ஹோம் இன்சூரன்ஸ் ஆன்லைனில் ₹150/ஆண்டு*முதல் ஆரம்பமாகிறது


Zero
Documentation
Quick Claim
Process
Affordable
Premium
,
Zero
Documentation
Quick Claim
Process
Affordable
Premium
,
ஹோம் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
நான் ஏன் ஹோம் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?
இன்னும் ஹோம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டுமா என்ற குழப்பத்தில் நீங்கள் இருந்தால், தொடர்ந்து படிக்கவும்…
டிஜிட் வழங்கும் ஹோம் இன்சூரன்ஸில் அப்படி என்ன சிறப்பு உள்ளது?
டிஜிட்-ன் ஹோம் இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்பட்டிருக்கிறது?
குறிப்பு: இந்தியாவில் அடிக்கடி திருட்டுகள் நடப்பது வழக்கம். உங்கள் வீட்டை இது போன்ற திருட்டுகளுக்கு எதிராக பாதுகாக்க ஹோம் இன்சூரன்ஸ் பாலிசியுடன் பர்க்கலரி இன்சூரன்ஸ் பாலிசியையும் (UIN – IRDAN158RP0019V01201920) சேர்த்து எடுங்கள்.
ஹோம் இன்சூரன்ஸ் வகைகள்
விருப்பத்தேர்வு 1 |
விருப்பத்தேர்வு 2 |
விருப்பத்தேர்வு 3 |
உங்கள் வீட்டினுள் உள்ள பொருட்களுக்கு (அதாவது தனிப்பட்ட உடைமைகள்) மட்டும் காப்புறுதி வழங்கப்படும். |
உங்கள் வீட்டினுள் உள்ள பொருட்களுக்கும், கட்டிடத்திற்கும் சேர்த்து காப்புறுதி வழங்கப்படும். |
உங்கள் வீட்டிற்குள் இருக்கும் சொத்து மற்றும் பொருட்களுக்கும், நகைகளுக்கும் காப்புறுதி வழங்கப்படும். |
ஹோம் இன்சூரன்ஸ் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
கட்டடம்/கட்டட அமைப்பு : ஹோம் இன்சூரன்ஸில், கட்டடம் என்பது உங்கள் வீட்டின் புறத் தோற்றத்தினை குறிக்கிறது.
பொருட்கள் : பொருட்கள் என்பது உங்கள் வீட்டிலுள்ள தனிப்பட்ட உடைமைகளை குறிக்கிறது. எனவே, உங்கள் ஃபர்னிச்சர் (மேஜை, நாற்காலி போன்ற பொருட்கள்) போன்ற பொருட்களுக்கும் கூட உங்கள் ஹோம் இன்சூரன்ஸில் காப்புறுதி வழங்கப்படும்.
ஹோம் இன்சூரன்ஸ் மூலம் உங்கள் வீட்டினை பாதுகாப்பதினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
ஹோம் இன்சூரன்ஸை யாரெல்லாம் வாங்க வேண்டும்?
காப்புறுதிப் பாதுகாப்பு அளிக்கப்பெறும் வீடுகளின் வகைகள்
சொந்த வீடுகள் முதல் வாடகைக்கு குடியிருக்கும் அபார்ட்மெண்ட் வீடுகள் வரை அனைத்து வகையான வீடுகளுக்கும் ஏற்ற ஹோம் இன்சூரன்ஸை டிஜிட் வடிவமைத்திருக்கிறது.
ஹோம் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
ஹோம் இன்சூரன்ஸ் பிளான் ஏன் முக்கியமானது?
உங்கள் வாழ்வின் மிக முக்கியமான விஷயங்களில் உங்கள் வீடும் ஒன்றாகும். உங்கள் வாழ்வின் மிகவும் இன்றியமையாத விஷயமாக மட்டுமின்றி, வாழ்க்கையின் மிகப் பெரிய முதலீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
எனவே, நீங்கள் அதனை பாதுகாத்துக் கொள்வதற்கு குறைந்தபட்சமாக செய்ய வேண்டியது இன்சூரன்ஸ் எடுப்பது தான். ஹோம் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கொள்ளைச் சம்பவம் நிகழ்வதை தடுக்க முடியாவிட்டாலும் கூட, அதன் பிறகு ஏற்படும் சேதங்களிலிருந்தும், இழப்புகளிலிருந்து உடனடியாக மீண்டு வருவதற்கு உதவி புரியும்!
