Work
in spare time
Earn
side income
FREE
training by Digit
இந்தியாவில் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?
இன்று, பலரும் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று தேடுகிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இணையத்தில் பல போலி ஏஜென்சிகள், ஸ்கேம்கள் மற்றும் மோசடிகள் இருப்பதால், ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான சட்டபூர்வமான வழிகளைக் கண்டுபிடிப்பது எளிதல்ல.
இருப்பினும், நீங்கள் கவனமாக இருந்து நீங்கள் பதிவு செய்யும் வலைதளங்களை ஆராய்ச்சி செய்தால், நீங்கள் ஆன்லைனில் சுலபமாக பணம் சம்பாதிக்க பல வழிகளைக் காணலாம், மேலும் இதன் மூலம் பலருக்கு, எந்த முதலீடும் இல்லாமல் நல்ல வேலையும் கிடைக்கலாம்.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க இந்த 12 வழிகளை கவனியுங்கள்
1. இன்சூரன்ஸ் பி.ஓ.எஸ்.பி(POSP)யாக வேலை செய்யுங்கள்
ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு நல்ல வழி பி.ஓ.எஸ்.பி (பாயிண்ட் ஆஃப் சேல்ஸ்பர்சன்) ஆக மாறுவது. இது ஒரு வகையான இன்சூரன்ஸ் ஏஜென்ட், இதில் சேர்ந்தால் நீங்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் பணிபுரிவீர்கள், மேலும் இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்கவேண்டும். இந்த வேலைக்கு உங்களுக்குத் தேவையானது ஸ்மார்ட்போன் மற்றும் ஒரு நல்ல இணைய இணைப்பு, இந்த வேலையை வீட்டிலிருந்து ஆன்லைனில் செய்யலாம்.
இன்சூரன்ஸ் பி.ஓ.எஸ்.பி-யாக தகுதி பெற, நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும், அத்துடன் நீங்கள் ஐ.ஆர்.டி.ஏ.ஐ வழங்கும் 15 மணிநேர கட்டாய பயிற்சியை முடித்திருக்க வேண்டும். உங்கள் வருமானம் கமிஷன் அடிப்படையில் இருக்கும், மேலும் நீங்கள் எவ்வளவு பாலிசிகளை விற்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக சம்பாதிக்க முடியும். பி.ஓ.எஸ்.பி ஏஜென்ட்டாக மாறுவதற்கான படிகள், தேவைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பற்றி இங்கே மேலும் அறியலாம்.
2. ஃப்ரீலான்ஸிங் வேலையைத் தேடுங்கள்
ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான மற்றொரு பிரபலமான வழி ஃப்ரீலான்ஸ் வேலை. புரோகிராமிங், எடிட்டிங், ரைட்டிங், டிசைனிங் மற்றும் பலவற்றில் சிறந்தவர்கள், ஃப்ரீலான்ஸர்களைத் தேடும் வணிகங்களில் வேலை தேட அப்ஒர்க், பீப்பிள்பெர்ஹவர், கூல் கன்யா, ஃபைவர்ர் அல்லது ட்ரூலான்சர் போன்ற போர்ட்டல்களைப் பார்க்கலாம். இந்த போர்டல்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் நீங்கள் பதிவு செய்ய வேண்டும் (பொதுவாக ஒரு சிறிய கட்டணத்திற்கு), மேலும் நீங்கள் வழங்கும் வேலையின் அடிப்படையில், ஃப்ரீலான்ஸராக அதிக ஊதியம் பெறும் வேலைகளை நோக்கி படிப்படியாக உங்களுக்கான வழியை நீங்களே தீர்மானிக்கலாம்.
