டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

இந்தியாவில் மாணவர் பாஸ்போர்டிற்கு எப்படி விண்ணப்பிப்பது?

(Source: path2usa)

நீங்கள் வெளிநாட்டில் படிக்க விரும்பும்  மாணவரா?

ஆம் எனில், வெளிநாடு செல்வதற்கான நிதித் திட்டமிடலைத் தவிர்த்து உங்களின் பயணத் தேவைகளையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். இதில் மாணவர் பாஸ்போர்ட் மற்றும் விசாவை நீங்கள் தயாராக வைத்திருப்பதும் அடங்கும்.

உங்களிடம் அவை தயாராக இல்லையென்றால், அவற்றைத் தயார் செய்ய மாணவர் பாஸ்போர்ட் விண்ணப்ப முறை, ஆவணங்கள் மற்றும் தகுதி போன்ற பல விவரங்களைப் பற்றி அறிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

இந்தியாவில் மாணவர் பாஸ்போர்ட் பெறுவதற்கான படிகள்

  • படி 1: அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா வலைத்தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கவும்.

  • படி 2: அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு அப்பாயிண்டமெண்ட் பெறவும்  மற்றும் தேவையான ஆவணங்களை தயார்  செய்யவும்.

  • படி 3: ஒதுக்கப்பட்ட தேதியில் பாஸ்போர்ட் அதிகாரியைப் சந்திக்கவும் மற்றும் சரிபார்ப்பு நடைமுறையின் போது சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களை வழங்கவும்.

  • படி 4: ஒப்புகை ரசீதைப் பெற்று, சமீபத்திய அறிவிப்புகளுக்கு விண்ணப்ப நிலையைச் சரிபார்க்கவும்.

மாணவர் பாஸ்போர்டிற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

மாணவர்கள் தங்கள் தேவையைப் பொறுத்து, சாதாரண அல்லது தட்கல் பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்கலாம். 

அதற்குத் தேவையான ஆவணங்கள் -

 

1. முகவரி சான்று (தற்போதைய குடியிருப்பு)

  • ஆதார் அட்டை

  • சமீபத்திய தொலைபேசி  ரசீது 

  • மைனர்களை பொறுத்தவரை, பெற்றோரின் பாஸ்போர்ட் நகல் (முதல் மற்றும் கடைசி பக்கம்)

  • ஒரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட சான்றிதழ்

  • வாக்காளர் அடையாள அட்டை

  • வருமான வரி மதிப்பீட்டு ஆர்டர்

  • மின்சாரம் அல்லது தண்ணீர் போன்ற சமீபத்திய பயன்பாட்டு ரசீது

  • செயலில் உள்ள வங்கிக் கணக்கின் பாஸ்புக்கின் நகல் 

  • வாடகை ஒப்பந்தம்

2. பிறந்த தேதிக்கான சான்று

  • பிறப்பு சான்றிதழ்

  • மாணவர்களுக்கான பாஸ்போர்டிற்கு மேல்நிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ்கள் அவசியம். அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது கல்வி நிறுவனம் இந்த சான்றிதழை வழங்கியிருக்க வேண்டும்.

  • அவர்/அவள் படிக்கும் கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட விண்ணப்பதாரரின் அடையாள அட்டையின் நகல்.

  • ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியால் வழங்கப்பட்ட போனஃபைட் சான்றிதழ்.

அசல் ஆவணங்கள் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் சரியான காரணங்களுடன் சான்றிதழ் அல்லது கடிதத்தை சமர்ப்பிக்கலாம். கூடுதலாக, மாணவர்களுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பங்களுடன், மாணவர் படிக்கும் கல்வி நிறுவனத்தின் தலைவரால் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்கலாம்.

மாணவர் பாஸ்போர்டிற்கு தேவையான கட்டணம் எவ்வளவு?

இந்த பாஸ்போர்ட்டை பெற தனிநபர்கள் ₹1500 செலுத்த வேண்டும். அவர்கள் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா வலைத்தளத்தில் ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்துவது மாணவர்களின் பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்காக அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் அப்பாயிண்ட்மெண்ட் பெற உதவும்.

இதற்கான சில கட்டண முறைகளை காணலாம் -

  • டெபிட் கார்டு

  • இன்டெர்நெட் பேங்கிங்

  • கிரெடிட் கார்டு

  • எஸ்.பி.ஐ வங்கி சலான்

கூடுதலாக, ஆன்லைனில் சலான் உருவாக்கி, அருகிலுள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளைக்குச் சென்று பணம் செலுத்தலாம்.

மாணவர் பாஸ்போர்டிற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தியாவில் மாணவர் பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்க பின்வரும் தகுதி விதிமுறைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் -

  • 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக கருதப்படுவார்கள். தேவையான ஆவணங்களை அவர்கள் சுயமாக சான்றொப்பமிட வேண்டும்.

  • மைனர் விண்ணப்பதாரரின் விஷயத்தில் பெற்றோர்கள் ஆவணங்களை சான்றளிக்கலாம்.

  • மைனர்கள் அவர்/அவள் 18 வயதுக்குட்பட்டு உள்ளவரை ஈ.சி.ஆர் அல்லாத பாஸ்போர்டிற்கு தகுதியுடையவர்கள்.

  • மாணவர்கள் தங்கள் பெற்றோரின் பெயரில் தற்போதைய முகவரிச் சான்றை  சமர்ப்பிக்கலாம்.

மைனர் விண்ணப்பதாரருக்கு, பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்பதை நினைவில் கொள்ளவும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சரிபார்ப்புக்காக அதிகாரப்பூர்வ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மாணவருக்கான பாஸ்போர்டிற்கு தேவையான ஆவணங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்.

மாணவர் பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கு எடுக்கும் நேரம்

பாஸ்போர்ட் வழங்குவதற்கான முழு செயல்முறையும் 25 முதல் 30 நாட்கள் ஆகலாம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். எனவே முன்கூட்டியே விண்ணப்பிப்பது  அவசியம்.

இந்த பாஸ்போர்ட் வெளியிடப்பட்ட நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இருப்பினும், தற்போதைய பாஸ்போர்ட் காலாவதியாகும் ஒரு வருடத்திற்கு முன்பு உங்களால் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியாது.

நீங்கள் ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் உயர் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தால், மாணவர் பாஸ்போர்ட் தேவைகளை அறிந்து கொள்வது அவசியம். இது முழு செயல்முறையையும் ஒழுங்கமைக்க உதவும்.

மேலும், நீங்கள் விரைவில் பாஸ்போர்ட்டைப் பெற முடியும்.

இந்தியாவில் மாணவர் பாஸ்போர்ட் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மாணவர் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக எனது 12வது மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டுமா?

ஆம், கல்லூரி மாணவர் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்குத் தேவையான ஆவணங்களின் கீழ் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர் பாஸ்போர்ட்டை ஒருவர் எவ்வளவு விரைவாகப் பெற முடியும்?

பொதுவாக மாணவர் பாஸ்போர்ட் செயல்முறை 25 முதல் 30 நாட்கள் ஆகும். இருப்பினும், இறுதி முடிவு பாஸ்போர்ட் அதிகாரியைப் பொறுத்தது.

மைனர் விண்ணப்பதாரருக்கான ஆவணங்களை யார் சான்றளிக்க முடியும்?

மைனர் விண்ணப்பதாரர்களுக்கான ஆவணங்களை பெற்றோர்கள் சான்றளிக்கலாம்.