டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

வெவ்வேறு வகையான இந்திய பாஸ்போர்ட்டுகள்

உங்கள் பாஸ்போர்ட் வேகமான குடியேற்ற அனுமதி அம்சத்தை அல்லது விசா இல்லாத பயண வசதியை வழங்குகிறதா என்பதை எப்படி அறிவீர்கள்?

அதற்கு, பல்வேறு வகையான இந்திய பாஸ்போர்ட்டுகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொள்ள வேண்டும்.

ஒரு சராசரி மனிதனுக்கு பல வகையான பாஸ்போர்ட்கள் இருப்பது கூட தெரியாது. இருப்பினும், வெவ்வேறு விசாக்களைப் போலவே, மக்களுக்கும் அவர்களின் தொழிலின் அடிப்படையில் பாஸ்போர்ட் ஆவணத்தின் பல்வேறு வகைகள் தேவைப்படுகின்றன.

வெவ்வேறு இந்திய பாஸ்போர்ட்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்!

இந்திய பாஸ்போர்ட்டின் வெவ்வேறு வகைகள் என்ன?

நீல பாஸ்போர்ட்

வகை P பாஸ்போர்ட் என்றும் அழைக்கப்படும் இது, இந்தியாவின் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது, இதை வைத்திருக்கும் மக்கள் வெளிநாடுகளுக்கு ஓய்வு அல்லது வணிக பயணங்களுக்கு செல்லலாம். உத்தியோகபூர்வ அந்தஸ்து கொண்ட பிற பாஸ்போர்ட்களிடமிருந்து வேறுபடுத்துவதற்கு நீல நிறம் உதவுகிறது.

பயன்கள்: பொது மக்கள் இந்த பாஸ்போர்ட்டை ஓய்வு அல்லது வணிக நோக்கங்களுக்காகப் பயணம் செய்ய பயன்படுத்துகின்றனர்.

நன்மைகள்: இந்த வகையான பாஸ்போர்ட் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு பொது மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளையும் எளிதில் வேறுபடுத்த உதவுகிறது.

வெள்ளை பாஸ்போர்ட்

இந்த வகையான பாஸ்போர்ட்கள் உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக நாட்டிற்கு வெளியே பயணம் செய்யும் இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்த அதிகாரிகளில் ஐஏஎஸ் மற்றும் இந்திய காவல் சேவைத் துறையில் பணிபுரிபவர்களும் அடங்குவர்.

பயன்கள்: அரசு அதிகாரிகள் உத்தியோகபூர்வ பணிக்காக வெளிநாடு செல்ல இந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்துகின்றனர்.

நன்மைகள்: வெள்ளை பாஸ்போர்ட்கள் குடிவரவு அதிகாரிகள் அரசாங்க அதிகாரிகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப நடத்துவதை எளிதாக்குகிறது.

டிப்ளோமெடிக் பாஸ்போர்ட்

இது வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் அரசு அதிகாரிகள் மற்றும் தூதர்களுக்கானது. டிப்ளோமெடிக் பாஸ்போர்ட்கள் வெள்ளை நிற பாஸ்போர்ட்கள் வைத்திருப்பவர்களைத் தவிர வெளிநாட்டு பயணத்திற்கு திட்டமிடும் எந்தவொரு அரசாங்க பிரதிநிதிக்கும் வழங்கப்படும்.

பயன்கள்: இந்திய தூதர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது இந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்துகின்றனர்.

நன்மைகள்: மெரூன் நிற பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் பரந்த அளவிலான சலுகைகளில், விசா இல்லாத பயண வசதி (வெளிநாடு பயணம் செய்வதற்கு) மிகவும் பயனுள்ள ஒன்றாகும். வெளிநாட்டில் எவ்வளவு காலம் தங்க வேண்டும் என்று முடிவு செய்தாலும், வெளிநாட்டு பயணங்களுக்கு அவர்களுக்கு விசா தேவையில்லை. மேலும், இந்த பாஸ்போர்ட் மூலம் அவர்கள் விரைவான குடியேற்ற செயல்முறையை அனுபவிக்க முடியும்.

அதற்கு மேல், பொது பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை விட இந்த வகையான இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு குடியேற்றம் எளிதானது.

ஆரஞ்சு பாஸ்போர்ட்

2018 ஆம் ஆண்டு ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்டுகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது, அதில் முகவரிப் பக்கம் இருக்காது. இந்த வகையான பாஸ்போர்ட்கள் முக்கியமாக 10 ஆம் வகுப்புக்கு மேல் கல்வியறிவு இல்லாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் இசிஆர் பிரிவின் கீழ் வருவார்கள்.

பயன்கள்: 10-ம் வகுப்புக்கு மேல் படிக்காதவர்கள் இந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு பறக்கலாம்.

நன்மைகள்: வெளிநாட்டுப் பயணத்தின் போது படிக்காத குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே வித்தியாசமான பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியதன் முக்கிய நோக்கமாகும். இந்த அமைப்புடன், இசிஆர்(ECR) சரிபார்ப்பு மற்றும் குடியேற்ற நடைமுறையும் வேகமாக இருக்கும்.

இந்தியாவில் வெவ்வேறு வகையான பாஸ்போர்ட்டுகளைப் பெறுவதற்கான தகுதித் தேவைகள் என்ன?