3. கன்டென்ட் ரைட்டிங் வேலைகளை முயற்சிக்கவும்
நீங்கள் எழுதுவதில் சிறந்தவராக இருந்தால், கன்டென்ட் ரைட்டிங் மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்யலாம். இந்த நாட்களில் பல நிறுவனங்கள் தங்கள் கன்டென்ட் வேலைகளை அவுட்சோர்ஸ் செய்கின்றன. இன்டர்ன்சாலா, ஃப்ரீலான்ஸர், அப்ஒர்க் மற்றும் குரு போன்ற இந்த ஆன்லைன் வேலையை வழங்கும் வலைத்தளங்களில் நீங்கள் உங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அங்கு, நீங்கள் ஒரு ரைட்டராக உங்கள் விருப்பங்களை அமைக்கலாம், பின்னர் பிராண்டுகள், உணவு, பயணம் மற்றும் பிற தலைப்புகள் போன்ற விஷயங்களைப் பற்றி எழுத அல்லது ஏற்கனவே உள்ள கட்டுரைகளை சரிசெய்ய நிறுவனங்களிடமிருந்து ஊதிய வேலையைப் பெறத் தொடங்கலாம்.
4. பிளாகிங்கைத் (வலைப்பதிவு) தொடங்கவும்
நீங்கள் எழுதுவதை ரசிக்கிறீர்கள், ஆனால் மற்றவர்களுக்கு கன்டென்ட் ரைட்டராக பணியாற்ற விரும்பவில்லை என்றால், உங்கள் சொந்த வலைப்பதிவையும் தொடங்கலாம். வர்ட்பிரஸ், மீடியம், வீப்லி அல்லது பிளாகர் போன்ற பிளாகிங் தளங்கள் இலவச மற்றும் கட்டணச் சேவைகளை வழங்குகின்றன. புத்தக மதிப்புரைகள், உணவு சமையல், பயணம், கலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற உங்கள் ஆர்வமுள்ளப் பகுதிகளை நீங்கள் அறிந்தவுடன், அதைப் பற்றி எழுதத் தொடங்கலாம்.
உங்கள் தளம் சில பார்வையாளர்களைப் பெறத் தொடங்கியதும், நீங்கள் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம். உங்கள் தளத்திற்கான டிராஃபிக் மற்றும் உங்கள் வாசகர்களைப் பொறுத்து, உங்கள் விளம்பர இடத்திற்கு மாதத்திற்கு ₹ 2,000-15,000 வரை சம்பாதிக்கலாம்.
5. உங்கள் டிஜிட்டல் புராடக்ட்களை விற்கவும்
உங்கள் வலைப்பதிவு அல்லது வலைத்தளத்தில், சமையல் குறிப்புகள் அல்லது கைவினைப்பொருட்களுக்கான வழிமுறைகள் போன்ற நீங்கள் உள்ளடக்கிய விஷயங்களின் டிஜிட்டல் தயாரிப்புகளை கூட விற்கலாம். இதில் ஆடியோ அல்லது வீடியோ கோர்ஸ்கள், இ-புக்ஸ், டிசைன் டெம்ப்லட்கள், பிளக்-இன்ஸ், பி.டி.எஃப்கள், பிரிண்ட்டபல்ஸ் அல்லது யூ.எக்ஸ் கிட்கள் ஆகியவை அடங்கும்.
அமேசான், உடெமி, ஸ்கில்ஷேர் அல்லது கோர்செரா போன்ற தளங்கள் மூலம் இந்த வகையான டவுன்லோடு செய்யக்கூடிய அல்லது ஸ்ட்ரீமிங் செய்யக்கூடிய மீடியாவை நீங்கள் விநியோகிக்கலாம் மற்றும் விற்கலாம். நீங்கள் ஒரு முறை மட்டுமே உங்கள் தயாரிப்பை உருவாக்க வேண்டும், மேலும் நீங்கள் விரும்பும் பல முறை அதை விற்க முடியும் என்பதால், நன்கு தயாரிக்கப்பட்ட மற்றும் தனித்துவமான தயாரிப்புக்கு நீங்கள் அதிக இலாப வரம்புகளைக் கொண்டிருக்கலாம்.
