உங்கள் ப்ராப்பர்டி க்கான பர்களரி இன்சூரன்ஸ் பாலிசி பெறுங்கள் தொடங்குகிறது ₹530/ஆண்டு*

property-insurance
property-insurance
usp icon

Zero

Documentation

usp icon

Quick Claim

Process

usp icon

Affordable

Premium

Zero Paperwork Online Process
Select Property Type
Enter Valid Pincode
+91
Please enter valid mobile number
I agree to the Terms & Conditions
Please accept the T&C
background-illustration
usp icon

Zero

Documentation

usp icon

Quick Claim

Process

usp icon

Affordable

Premium

background-illustration

பர்க்லரி இன்சூரன்ஸ் என்றால் என்ன?

ப்ராப்பர்டி இன்சூரன்ஸில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான கவரேஜ்களில் பர்க்லரி இன்சூரன்ஸும் ஒன்று. இது உங்கள் வீடு அல்லது தொழில் சார்ந்த சொத்துகளை, களவு காரணமாக ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. நீங்கள் தனி வீடு கொண்டிருந்தாலும் சரி, கேட்டட் கம்யூனிட்டி அப்பார்ட்மென்டில் தங்கியிருந்தாலோ, அல்லது சொந்தமான தனி கடை அல்லது அலுவலக இடத்தை கொண்டிருந்தாலோ, ஒரு பர்க்லரி இன்சூரன்ஸ் என்பது எதிர்பாராத விதமாக ஏற்படும் களவுகள் காரணமாக உங்கள் சொத்துகளுக்கு ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.   

Read More

ஒரு பர்க்லரி இன்சூரன்ஸ் ஏன் முக்கியமானது என்று தெளிவாக புரியவில்லையா?

மேலும் படியுங்கள்..

1

தேசிய தலைநகரில் கடந்த ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் கொள்ளை சம்பவங்கள் 112 சதவீதம் அதிகரித்துள்ளது.(1)

 

2

இந்தியாவில், 2021 ஆம் ஆண்டில் மட்டும், குடியிருப்பு பகுதிகளில் சொத்து சார்ந்த குற்றங்கள் தொடர்பாக 2,81,602 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (2)

 

3

2021ல் இந்தியாவில் சொத்துக்காக ஏற்படும் குற்றங்கள் 18.5 சதவீதம் அதிகரித்துள்ளன. மொத்த எண்ணிக்கையில் 12.8 சதவீதம் களவு சார்ந்த வழக்குகள் ஆகும். (3)

 

டிஜிட் மூலம் பெறப்படும் பர்க்லரி இன்சூரன்ஸின் சிறப்பு என்ன?

  • பணத்திற்கான மதிப்பு: உங்கள் சொத்துக்களை இழப்புகளிலிருந்து பாதுகாப்பது ஒரு பெரிய விஷயம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆபத்து என்பது எதிர்பாராத விதமாக எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படலாம்! எனவே, பர்க்லரி இன்சூரன்ஸுக்கான பிரீமியங்கள் பொதுவாக அதிகமாக இருப்பதை நீங்கள் காணலாம். எவ்வாறாயினும், திருட்டு மற்றும் பிற சாத்தியமான சேதங்கள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் இருந்து உங்கள் சொத்தை இன்சூர் செய்வதற்கான சிறந்த மற்றும் மிகவும் மலிவு விலையிலான பிரீமியத்தை உங்களுக்கு வழங்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.

  • டிஜிட்டல் ஃப்ரெண்ட்லி: இந்தியாவின் முதல் டிஜிட்டல் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதால், பர்க்லரி இன்சூரன்ஸை வாங்குவது முதல் பர்க்லரி இன்சூரன்ஸ் கிளைம்களை டிஜிட்டல் மயமாக்குவது வரை எங்களின் அனைத்து செயல்முறைகளையும் நாங்கள்டிஜிட்டல்மயமாக்க முயற்சி செய்கிறோம் . எனவேஇது குறித்த ஒரு ஆய்வு தேவைப்படும்போதும், நீங்கள் அதை ஆன்லைனில் எளிதாக செய்யலாம்! (ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான மேலான கிளைம்கள் தவிர, ஐஆர்டிஏ (காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) படி-மற்றவை மேனுவலாக மட்டுமே செய்யப்பட வேண்டும்.)

  • அனைத்து தொழில் சார்ந்த வகைகளையும் உள்ளடக்கியது: உங்கள் குடும்பத் தொழில், அலுவலக இடம், கிரானா ஸ்டோர் அல்லது செயின் ஆஃப் ஸ்டோர்களைப் பாதுகாக்க விரும்பினாலும், எங்கள்பர்க்லரி இன்சூரன்ஸ் அனைத்து வகையான தொழில்களுக்கும் ஏற்றது. உங்கள் தொழிலின் அளவை பொருட்படுத்தாமல் அவற்றை பாதுகாக்கிறது.

  • வாடகைதாரர்களுக்கான திட்டங்கள்: இன்று பலர் சொந்தமான வீடு வாங்குவதைக் காட்டிலும் வாடகைக்கு குடியிருக்க விரும்புகிறார்கள். சொந்த வீடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதனால்தான், வாடகைதாரர்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு சொந்தமான பொருட்களை மட்டுமே பாதுகாக்கக்கூடிய திட்டங்களையும் நாங்கள் வழங்குகிறோம். எனவே, உங்கள் வாடகை வீட்டை திருட்டுகளில் இருந்து பாதுகாக்க விரும்பினாலும், நீங்கள் அவ்வாறு செய்யலாம், குறிப்பாக உங்களுக்குச் சொந்தமான பொருட்களை மட்டும் இது பாதுகாக்கும்!

