Select Number of Travellers
மோட்டார்
ஹெல்த்
மோட்டார்
ஹெல்த்
More Products
மோட்டார்
ஹெல்த்
சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
24x7
Missed Call Facility
Affordable
Premium
1-Day Adventure
Activities Covered
Terms and conditions apply*
வணிக நோக்கம், மகிழ்ச்சிகரமான சுற்றுலா, கல்விச் சுற்றுலா போன்றவற்றிற்காக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் நாட்டு எல்லைகளைத் தாண்டி பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள் நுழைவதற்கு முன், நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டிய அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்று உங்கள் விசா ஆகும். விசா பெறுவது ஒரு நீண்ட நேரம் எடுக்கும் மற்றும் சோர்வை ஏற்படுத்தக் கூடிய ஒரு செயலாகும். இருப்பினும், இ-விசாவின் அறிமுகத்துடன், நீங்கள் இப்போது அதை விரைவாகவும் சுமுகமாகவும் செய்யலாம்!
எலக்ட்ரானிக் விசா அல்லது இ-விசா என்பது டிஜிட்டல் முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசா ஆவணமாகும். இது பயணிகள் வேறொரு நாட்டிற்கு செல்லும் போது அந்நாட்டு குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் அந்த ஆவணத்தை சமர்ப்பித்த பிறகு அவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க உதவும் ஓர் ஆவணம் எனலாம். இ-விசா மூலம், பயணிகள் ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம். ஆதரவு ஆவணங்களைப் பதிவேற்றலாம் மற்றும் செல்லும் நாட்டின் அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளம் மூலம் விசா கட்டணத்தையும் செலுத்தலாம்.
ஹென்லி மற்றும் பார்ட்னர்களின் பாஸ்போர்ட் இன்டெக்ஸ்-இன் படி, 2023 மார்ச் வரை, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பட்டியலில் உள்ள இந்த நாடுகளுக்குச் செல்ல இ-விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது, பயணம் செய்வதற்கான சுதந்திரத்தின் அடிப்படையில் 84வது இடத்தில், இந்திய பாஸ்போர்ட் உள்ளது.
2023 மார்ச் மாத நிலவரப்படி இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இ-விசா வழங்கும் நாடுகளின் பட்டியலைப் பார்க்க மேலும் படிக்கவும்.
1. அங்கோலா | 14. மலேசியா |
2. ஆன்டிகுவா மற்றும் பார்புடா | 15. மால்டோவா |
3. ஆஸ்திரேலியா | 16. மொராக்கோ |
4. அஜர்பைஜான் | 17. ரஷ்யா |
5. பஹ்ரைன் | 18. சாவோ டோம் மற்றும் பிரின்சிப் |
6. பெனின் | 19. சிங்கப்பூர் |
7. கொலம்பியா | 20. சுரினாம் |
8. ஜிபூட்டி | 21. தைவான் |
9. ஜார்ஜியா | 22. தஜிகிஸ்தான் |
10. கென்யா | 23. துருக்கி |
11. குவைத் | 24. உஸ்பெகிஸ்தான் |
12. கிர்கிஸ்தான் | 25. வியட்நாம் |
13. லெசோதோ | 26. ஜாம்பியா |
பல நாடுகள் அந்த நாட்டிற்குள் நுழையும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா-ஆன்-அரைவல் (Visa-on-arrival) மற்றும் இ-விசா (e-visa) வசதிகளை வழங்குகின்றன. வழக்கமாக, சம்பந்தப்பட்ட நாட்டிற்குள் பயணி நுழைந்ததும், அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் பயணியின் பாஸ்போர்ட், அவர்களின் பயோமெட்ரிக் ஆகியவற்றை ஆய்வு செய்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை வசூலித்துவிட்டு விசா அனுமதியை வழங்குவார்கள். சம்பந்தப்பட்ட நாட்டில் முக்கிய இடங்களில் ஆன்-அரைவல் விசா வழங்கப்படுகிறது.
