டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணையின் பெயரை சேர்ப்பது எப்படி?

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் படிவம் சமர்ப்பித்தல் வசதியானது, பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் அல்லது மீண்டும் வழங்கும் செயல்முறையை எளிதாக்கிவிட்டது.

பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணையின் பெயரை எவ்வாறு சேர்ப்பது என்பது குறித்த விரிவான விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணையின் பெயரை சேர்த்தல் அல்லது மாற்றுதலுக்கான செயல்முறை

பாஸ்போர்ட்டில் உங்கள் வாழ்க்கை துணையின் பெயரை சேர்க்கவோ அல்லது மாற்றவோ, முதலில் உங்கள் பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குதல் செயல்முறையை நடைமுறைப்படுத்த நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த செயல்முறையை நீங்கள் இரண்டு விதமாக செயல்படுத்தலாம் - 

  • ஆன்லைன் படிவம் சமர்ப்பித்தல்

  • இ-படிவம் சமர்ப்பித்தல்

ஆன்லைன் படிவம் சமர்ப்பித்தலுக்கான செயல்முறை

திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை துணையின் பெயரை பாஸ்போர்ட்டில் சேர்க்க உதவும் ஆன்லைன் படிவம் சமர்ப்பித்தல் செயல்முறைக்கான படிப்படியான விளக்கம் உங்களுக்காக-

1. பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் போர்டல் இணையதளத்தை பார்வையிட்டு, உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளவும்.

2. இப்பொழுது உங்களின் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும். பின்னர் உங்கள் வாழ்க்கை துணையின்பெயரைச் சேர்க்க "புதிய பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்க/பாஸ்போர்ட் மீண்டும் வழங்குதலுக்கு விண்ணப்பிக்க" என்பதை கிளிக் செய்யவும்.

3. தேவையான விவரங்கள் அனைத்தையும் உள்ளிட்ட பிறகு, "சமர்ப்பிக்கவும்" என்பதை கிளிக் செய்யவும்.

4. அடுத்ததாக, "பணம் செலுத்தி, அப்பாயிண்ட்மெண்ட் திட்டமிடவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.

5. பணம் செலுத்துதல் பக்கத்தில் காணப்படும் எஸ்பிஐ (SBI) வங்கி சலான், இன்டர்நெட் பேங்கிங், மற்றும் டெபிட்/கிரடிட் கார்டு போன்ற உங்களுக்குசௌகரியமான பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்து, உரிய கட்டணத்தை செலுத்தவும். பிஓ (PO)/பிஓபிஎஸ்கே (POPSK)/பிஎஸ்கே (PSK) போன்றவற்றில் அப்பாயிண்ட்மெண்ட் பெற முன்கூட்டிய ஆன்லைன் கட்டணம் செலுத்துதல் கட்டாயம்.

6. "விண்ணப்பத்திற்கான ரசீதை அச்சிடவும்" என்பதை கிளிக் செய்க.  அந்த ரசீதில் பின்வரும் விவரங்கள் காணப்படும்:

  • அப்பாயிண்ட்மெண்ட் எண்

  • விண்ணப்ப குறிப்பு எண்

ஆஃப்லைன் படிவம் சமர்ப்பித்தலுக்கான செயல்முறை

பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணையின் பெயரைச் சேர்க்க விரும்பும் நபர்களுக்கான இ-படிவம் சமர்ப்பித்தலின் படிப்படியான செயல்முறை பின்வருமாறு-  

1. பாஸ்போர்ட் சேவா கேந்திரா இணையதளத்தில் உள்ள இ-படிவத்தை எக்ஸ்எம்எல் (XML) முறையில் பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களை உள்ளிடவும்.

2. இப்பொழுது போர்ட்லில் உள்நுழைந்து, எக்ஸ்எம்எல் கோப்பைப் பதிவேற்றம் செய்யவும்.

3. ஆன்லைன் செயல்முறைக்கு விவரிக்கப்பட்டது போலவே, பணம் செலுத்துதல் பக்கத்திற்கு சென்று உரிய கட்டணத்தை செலுத்தவும். பின்னர், மேலே குறிப்பிட்டுள்ளபடி பணம் செலுத்துதலுக்கான ரசீதை பதிவிறக்கம் செய்யுங்கள்.

நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் படிவத்தை சமர்ப்பித்த பிறகு அப்பாயிண்ட்மெண்ட் குறித்த விவரங்கள் உங்களுக்கு எஸ்எம்எஸ் (SMS) மூலம் அனுப்பி வைக்கப்படும். இறுதிப்படியாக, அனைத்து அசல் ஆவணங்களுடன் உங்கள் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்லவும்.

ஆகவே, பாஸ்போர்ட்டில் கணவரின் பெயரை எப்படி சேர்ப்பது என்பது தெரியாமல் இருக்கும் நபர்களுக்கு மேற்கூறிய தகவல்கள் உதவியாக இருக்கும்.

