Zero
Documentation
Quick Claim
Process
Affordable
Premium
Terms and conditions apply*
பில்டிங் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
பில்டிங் இன்சூரன்ஸ் ஏன் முக்கியமானது என்பது பற்றி உறுதியாக தெரியவில்லையா?
மேற்கொண்டு படிக்கவும்..
டிஜிட்-ன் பில்டிங் இன்சூரன்ஸின் சிறப்பு என்ன?
டிஜிட்-இன் பில்டிங் இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படுகிறது?
பில்டிங் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்
டிஜிட்டில் உள்ள எங்கள் இன்சூரன்ஸ் ஆனது வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து உங்கள் பில்டிங்கை எங்களது கோ டிஜிட், பாரத் லகு உத்யம் சுரக்ஷா, கோ டிஜிட், பாரத் சூக்ஷ்மா உத்யம் சுரக்ஷா மற்றும் கோ டிஜிட், பாரத் க்ரிஹா ரக்ஷா பாலிசிகள் மூலமாக பாதுகாக்கிறது. எனினும், பில்டிங்களில் களவு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், களவுகளுக்காகவே நாங்கள் டிஜிட் பர்க்லரி இன்சூரன்ஸ் பாலிசியைக் கொண்டுள்ளோம். இதன் மூலம், உங்கள் பில்டிங்கானது தீ விபத்துகள் மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கப்படுவது மட்டும் இல்லாமல், களவுகளுக்கும் காப்புறுதி வழங்குகிறது. இதனை உங்களுக்கு எளிதாக்க, இருக்கக்கூடிய கவரேஜ் ஆப்ஷன்களை கீழ்கண்டவாறு வேறுபடுத்தி உள்ளோம்:
ஆப்ஷன் 1 |
ஆப்ஷன் 2 |
ஆப்ஷன் 3 |
உங்கள் வீடு மற்றும் தொழில் சார்ந்த பொருட்களுக்கு மட்டும் காப்புறுதி வழங்குகிறது. |
உங்கள் வீடு மற்றும் தொழில் சார்ந்த பொருட்கள் மற்றும் பில்டிங் ஆகிய இரண்டிற்கும் காப்புறுதி வழங்குகிறது |
உங்கள் பில்டிங்கிற்கு மட்டும் காப்புறுதி வழங்குகிறது. |
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது
- கண்டன்ட் - பில்டிங் இன்சூரன்ஸில் உள்ள ‘கண்டன்ட்’ என்பது எதைக் குறிக்கும் என்று நீங்கள் குழம்பி இருந்தால், உங்கள் வளாகத்தில் நிரந்தரமாக வைக்கப்படாத அல்லது பொருத்தப்படாத பொருட்களை இது குறிக்கிறது. உதாரணமாக, உங்கள் வீட்டில் களவு ஏற்பட்டு, அதன்போது உங்கள் லேப்டாப் திருடப்பட்டு இருந்தால்; உங்கள் பில்டிங் இன்சூரன்ஸ் கண்டன்ட்களுக்கு காப்புறுதி வழங்கும், அதாவது உங்கள் லேப்டாப்பிற்கும் காப்புறுதி வழங்கப்படும்.
பில்டிங்/அமைப்பு - உங்கள் பில்டிங் இன்சூரன்ஸில் உள்ள ‘பில்டிங்’ அல்லது ‘அமைப்பு’ என்பது நீங்கள் இன்சூர் செய்திருக்கும் ஒட்டுமொத்த ப்ராபர்டியையும் குறிக்கிறது. உதாரணத்திற்கு, உங்கள் குடும்பத்தின் தனித்த பில்டிங்கினை நீங்கள் பாதுகாக்க விரும்பினால், இங்கு காப்புறுதி அளிக்கப்பட்டிருக்கும் ‘பில்டிங்/கட்டிடம்’ என்பது உங்கள் ஒட்டுமொத்த பில்டிங்கையும் குறிக்கிறது.
நாங்கள் வழங்கும் பில்டிங் இன்சூரன்ஸ்கள்
பில்டிங் இன்சூரன்ஸ் யாருக்கு தேவைப்படும்?
காப்புறுதி வழங்கப்பெறும் ஹோம் ப்ராபர்டிக்களின் வகைகள்
கடைகள் மற்றும் பிசினஸ் ப்ராபர்டிக்களின் வகைகள்
பில்டிங் இன்சூரன்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்
பில்டிங் இன்சூரன்ஸ் பிரீமியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
உங்கள் பில்டிங் இன்சூரன்ஸ் பிரீமியம் கீழ்க்கண்ட காரணிகளால் பாதிக்கப்படுகிறது:
- பில்டிங் வகை : உங்கள் பில்டிங் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீது நீங்கள் இன்சூர் செய்கின்ற பில்டிங் வகையின் நேரடியான தாக்கம் இருக்கும். உதாரணத்திற்கு, ஒரு பல்பொருள் அங்காடியை விடவும் ஒரு தொழிற்சாலையின் ப்ரீமியம் அதிகமாக இருக்கும், இது இன்சூர் செய்கின்ற ப்ராபர்டியின் இயல்பினில் உள்ள வேறுபாட்டின் காரணமாக ஏற்படுகிறது.
