டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

பாஸ்போர்ட்டில் இ.சி.என்.ஆர் என்றால் என்ன?

1983 ஆம் ஆண்டின் குடியேற்றச் சட்டத்தின்படி, குறிப்பிட்ட இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்வதற்கு முன் 'புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர்' அலுவலகத்திலிருந்து குடியேற்ற அனுமதியைப் பெற வேண்டும்.

பாஸ்போர்ட்டில் இ.சி.என்.ஆர் என்றால் என்ன?

பாஸ்போர்ட்டில் உள்ள இ.சி.என்.ஆர் என்பது உங்கள் பாஸ்போர்ட்டுக்கு குடியேற்ற சோதனை தேவையில்லை என்பதைக் குறிக்கிறது. ஜனவரி 2007 அல்லது அதற்குப் பிறகு வழங்கப்பட்ட குறிப்பு இல்லாத அனைத்து பாஸ்போர்ட்டுகளும் இ.சி.என்.ஆர் பாஸ்போர்ட் ஆகும்.

இப்போது இ.சி.என்.ஆர் பாஸ்போர்ட் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும், அதன் தகுதி அளவுகோல்களுக்குச் செல்வோம்.

பாஸ்போர்ட்டில் இ.சி.என்.ஆர் க்கான தகுதி என்ன?

இ.சி.என்.ஆர்-க்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் இங்கே -

  • தூதரக/அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள்
  • அரசு ஊழியர்கள், வாழ்க்கைத் துணை மற்றும் சார்ந்திருக்கும் குழந்தைகள்
  • வருமான வரி செலுத்துவோர், அவர்களது வாழ்க்கைத் துணை மற்றும் சார்ந்திருக்கும் குழந்தைகள்
  • தொழில்முறை பட்டம் பெற்றவர்கள்
  • மெட்ரிகுலேஷன் மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதி உள்ளவர்கள்
  • தொடர்ச்சியான வெளியேற்றச் சான்றிதழ் (சி.டி.சி-CDC) அல்லது கடல் படைப்பயிற்சியினர் மற்றும் டெக் கேடட்களைக் கொண்ட கடற்படையினர்
  • இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நிரந்தர குடியேற்ற விசாக்கள் உள்ளவர்கள்
  • தொழிற்பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.வி.டி-NCVT) அல்லது மாநில தொழிற்பயிற்சி கவுன்சில் (எஸ்.சி.வி.டி-SCVT) மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் டிப்ளமோ பெற்ற நபர்கள்
  • தகுதிவாய்ந்த செவிலியர்கள், இந்திய நர்சிங் கவுன்சில் சட்டம், 1947ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டவர்கள்
  • 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்
  • மூன்று வருடங்களுக்கும் மேலாக வெளிநாட்டில் தங்கியிருக்கும் நபர்கள் (ஒரே இடத்தில் இருக்கலாம் அல்லது பிரிந்திருக்கலாம்) மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணை
  • 18 வயது வரையிலான குழந்தைகள்

பாஸ்போர்ட்டில் இ.சி.என்.ஆர் க்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள எந்த நாட்டிற்கும் பயணம் செய்வதற்கு முன் நீங்கள் இ.சி.என்.ஆர்-க்கு விண்ணப்பிக்க வேண்டும் -

 

  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

  • ஜோர்டான்

  • சவுதி அரேபியா இராச்சியம்

  • கத்தார்

  • ஈராக்

  • இந்தோனேசியா

  • பஹ்ரைன்

  • மலேசியா

  • லெபனான்

  • சூடான்

  • ஏமன்

  • புருனே

  • ஆப்கானிஸ்தான்

  • குவைத்

  • சிரியா

  • லிபியா

  • தாய்லாந்து

  • ஓமன்

பாஸ்போர்ட்டில் இ.சி.என்.ஆர் க்கு எப்படி விண்ணப்பிப்பது?

இந்த எளிய படிகளில் நீங்கள் இ.சி.என்.ஆர்-க்கு விண்ணப்பிக்கலாம் -

  1. இதர விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி நிரப்பவும்.
  2. பிறகு, விண்ணப்பத்தை நீங்களோ அல்லது ஒரு பிரதிநிதி (நீங்கள் கையொப்பமிடப்பட்ட அதிகார கடிதத்தை எடுத்துச் செல்ல வேண்டும்) மூலமகவோ சமர்ப்பிக்கவும் அல்லது பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் அனுப்பலாம்.

