Select Number of Travellers
மோட்டார்
ஹெல்த்
மோட்டார்
ஹெல்த்
More Products
மோட்டார்
ஹெல்த்
சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
24x7
Missed Call Facility
Affordable
Premium
1-Day Adventure
Activities Covered
Terms and conditions apply*
ஷெங்கன் விசாவானது ஷெங்கன் மண்டலத்திற்குள் வரும் உறுப்பு நாடுகளில் தங்குவதற்கு அல்லது பயணிக்க அனுமதிக்கிறது. எனவே நீங்கள் ஆஸ்திரியா, டென்மார்க் போன்ற நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டால், நீங்கள் ஷெங்கன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு செய்யும்போது, டாக்குமென்டேஷன் முடிந்ததும் நீங்கள் இன்டெர்வியூவிற்கு ஆஜராக வேண்டும். ஷெங்கன் விசா இன்டெர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய நோக்கம், வருகைக்கான சட்டவிரோதமான நோக்கம் ஏதும் இருந்தால் அதைக் கண்டறிந்து அவற்றை நிராகரிப்பதாகும்.
மிகவும் பொதுவான கேள்விகள் மற்றும் அவற்றுக்கான பதில்களுக்கான டிப்ஸ் பற்றிய டீடைல்டு கண்ணோட்டம் இங்கே உள்ளது.
ஷெங்கன் விசா இன்டெர்வியூவில் கேட்கப்படும் கேள்விகள் பொதுவாக உங்கள் வருகையின் நோக்கம், தங்கியிருக்கும் டெனியூர் மற்றும் பிற டீடைல்ஸ் பற்றியது. இந்த இன்டெர்வியூ-வை சமாளிப்பதற்கான வழி, எல்லா கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது நேர்மையாகவும், அமைதியாகவும், தொடர்புடையதாகவும் இருப்பதாகும்.
மிகவும் பொதுவான ஷெங்கன் விசா இன்டெர்வியூ கேள்விகள் மற்றும் பதில்களில் சில பின்வருமாறு -
வேலை, படிப்பு, ஹாலிடே, பிசினஸ் அல்லது மருத்துவ சிகிச்சை போன்ற நோக்கத்தை இன்டெர்வியூ செய்யும் அதிகாரியிடம் தெரிவிக்கவும். இந்த கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கும்போது அவர் எந்த தயக்கத்தையும் உணரக்கூடாது.
நீங்கள் பார்வையிடத் திட்டமிடும் இடத்தின் அடிப்படை விவரங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே, நாட்டைப் பற்றி முன்கூட்டியே சில ஆராய்ச்சிகளை செய்யவும்.
எடுத்துக்காட்டாக, இது ஷெங்கன் மாணவர் விசா இன்டெர்வியூ கேள்வி என்றால், நீங்கள் படிக்கத் திட்டமிட்டுள்ள பல்கலைக்கழகம், நீங்கள் எதிர்பார்க்கும் தொழில் வாய்ப்புகளைப் பற்றி பேசுங்கள்.
மாறாக, நீங்கள் முதலீடு செய்யத் தயாராக உள்ள சந்தையைப் பற்றி பேசுங்கள் அல்லது ஷெங்கன் பிசினஸ் விசா இன்டெர்வியூ கேள்விகளுக்கு உங்கள் சொந்த நாட்டிலிருந்து வளர்ச்சி வாய்ப்பு எவ்வாறு வேறுபட்டது என்று கூறுங்கள்.
இதற்கு ஆம் அல்லது இல்லை என்ற தெளிவான பதிலை விரைவாக வழங்கவும். திருமணத்தின் தேதி மற்றும் வருடத்தை நினைவில் வைத்துக் கொள்வது உங்களுக்கு உதவும். பிறகு, உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் அவர்களின் தொழில் பற்றி கொஞ்சம் பேசுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடன் பயணம் செய்கிறார் என்றால் ஆம் என்று சொல்லுங்கள். இல்லையெனில், காரணத்தை தெளிவாகக் குறிப்பிடவும்.
நீங்கள் வேறொரு நாட்டிற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதால், நீங்கள் தங்கப் போகும் இடங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசா இன்டெர்வியூவின் போது இதை நன்றாகத் தெரிவிக்கவும்.