மனைவியின் பெயரை பாஸ்போர்ட்டில் எப்படி சேர்ப்பது என்பதற்கும் இதே செயல்முறை பொருந்தும். 

பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணையின் பெயரை சேர்க்க தேவையான ஆவணங்கள் யாவை?

பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணையின் பெயரை சேர்க்க தேவைப்படும் ஆவணங்கள் பின்வருமாறு -

  • உங்களின் அசல் பாஸ்போர்ட்.

  • உங்கள் பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கத்தின் போட்டோ காப்பி நகல்.

  • கவனிப்பு பக்கம்.

  • இசிஆர் அல்லது நான்-இசிஆர் பக்கம்.

  • குறுகிய கால பாஸ்போர்ட்டிற்கு, நீங்கள் செல்லுபடியாகும் பக்கத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

வாழ்க்கை துணையின் பெயரை பாஸ்போர்ட்டில் மாற்றவும் இதே ஆவணங்கள் தான் தேவைப்படும். மேலும் அதற்கான செயல்முறையும் இதே தான்.

பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணையின் பெயரை சேர்ப்பதற்கான கட்டணம்:

 
பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணையின் பெயரை மாற்ற செலுத்த வேண்டிய கட்டணங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது -

கூறு உட்கூறு கட்டணங்கள்
அயல்நாட்டு கட்டணம் பாஸ்போர்ட் கட்டணம் பெரியவர்களுக்குப் பொருந்தும் பிரிவின்படி
அயல்நாட்டு கட்டணம் இந்திய சமூக நல நிதி ₹ 221
சிகேஜிஎஸ் கட்டணம் சிகேஜிஎஸ் சேவைக்கான கட்டணம் ஒரு விண்ணப்பத்திற்கு ₹ 1470
சிகேஜிஎஸ் கட்டணம் விருப்பதெரிவு கட்டணம் கொரியர் சேவை & டெக்ஸ்ட் மெசேஜ்
மொத்தம் - ₹1691

இந்திய பாஸ்போர்டில் வாழ்க்கை துணையின் பெயரை சேர்ப்பதற்கான செயல்முறை தட்கல் முறையிலும் அதாவது விரைவாக பெறவும் உள்ளது. இதற்கு கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்துவது கட்டாயம். ரொக்கம் அல்லது காசோலை வாயிலாக பணம் செலுத்த இயலாது. கிரடிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்துபவர்கள் கூடுதல் கன்வீனியன்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும்.

பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணையின் பெயர் மாற்ற எவ்வளவு காலம் ஆகும்?

பாஸ்போர்ட் புதுப்பித்தல் செயல்முறை நடைபெற அதிகபட்சமாக மூன்று வேலை நாட்கள் ஆகும். எனினும், பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணையின் பெயரை சேர்ப்பதற்கான செயல்முறைக்கு ஆகும் நேரம் அதிகபட்சமாக 2 மணி நேரம் ஆகும்.

ஆகவே, நீங்கள் கவனித்தபடி, பாஸ்போர்ட்டில் உங்கள் வாழ்க்கை துணையின் பெயரை சேர்க்கும் செயல்முறையானது குறுகிய காலத்தில் முடிவடையும் ஒன்று ஆகும். இந்த செயல்முறையை நிறைவு செய்ய உதவும் பல மூன்றாம் தரப்பு வளைத்தளங்கள் மற்றும் அமைப்புகள் உள்ளன.

ஆயினும், பாஸ்போர்ட்டில் உங்கள் வாழ்க்கை துணையின் பெயரை சேர்க்க எப்போதும் நேரடியாக அரசு இணையதளத்தைப் பார்வையிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. விண்ணப்பம் அல்லது மீண்டும் வழங்குதல் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் நீங்கள் வழங்க வேண்டும். பின்னர் உரிய கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே செயல்முறை விரைவாக முடியும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணையின் பெயரை சேர்க்க திருமண சான்றிதழ் கட்டாயமா?

நீங்கள் இருவரும் இந்தியராக இருக்கும் பட்சத்தில், பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணையின் பெயரை சேர்க்க திருமண சான்றிதழ் தேவையில்லை.

பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணையின் பெயரை சேர்க்க போலீஸ் சரிபார்ப்பு தேவைப்படுமா?

இல்லை, பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணையின் பெயரை சேர்க்க போலீஸ் சரிபார்ப்பு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

பாஸ்போர்ட்டில் என்னுடைய வாழ்க்கை துணையின் தேசிய இனத்தை குறிக்க எதேனும் முன்னொட்டு அல்லது பின்னொட்டு சேர்க்க வேண்டுமா?

இல்லை, உங்கள் வாழ்க்கை துணையின் பெயர் மட்டுமே போதுமானது. அவரது தேசிய இனத்தை குறிக்க முன்னொட்டு அல்லது பின்னொட்டு தேவையில்லை.