டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

பாஸ்போர்ட் சேவா கேந்திரா (பி.எஸ்.கே-PSK) என்றால் என்ன?

பாஸ்போர்ட் சேவா கேந்திரா என்பது இந்தியாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களின் விரிவாக்கப்பட்ட கிளை ஆகும். அடுக்கு 1 மற்றும் 2 நகரங்களில் பாஸ்போர்ட் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளை வழங்குவதற்கு இந்த அலுவலகங்கள் பொறுப்பாகும். கூடுதலாக, அவர்கள் ஆன்லைன் சேவைகளை வழங்குகிறார்கள், இதன் மூலம் ஏஜென்ட்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்படுகிறது. இது பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பாதுகாப்பானதாகவும், வெளிப்படையாகவும்,விரைவாகவும் ஆக்குகிறது.

இப்போது பாஸ்போர்ட் சேவா கேந்திரா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும், மற்ற முக்கிய விவரங்களை இப்போது அறிந்து கொள்வோம்.

பாஸ்போர்ட்டிற்கான பி.எஸ்.கே இன் பணிகள் மற்றும் பொறுப்புகள்

பாஸ்போர்ட் சேவை மையங்கள் பின்வரும் பணிகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றும் பொறுப்பைக் கொண்டுள்ளன:

  • பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வது மற்றும் சரிபார்த்தல்

  • தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குதல் அல்லது மீண்டும் வழங்குதல்

  • போலீஸ் சரிபார்ப்பு

  • பாஸ்போர்ட்டுகளை அச்சிடுதல் மற்றும் இறுதியாக டெலிவரி செய்தல்

பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் விண்ணப்ப செயல்முறை என்ன?

பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் பாஸ்போர்ட்டுக்கு ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்க எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:

பாஸ்போர்ட் சேவா கேந்திரா ஆன்லைன் விண்ணப்பம்

  • படி 1: பாஸ்போர்ட் சேவாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். நீங்கள் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினராக இல்லாவிட்டால், முதலில் போர்ட்டலில் உங்கள் விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்யுங்கள்.

  • படி 2: உங்கள் பயனர் பெயர் மற்றும் ஐடியை உருவாக்கியதும், அந்த உள்நுழைவுவிவரங்கள் மூலம் உள்நுழையவும்.

  • படி 3: "புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கவும் அல்லது பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்கவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பெயர், தொடர்பு விவரங்கள் போன்ற தொடர்புடைய தகவல்களை படிவத்தில் நிரப்பவும்.

  • படி 4: "சேமித்த அல்லது சமர்ப்பித்த விண்ணப்பத்தைப் பார்க்கவும்" என்பதன் கீழ் இருக்கும் "பணம் செலுத்துதல் மற்றும் அப்பாயின்ட்மெண்ட்டை திட்டமிடவுன்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  • படி 5: பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் அப்பாயின்ட்மெண்ட்டை புக் செய்ய ஆன்லைனில் பணம் செலுத்துவது கட்டாயமாகும். பின்வரும் கட்டண விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யவும்:

    • இன்டர்நெட் பேங்கிங் (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற வங்கிகள்).

    • கிரெடிட் அல்லது டெபிட் கார்டு (விசா அல்லது மாஸ்டர்கார்டு).

    • எஸ்.பி.ஐ (SBI) வங்கியின் சலான்.

  • படி 6: பிரிண்ட் அவுட் எடுக்க "விண்ணப்ப ரசீதை அச்சிடு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்ணப்ப ரசீதை எடுத்துச் செல்வது இனி கட்டாயமில்லை. உங்களின் அப்பாயிண்ட்மெண்ட் குறிப்பு எண் உட்பட, உங்களின் அப்பாயிண்ட்மெண்ட் விவரங்களைச் சுருக்கமாக கொண்டுள்ள ஒரு எஸ்.எம்.எஸ், அப்பாயின்ட்மெண்ட் நாளில் ஏற்றுக்கொள்ளப்படும்.

பாஸ்போர்ட் சேவா கேந்திரா ஆஃப்லைன் விண்ணப்பம்

  1. போர்ட்டலில் இருந்து இ-படிவத்தை டவுன்லோடு செய்யவும். 

  2. விண்ணப்பத்தின் வகை, உங்கள் பெயர், பிறந்த இடம் போன்ற தொடர்புடைய தகவல்களை அதில் நிரப்பவும்.

