஒரு புகைப்படம்

பி.ஓ.எஸ்.பி (POSP) என்னென்ன தயாரிப்புகளை விற்பனை செய்யலாம்?

நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தைப் பொறுத்து, ஒரு பி.ஓ.எஸ்.பி (POSP) ஆக பலவிதமான இன்சூரன்ஸ் பாலிசிக்களை நீங்கள் விற்பனை செய்யலாம். இதில் லைஃப் இன்சூரன்ஸ், டேர்ம் இன்சூரன்ஸ், மோட்டார் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் டிராவல் இன்சூரன்ஸ் மற்றும் பல அடங்கும்.

நான் எப்போது இன்சூரன்ஸ்களை விற்பனை செய்யத் தொடங்கலாம்?

இன்சூரன்ஸ் நிறுவனம் அல்லது தரகருடன் பதிவு செய்துமே, நீங்கள் 15 மணி நேர கட்டாயப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பின்னர் அதற்கான தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். பின்னர் நீங்கள் மின்னணு சான்றிதழ் ஒன்றை பெறுவீர்கள். இதன் பிறகு நீங்கள் ஒரு பி.ஓ.எஸ்.பி (POSP) ஏஜெண்டாக இன்சூரன்ஸ் பாலிசிக்களை ஆன்லைனில் விற்பனை செய்யத் தொடங்கலாம்.

பி.ஓ.எஸ்.பி (POSP) ஆக இருப்பதன் நன்மைகள் என்ன?

இன்சூரன்ஸை ஆன்லைனில் பி.ஓ.எஸ்.பி (POSP) ஆக விற்பனை செய்வதால் பல நன்மைகள் உள்ளன:

  •  நிலையான வேலை நேரங்கள் என எதுவும் இல்லை - நீங்கள் எளிதாக உங்கள் சொந்த வேலை நேரத்தை தேர்வு செய்து அமைக்கலாம் மற்றும் நீங்கள் முழுநேர அல்லது பகுதி நேரமாக வேலை செய்ய விரும்புகிறீர்களா என்பதையும் முடிவு செய்யலாம்.
  •  நீங்களே உங்களுக்கு முதலாளியாக இருக்கலாம் - உங்களுக்கு வசதியாக இருக்கும் நேரத்தில் நீங்கள் வேலை செய்ய முடியும். மேலும் நீங்கள் எவ்வளவு வேலை செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானிக்கலாம்.
  •  வீட்டிலிருந்து வேலை செய்வது சாத்தியம் - பாலிசிக்களை விற்க பி.ஓ.எஸ்.பி (POSP) ஆன்லைன் செயல்முறைகளைப் பயன்படுத்த முடியும் என்பதால், அவர்கள் வீட்டிலிருந்தே அல்லது அவர்கள் விரும்பும் வேறு எங்கிருந்தும் எளிதாக வேலை செய்யலாம்.
  •  செட் கமிஷன்கள் உள்ளன - பி.ஓ.எஸ்.பி (POSP) ஒழுங்குமுறை அமைப்பால் ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) அமைக்கப்பட்ட கமிஷன்களைப் பெறுகிறார். எனவே, நீங்கள் நிலையான வருமானத்தைப் பெறலாம் என்றாலும், தொகையானது நீங்கள் வழங்கும் பாலிசிக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது.
  •  பூஜ்ஜிய முதலீடு- நீங்கள் பி.ஓ.எஸ்.பி (POSP) ஆக சேரும்போது எந்தவொரு முதலீடு அல்லது பணம் செலுத்தத் தேவையில்லை. ஒருவருக்கு தேவையானது ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் மற்றும் இணைய இணைப்பு மட்டுமே!