இ.சி.என்.ஆர் பாஸ்போர்ட்டுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

 

இ.சி.என்.ஆர்-க்கு விண்ணப்பிக்க பல்வேறு வகையான விண்ணப்பதாரர்களுக்கு வெவ்வேறு ஆவணங்கள் தேவை.

உங்கள் குறிப்புக்கான இ.சி.என்.ஆர் பாஸ்போர்ட் ஆவணங்களின் முழுமையான பட்டியல் இங்கே.

 

பாஸ்போர்ட் வைத்திருப்பவர் வகை ஆவணங்கள்
உத்தியோகபூர்வ அல்லது டிப்ளோமெடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் டிப்ளோமெடிக் பாஸ்போர்ட் மட்டுமே தேவை
மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதிகள் உள்ளவர்கள் தேர்ச்சி சான்றிதழ்கள்
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ், பள்ளி விடுப்புச் சான்றிதழ், இணைப்பு A இல் கொடுக்கப்பட்டுள்ள மாதிரியின்படி பிறந்த தேதி மற்றும் இடம்
18 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், 18 வயது நிரம்பியவுடன் மீண்டும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் பள்ளி விடுப்புச் சான்றிதழ்
சி.டி.சி அல்லது தொடர்ச்சியான வெளியேற்ற சான்றிதழைக் கொண்ட கடற்தொழிலாளர்கள் மற்றும் கடல் பயிற்சியினர் தொடர் வெளியேற்ற சான்றிதழ்
நிரந்தர குடியேற்ற விசா உள்ளவர்கள் நிரந்தர குடியுரிமை அட்டை அல்லது குடியேற்ற விசாவின் நகல்

குறிப்பிட்ட வகை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான ஆவணங்களின் மற்றொரு பட்டியல் இங்கே -

அரசு ஊழியர்கள்

சுய துணை சார்ந்துள்ள குழந்தைகள்
இணைப்பு A இல் குறிப்பிடப்பட்டுள்ள அடையாளச் சான்றிதழ், இணைப்பு M இன் படி தடையில்லா சான்றிதழ், இணைப்பு N இன் படி பிஐ கடிதம். இணைப்பு B இல் குறிப்பிடப்பட்டுள்ள அடையாளம், இணைப்பு D இன் படி கூட்டு பிரமாணப் பத்திரம், சான்றொப்பமிடப்பட்ட திருமண சான்றிதழ் நகல் இணைப்பு B இன் படி அடையாளச் சான்றிதழ், பள்ளியை விட்டு வெளியேறியதற்கான பிறப்புச் சான்றிதழ், அரசு ஊழியரின் பாஸ்போர்ட்டின் நகல்

வருமான வரி செலுத்துவோர்

சுய துணை சார்ந்துள்ள குழந்தைகள்
முந்தைய ஆண்டில் உண்மையான வருமான வரி செலுத்தியது மற்றும் வருமான வரிக்கான மதிப்பீட்டு சான்று, ஐடி-IT ரிட்டன் அறிக்கை (கடந்த ஒரு வருடமாக இருந்தால்). இது ஐடி-IT அதிகாரிகளால் முத்திரையிடப்பட வேண்டும்) மற்றும் பான் கார்டு நகல் திருமணச் சான்றிதழ் நகல் (சான்றொப்பமிடப்பட்டது) பிறப்புச் சான்றிதழ், பள்ளி விடுப்புச் சான்றிதழ்

தொழில்முறை பட்டம் பெற்றவர்கள்

சுய துணை சார்ந்துள்ள குழந்தைகள்
தொழில்முறை பட்டத்திற்கான சான்றிதழ் திருமணச் சான்றிதழின் நகல் (சான்றொப்பமிடப்பட்டது), இணைப்பு D இன் படி கூட்டு பிரமாணப் பத்திரம் பிறப்புச் சான்றிதழ், பள்ளி விடுப்புச் சான்றிதழ்

மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் வெளிநாட்டில் இருந்தவர்கள்

சுய துணை
இ.சி.ஆர் / இ.சி.என்.ஆர் உள்ள பக்கம் உட்பட பாஸ்போர்ட் நகல் திருமணச் சான்றிதழ் நகல் (சான்றொப்பமிடப்பட்டது), இணைப்பு D இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி கூட்டுப் பிரமாணப் பத்திரம்

இ.சி.என்.ஆர் விண்ணப்பத்தை செயலாக்க எடுக்கும் நேரம்

பொதுவாக, இ.சி.என்.ஆர் ஸ்டாம்பிங் செயல்முறை விண்ணப்பித்த நாளிலிருந்து மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும்.