6. மொழிபெயர்ப்பு (டிரான்ஸ்லேஷன்) வேலைகளை ஆன்லைனில் தேடுங்கள்
உங்களுக்கு இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை இருந்தால், மொழிபெயர்ப்பாளராக (டிரான்ஸ்லேட்டர்) ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம். இன்றைய உலகில், டாக்குமெண்ட்கள் முதல் வாய்ஸ் மெயில்கள், பேப்பர்கள், சப்டைட்டில்கள் மற்றும் பலவற்றை மொழிபெயர்க்க மக்களுக்கு மிகுந்தத் தேவை உள்ளது. ஸ்பெஷலைஸ்டு டிரான்ஸ்லேஷன் ஏஜென்சியுடன் அல்லது ஃப்ரீலான்ஸ் இந்தியா, அப்ஒர்க் அல்லது ட்ரூலான்சர் போன்ற ஃப்ரீலான்ஸிங் போர்ட்டல்கள் மூலம் அத்தகைய வேலையை நீங்கள் காணலாம்.
உங்கள் வருமானம் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது, மேலும் நீங்கள் இந்திய மொழிகள் மூலம் மட்டுமே போதுமான பணத்தை சம்பாதிக்க முடியும் என்றாலும், உங்களுக்கு ஒரு வெளிநாட்டு மொழி (பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ் அல்லது ஜப்பானீஷ் போன்றவை) தெரிந்திருந்தால் மற்றும் அதற்கான சான்றிதழைக் கொண்டிருந்தால் நீங்கள் அதிகமாக சம்பாதிக்க முடியும். பொதுவாக, நீங்கள் ஒரு வார்த்தைக்கு ஊதியம் பெறுவீர்கள், மேலும் நீங்கள் மொழியின் அடிப்படையில் ஒரு வார்த்தைக்கு ₹ 1 முதல் ₹ 4 வரை சம்பாதிக்கலாம்.
7. பீட்டா டெஸ்ட் ஆப்கள் மற்றும் வெப்சைட்கள் வெளியிடப்படுவதற்கு முன்
இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டர் இருப்பதால், ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான எளிதான வழிகளில் ஒன்று ஆப்கள் மற்றும் வெப்சைட்களை டெஸ்டிங் செய்வதாகும். நிறுவனங்கள் மற்றும் ஆப் டெவலப்பர்கள் தங்கள் புதிய புராடக்ட்களால் யூசர்கள் குழப்பமடைவதை விரும்பமாட்டார்கள் என்பதால், அவர்கள் 'பீட்டா டெஸ்டிங்' என்று அழைக்கப்படும் ஒன்றைச் செய்ய யூசர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். பீட்டாடெஸ்டிங், டெஸ்டர் ஒர்க், டெஸ்ட்.ஐ.ஒ, அல்லது டிரைமையூ.ஐ போன்ற வலைதளங்கள் அத்தகைய வேலைகளை வழங்குகின்றன.
இந்த வலைதளங்கள் அல்லது ஆப்ஸை நீங்கள் டெஸ்ட் செய்து பார்த்து, உங்கள் பயனர் அனுபவத்தை ரிப்போர்ட் செய்ய வேண்டும் அல்லது அவை பப்ளிக் லைவிற்குச் செல்லும் முன் ஏதேனும் பக்ஸ்-ஐ கண்டறிய வேண்டும். பீட்டா டெஸ்ட் செய்யப்படும் தயாரிப்பு மற்றும் செயல்முறையில் உங்கள் அனுபவத்தைப் பொறுத்து, ஒவ்வொரு முறையும் ₹1000 முதல் ₹3000 வரை சம்பாதிக்கலாம்.
8. டிராவல் ஏஜென்ட்டாக வேலை செய்யுங்கள்
நீங்கள் ஆன்லைனில் செய்யக்கூடிய குறைவான மதிப்பிடப்பட்ட மற்றும் எளிதான வேலை, டிராவல் ஏஜென்ட் அல்லது டிராவல் பிளானராக வேலை தேடுவது. டிராவல் புக்கிங்களை இப்போதெல்லாம் ஆன்லைனில் செய்ய முடியும் என்றாலும், வேலையில் பிஸியாக இருப்பவர்களுக்கு அல்லது இணையத்தில் அறிமுகமில்லாதவர்களுக்கு இது மிகவும் சிரமமாக இருக்கும். இதனால், பலர் டிராவல் ஏஜென்ட்களைத் தேடுகிறார்கள்.