விண்ணப்பதாரரின் நிதிப் பின்னணியைப் புரிந்துகொள்ள ஷெங்கன் விசா இன்டெர்வியூவில் கேட்கப்படும் பொதுவான கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். வருகையின் போது நீங்கள் செலவழிக்க திட்டமிட்டுள்ள தோராயமான அமௌன்ட்டை இன்டெர்வியூ செய்பவரிடம் சொல்லுங்கள். தேர்டு பார்ட்டி ஸ்பான்சர் செய்யும் பட்சத்தில் ஃபண்டிங் ஆதாரத்தைக் குறிப்பிடவும். அமௌன்ட்டை நீங்களே செலுத்துகிறீர்கள் என்றால், உங்களிடம் நிலையான வருமான ஆதாரம் மற்றும் போதுமான சேமிப்பு இருப்பதைக் குறிப்பிடவும்.
உங்கள் பதில் ஆம் என்று தெளிவாக இருக்க வேண்டும். மேலும், உங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதற்கு உங்களைத் தூண்டும் காரணங்களைக் குறிப்பிடவும். இவை உங்கள் குடும்பம், ப்ராபர்டி, வேலை மற்றும் பிற புரொபஷனல் மற்றும் பெர்சனல் கடமைகளை உள்ளடக்கியிருக்கலாம். மேலும், நீங்கள் ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்றும் விசா கட்டுப்பாடுகளை நீங்கள் முழுமையாக புரிந்துகொள்வீர்கள் என்றும் கூறுங்கள்.
இது ஷெங்கன் மாணவர் விசா இன்டெர்வியூ கேள்விகளின் ஒரு பகுதியாகும், இதில் உங்கள் ஸ்காலர்ஷிப்-இன் டீடைல்ஸ் அது என்னென்ன எக்ஸ்பென்ஸை கவர் செய்கிறது மற்றும் காலவரையறை ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். மேலும், உங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்காலர்ஷிப்-இன் டிஃபரெண்ட் பிரிவுகளைப் பற்றி விவாதிக்கவும்.
உங்களிடம் ஸ்காலர்ஷிப் இல்லையென்றால், வெளிநாட்டில் படிப்பதற்காக நீங்கள் எவ்வாறு பணம் செலுத்த திட்டமிட்டுள்ளீர்கள் என்பதைப் பற்றி இன்டெர்வியூ செய்பவரிடம் சொல்லுங்கள்.
இங்கே, பல்கலைக்கழகம் வழங்கும் டிஃபரெண்ட் வளர்ச்சி அம்சங்களைப் பற்றி பேசுங்கள். பின்னர், இன்டெர்வியூ செய்பவரிடம் உங்கள் ஆர்வமுள்ள பகுதியைப் பற்றியும், உங்கள் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் ஒரு நிறுவனத்தை நீங்கள் எவ்வாறு தேடுகிறீர்கள் என்பதைப் பற்றியும் சொல்லுங்கள். மேலும், நீங்கள் பயணம் செய்ய நினைத்த மற்ற இடங்கள் மற்றும் நீங்கள் படிக்க முடிவு செய்த பல்கலைக்கழகத்தின் தனித்துவமான அம்சங்களைப் பற்றி பேசுங்கள்.
விசிட்டின் போது உங்களுடன் வருபவர்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கவும். மேலும், அவர்களின் வருகைக்கான காரணத்தையும் தெரிவிக்கவும். உதாரணமாக, நீங்கள் டூரிஸ்ட் விசாவில் செல்கிறீர்கள் என்றால், அந்த நபர் நீங்கள் செல்வதைப் போலவே வருவதாகக் குறிப்பிடவும். அதேசமயம், நீங்கள் பிசினஸ் விசாவைத் தேர்வுசெய்தால், அவர்களின் வருகையின் நோக்கத்தைக் குறிப்பிடவும். இதற்கு பதிலளிக்கும் போது நீங்கள் தயங்கக்கூடாது மற்றும் நோக்கத்துடன் தெளிவாக இருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால், பணி விவரத்தின்படி உங்கள் ஆண்டு வருமானத்தைக் குறிப்பிடவும் அதேசமயம் நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தால், ஒரு மதிப்பிடப்பட்ட அமௌன்ட்டைக் கொடுங்கள். இது ஒரு பெர்சனல் கேள்வி போல் தோன்றலாம், ஆனால் எந்த விசா இன்டெர்வியூவிற்கும் இது முக்கியமான கேள்வி. எனவே, நீங்கள் குறிப்பிடும் தொகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் இது விசா அப்ரூவல்களை பெரிதும் பாதிக்கிறது.