பாஸ்போர்ட்டில் இ.சி.என்.ஆர் (ECNR) நிலையை சரிபார்க்க தேவையான ஆவணங்கள்

உங்கள் இ.சி.என்.ஆர் நிலையைச் சரிபார்க்க, பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  • நிரப்பப்ட்ட EAP-2 படிவம்

  • டிமாண்ட் டிராஃப்ட் மூலமாகவோ அல்லது பணமாகவோ ₹ 300 கட்டணம்

  • அசல் பாஸ்போர்ட்

  • முகவரி ஆதாரம்

  • மேலே குறிப்பிட்டுள்ள தகுதி அளவுகோல்களில் ஏதேனும் ஒன்றை நிரூபிக்கும் இரண்டு பிரதிகள். அவை சான்றொப்பமிடப்பட்டிருக்க வேண்டும்.

  • உங்கள் பாஸ்போர்ட்டின் முதல் நான்கு மற்றும் கடைசி நான்கு பக்கங்களில் ஒவ்வொன்றும் இரண்டு பிரதிகள்

பாஸ்போர்ட்டில் இருந்து இ.சி.ஆர் முத்திரையை அகற்றுவதற்கான நடைமுறை என்ன?

நீங்கள் வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்பினால், முதலில் உங்கள் பாஸ்போர்ட்டில் இருந்து இ.சி.ஆர் முத்திரையை அகற்ற வேண்டும். அதை அகற்றுவதற்கான படிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. பாஸ்போர்ட் சேவா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து, இதர சேவையிலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்.
  2. பின்னர், எமிக்ரேஷன் சரிபார்ப்புக்குத் தேவைப்படும் நீக்கல் கோரிக்கையை குறிப்பிடவும்.
  3. அடுத்து, கல்லூரி, 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்களின் இரண்டு நகல்களை வழங்கவும். இந்த சான்றிதழ்கள் சான்றொப்பமிடப்பட்டிருக்க வேண்டும்.
  4. பின்னர், முகவரி ஆதாரத்தை வழங்கவும். இது உங்கள் வாக்காளர் ஐடி, மின்சாரக் கட்டணம், தொலைபேசி கட்டணம், குத்தகை ஒப்பந்தம் போன்றவையாக இருக்கலாம்.
  5. உங்கள் பான் கார்டை எடுத்துச் செல்லுங்கள்.
  6. ₹ 300 கட்டணம் செலுத்தவும்.
  7. உங்களுடைய தற்போதைய பாஸ்போர்ட்டையும், முதல் மற்றும் கடைசி நான்கு பக்கங்களின் இரண்டு நகல்களையும் சமர்ப்பிக்கவும்.
  8. இறுதியாக, அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்று, தேவையான ஆவணங்களுடன் உங்கள் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொள்வது உங்கள் பாஸ்போர்ட்டில் உள்ள இ.சி.என்.ஆர்-ஐ நன்கு புரிந்துகொள்ள உதவும்.

இ.சி.என்.ஆர் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பொழுது போக்கிற்காக வெளியூர் சென்றால் இ.சி.ஆர் முத்திரை பெற வேண்டுமா?

இல்லை, வேலைவாய்ப்பைத் தவிர வேறு நோக்கத்திற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், அக்டோபர் 1, 2007 முதல் இ.சி.ஆர் முத்திரையைப் பெறத் தேவையில்லை.

என்னால் ஒரு அவசர இ.சி.என்.ஆர் ஐப் பெற முடியுமா?

ஆம், விமான நிலையங்களில் குடிவரவு அதிகாரிகள் அவசர காலங்களில் விலக்கு அளிக்கலாம். கல்வித் தகுதிகளின் சான்றொப்பமிடப்பட்ட நகல் அல்லது நீங்கள் மிகச் சமீபத்தில் செலுத்திய வருமான வரி போன்ற ஆவணங்களை குடிவரவு அதிகாரியிடம் நீங்கள் வழங்க வேண்டும்.

 

பாஸ்போர்ட்டில் இ.சி.என்.ஆர் என்றால் என்ன?

பாஸ்போர்ட்டில் உள்ள இ.சி.என்.ஆர் என்பது உங்கள் பாஸ்போர்ட்டுக்கு குடியேற்றச் சோதனை தேவையில்லை என்பதைக் குறிக்கிறது.