நீங்கள் அப்ஒர்க், அவண்ட்ஸ்டே அல்லது ஹாப்பர் போன்ற சைட்களில் பணிபுரியலாம் அல்லது சுயதொழில் செய்யும் பயண முகவராக வேலை செய்யலாம். இரண்டு சந்தர்ப்பங்களிலும், உங்கள் வருமானம் உங்கள் வாடிக்கையாளர்களையும், நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தையும் பொறுத்தது.
9. டேட்டா என்ட்ரி வேலைகளைக் கண்டறியவும்
வீட்டிலிருந்து பணம் சம்பாதிப்பதற்கான மற்றொரு விருப்பம் டேட்டா என்ட்ரி வேலைகள். இந்த வகையான வேலைகளை ஒரு கம்ப்யூட்டர், எக்செல் அனுபவம் மற்றும் பிற மைக்ரோசாஃப்ட் டூல்களைக் கொண்டு ஆன்லைனில் செய்ய முடியும். ஆக்ஸியன் டேட்டா என்ட்ரி சர்வீசஸ், டேட்டா பிளஸ், ஃப்ரீலான்ஸர் அல்லது குரு போன்ற நம்பகமான சைட்டில் நீங்கள் பதிவு செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களிலிருந்து டேட்டா என்ட்ரி வேலைகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கலாம். அவர்கள் உங்களுக்கு ஒரு இமெயில் அல்லது டேட்டா சோர்ஸ்க்கான லிங்க்கை அனுப்புவார்கள், மேலும் என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய வழிமுறைகளையும் அனுப்புவார்கள். இந்த வேலைகள் மூலம், நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு ₹ 300 முதல் ₹ 1,500 வரை சம்பாதிக்கலாம் (உங்கள் விவரங்களை அவர்களிடம் அளிப்பதற்கு முன் வேலை மற்றும் வேலை வாங்குபவரின் நியாயத்தன்மையை சரிபார்க்க மறக்காதீர்கள்).
10. ஆன்லைன் டியூஷனைத் தேர்வுசெய்யுங்கள்
உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பாடத்தைப் பற்றி நல்ல அறிவு இருந்தால், அல்லது நீங்கள் தற்போது கல்லூரி மாணவராக இருந்தால், ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு நல்ல வழி ஆன்லைன் டியூஷன் பாடங்களை வழங்குவதாக இருக்கலாம். ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, போட்டித் தேர்வுகள் என அனைத்திலும் ஒவ்வொரு நிலையிலும் மாணவர்கள் பாடங்களின் விளக்கத்திற்கு தேடுகிறார்கள். நீங்கள் கற்பிக்கும் பாடங்களின் அடிப்படையில், உங்கள் நிபுணத்துவத்தின் அடிப்படையில் ஒரு மணி நேர விகிதத்தை நீங்கள் அமைக்கலாம், மேலும் நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு ₹ 200-500 வரை சம்பாதிக்கலாம்.
உடெமி அல்லது கோர்செரா போன்ற ஆன்லைன் டியூஷன் தளத்துடன் சைன் அப் செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம், அல்லது உங்கள் சுற்றுப்புறத்தில் டியூஷன் வகுப்புகள் தேவைப்படும் நபர்களை அணுகி தேடலாம்.
11. ஸ்டாக்குகளில் முதலீடு செய்யுங்கள்
பலர் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்வதில் எச்சரிக்கையாக உள்ளனர், ஆனால், ஆன்லைனில் பணம் சம்பாதிக்க இது ஒரு சிறந்த வழியாகும். ஸ்டாக்குகளில் முதலீடு செய்யும்போது, நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குகிறீர்கள், மேலும் அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அதிகரிக்கும்போது, நிறுவனத்தால் உங்களுக்கு "டிவிடெண்ட்" கிடைக்கும்.
