டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

இந்தியாவில் பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க எப்படி விண்ணப்பிப்பது?

Source: isu.pub

பாஸ்போர்ட் என்பது வெளிநாட்டுப் பயணத்தின் போது நீங்கள் கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு ஆவணமாகும். பொதுவாக, இந்த ஆவணங்கள் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும், அதன் பிறகு உங்கள் பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க விண்ணப்பிக்க வேண்டும். 

இந்திய பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்கும் போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் பின்வரும் கட்டுரை விவரிக்கிறது. பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் தெரிந்துகொள்ளவும் இது உதவும்.

பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவது என்றால் என்ன?

பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவது என்பது பாஸ்போர்ட் வைத்திருப்பவருக்கு, புதிய பாஸ்போர்ட் கையேடு தேவைப்படுவதைக் குறிக்கிறது. பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவதும், புதுப்பித்தலும் ஒன்றல்ல என்பதை நினைவில் கொள்ளவும். இரண்டிற்கும் இடையேயான முக்கிய வேறுபாடு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு சூழ்நிலைகளில் பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவது அவசியமாக இருக்கலாம், அதையும் இக்கட்டுரையில் பின்னர் விவரித்துள்ளோம்.

பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவது மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டினை முதலில் புரிந்துகொள்வோம்.

பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவது எப்போது அவசியமாகிறது?

இந்த இரண்டு முறைகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளது என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டீர்கள், உங்கள் தற்போதைய ஆவணத்தை எப்போதெல்லாம் மீண்டும் வழங்குவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற சூழ்நிலைகளை இப்போது காணலாம் -

  • உங்கள் பாஸ்போர்ட் அடுத்த 3 ஆண்டுகளில் காலாவதியாக உள்ளது அல்லது ஏற்கனவே காலாவதியாகிவிட்டது.

  • உங்கள் தற்போதைய பாஸ்போர்ட் கணிசமான அளவு சேதமாகியுள்ளது அல்லது  சிதைந்துள்ளது.

  • உங்கள் பாஸ்போர்ட் புத்தகத்தில் உள்ள அனைத்து பக்கங்களும் தீர்ந்துவிட்டன.

  • பிறந்த தேதி, பெயர், குடியிருப்பு முகவரி மற்றும் பிற விவரங்களில் மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும்.

  • உங்கள் பாஸ்போர்ட்டை நீங்கள் தவற விட்டிருந்தால், மீண்டும் வழங்குவது அவசியம். இதுபோன்ற சமயங்களில் மீண்டும் வழங்க விண்ணப்பத்துடன் எஃப்.ஐ.ஆர்(FIR) நகலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

  • உங்களிடம் உள்ள பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியாகி இருந்தால், அதையும் மீண்டும் வழங்க விண்ணப்பிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள சூழ்நிலைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எதிர்கொண்டால், பாஸ்போர்ட் மீண்டும் வழங்குதல் செயல்முறையை புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

பாஸ்போர்ட்டை எவ்வாறு மீண்டும் வழங்கச் செய்வது என்று நீங்கள் யோசித்தால், அதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு முறையிலும் செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த இரண்டு முறைகளிலும் விண்ணப்பிக்க தேவையான விரிவான படிகளை இங்கே காணலாம்.

ஆன்லைனில் பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைனில் பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்கச் செய்வது பின்வரும் படிகளை உள்ளடக்கியது - 

  • படி 1: பாஸ்போர்ட் சேவா தளத்திற்குச் சென்று, உங்களிடம் ஏற்கனவே கணக்கு இல்லையென்றால் நீங்களே பதிவு செய்யுங்கள்.

  • படி 2: பதிவுசெய்ததும், உள்நுழைந்து, 'புதிய பாஸ்போர்ட்/பாஸ்போர்ட் மீண்டும் வழங்க விண்ணப்பிக்கவும்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  • படி 3: அடுத்து, அனைத்து தனிப்பட்ட விவரங்களுடன் ஆன்லைன் படிவத்தை நிரப்பி, 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்.

