இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கவும்
Instant Policy, No Medical Check-ups

இந்தியர்கள் துருக்கி செல்வதற்கான விசா

இந்தியர்கள் துருக்கி செல்வதற்கான டூரிஸ்ட் விசா பற்றிய அனைத்தும்

ஆயா சோபியா எங்கே உள்ளதென்று தெரியுமா?

மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் முழுமையாக, கம்பீரமாக காட்சியளிக்கும் கடைசி ரோமானிய நகரங்களில் ஒன்று எங்கே உள்ளதென்று உங்களுக்குத் தெரியுமா?

கபடோசியாவின் பிரமிக்க வைக்கும் மிதக்கும் பாறை பள்ளத்தாக்குகள் எங்கே உள்ளதென்று தெரியுமா?

பாமுக்கலே எங்கே உள்ளதென்று தெரியுமா?

நிச்சயமாக, உங்களுக்குத் தெரியும்! ஏனென்றால் நீங்கள் துருக்கிக்கு உங்கள் பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள், அங்கு இதுபோன்ற இன்னும் அழகான கண்ணை கொள்ளைக்கொள்ளும் இடங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. இப்போது, மகிழ்ச்சியில் வானில் வட்டமிடுவதை சில மணிநேரத்திற்கு நிறுத்தி, துருக்கிக்கான உங்கள் பயணத்தை சரியான முறையில் திட்டமிடுங்கள். துருக்கிக்கு செல்வதற்கு ஒரு முக்கிய பகுதி முதலில் உங்கள் விசா மற்றும் டிராவல் இன்சூரன்ஸை பெறுவது, அதனுடன் உங்களுக்கு வழிகாட்ட நாங்கள் இங்கே இருக்கிறோம்! 

துருக்கிக்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையா?

ஆம், துருக்கிக்குள் நுழைய இந்தியர்களுக்கு விசா தேவை.

இந்தியக் குடிமக்களுக்கு துருக்கியில் விசா ஆன் அரைவல் உள்ளதா?

ஆம், ஷெங்கன், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் இருந்து செல்லுபடியாகும் விசா அல்லது ரெசிடென்ட் பர்மிட்டை கொண்ட இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் துருக்கிய இ-விசாவுக்கு தகுதியுடையவர்கள், இது சில நிமிடங்களில் ஆன்லைனில் பெறப்படலாம். இதற்கு விதிக்கப்படும் ஃபீ 43 அமெரிக்க டாலர் (யூரோ 39.82).

இந்த நாடுகளின் செல்லுபடியாகும் விசாக்கள் அல்லது ரெசிடென்ட் பர்மிட்கள் இல்லாத இந்தியக் குடிமக்கள் சுமார் ரூ. 4,280 சிங்கிள் என்ட்ரி விசா ஃபீயுடன் துருக்கிய ஸ்டிக்கர் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் (விசா சர்வீஸ் புரொவைடரால் ரூ. 4,201 கூடுதல் சர்வீஸ் ஃபீ வசூலிக்கப்படுகிறது).

இந்தியக் குடிமக்களுக்கான துருக்கி விசா ஃபீ

துருக்கிக்கான விசா ஃபீ நீங்கள் விண்ணப்பிக்கும் விசா கேட்டகரியைப் பொறுத்தது. ஒரு இந்தியக் குடிமகனுக்கான சிங்கிள் என்ட்ரி துருக்கி விசா ஃபீ 51.70 அமெரிக்க டாலர் (யூரோ 47.90) மற்றும் ஒரு இந்தியக் குடிமகனுக்கான மல்டி-என்ட்ரி டூரிஸ்ட் விசாக்கள் சுமார் 174.77 அமெரிக்க டாலர் (யூரோ 161.92) ஆகும்.

விசா சர்வீஸ் புரொவைடரால் 52.48 அமெரிக்க டாலர் (யூரோ 48.62) கூடுதல் சர்வீஸ் ஃபீ வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து துருக்கி செல்வதற்கான டூரிஸ்ட் விசாவுக்கு தேவையான ஆவணங்கள்

துருக்கிக்கு டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு பின்வரும் ஆவணங்கள் தேவை:

  • செல்லுபடியாகும் பாஸ்போர்ட். உங்கள் பாஸ்போர்ட் துருக்கிக்குள் பிரவேசித்த தேதியிலிருந்து குறைந்தது 6 மாதங்களுக்கு செல்லுபடியாக வேண்டும்.