பங்குகள் உண்மையில் ஆபத்தானவை என்றாலும் (நிறுவனங்கள் சிறப்பாக செயல்படாதபோது, உங்கள் பங்குகளின் மதிப்பு குறையக்கூடும்), அவை உங்கள் போர்ட்ஃபோலியோவை பன்முகப்படுத்துவதன் மூலம் இந்த ஆபத்தை குறைக்கலாம். பல இலாபகரமான பங்குகளுடன், ஆன்லைனில் வேலை செய்வதன் மூலம் அதிக டிவிடெண்ட்டை நீங்கள் சம்பாதிக்கலாம்.
12. அஃபிலியேட் மார்க்கெட்டிங் (இணை சந்தைப்படுத்தல்) உங்களுக்காக வேலை செய்கிறதா என்பதைப் பார்க்கவும்
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மற்றொரு நல்ல வழி அஃபிலியேட் மார்க்கெட்டிங். ஒரு வெப்சைட், பிளாக் அல்லது ஒரு பெரிய அஞ்சல் பட்டியலைத் தொடர்ந்து உங்களிடம் ஒரு பெரிய சமூக ஊடகம் இருந்தால் இந்த முறை சிறப்பாக செயல்படும் என்றாலும், எந்த முதலீடும் இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க இது ஒரு சிறந்த வழியாகும்.
அஃபிலியேட் மார்க்கெட்டிங் மூலம், நீங்கள் அமேசான் போன்ற ஒரு பிராண்ட் அல்லது நிறுவனத்துடன் இணைபுரிகிறீர்கள், மேலும் உங்கள் சைட்டில் ஒரு இணைப்பு உட்பட உங்கள் பின்தொடர்பவர்கள் அல்லது வாசகர்களுக்கு அவர்களின் புராடக்ட்களை விளம்பரப்படுத்துகிறீர்கள். அப்போது, கமிஷன் அடிப்படையில் பணம் சம்பாதிக்க முடியும். எனவே, உங்கள் லிங்க்கை பயன்படுத்தி பிராண்டின் புராடக்ட்களை அதிக மக்கள் வாங்குகிறார்கள் என்றால், நீங்கள் அதிகம் சம்பாதிப்பீர்கள்.
கடந்த சில ஆண்டுகள் நம் வழக்கமான வாழ்க்கையில் பலவற்றை சீர்குலைத்துள்ளன, இருந்தபோதிலும் உங்கள் பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களின் மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கு நிறைய வழிகள் இருப்பதையும் நீங்கள் காணலாம்.
ஆன்லைன் வேலைகளிலிருந்து பணம் சம்பாதிப்பது எப்படி என்று தேடும் பலருக்கும் பல விருப்பங்கள் உள்ளன. உங்கள் ஆர்வங்கள் மற்றும் நீங்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளுக்கு ஏற்ற ஒன்றை எளிதாகக் கண்டுபிடித்து, உங்கள் ஓய்வு நேரத்தில் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாக மாற்றலாம். மாணவர்கள், இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஏற்கனவே முழுநேர வேலையில் உள்ளவர்கள் கூட ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மேற்கண்டவை நிச்சயம் உதவும்.
மோசடி வலைத்தளங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆன்லைனில் அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- நீங்கள் பதிவு செய்வதற்கு முன்பு எந்த வலைத்தளத்தையும் முழுமையாக ஆராய்ந்து அவர்களின் மதிப்புரைகள் மற்றும் கருத்துகளைப் படியுங்கள்.
- ஒரு வலைத்தளம் உங்களுக்கு நீண்ட வேலை நேரத்தை வழங்குகிறது, ஆனால் உங்களுக்கு ஊதியம்/செய்த வேலைக்கான சரியான பணத்தை கொடுக்கவில்லை என்றால், அந்த வலைத்தளத்தின் வேலையை தவிர்க்க முயற்சிக்கவும்.
- ஆன்லைனில் உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிரும்போது, எப்போதும் கவனமாக இருங்கள்.
- மேலும், கையொப்பமிடுவதற்கு முன்பு உங்களுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு ஒப்பந்தத்தையும் முழுமையாக படிப்பதை நினைவில் கொள்ளுங்கள்.