  • படி 4: இப்போது, தேவையான அனைத்து விண்ணப்பக் கட்டணங்களையும் செலுத்த, 'பணம் செலுத்தி, அப்பாயிண்ட்மெண்ட்டை திட்டமிடுக' என்ற பட்டனை அழுத்தவும். அப்பாயிண்ட்மெண்ட்டைத் திட்டமிடுவதற்கு முன், நீங்கள் ஆன்லைனில் மட்டுமே பணம் செலுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இதற்குப் பிறகு, இந்த செயல்முறையை முடிக்க பாஸ்போர்ட் மீண்டும் வழங்க தேவைப்படும் அனைத்து ஆவணங்களுடன் பாஸ்போர்ட் சேவா கேந்திராவிற்குச் செல்லவும்.

பாஸ்போர்ட்டை ஆஃப்லைனில் மீண்டும் வழங்க எப்படி விண்ணப்பிப்பது?

ஆஃப்லைன் நடைமுறையை பயன்படுத்தி பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்கச்செய்ய  விரும்பினால் கூட, பாஸ்போர்ட் சேவா இணையதளத்தை ஒருமுறை பார்வையிட வேண்டும். 

அதன் பின் தொடர வேண்டிய படிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன - 

  • படி 1: இ-படிவத்தைப் பதிவிறக்க, 'படிவங்கள் மற்றும் உறுதிமொழிகள்' பகுதிக்குச் சென்று, "பாஸ்போர்ட் மீண்டும் வழங்குவது" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  • படி 2: இந்த போர்ட்டலில் இருந்து போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழையும் (பிசிசி-PCC) பதிவிறக்கவும். இ-படிவத்துடன் இந்த பிசிசி(PCC)யின் பிரிண்ட்அவுட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

  • படி 3: படிவத்தை பூர்த்தி செய்து, பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து, உங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.

இந்த மீண்டும் வழங்குவதற்கான விண்ணப்ப செயல்முறையை முடிக்க, ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்.

பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

பாஸ்போர்ட் மீண்டும் வழங்கல் படிவத்துடன், பாஸ்போர்ட் மீண்டும் வழங்கல் செயல்முறையைத் தொடங்க பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் - 

  • வயது சான்று

  • குடியிருப்பு முகவரி ஆதாரம்

  • அடையாளச் சான்று

  • விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

  • உங்களுடைய தற்போதைய பாஸ்போர்ட் புத்தகத்தின் முதல் மற்றும் கடைசி பக்கங்களின் அட்டெட்ஸ்டட் நகல்

  • பாஸ்போர்ட் அசலின் கையேடு

  • அப்பாயிண்ட்மெண்ட் விண்ணப்ப ரசீது அல்லது ஆன்லைன் விண்ணப்பப் பக்கத்தின் இறுதிப் பக்கம். இந்தப் பக்கம் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கும், அப்பாயிண்ட்மெண்ட் அட்டவணையின் சான்றாகவும் கருதப்படுகிறது.

பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவதற்கு போலீஸ் சரிபார்ப்பு தேவையா?

வெற்றிகரமான பாஸ்போர்ட் மீண்டும் வழங்கல் விண்ணப்பத்திற்குப் பிறகு, நீங்கள் போலீஸ் சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்பட வேண்டியிருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆயினும், இது பெரும்பாலும் உங்கள் பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவதற்கான  சூழ்நிலைகளைப் பொறுத்தது.

உதாரணமாக, பெயர் அல்லது குடியிருப்பு முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களை மாற்ற மீண்டும் வழங்கலுக்கு விண்ணப்பித்தால், பாஸ்போர்ட் அலுவலகம் இதனை சரிபார்க்க வேண்டியிருக்கும். வழங்கப்பட்ட அனைத்து புதிய விவரங்களும் துல்லியமாகா உள்ளாதா என்பதைச் சரிபார்க்க இது செய்யப்படுகிறது.