- பில்டிங்-கின் வயது : எந்தவொரு இன்சூரன்ஸ் பாலிசியையும் போலவே, பிரீமியம் விலையை தீர்மானிப்பதில் வயது முக்கிய பங்கு வகிக்கிறது. பில்டிங் பழையதாக இருக்கும் போது அதன் பிரீமியம் குறைவாகவும், புதிதாக இருக்கும் போது அதன் பிரீமியம் அதிகமாகவும் இருக்கும்.
- ப்ராபர்டியின் பரப்பளவு : இன்சூர் செய்ய வேண்டிய பில்டிங்கின் பரப்பளவு பில்டிங் பிரீமியத்தின் மீது நேரடியான, பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், பெரிய ப்ராபர்டி எனும் போது அதிக தொகைக்கு இன்சூர் செய்யப்படும், எனவே பில்டிங் இன்சூரன்ஸ் பிரீமியமும் அதிகமாகவே இருக்கும்.
- பாதுகாப்பு நடவடிக்கைகள்: இன்றைய காலகட்டத்தில் பல வீடுகள் மற்றும் வணிகங்கள் தங்கள் வீடுகளையும் கடைகளையும் தீ போன்ற அபாயங்களிலிருந்து பாதுகாக்க பல விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தேர்வு செய்கின்றனர். எனவே, உங்கள் வீடு அல்லது கடையும் இது போன்ற அபாயத்தில் இருந்தால், உங்கள் ஆபத்து மற்றும் அதனால் நீங்கள் செலுத்து பில்டிங் இன்சூரன்ஸிற்கான பிரீமியமும் குறைவாக இருக்கும்
- கூடுதல் கவரேஜ்கள்: ஒரு பில்டிங் இன்சூரன்ஸ் என்பது குறிப்பாக கட்டிடம் மற்றும் அதன் உடைமைகளை பாதுகாக்கும் அதே சமயம், ஒரு கடையிலோ அல்லது வீட்டிலோ வைத்திருக்கும் நகைகளுக்கு நிகழும் தற்செயலான சேதங்களுக்கும் காப்புறுதி அளிக்கிறது. இதனைப் பெறுவதற்கு நீங்கள் கூடுதல் கவரேஜை வழங்கும் ஆட்-ஆன்களைத் தேர்வு செய்யலாம் மற்றும் உங்கள் பில்டிங் இன்சூரன்ஸிற்கான பிரீமியம் அதிகரிக்கும்.
பில்டிங் இன்சூரன்ஸ் பிளான்களை ஒப்பிடுவதற்கான ஆலோசனைகள்
சரியான பில்டிங் இன்சூரன்ஸ் பிளானை தேர்வு செய்வது பலருக்கு சிக்கலாகவே இருக்கும். ஏனெனில், இது உங்களுடைய அழகிய வீடு அல்லது உங்கள் பிரியமான பிசினஸை பாதுகாப்பதற்கு நீங்கள் மேற்கொள்ளும் ஒரு முடிவு! நீங்கள் எளிதாக முடிவு செய்வதற்கு வசதியாக, நீங்கள் ஒப்பிட்டு பார்த்து, சிந்திக்க வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்கள் குறித்த எங்களுடைய பரிந்துரைகள் இதோ:
- காப்புறுதியின் நன்மைகள் : உங்கள் இன்சூரன்ஸில் உங்களுக்குக் கிடைக்கப்பெறும் காப்புறுதிப் பாதுகாப்பு தான் மிக முக்கியமாகும். கெடுவாய்ப்பான நிகழ்வின் போது உங்களுக்கு என்ன மாதிரியான காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படுமென்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, உங்களுக்கு ஏற்ற சரியான பிளானை பற்றித் தெரிந்து கொள்வதற்கு, எப்போதுமே எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படுகிறது, எதற்கெல்லாம் வழங்கப்படவில்லை என்பதை கவனிக்கவும்.
- இன்சூர் செய்யப்படும் தொகை : உங்கள் பில்டிங் இன்சூரன்ஸில் இன்சூர் செய்யப்படும் தொகை என்பது நீங்கள் கிளைம் செய்யும் வேளையில் உங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பெறும் முழுத் தொகையை குறிக்கிறது. எனவே, நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் தொகையை குறித்து மிக கவனமாக இருக்கவும். ஏனென்றால் இது உங்கள் பில்டிங் இன்சூரன்ஸ் பிரீமியத்தை மட்டுமின்றி, சேதங்களும், இழப்புகளும் ஏற்படும் சூழ்நிலையில் நீங்கள் பெற போகும் கிளைம் தொகையையும் இது பாதிக்கும்!