இங்கே, வேலையில் உங்கள் பங்கு, நீங்கள் அதே துறையில் எவ்வளவு காலம் பணியாற்றி வருகிறீர்கள் என்பதை பற்றி பேசுங்கள். மேலும், உங்கள் கல்விப் பின்னணி என்ன, இப்போது நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணியுடன் அது எவ்வாறு தொடர்புடையது. கூடுதலாக, உங்கள் புரொபஷனல் வாழ்க்கையில் நீங்கள் பெற்ற அனுபவம் மற்றும் நீங்கள் பெற்ற சமீபத்திய பதவி உயர்வுகள் பற்றி பேசுங்கள். இறுதியாக, நீங்கள் தொடர்புடைய நிறுவனத்தின் பின்னணி மற்றும் கடந்த ஆண்டுகளில் வெற்றிபெற உங்களுக்கு எப்படி உதவியது என்பதைப் பற்றி பேசுங்கள்.
இன்டெர்வியூ செய்பவருக்கு நீங்கள் வேலையில் இருக்கிறீர்கள் மற்றும் நிதி ரீதியாக நிலையானவர் என்பதை உறுதிப்படுத்த பேங்க் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நீங்கள் சொந்தமாக நாட்டில் தங்கலாம்.
நீங்கள் விண்ணப்பித்த விசா வகையின்படி இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவும். ஒவ்வொரு விசா விண்ணப்ப வகைக்கும் சில வரம்புகள் உள்ளன, அதை நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இது ஒரு ஷெங்கன் டூரிஸ்ட் விசா இன்டெர்வியூ கேள்விகள் மற்றும் பதில்கள் எனில், டூரிஸ்ட் விசாவின் கீழ் உள்ள கட்டுப்பாடுகளை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்றும், அங்கு எந்த வேலையையும் தேட மாட்டீர்கள் என்றும் அவர்களிடம் சொல்லுங்கள்.
இருப்பினும், நீங்கள் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், வேலை/இன்டர்ன்ஷிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான எதிர்கால சாத்தியக்கூறுகளைப் பற்றி விவாதிக்கவும்.
ஷெங்கன் விசா இன்டெர்வியூவில் கேட்கப்பட்ட முக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று. நீங்கள் விடுப்புக்கு விண்ணப்பிப்பீர்கள் என்பதால், அதன் அப்ரூவ்டு நகலைக் கொண்டு வந்து இந்தக் கேள்விக்கான பதிலைச் சமர்ப்பிக்கவும். இன்டெர்வியூ செய்பவர் தனக்குத் தேவையான தகவல்களைப் பெறுவார்.
பயணத்திற்கான டிராவல் இன்சூரன்ஸ் உங்களிடம் ஏற்கனவே இருந்தால், அதன் கவரேஜ் விவரங்களுடன் அதைக் குறிப்பிடவும். மாறாக, உங்களிடம் டிராவல் இன்சூரன்ஸ் இல்லையென்றால் இல்லை என்று சொல்லுங்கள். டிராவல் இன்சூரன்ஸின் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்றும் மேலும் நீங்கள் புறப்படுவதற்கு முன் ஒன்றைப் பெறலாம் என்றும் நீங்கள் கூறலாம்.
ஷெங்கன் பகுதிக்குச் செல்வதற்கு குறிப்பிட்ட நேரம் ஏன் தேவை என்பதை விளக்குவதன் மூலம் இதற்குப் பதிலளிக்கவும். இது விசா வகைக்கேற்ப மாறுபடலாம்.
எடுத்துக்காட்டாக, மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடநெறிக் காலத்தைக் குறிப்பிடலாம். இதேபோல், இது ஷெங்கன் டூரிஸ்ட் விசா இன்டெர்வியூ கேள்விகளில் ஒன்றாக இருந்தால், முழுப் பிராந்தியத்திலும் பார்க்க வேண்டிய பல டூரிஸ்ட் இடங்களுக்கு தேவைப்படும் குறிப்பிட்ட நேரங்களை குறிப்பிடலாம்.