ஹோம் இன்சூரன்ஸ் பிளான் என்பது கொள்ளைச் சம்பவங்கள், தீவிபத்து, வெள்ளம், புயல் மற்றும் நிலநடுக்கம் போன்ற சூழ்நிலைமைகளில் உங்கள் வீட்டிற்கு ஏற்படக் கூடிய தீர்மானிக்கப்படாத, எதிர்பாராத இழப்புகளிலிருந்தும், சேதங்களிலிருந்தும் பாதுகாப்பதற்கு மிக முக்கியமாகும்.
நான் ஆன்லைனில் ஏன் ஹோம் இன்சூரன்ஸ் பிளானை வாங்க வேண்டும்?
உங்கள் வீட்டிற்கு பாதுகாப்பளிப்பது சாதாரண விஷயமன்று! இது போன்ற முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு, போதுமான நேரமும், மன அமைதியும் தேவை.
ஆன்லைன் ஹோம் இன்சூரன்ஸில், இது மிகவும் எளிதாகிவிடுகிறது. உங்கள் வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் நீங்கள் பல்வேறு ஹோம் இன்சூரன்ஸ் பிளான்களை மதிப்பீடு செய்து, ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் முடிவினை எடுக்கலாம்.
மேலும், ஆன்லைன் ஹோம் இன்சூரன்ஸில், பாலிசி வாங்குவதிலிருந்து, உங்கள் பிளானை தனிப்பயனாக்குவது மற்றும் ஆவணங்களை சமர்ப்பிப்பது போன்ற அனைத்தையுமே தொல்லைகளின்றி, ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம், மிக முக்கியமாக, அனாவசியமான ஆவணங்கள் தேவையில்லை!
ஹோம் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கின்ற காரணிகள்
உங்கள் ஹோம் இன்சூரன்ஸ் பிரீமியத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கின்ற காரணிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
வீட்டு வகை – உங்கள் வீடு உங்களுக்கு சொந்தமானதா அல்லது வாடகை வீடா? ஒரு பில்டிங்-ல் உள்ள அபார்ட்மெண்டா அல்லது தனிப்பட்ட பங்களாவா? உங்கள் வீடு சொந்தமாக இருப்பது அல்லது வாடகை வீடாக இருப்பது, மற்றும் நீங்கள் இருக்கும் வீட்டு வகை உங்கள் ஹோம் இன்சூரன்ஸ் பிரீமியத்தை நேரடியாக பாதிக்கும்.
உங்கள் வீடு எவ்வளவு பழமையானது– எந்தவொரு இன்சூரன்ஸ் பாலிசியையும் போலவே, பிரீமியம் விலையை தீர்மானிப்பதில் வீடு எவ்வளவு பழமை வாய்ந்தது என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
உங்கள் வீடு எவ்வளவு பெரியது – உங்கள் வீட்டின் சதுர அடி பரப்பளவு, உங்கள் ஹோம் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் பெரிய அளவில், நேரடியான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் பெரிய வீட்டிற்கு பெரிய தொகையை இன்சூர் செய்ய வேண்டி வரும், அதன் படியே ஹோம் இன்சூரன்ஸ் பிரீமியமும் அதிகமாக இருக்கும்.
வீட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள்– நம் வீடுகளின் பாதுகாப்பு குறித்து நாம் அனைவருமே கவலை கொள்கிறோம். எனவே நம் வீடுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இதன் மூலம் உங்கள் வீட்டில் திருட்டு நடப்பதற்கான அபாயம் குறையவும் அல்லது தீவிபத்து நிகழ்வதை தடுக்க உதவவும் முடியுமென்றால், அது உங்கள் ஹோம் இன்சூரன்ஸ் பிரீமியம் மீது நேரடியான தாக்கத்தினை விளைவித்து, அதனால் பிரீமியம் தொகை குறைகிறது.