மேலே குறிப்பிட்டுள்ள பாஸ்போர்ட் வகைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நோக்கத்தைக் கொண்டுள்ளன மற்றும் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படுகின்றன. தகுதியான அனைத்து நபர்களின் பட்டியல் இங்கே உள்ளது,

  • நீல பாஸ்போர்ட் - பொது மக்கள்

  • வெள்ளை பாஸ்போர்ட் - அரசு அதிகாரிகள்

  • டிப்ளோமெடிக் பாஸ்போர்ட் - இந்திய தூதர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள்

  • ஆரஞ்சு பாஸ்போர்ட் - 10 ஆம் வகுப்புக்கு மேல் படிக்காத நபர்கள்.

இப்போது நீங்கள் தகுதித் தேவைகளைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள், வெவ்வேறு வகையான பாஸ்போர்ட்டுகளுக்கான விண்ணப்ப செயல்முறையைப் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்தியாவில் புதிய பாஸ்போர்ட்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பயன்படுத்தவும் -

  • படி 1: பாஸ்போர்ட் சேவாவின் ஆன்லைன் போர்ட்டலுக்குச் சென்று உங்களின் தற்போதைய ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும். முதன்முறையாக தளத்தைப் பார்வையிடுபவர்கள் முதலில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

  • படி 2: இப்போது, 'புதிய பாஸ்போர்ட்/பாஸ்போர்ட் மீண்டும் வழங்கல்' என்பதைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். 

  • படி 3: அடுத்து, சமர்பிக்க 'அப்லோட் இ-ஃபார்ம்' என்பதைக் கிளிக் செய்யவும்.

  • படி 4: இப்போது, பணம் செலுத்தி, அப்பாயிண்ட்மெண்ட் முடிவு செய்ய, 'பணம் செலுத்தவும் மற்றும் அப்பாயிண்ட்மெண்ட் முடிவு செய்யவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.

'விண்ணப்ப ரசீதை அச்சிடு' என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் அல்லது குறியீட்டு எண்ணைக் கொண்ட கட்டண ரசீதையும் அச்சிடலாம்.

இந்த செயல்முறையை முடித்தவுடன், நீங்கள் அப்பாயிண்ட்மெண்டை பதிவு செய்துள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அல்லது பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் செல்லவும். சரிபார்ப்புக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்வதை உறுதிசெய்யவும்.

அதன் பிறகு, நீங்கள் போலீஸ் சரிபார்ப்புக்கு செல்ல வேண்டும். இங்கே, அவர்கள் உங்கள் படிவத்தில் வழங்கப்பட்ட அனைத்து தகவல்களையும் மதிப்பிட்டு, அங்கு குறிப்பிடப்பட்டுள்ள முகவரியைப் பார்வையிடுவார்கள்.

உங்களிடம் அனைத்து ஆவணங்களும் தயாராக இல்லை என்றால், புதிய பாஸ்போர்ட்டைப் பெறுவது கடினமாகவும் நேரத்தைச் வீணடிக்கச் செய்யும். பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறைக்கு தேவையான ஆவணங்களைப் பற்றி அறிய படிக்கவும்.

இந்தியாவில் புதிய பாஸ்போர்ட்டை விண்ணப்பிப்பதற்கான அத்தியாவசிய ஆவணங்கள் என்ன?

தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்க, பின்வரும் ஆவணங்களை கைவசம் வைத்திருப்பதை உறுதிசெய்யவும் -

  • முகவரி ஆதாரம் (ஆதார் அட்டை, மின்சாரக் கட்டணம், வாடகை ஒப்பந்தம், தொலைபேசி/போஸ்ட் - பெய்டு மொபைல் பில், உங்கள் வங்கிக் கணக்கு பாஸ்புக், வாழ்க்கைத் துணையின் பாஸ்போர்ட் நகல் போன்றவை)

  • பிறந்த தேதி ஆதாரம் (பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை)

ஆவணங்களைத் தவிர, தனிநபர்கள் பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் காலாவதி காலம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். சேர்த்து படியுங்கள்!

பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் மற்றும் காலாவதி காலம் என்ன?

உங்கள் பாஸ்போர்ட் அதன் வகையைப் பொருட்படுத்தாமல், 10 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். எனவே, அந்தக் காலக்கெடுவுக்குள் அதனைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். எளிதாக அணுகக்கூடும் இணையத்தின் மூலம், வெவ்வேறு வகையான இந்திய பாஸ்போர்ட்களின் புதுப்பித்தல் செயல்முறை ஆன்லைனில் செய்யப்படலாம்.

பாஸ்போர்ட் பயன்பாட்டுக் காலம் முடியும் முன், புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படுவதை உறுதிசெய்யவும். இல்லையெனில், நீங்கள் 'பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவதற்கு' விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் காலாவதியானது 3 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால், புதிய போலீஸ் சரிபார்ப்புக்கு செல்ல வேண்டும்.

இந்திய பாஸ்போர்ட்டின் வெவ்வேறு வகைகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வெவ்வேறு பாஸ்போர்ட்டு விண்ணப்பக் கட்டணம் மாறுபடுகிறதா?

இல்லை, நீங்கள் தேர்வு செய்யும் பாஸ்போர்ட் சேவையின் வகையைப் பொறுத்து தான் விலை மாறுகிறது, அதாவது நீங்கள் தட்கல் மற்றும் வழக்கமான சேவையை தேர்வு செய்தால் மட்டுமே மாறுபடும்.

படிக்காத நபர்கள் எந்த வகையான பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்?

10ம் வகுப்பு வரை படித்தவர்கள் ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

மிகவும் பொதுவான பாஸ்போர்ட் வகை எது?

நீல பாஸ்போர்ட் மிகவும் பொதுவான பாஸ்போர்ட் வகையாகும். இது "வழக்கமான" அல்லது "சுற்றுலா" பாஸ்போர்ட் என்றும் அழைக்கப்படுகிறது.