ஷெங்கன் விசா இன்டெர்வியூவில் கேட்கப்படும் மிகவும் பொதுவான மற்றும் முக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். உங்களுக்கு அங்கு வசிக்கும் தொடர்புகள் இல்லை என்றால் இல்லை என்று சொல்லுங்கள். இருப்பினும், உங்களிடம் குடும்பம் அல்லது நண்பர்கள் இருந்தால், அவர்களின் பெயர்களை சரியாகக் குறிப்பிடவும். அவர்களைப் பற்றிய சில டீடைல்ஸை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் விண்ணப்பிக்கும் விசாவின் படி இதற்கு பதிலளிக்கவும். உதாரணமாக, இது ஒரு டூரிஸ்ட் விசாவாக இருந்தால், நீங்கள் அதற்கு எதிர்காலத்தில் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லுங்கள். இருப்பினும், இது ஒரு மாணவர் விசாவாக இருந்தால், நாட்டிலேயே உங்களுக்கு வேறு வழிகள் உள்ளன என்று கூறுங்கள்.
இந்த கேள்விக்கு, உங்கள் பதில் தெளிவான இல்லை என்று இருக்க வேண்டும்.
உங்கள் பதில் ஆம் அல்லது இல்லை என இருக்க வேண்டும். உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களைப் பற்றி பேசுங்கள், அதாவது, அவர்களுக்கு என்ன வயது, வாழ்க்கையில் அவர்கள் என்ன செய்கிறார்கள், முதலியன. அவர்கள் இல்லாமல் பயணம் செய்வதற்கான காரணங்களைக் குறிப்பிடவும்.
ஷெங்கன் விசா இன்டெர்வியூவில் கேட்கப்படும் சில பொதுவான கேள்விகள் இவை, இதற்க்லு சிறப்பாக பதிலளிப்பது இன்டெர்வியூ-வை எளிதாகக் கடக்க உதவும். இருப்பினும், அதிகாரிகள் எப்போதும் இந்த முறையில் கேள்விகளை உருவாக்க மாட்டார்கள். மாறுபாடுகள் இருக்கலாம், எனவே ஒருவர் அதற்கேற்ப தயாராக இருக்க வேண்டும்.
ஷெங்கன் விசா இன்டெர்வியூ கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள் இங்கே -
ஷெங்கன் விசா இன்டெர்வியூவில் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டிருப்பது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கவும், அதை எளிதில் சமாளிக்கவும் உதவும். கூடுதல் டிப்ஸ்களை கொண்டு பயன்பெற மறவாதீர்!
Please try one more time!
மறுப்பு -
உங்கள் கொள்கை அட்டவணை மற்றும் கொள்கை வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஆவணங்களை கவனமாக படிக்கவும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள், விசா கட்டணம் மற்றும் பிற தகவல்கள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இலக்கக் காப்பீடு இங்கு எதையும் விளம்பரப்படுத்தவோ பரிந்துரைக்கவோ இல்லை. உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன், விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு, பயணக் கொள்கையை வாங்குவதற்கு அல்லது வேறு எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் அதைச் சரிபார்க்கவும்.
Get 10+ Exclusive Features only on Digit App
closeAuthor: Team Digit
Last updated: 28-08-2024
CIN: U66010PN2016PLC167410, IRDAI Reg. No. 158.
கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் (முன்பு ஓபன் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது) - பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி - 1 முதல் 6 மாடிகள், அனந்தா ஒன் (ஏ.ஆர் ஒன்), பிரைட் ஹோட்டல் லேன், நர்வீர் தானாஜி வாடி, சிட்டி சர்வே எண்.1579, சிவாஜி நகர், புனே-411005, மகாராஷ்டிரா | கார்ப்பரேட் அலுவலக முகவரி - அட்லாண்டிஸ், 95, 4 வது பி கிராஸ் ரோடு, கோரமங்களா இண்டஸ்டிரியல் லேஅவுட், 5 வது பிளாக், பெங்களூரு-560095, கர்நாடகா | மேலே காட்டப்பட்டுள்ள கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் டிரேடு லோகோ கோ டிஜிட் எல்என்ஃபோவொர்க்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் உரிமத்தின் கீழ் கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் வழங்கப்படுவதுடன் பயன்படுத்தப்படுகிறது.