  • துருக்கியில் நீங்கள் தங்கியிருக்கும் முழு காலத்திற்கும் கன்ஃபர்மேஷன் ஹோட்டல் புக்கிங்ஸ், ஃப்ளைட் புக்கிங்ஸ் மற்றும் பயண திட்டத்திற்கான சான்று

  • பூர்த்தி செய்யப்பட்ட உங்கள் விசா அப்ளிக்கேஷன் ஃபார்மின் பிரதி

  • துருக்கிக்கு மற்றும் அங்கிருந்து உங்கள் கன்ஃபர்மேஷன் செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் நகல்

  • நீங்கள் துருக்கியில் தங்கியிருக்கும் போது மற்றும் உங்கள் ரிட்டர்ன் கன்வேயன்ஸ்க்காக உங்களை நிதி ரீதியாக சப்போர்ட் செய்வதற்கான உங்கள் நிதி நிலைக்கான சான்று. துருக்கியில் தங்குவதற்கு பார்வையாளர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 50 அமெரிக்க டாலர் (46.31 யூரோ) வைத்திருக்க வேண்டும்.

  • கடந்த 6 மாதங்களுக்கான உங்கள் பேங்க்கிலிருந்து உங்கள் நிதி நிலைமையின் அறிக்கை

  • போலீஸ் க்ளியரன்ஸ் செர்டிஃபிகேட் அல்லது பி.பி.சி வைத்திருப்பதற்கான ஆதாரத்தை நீங்கள் காண்பிக்க வேண்டும். நீங்கள் யுனைடெட் கிங்டம், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா அல்லது வேறு எந்த ஷெங்கன் நாட்டிற்கும் பயணம் செய்திருந்தால், பி.பி.சி தேவையில்லை.

இந்தியாவில் இருந்து துருக்கி டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

உங்கள் தேவைகளின் அடிப்படையில், நீங்கள் துருக்கி இ-விசாவைத் தேர்வு செய்யலாம் அல்லது துருக்கிய தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் மூலம் நேரடி விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

இ-விசா

அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலம் துருக்கிய இ-விசாவுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம், இது ஒரு நேரடி நடைமுறை. நீங்கள் இந்த விசாவை வெறும் 3 நிமிடங்களில் பெறலாம்!

விசாவுக்கு விண்ணப்பிக்கவும், விசா ஃபீயை செலுத்தவும் மற்றும் உங்கள் துருக்கி இ-விசாவை டவுன்லோட் செய்யவும். ஆம், உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு உங்கள் இ-விசாவை பிரிண்ட் அவுட் எடுக்க மறக்காதீர்கள். 

நேரடி விண்ணப்பம்

கேட்வே குளோப் மூலம் நீங்கள் நேரடியாக விசாவுக்கு விண்ணப்பிக்கலாம், அவர்கள் ஸ்டிக்கர் விசா அப்ளிக்கேஷன்களைப் பெற துருக்கிய தூதரகத்தால் அங்கீகரிக்கப்படுகிறார்கள். கீழே உள்ள செயல்முறையை சரிபார்க்கவும்:

  • அப்ளிக்கேஷன் ஃபார்மை நிரப்பவும்

  • தேவையான ஆவணங்களை புகைப்படத்துடன் சேகரிக்கவும்

  • ஒரு அப்பாயின்மெண்ட்டை திட்டமிடுங்கள்

  • விசா ஃபீயை செலுத்தவும்

  • உங்கள் அப்ளிக்கேஷன் ஃபார்மை சமர்ப்பிக்கவும்

  • உங்கள் விசாவை கலெக்ட் செய்யவும்

துருக்கி டூரிஸ்ட் விசா ப்ராசஸிங் டைம்

துருக்கி இ-விசாவுக்கு 3 நிமிடங்கள் மற்றும் ஸ்டிக்கர் விசாவுக்கான ஆவணங்களை சமர்ப்பித்த தேதியிலிருந்து குறைந்தபட்சம் 15 வேலை நாட்கள் மட்டுமே.

துருக்கி விசாவைப் பெறுவது மற்றும் துருக்கி டிராவல் இன்சூரன்ஸின் முக்கியத்துவம் பற்றி இப்போது உங்களுக்கு அனைத்தும் தெரியும், துருக்கிக்குச் சென்று ஒரு அழகான பயணத்தை மேற்கொள்ளுங்கள்! 

நான் துருக்கி செல்ல டிராவல் இன்சூரன்ஸை வாங்க வேண்டுமா?

ஆம், துருக்கிய விசா தேவையின்படி, துருக்கிக்கு பயணிக்கும் எவரும் ஒரு டிராவல் இன்சூரன்ஸை வைத்திருப்பது கட்டாயமாகும், இது குறைந்தபட்சம் €30,000 கவரேஜை வழங்குகிறது, அதாவது சுமார் $33,000. மேன்டெட்டை தவிர, டிராவல் இன்சூரன்ஸின் மூலம் உங்கள் பயணத்தைப் பாதுகாப்பது உங்கள் பயணத்தின் போது ஏற்படக்கூடிய சிறிய முதல் பெரிய விபத்துகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.