  3. ஆன்லைன் விண்ணப்பத்தின் போது அதைப் அப்லோடு செய்யவும்.

ஆன்லைனில் உங்கள் விண்ணப்பத்தை வெற்றிகரமாகச் சமர்ப்பித்த பிறகு, அனைத்து அசல் ஆவணங்களுடன் திட்டமிடப்பட்ட தேதியில் உங்கள் அருகிலுள்ள பி.எஸ்.கே க்குச் செல்லுங்கள்.

பி.எஸ்.கே க்கான ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதை சரிபார்ப்பதற்கான படிகள்

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்களின் பயோமெட்ரிக் விவர சோதனை அவசியம். அதற்கு, ஆன்லைனில் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவுக்குச் செல்ல வேண்டும். அதன்படி, அப்பாயிண்ட்மெண்ட்டிற்கான வசதியான நேரத்தை நீங்கள் திட்டமிட வேண்டும்.

பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் அப்பாயிண்ட்மெண்ட் ஸ்லாட்டுகள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • படி 1: பாஸ்போர்ட் சேவாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். "அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கும் நேரத்தை சரிபார்க்கவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

  • படி 2: "பாஸ்போர்ட் அலுவலகம்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிட்டு, "அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கும் நேரத்தை சரிபார்க்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.

  • படி 3: உங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவின் இருப்பிடம், முகவரி மற்றும் அப்பாயின்ட்மெண்ட் தேதி ஆகியவற்றை இப்போது பார்க்கலாம். 

இந்த ஆன்லைன் போர்ட்டலில் உங்கள் அப்பாயின்ட்மெண்ட்டை வேறொருநாளுக்கு மாற்றலாம் செய்யலாம் அல்லது ரத்து செய்யலாம்.

பி.எஸ்.கே அலுவலகத்தில் அப்பாயின்ட்மெண்ட் நாளின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

 

பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் உங்கள் அப்பாயின்ட்மெண்ட் நாளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றவும்:

1. நீங்கள் பிரதான அலுவலகத்திற்குள் நுழைந்த பிறகு, பாஸ்போர்ட் அதிகாரியிடம் அப்பாயின்ட்மெண்ட் ரசீது மற்றும் அசல் ஆவணங்களை வழங்கவும். அவர் ஒரு டோக்கனை வழங்குவார்.

2. பின்னர் நீங்கள் மூன்று கவுண்டர்கள் ஏ, பி மற்றும் சி-க்கு செல்ல வேண்டும்.

 

கவுண்டர்களின் வகை கவுண்டரின் பணி சராசரியாக கவுண்ட்டரில் எடுத்துக்கொள்ளும் நேரம்
A நீங்கள் இந்த கவுண்டரில் பயோமெட்ரிக் தரவு சோதனைஎடுத்துகொள்ள வேண்டும். கூடுதலாக, உங்கள் ஆவணங்களை சரிபார்த்தல் மற்றும் பதிவேற்றுவதும் இதில் அடங்கும். 10 முதல் 15 நிமிடங்கள்
B இந்த கவுண்டரில், ஒரு பாஸ்போர்ட் அதிகாரி உங்கள் அசல் ஆவணங்களை சரிபார்த்து ஆவணங்கள் மற்றும் உங்கள் பாஸ்போர்ட்டில் முத்திரையிடுகிறார். 20 முதல் 30 நிமிடங்கள்
C ஒரு மூத்த அதிகாரி உங்கள் ஆவணத்தை சரிபார்க்கிறார். அவர் சில கேள்விகளைக் கேட்கிறார் மற்றும் உங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறார். அப்போது அல்லது அதற்குப் பிறகு ஏதேனும் போலீஸ் சரிபார்ப்பு தேவையா என்பதையும் அவர் உறுதிப்படுத்துகிறார் 15 நிமிடங்கள்
எக்சிட் கவுண்ட்டர் எக்சிட் கவுண்ட்டரில் உங்கள் டோக்கனைச் சமர்ப்பிக்கவும். பி.எஸ்.கே பணியாளர் ஒருவர் பாஸ்போர்ட் விண்ணப்ப ரசீதை வழங்குவார். இதில் உங்கள் பாஸ்போர்ட் ஃபைல் நம்பர் இருக்கும், இதை நீங்கள் ஆன்லைனில் உங்கள் விண்ணப்ப நிலையை கண்காணிக்க பயன்படுத்தலாம். பொருந்தாது