எவ்வாறாயினும், காலாவதியான பிறகு அல்லது கையேடு தீர்ந்த பிறகு நீங்கள் விண்ணப்பித்தால், பாஸ்போர்ட் மீண்டும் வழங்குவதற்கான போலீஸ் சரிபார்ப்பு முன்கூட்டியே நடைபெறுவதற்கு உத்தரவாதமளிக்கப்படாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அதிகாரிகள் மீண்டும் வழங்கப்பட்ட ஆவணத்தைப் பெற்ற பிறகு ஒரு ஆய்வு செய்ய காவல்துறை சரிபார்ப்புக்கு பின்னர் உத்தரவிடலாம்.

நீங்கள் செலுத்த வேண்டிய பாஸ்போர்ட் மீண்டும் வழங்கல் கட்டணம் எவ்வளவு?

 

இந்தியாவில் பாஸ்போர்ட் மீண்டும் வழங்கல் கட்டணம் பற்றி பின்வரும் அட்டவணை உங்களுக்கு தகவல் அளிக்கிறது.

 

வகை சாதாரண கட்டணம் தட்கல் கட்டணம்
மீண்டும் வழங்கப்படும் 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் ₹1500 ₹2000
மீண்டும் வழங்கப்படும் 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் ₹2000 ₹2000
மீண்டும் வழங்கப்படும் 36 பக்கங்கள் கொண்ட சிறார்களுக்கான பாஸ்போர்ட் ₹1000 ₹2000
முந்தைய பாஸ்போர்ட் சேதமடைந்தாலோ, தவற விடப்பட்டிருந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ, மீண்டும் வழங்கப்படும் 36 பக்கங்களைக் கொண்ட பாஸ்போர்ட் ₹3000 ₹2000
முந்தைய பாஸ்போர்ட் சேதமடைந்தாலோ, தவற விடப்பட்டிருந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ, மீண்டும் வழங்கப்படும் 60 பக்கங்களைக் கொண்ட பாஸ்போர்ட் ₹3500 ₹2000

பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க எத்தனை நாட்கள் ஆகும்?

வழக்கமான நடைமுறையில், முழு செயல்முறையும் தொடக்கத்திலிருந்து முடிவதற்கு 15 நாட்கள் வரை ஆகலாம். இருப்பினும், தட்கல் பயன்முறையில் விண்ணப்பிக்கும் போது, இந்த செயல்முறையை 7-10 நாட்களுக்குள் முடிக்கலாம். துல்லியமான பாஸ்போர்ட் மீண்டும் வழங்கல் நேரம், முந்தைய அல்லது பிந்தைய காவல்துறை சரிபார்ப்பு போன்ற பல காரணிகளால் மாறுபடும்.

பாஸ்போர்ட் மீண்டும் வழங்கல் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?

பின்வரும் முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி உங்கள் பாஸ்போர்ட் மீண்டும் வழங்கல் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் சரிபார்க்கலாம் -

 

பாஸ்போர்ட் சேவா இணையதளம் மூலம் பார்க்காலாம்

  • படி 1: பாஸ்போர்ட் சேவா இணையதளத்தைப் பார்வையிடவும்.

  • படி 2: ‘விண்ணப்ப நிலையை அறியவும்’ பாரில் கிளிக் செய்யவும்.

  • படி 3: பின்வரும் பக்கத்தில், விண்ணப்பத்தின் வகையைத் தேர்ந்தெடுத்து, பிறந்த தேதி மற்றும் கோப்பு எண்ணை உள்ளிடவும்.

  • படி 4: உங்கள் விண்ணப்பம் எவ்வளவு தூரம் செயலாக்கப்பட்டது என்பதைப் பார்க்க, 'நிலையை அறியவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.

mPassport சேவா செயலி மூலம் பார்க்கலாம்

உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ்(iOS) ஃபோனில் பதிவிறக்கிய பிறகு mPassport சேவா செயலியில் பதிவு செய்யவும். நிலையை அணுக, உங்கள் பிறந்த தேதி மற்றும் விண்ணப்பக் கோப்பு எண்ணை உள்ளிட வேண்டும்.

கூடுதலாக, ஆஃப்லைனில் மீண்டும் வழங்கல் நிலையைப் பற்றிய தகவலைப் பெறவும் முடியும். இதைச் செய்வதற்கான சில வழிகள் இங்கே உள்ளன - 

  • எஸ்.எம்.எஸ் மூலம் அறியவும் - உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9704100100 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்(SMS) அனுப்பவும். எஸ்.எம்.எஸ்(SMS) இல் ‘STATUS FILE NUMBER’ என்று டைப் செய்யவும்.

  • தேசிய அழைப்பு மையம் - தன்னியக்க ஐ.வி.ஆர்(IVR)இல் நிலையை அறிய 18002581800 என்ற எண்ணிற்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அழைக்கவும்.

பாஸ்போர்ட்டை புதுப்பித்தல் மற்றும் மீண்டும் வழங்கல் எவ்வாறு வேறுபடுகிறது?

 

 

பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவது மற்றும் புதுப்பித்தல் குறித்து இந்தியர்கள் மத்தியில் பரவலான குழப்பம் நிலவுகிறது. பெரும்பாலும், இந்த இரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அவற்றின் செயல்பாட்டில் இரண்டுமே வேறுபட்டவை.

அதை அறியலாம் -

 

பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவது பாஸ்போர்ட்டை புதுப்பித்தல்
பொதுவாக இந்திய பாஸ்போர்ட்டுகள் காலாவதியான பிறகு மீண்டும் வழங்குவது அவசியம். இந்த காலாவதியானது, அதன் முதல் வெளியீட்டிலிருந்து 10 ஆண்டுகளில் நடைபெறுகிறது குறுகிய கால பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு புதுப்பித்தல் அவசியம். பொதுவாக, இந்த சிறப்பு பாஸ்போர்ட்டுகள் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும், அதன் பிறகு ஒருவர் 10 ஆண்டுகள் வரை நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மீண்டும் பாஸ்போர்ட் வழங்கப்பட்ட பிறகு புதிய கையேட்டைப் பெறுவார்கள். புதுப்பித்தலின் பொது நாட்டின் குடிமகன் தற்போது வைத்திருக்கும் பாஸ்போர்ட் கையேட்டை மாற்ற வேண்டியிருக்காது.

உங்கள் பாஸ்போர்ட்டை எவ்வாறு மீண்டும் வழங்குவது என்பது இப்போது உங்களுக்குத் தெரியும் என்பதால், விண்ணப்பங்களைத் தாமதப்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். செயல்முறையைப் பற்றிய தெளிவான அறிவுடன், பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்கும் செயல்முறை மூலம் பெறுவது உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தாது!!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மீண்டும் வழங்கப்பட்ட பிறகு பாஸ்போர்ட் எண் மாறுமா?

பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குதல் - உங்களின் முந்தைய பாஸ்போர்ட் எண்ணை மாற்றாது. செல்லுபடியாகும் காலம் மட்டுமே நீட்டிக்கப்படும்.

மீண்டும் வழங்கப்பட்ட பிறகு உங்கள் பழைய பாஸ்போர்ட் கையேடு என்னவாகும்?

உங்கள் பழைய கையேடு உங்களிடம் இருந்தால், மீண்டும் வழங்கப்படும் போது அதைச் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் முந்தைய பாஸ்போர்ட் தொலைந்திருந்தால், உங்கள் புதிய கையேட்டின் வெளியீட்டிற்குப் பிறகு அது ரத்து செய்யப்பட்டதாகவோ அல்லது செல்லாததாகவோ கருதப்படும்.

பாஸ்போர்ட் மீண்டும் வழங்கலுக்கான விண்ணப்பக் கட்டணம் என்ன?

பாஸ்போர்ட் மீண்டும் வழங்குவதற்கான விண்ணப்பக் கட்டணம் 36 பக்கங்களுக்கு ₹ 1500 மற்றும் 60 பக்கங்களுக்கு ₹ 2000.