கற்பனை செய்து பாருங்கள், எதுவும் தவறாக நடக்கலாம், எதிர்பாராத நோய், லக்கேஜ்கள் தவறவிடப்படலாம் அல்லது தவறவிட்ட கனெக்ட்டிங் ஃப்ளைட் அல்லது ஃப்ளைட் டிலே போன்ற எளிமையான ஒன்று கூட இருக்கலாம்! நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அல்லது பிற கடுமையான அவசரநிலைகளை எதிர்கொள்ளும்போது மருத்துவ அவசரநிலைகள் ஏற்படும்போது, டிராவல் இன்சூரன்ஸை வைத்திருப்பது உங்களுக்கு நிதி வசதியை அளிக்கிறது, இது முழு அனுபவத்தையும் மிகவும் அதிர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.

நீங்கள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் அறியப்படாத நாட்டில் இருப்பதால் நீங்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியதாக உணரும்போது எதிர்பாராத மருத்துவ செலவுகள் மற்றும் பிற பயணம் தொடர்பான அவசரநிலைகளின் அபாயத்திலிருந்து டிராவல் இன்சூரன்ஸ் உங்களைப் பாதுகாக்கிறது.

துருக்கி டிராவல் இன்சூரன்ஸ் ஆனது பின்வரும் சூழ்நிலைகளில் உங்களை கவர் செய்கிறது:

  • மருத்துவ அவசரநிலைகள் (நோய்கள், விபத்துகள், முதலியன)

  • பயண ரத்து

  • ஃப்ளைட் தாமதங்கள், தவறவிட்ட கனெக்ட்டிங் ஃப்ளைட் மற்றும் ரத்து செய்யப்பட்ட ஃப்ளைட்கள்

  • பாஸ்போர்ட் அல்லது லக்கேஜ் இழப்பு

  • செக்-இன் லக்கேஜ் தாமதம்

  • திருட்டு / பண இழப்பு

 

இதைப் பற்றி மேலும் அறிய:

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான துருக்கி டூரிஸ்ட் விசா பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

துருக்கி, இந்தியக் குடிமக்கள் நுழையும் போது விசா வழங்குகிறதா?

ஆம். இந்தியக் குடிமகன் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், அயர்லாந்து அல்லது எந்தவொரு ஷெங்கன் நாட்டிலிருந்தும் துருக்கிக்குள் நுழைந்தால், அவர்கள் விசா ஆன் அரைவலுக்கு தகுதி பெறுவார்கள். இந்தியாவிலிருந்து பயணம் செய்யும் போது, விசா ஆன் அரைவல் என்ற கருத்து எழவில்லை.

துருக்கி செல்வதற்கு டிராவல் இன்சூரன்ஸ் தேவையா?

துருக்கி அதிகாரிகள் உங்களிடம் ஒரு டிராவல் இன்சூரன்ஸ் பாலிசி இருக்க வேண்டும் என்ற விதிகளைக் கொண்டுள்ளனர். வழக்கமாக, இன்சூரன்ஸ் கவர் குறைந்தபட்சம் 32,381.10 அமெரிக்க டாலர் (30,000 யூரோ) இருக்க வேண்டும்.

நான் துருக்கியில் தங்கியிருக்கும் போது எனது பாஸ்போர்ட் திருடப்பட்டால் என்ன செய்வது?

உடனடியாக உள்ளூர் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட்டின் (முதல் தகவல் அறிக்கை) நகலை எடுத்து தற்காலிக ஆவணங்களைப் பெற வேண்டும்.

நான் விசா அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் போது எனது பேங்க் ஸ்டேட்மென்ட்களை சமர்ப்பிக்க வேண்டுமா?

ஆம். நீங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, பயணத்திற்கு சற்று முன்னர் இருந்த 6 மாதங்களின் உங்கள் பேங்க் ஸ்டேட்மென்ட்களின் பிரதிகளை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

நான் போலீஸ் பெர்மிஷன் செர்டிபிகேட்டை (பி.பி.சி) சமர்ப்பிக்க வேண்டுமா?

ஆம், நீங்கள் இந்தியாவில் இருந்து பயணம் செய்கிறீர்கள் என்றால் தொடர்புடைய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் எந்தவொரு ஷெங்கன் நாட்டிலிருந்தும் பயணிக்கிறீர்கள் என்றால், இந்த சான்றிதழ் தேவையில்லை.