- கிடைக்கப்பெறும் ஆட்-ஆன்கள் : சில நேரங்களில், அடிப்படையான பிளானில் இருக்கும் பெனிஃபிட்களையும் தாண்டி உங்களுக்கு காப்புறுதி தேவைப்படும். இங்கு தான் ஆட்-ஆன்கள் உதவி புரியும். வெவ்வேறு இன்சூரன்ஸ் வழங்குநர்கள் வெவ்வேறு விதமான ஆட்-ஆன்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பினை மக்களுக்கு வழங்குகிறார்கள். உங்கள் விருப்பத் தேர்வுகளை ஒப்பிட்டுப் பார்த்து, உங்களுக்கும், உங்கள் பில்டிங்கிற்கும் ஏற்ற ஒன்றை தேர்வு செய்யவும்!
சரியான பில்டிங் இன்சூரன்ஸ் பிளானை எப்படி தேர்வு செய்வது?
சரியான பில்டிங் இன்சூரன்ஸ் பிளானை தேர்வு செய்வதற்கு, எல்லா வாய்ப்புகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்த்து, அதற்கேற்றாற் போல் முடிவெடுப்பது தான் சிறந்த வழியாகும். உங்களின் மிக முக்கியமான உடைமையினை பாதுகாப்பதற்கு தேர்வு செய்யும் முன்னர், உங்கள் காப்புறுதியின் நன்மைகள், இன்சூர் செய்யப்படும் தொகை, கிடைக்கப்பெறும் ஆட்-ஆன்கள், பில்டிங் இன்சூரன்ஸ் பிரீமியம், வாடிக்கையாளர் சேவை போன்ற அனைத்து அம்சங்களையும் பார்க்கவும்.
பில்டிங் இன்சூரன்ஸிற்கான சரியான இன்சூரன்ஸ் தொகையை எப்படி தேர்வு செய்வது?
இன்சூர் செய்யப்படும் தொகை என்பது உங்கள் ப்ராபர்டியின் மொத்த மதிப்பினை குறிக்கிறது; அதாவது கிளைம் செய்யும் சமயத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய அதிகபட்ச தொகையையும் குறிக்கும். அதனால், இந்த தொகை உங்கள் ப்ராபர்டியின் உண்மையான மதிப்பினை பிரதிபலிப்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் பில்டிங் இன்சூரன்ஸிற்கு சரியான இன்சூரன்ஸ் தொகையை தேர்வு செய்வதற்கு, எங்கள் கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்தலாம். இது உங்கள் பில்டிங் இன்சூரன்ஸ் பிரீமியத்தை தீர்மானிக்க உதவும் மற்றும் உங்கள் ப்ராபர்டியின் பரப்பளவின் அடிப்படையில் இன்சூர் செய்ய வேண்டிய தொகையையும் பரிந்துரைக்கும்.
பில்டிங் இன்சூரன்ஸின் நன்மைகள் என்னென்ன?
இந்தியாவில் பில்டிங் இன்சூரன்ஸின் முக்கியமான நன்மைகளைப் பற்றி சற்று பார்க்கலாம்:
- முழுமையான காப்புறுதி : பில்டிங் இன்சூரன்ஸ் உங்கள் ப்ராபர்டியையும் (அதாவது பில்டிங் அல்லது ஸ்டோர்) அதிலிருக்கும் பொருட்களையும் கூட பாதுகாத்து, ஏற்படக் கூடிய அனைத்து இழப்புகளிலிருந்தும் உங்கள் கையிருப்பை காக்க உதவுகிறது. கூடுதலாக, பல இன்சூரன்ஸ் வழங்குநர்கள் உங்கள் தேவைக்கேற்றவாறு உங்கள் காப்புறுதி பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொள்ள ஆட்-ஆன்களையும் வழங்குகின்றனர்.
- பிசினஸ் அபாயங்களை குறைக்கிறது : பில்டிங் இன்சூரன்ஸ் உங்கள் கடையையும், அதிலிருக்கும் பொருட்களையும் பாதுகாப்பதற்கு தனிப்பயனாக்கப்பட்ட பாலிசிக்களுடன் வருகிறது, இது தீவிபத்து, நிலநடுக்கம், வெள்ளம், கொள்ளை போன்ற நிகழ்வுகள் ஏற்படும் போது, அதனால் பிசினஸில் நஷ்டங்கள் ஏற்படக் கூடிய சூழ்நிலைகளில் பாதுகாப்பளிப்பதற்கு உதவும்.
- மன நிம்மதி : உங்கள் கடையோ அல்லது வீடோ, இரண்டுமே பொருளாதார ரீதியில் பெருமளவு முக்கியத்தை பெறுகிறது. எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படக் கூடிய குறிப்பிடத்தக்க இழப்புகளிலிருந்து பில்டிங் இன்சூரன்ஸ் காக்க உதவுகிறது. எனவே இது போன்ற சூழ்நிலைகளில் உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர் உங்களுடன் இருப்பதால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை!