பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 36 மாதங்களுக்கு மேல் வைத்திருக்கும் எந்தவொரு கேப்பிட்டல் அசெட்டையும் மாற்றுவதில் கிடைக்கும் இலாபங்கள் லாங் டெர்ம் கேப்பிட்டல் கெயின்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வருவாய் மீதான வரிகள் லாங் டெர்ம் கேப்பிட்டல் கெயின் டேக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.
இருப்பினும், ஒரு சில சொத்துக்கள் 12 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வைத்திருந்தாலும் அவை லாங் டெர்மாகக் கருதப்படுகின்றன. இவற்றில் பின்வருவன அடங்கும்:
- கோட் செய்யப்பட்ட அல்லது கோட் செய்யப்படாத யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா பாண்ட்ஸ்.
- அங்கீகரிக்கப்பட்ட இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட டெபன்ச்சர்கள், பாண்டுகள், மற்றும் அரசாங்க பத்திரங்கள் (கவர்ன்மெண்ட் செக்கியூரிட்டிஸ்) போன்ற செக்கியூரிட்டிகள்.
- ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்ஸ்.
- ஜீரோ-கூப்பன் பாண்டுகள்.
- அங்கீகரிக்கப்பட்ட இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் ஈக்விட்டிகள் அல்லது முன்னுரிமை பங்குகள்.
பட்டியலிடப்படாத பங்குகள் மற்றும் 24 மாதங்களுக்கும் மேலாக வைத்திருக்கும் நிலம் மற்றும் கட்டிடம் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் லாங் டெர்ம் கேப்பிட்டல் அசெட்களாக கருதப்படும்.
லாங் டெர்ம் கேப்பிட்டல் கெயின்களைக் கணக்கிடுவதற்கு நீங்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
ஸ்டெப் 1: கேப்பிட்டல் அசெட் விற்பனைக்குப் பிறகு பெறப்பட்ட மொத்தத் தொகையிலிருந்து தொடங்குங்கள்.
ஸ்டெப் 2: டிரான்ஸ்பர் காஸ்ட் + அக்விசெஷனின் இன்டெக்ஸ்ட் காஸ்ட் + இம்ப்ரூவ்மென்ட்டிற்கான இன்டெக்ஸ்ட் காஸ்ட் ஆகியவற்றைக் கழிக்கவும்.
இப்போது, சரியான கணக்கீட்டை உறுதிப்படுத்த, இவை ஒவ்வொன்றும் எதைக் குறிக்கின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தொடர்ந்து படியுங்கள் -
- டிரான்ஸ்பர் காஸ்ட் = விளம்பரம், ஒப்பந்தங்கள் மற்றும் சட்டச் செலவுகள் மற்றும் பரிமாற்றத்திற்காக செய்யப்பட்ட செலவுகள் மற்றும் முழுமையாகவும் பிரத்தியேகமாகவும்
- அக்விசெஷனுக்கான இன்டெக்ஸ்ட் காஸ்ட் = பரிமாற்ற ஆண்டுக்கான பணவீக்கக் குறியீட்டெண் (சி.ஐ.ஐ) X அக்விசெஷன் காஸ்ட்/ (சி.ஐ.ஐ) அக்விசெஷன் ஆண்டு அல்லது நிதியாண்டு 2001-02, எது பின்னர் வருகிறதோ
- இம்ப்ரூவ்மென்ட்டிற்கான இன்டெக்ஸ்ட் காஸ்ட் = இம்ப்ரூவ்மென்ட் எக்ஸ்பென்ஸ்கள் X (சி.ஐ.ஐ) பரிமாற்ற ஆண்டுக்கான/(சி.ஐ.ஐ) அசெட் இம்ப்ரூவ்மென்ட்
[சோர்ஸ்]