கூடுதல் காப்புறுதி பாதுகாப்பு– ஒரு அடிப்படையான ஹோம் இன்சூரன்ஸ் பிளான் என்பது உங்கள் வீட்டினையும், உங்கள் தனிப்பட்ட உடைமைகளையும் மட்டுமே பாதுகாத்து காப்புறுதி வழங்குகிறது, ஆனால் நகைகளுக்கு வழங்குவதில்லை. சில ஹோம் இன்சூரன்ஸ்கள் ஸ்டாண்டர்ட் பிளானில் காப்புறுதி வழங்கப்படாத பொருட்களுக்கு பாதுகாப்பளிப்பதற்கு கூடுதல் கவர்களை வழங்குகின்றன. இதன் காரணமாகவும் பிரீமியம் அதிகரிக்கும்.
ஹோம் இன்சூரன்ஸ் பிளான்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான ஆலோசனைகள்
நீங்கள் ஹோம் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவதற்கான முடிவை எடுக்கும் போது, உங்கள் வீட்டிற்கான சரியான பிளானை தேர்வு செய்வதற்கு நீங்கள் கீழ்க்கண்ட முக்கியமான காரணிகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்:
காப்புறுதியின் நன்மைகள் – உங்கள் ஹோம் இன்சூரன்ஸில் உங்களுக்குக் கிடைக்கப்பெறும் காப்புறுதி பாதுகாப்பு தான் மிக முக்கியமாகும். கெடுவாய்ப்பான நிகழ்வின் போது உங்களுக்கு என்ன மாதிரியான காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படுமென்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, உங்களுக்கு ஏற்ற சரியான பிளானை பற்றித் தெரிந்து கொள்வதற்கு, எப்போதுமே எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படுகிறது, எதற்கெல்லாம் வழங்கப்படவில்லை என்பதை கவனிக்கவும்
இன்சூர் செய்யப்படும் தொகை – உங்கள் ஹோம் இன்சூரன்ஸில் இன்சூர் செய்யப்படும் தொகை என்பது நீங்கள் கிளைம் செய்யும் வேளையில் உங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பெறும் முழுத் தொகையை குறிக்கிறது. எனவே, நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் தொகையை குறித்து மிக கவனமாக இருக்கவும். ஏனென்றால் இது உங்கள் ஹோம் இன்சூரன்ஸ் பிரீமியத்தை மட்டுமின்றி, சேதங்களும், இழப்புகளும் ஏற்படும் சூழ்நிலையில் நீங்கள் பெற போகும் கிளைம் தொகையையும் இது பாதிக்கும்!
கிடைக்கப்பெறும் ஆட்-ஆன்கள் – சில நேரங்களில், அடிப்படையான பிளானில் இருக்கும் பெனிஃபிட்களையும் தாண்டி உங்களுக்கு காப்புறுதி தேவைப்படும். இங்கு தான் ஆட்-ஆன்கள் உதவி புரியும். வெவ்வேறு இன்சூரன்ஸ் வழங்குநர்கள் வெவ்வேறு விதமான ஆட்-ஆன்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பினை மக்களுக்கு வழங்குகிறார்கள். அது போலவே, டிஜிட்-இல் நாங்கள் ஹோம் இன்சூரர்களுக்கு பிரத்யேகமான ஜுவல்லரி புரொட்டெக்ஷன் ஆட்-ஆனை வழங்குகிறோம். உங்கள் விருப்பத் தேர்வுகளை ஒப்பிட்டுப் பார்த்து, உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்யவும்!
சரியான இன்சூரன்ஸ் தொகையை எப்படி தேர்வு செய்வது?
இன்சூரன்ஸில், இன்சூர் செய்யப்படும் தொகை என்பது இழப்புகள் ஏற்படும் பட்சத்தில், உங்களுக்குக் கிடைக்கப்பெறும் அதிகபட்சமான இழப்பீட்டுத் தொகையை குறிக்கிறது. இது உங்கள் இன்சூர் செய்யப்பட்ட வீட்டின் மதிப்பினையும் தீர்மானிக்கிறது. எனவே நீங்கள் இன்சூர் செய்ய தேர்வு செய்திருக்கும் தொகையானது, உங்கள் வீட்டின் உண்மையான மதிப்பினை பிரதிபலிப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். சரியான தொகையை தேர்வு செய்வதற்கு, உங்களின் மொத்த சதுர அடி பரப்பளவையும், உங்கள் வீட்டிலுள்ள பொருட்களின் தோராயமான மதிப்பினையும் நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.