கீழே உள்ள பட்டியலில், இந்திய குடிமக்களுக்கு 2023 இல் விசா-ஆன்-அரைவல் வழங்கும் நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன:
27. பொலிவியா | 44. மொசாம்பிக் |
28. போட்ஸ்வானா | 45. மியான்மர் |
29. புருண்டி | 46. பலாவ் தீவுகள் |
30. கம்போடியா | 47. ருவாண்டா |
31. கேப் வெர்டே தீவுகள் | 48. சமோவா |
32. கொமோரோ தீவுகள் | 49. சீஷெல்ஸ் |
33. எத்தியோப்பியா | 50. சியரா லியோன் |
34. காபோன் | 51. சோமாலியா |
35. கினியா-பிசாவ் | 52. ஸ்ரீ லங்கா |
36. இந்தோனேசியா | 53. செயின்ட் லூசியா |
37. ஈரான் | 54. தான்சானியா |
38. ஜோர்டான் | 55. தாய்லாந்து |
39. லாவோஸ் | 56. டிமோர்-லெஸ்டே |
40. மடகாஸ்கர் | 57. டோகோ |
41. மாலத்தீவுகள் | 58. டுவாலு |
42. மார்ஷல் தீவுகள் | 59. உகாண்டா |
43. மொரிட்டேனியா | 60. ஜிம்பாப்வே |
விசா தேவையில்லாமல் பயணிகளை அனுமதிக்க பரஸ்பரமாக ஒப்புக்கொண்ட நாடுகளே விசா தேவைப்படாத நாடுகள் ஆகும். விசா விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டிய பிரச்சனை இல்லாமல் ஒருவர் இந்த நாடுகளுக்குள் நுழைவதற்கு அடையாளச் சான்றை வழங்கினால் போதுமானது.
இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியல் இதோ:
61. அல்பேனியா | 74. மொரிஷியஸ் |
62. பார்படாஸ் | 75. மைக்ரோனேசியா |
63. பூட்டான் | 76. மாண்ட்செராட் |
64. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் | 77. நேபாளம் |
65. குக் தீவுகள் | 78. நியு |
66. டொமினிகா | 79. ஓமன் |
67. எல் சல்வடோர் | 80. கத்தார் |
68. ஃபிஜி | 81. செனகல் |
69. கிரெனடா | 82. செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் |
70. ஹைட்டி | 83. செயின்ட் வின்சென்ட் அண்ட் கிரெனடைன்ஸ் |
71. ஜமைக்கா | 84. டிரினிடாட் அண்ட் டொபாகோ |
72. கஜகஸ்தான் | 85. துனிசியா |
73. மக்காவ் (SAR சீனா) | 86. வனுவாட்டு |
40. மடகாஸ்கர் | 57. டோகோ |
41. மாலத்தீவுகள் | 58. டுவாலு |
42. மார்ஷல் தீவுகள் | 59. உகாண்டா |
43. மொரிட்டேனியா | 60. ஜிம்பாப்வே |
உங்கள் இந்திய பாஸ்போர்ட் அந்த குறிப்பிட்ட நாட்டில் இ-விசாவிற்கு தகுதி பெற்றிருந்தால் மட்டுமே நீங்கள் இ-விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். சில நாடுகளில் கூடுதல் தகுதி அளவுகோல்கள் உள்ளன, எனவே அந்தந்த நாடுகளின் இணையதளங்களில் அவற்றைச் சரிபார்க்கவும்.
இ-விசா ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், சம்பந்தப்பட்ட நாடுகளின் எல்லைகளில் பயணிகளுக்கான செயலாக்க நேரத்தை விரைவுபடுத்த இ-விசா அமைப்பு உதவி உண்டு. தேவையான ஆவணங்கள் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, உங்கள் பாஸ்போர்ட்டை முத்திரையிட, உங்களுக்கு குடிவரவு அதிகாரி மட்டுமே தேவை.
நீங்கள் வழங்க வேண்டிய சில நிலையான ஆவணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
நாட்டைப் பொறுத்து கூடுதல் தகவல் அல்லது ஆவணங்கள் தேவைப்படலாம். எனவே, இ-விசாவிற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளங்களை முழுமையாக நீங்கள் பார்ப்பது அவசியம்.
டிராவல் இன்சூரன்ஸ் அறிமுகமில்லாத பகுதிகளில் நிதிப் பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பரந்த அளவிலான பாதுகாப்புகளையும் வழங்குகிறது. பெரும்பாலான பயணிகள் டிராவல் இன்சூரன்ஸை வெளிநாடுகளுக்குச் செல்லும்போது வாங்குகிறார்கள். திருட்டு அல்லது பொருட்கள் தொலைபோதல் அல்லது பயண ஆவணங்கள் இழப்பு போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் நிதி ரீதியாக உங்களைப் பாதுகாத்துக் கொள்ள டிராவல் இன்சூரன்ஸ் உதவுகிறது. உங்களுக்கு வெளிநாட்டில் சிகிச்சை ஏதேனும் தேவைப்பட்டால் டிராவல் இன்சூரன்ஸ் விரிவான மருத்துவக் காப்பீட்டையும் வழங்குகிறது.
டிராவல் இன்சூரன்ஸில் நிறைய பலன்கள் இருக்கின்றன. அவற்றில் சில:
எனவே, உங்கள் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றவும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யவும் விரும்பினால், இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் திட்டத்தை ஆரம்பத்திலேயே வாங்குவது சிறந்தது! சந்தையில் பல டிராவல் இன்சூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. எனவே நீங்கள் பணம் செலுத்துவதற்கு முன், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். டிராவல் இன்சூரன்ஸ் திட்டங்களை ஒப்பீடு செய்வது தான் அது. மலிவு விலையில் சிறந்த பலன்களைப் பெற இதை செய்யுங்கள்.
ஆம், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இ-விசாவுக்கான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இ-விசா கோரி விண்ணப்பிக்கலாம். ஆஸ்திரேலியா, கொலம்பியா, ஜார்ஜியா, குவைத், மொராக்கோ, மலேசியா, ரஷ்யா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இந்தியர்களுக்கு இ-விசா வசதிகளை வழங்குகின்றன.
ஆம், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இ-விசாவுக்கான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இ-விசா கோரி விண்ணப்பிக்கலாம். ஆஸ்திரேலியா, கொலம்பியா, ஜார்ஜியா, குவைத், மொராக்கோ, மலேசியா, ரஷ்யா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இந்தியர்களுக்கு இ-விசா வசதிகளை வழங்குகின்றன.
உங்கள் இ-விசா விண்ணப்ப செயல்முறையைத் தொடங்க அதிகாரப்பூர்வ சம்பந்தப்பட்ட நாட்டு அரசாங்க இணையதளத்தைப் பார்வையிடவும். நீங்கள் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, விசா கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். படிப்படியான செயல்முறை முடிந்ததும், நீங்கள் வழங்கிய மின்னஞ்சலின் மூலம் உங்கள் விண்ணப்பம் மற்றும் உங்களின் இ-விசா ஆவணத்தின் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள்.
உங்கள் இ-விசா விண்ணப்ப செயல்முறையைத் தொடங்க அதிகாரப்பூர்வ சம்பந்தப்பட்ட நாட்டு அரசாங்க இணையதளத்தைப் பார்வையிடவும். நீங்கள் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, விசா கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். படிப்படியான செயல்முறை முடிந்ததும், நீங்கள் வழங்கிய மின்னஞ்சலின் மூலம் உங்கள் விண்ணப்பம் மற்றும் உங்களின் இ-விசா ஆவணத்தின் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள்.
ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, 2023 மார்ச் மாத நிலவரப்படி 26 நாடுகள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இ-விசா வழங்கும் நாடுகளாக உள்ளன.
ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, 2023 மார்ச் மாத நிலவரப்படி 26 நாடுகள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இ-விசா வழங்கும் நாடுகளாக உள்ளன.
இ-விசாவின் செல்லுபடியாகும் காலம் நாட்டுக்கு நாடு வேறுபடும். நீங்கள் ஒரு நாட்டில் 15-30 நாட்கள் வரை தங்கலாம் மற்றும் உங்கள் தங்கியிருக்கும் காலத்தையும் தேவைப்பட்டால் நீட்டித்துக் கொள்ளலாம்.
இ-விசாவின் செல்லுபடியாகும் காலம் நாட்டுக்கு நாடு வேறுபடும். நீங்கள் ஒரு நாட்டில் 15-30 நாட்கள் வரை தங்கலாம் மற்றும் உங்கள் தங்கியிருக்கும் காலத்தையும் தேவைப்பட்டால் நீட்டித்துக் கொள்ளலாம்.
ஆம், பல நாடுகள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா-ஆன்-அரைவல் மற்றும் இ-விசா வசதிகளை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, மலேசியா, எத்தியோப்பியா, உகாண்டா, கேப் வெர்டே, தாய்லாந்து போன்றவை இந்தியர்களுக்கு விசா-ஆன்-அரைவல் மற்றும் இ-விசா ஆப்ஷன்களை வழங்குகின்றன. நீங்கள் செல்ல நினைக்கும் நாட்டிற்கான விசா ஆப்ஷன்களைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள அந்நாடுகளின் அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளங்களை நீங்கள் பார்க்கலாம்.
ஆம், பல நாடுகள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா-ஆன்-அரைவல் மற்றும் இ-விசா வசதிகளை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, மலேசியா, எத்தியோப்பியா, உகாண்டா, கேப் வெர்டே, தாய்லாந்து போன்றவை இந்தியர்களுக்கு விசா-ஆன்-அரைவல் மற்றும் இ-விசா ஆப்ஷன்களை வழங்குகின்றன. நீங்கள் செல்ல நினைக்கும் நாட்டிற்கான விசா ஆப்ஷன்களைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள அந்நாடுகளின் அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளங்களை நீங்கள் பார்க்கலாம்.
Please try one more time!
மறுப்பு -
உங்கள் கொள்கை அட்டவணை மற்றும் கொள்கை வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஆவணங்களை கவனமாக படிக்கவும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள், விசா கட்டணம் மற்றும் பிற தகவல்கள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இலக்கக் காப்பீடு இங்கு எதையும் விளம்பரப்படுத்தவோ பரிந்துரைக்கவோ இல்லை. உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன், விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு, பயணக் கொள்கையை வாங்குவதற்கு அல்லது வேறு எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் அதைச் சரிபார்க்கவும்.
Get 10+ Exclusive Features only on Digit App
closeAuthor: Team Digit
Last updated: 28-08-2024
CIN: U66010PN2016PLC167410, IRDAI Reg. No. 158.
கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் (முன்பு ஓபன் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது) - பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி - 1 முதல் 6 மாடிகள், அனந்தா ஒன் (ஏ.ஆர் ஒன்), பிரைட் ஹோட்டல் லேன், நர்வீர் தானாஜி வாடி, சிட்டி சர்வே எண்.1579, சிவாஜி நகர், புனே-411005, மகாராஷ்டிரா | கார்ப்பரேட் அலுவலக முகவரி - அட்லாண்டிஸ், 95, 4 வது பி கிராஸ் ரோடு, கோரமங்களா இண்டஸ்டிரியல் லேஅவுட், 5 வது பிளாக், பெங்களூரு-560095, கர்நாடகா | மேலே காட்டப்பட்டுள்ள கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் டிரேடு லோகோ கோ டிஜிட் எல்என்ஃபோவொர்க்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் உரிமத்தின் கீழ் கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் வழங்கப்படுவதுடன் பயன்படுத்தப்படுகிறது.