பாஸ்போர்ட் சேவா கேந்திராவின் விண்ணப்ப நிலையை கண்காணிப்பதற்கான படிகள்

உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்க்கவும். பின்வரும் படிகளைப் செய்யுங்கள்:

 

பி.எஸ்.கே ஆன்லைன் விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கவும்

  • படி 1: பாஸ்போர்ட் சேவா போர்ட்டலைப் பார்வையிடவும். "விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்கவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

  • படி 2: விண்ணப்ப வகையைத் தேர்ந்தெடுத்து, உங்கள் 15 இலக்க ஃபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும். உங்கள் விண்ணப்ப நிலையை திரையில் காண "நிலையை கண்காணிக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.

பி.எஸ்.கே ஆஃப்லைன் விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கவும்

பின்வரும் முறைகள் மூலம் உங்கள் பாஸ்போர்ட் விண்ணப்ப நிலையை ஆஃப்லைனில் பார்க்கலாம்:

  • எஸ்.எம்.எஸ் (SMS) சேவை (<STATUS FILE NUMBER> ஐ 9704100100 க்கு அனுப்பவும்).

  • நேஷனல் கால் சென்டர் (தொடர்பு எண் – 18002581800).

  • உங்கள் உள்ளூர் பாஸ்போர்ட் சேவா கேந்திராவை நேரடியாகச் சென்று பாருங்கள்

இந்தியாவில் எத்தனை பாஸ்போர்ட் சேவா கேந்திரா செயல்படுகிறது?

 

இந்தியாவில் சுமார் 81 பாஸ்போர்ட் சேவா கேந்திராக்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள பிற பாஸ்போர்ட் அலுவலகங்களைபாருங்கள்:

பாஸ்போர்ட் அலுவலகங்கள் இந்தியாவில் உள்ள எண்ணிக்கை
தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா 424
பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகங்கள் 36
பாஸ்போர்ட் சேவா லகு கேந்திரா 15

பாஸ்போர்ட் சேவா போர்டல் மூலம் உங்கள் அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவை ஆன்லைனில் கண்டறியலாம்.

ஒவ்வொரு இந்திய நகரத்திலும் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா, அந்த குறிப்பிட்ட பகுதியில் அதிகரித்து வரும் பாஸ்போர்ட் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாஸ்போர்ட் சேவா கேந்திரா என்றால் என்ன என்பதை அறிந்து, அதன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது சுமூகமான விண்ணப்ப செயல்முறைக்கு அவசியம். மேலும், தற்போதைய உலகளாவிய சுகாதார நெருக்கடியில் தொடர்பு இல்லாத பாஸ்போர்ட் பெறும் சேவைகளைப் பெற ஆன்லைன் தளம் வசதியாக உள்ளது.

பாஸ்போர்ட் சேவா கேந்திரா பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அப்பாயின்ட்மெண்ட் இல்லாமல் பாஸ்போர்ட் சேவா கேந்திராவுக்குச் செல்ல முடியுமா?

அவசரகாலம், மருத்துவக் காரணங்களுக்காக மற்றும் பிற முன்-அங்கீகரிக்கப்பட்ட வழக்குகளுக்கு மட்டுமே நீங்கள் பாஸ்போர்ட் சேவா கேந்திராவுக்கு அப்பாயின்ட்மெண்ட் இன்றி செல்ல முடியும். உங்களுக்கு சேவைகளை வழங்குவது பாஸ்போர்ட் அதிகாரியின் விருப்பத்திற்குரியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் செல்லுபடியாகும் காலம் என்ன?

விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பித்த 90 நாட்களுக்குள் ஒரு விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் சேவா கேந்திராவிற்குச் செல்லத் தவறினால், அவர் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.

வேறொருவரின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை யாராவது பி.எஸ்.கே இல் சமர்ப்பிக்க முடியுமா?

இல்லை, மற்றொரு நபரின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பி.எஸ்.கே இல் சமர்ப்பிக்க முடியாது. விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது விண்ணப்பதாரர் நேரடியாக அலுவலகத்தில் இருக்க வேண்டும்.