டிஜிட் வழங்கும் பர்க்லரி இன்சூரன்ஸில் என்னனென்ன அடங்கும்?

டிஜிட் வழங்கும்  பர்க்லரி இன்சூரன்ஸில் பின்வரும் கவரேஜ்கள் அடங்கும்-  

 

Loss/damage to property

சொத்துக்கு ஏற்படும் இழப்பு/சேதம்

களவு, பூட்டு உடைப்பு, திருட்டு அல்லது வழிப்பறி போன்றவற்றால் சொத்துக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம் இந்த பாலிசியின் கீழ் பாதுகாக்கப்படும்.

Damage to premises

கட்டிடத்திற்கு ஏற்படும் சேதம்

களவு செய்வதற்கான முயற்சி, அல்லது திருட்டு அல்லது பூட்டு உடைப்பு அல்லது மிரட்டல் விடுக்க முயற்சி செய்தல் அல்லது இது போன்ற திருட்டுகளை செய்தல் ஆகியவற்றின் காரணமாக கட்டிடத்திற்கு ஏற்படும் சேதம் இந்த பாலிசியின் கீழ் பாதுகாக்கப்படும்.

Cost incurred for damaged locks

சேதமடைந்த பூட்டிற்கான செலவு

இன்சூர் செய்யப்பட்ட நபரின் வளாகத்திற்குள் சேதமடைந்த பூட்டினை ரிப்பேர் செய்தல் அல்லது புதிதாக மாற்றுவதற்கு ஆன செலவுகளை இன்சூரர் ரீஇம்பர்ஸ் செய்யலாம்.

Damage to safe/strong room

சேஃப் /ஸ்ட்ராங் ரூமிற்கு ஏற்பட்ட சேதம்

இன்சூர் செய்யப்பட்ட நபரின் வளாகத்திற்குள் உள்ள சேஃப் /ஸ்ட்ராங் ரூமிற்கு ஏற்பட்ட சேதம் இந்த பாலிசியின் கீழ் பாதுகாக்கப்படும்.

பர்க்லரி இன்சூரன்ஸின் வகைகள்:

டிஜிட்டுடன், பர்க்லரி இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது என்பது சொத்துக்களுக்கான முழுமையான கவரேஜின் ஒரு பகுதியாகும். அதாவது டிஜிட் ஸ்டாண்டர்ட் ஃபயர் & ஸ்பெஷல் பெரில்ஸ் பாலிசி. இதில் உங்கள் சொத்து கொள்ளைகள், இயற்கை சீற்றங்கள் மற்றும் தீ விபத்து வரை அனைத்து சேதங்களில் இருந்தும் பாதுகாக்கப்படும். நாங்கள் வழங்கும் சில வகையான கவரேஜ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆப்ஷன் 1

ஆப்ஷன் 2

ஆப்ஷன் 3

உங்கள் வீடு அல்லது தொழில் சார்ந்த உள்ளடக்கங்களை மட்டுமே பாதுகாக்கப்படும்.

உங்கள் கட்டிடம் மற்றும் உங்கள் வீடு அல்லது தொழில் சார்ந்த உள்ளடக்கங்கள் இரண்டையும் பாதுகாக்கிறது.

உங்கள் கட்டிடம், உங்கள் வீட்டின் உள்ளடக்கங்களை உள்ளடக்கியது அல்லது தொழில் சார்ந்த பொருட்கள் மற்றும் பணம், கேஷ் கவுண்டர் போன்ற விலையுயர்ந்த பொருட்களை பாதுகாக்கிறது.

எங்கள் பர்க்லரி இன்சூரன்ஸ் பின்வருவனவற்றை வழங்குகின்றன

  • உங்கள் வீட்டிற்கான பர்க்லரி இன்சூரன்ஸ் - குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் தனி வீடுகள் போன்றவற்றில் அடிக்கடி களவு ஏற்படுவது வழக்கம். உண்மையில், 'ஹர் கர் சுரக்ஷித் 2018 அறிக்கையின்படி, இந்தியாவில் 70% திருட்டுகள் குடியிருப்பு பகுதிகளில் நடைபெறுகின்றன: இந்தியாவின் செக்யூரிட்டி பாரடாக்ஸ் - ‘ஹோம் சேஃப்டி  Vs டிஜிட்டல் சேஃப்டி’. அதன் காரணமாக தான், நீங்கள் ஒரு தனி வீடு வைத்திருந்தாலும் அல்லது பகிரப்பட்ட கேட்டட் கம்யூனிட்டியில் வசித்தாலும், எங்கள் பர்க்லரி இன்சூரன்ஸ் ஆனது பெரிய மற்றும் சிறிய வீடுகள் உட்பட அனைத்து வீடுகளுக்கும் பொருந்தும். 

  • உங்கள் தொழில் மற்றும் கடைக்கான பர்க்லரி இன்சூரன்ஸ்  - வேலை நேரம் முடிந்தவுடன், அனைவரும் தங்கள் அலுவலகங்கள் அல்லது கடைகளுக்கு பூட்டு அல்லது ஷட்டர்களை போட்டுவிட்டு வீடுகளுக்கு திரும்ப வேண்டும். உங்கள் கடை அமைந்துள்ள இடம் மற்றும் அதன் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து, பல வணிக வளாகங்கள் திருட்டு நடக்கும் அபாயத்திற்கு ஆளாகின்றன. எனவே, உங்கள் தொழில் சார்ந்த சொத்துக்கான பர்க்லரி இன்சூரன்ஸின் தனிப்பயனாக்கப்பட்ட சலுகை, இந்த சேதங்களை ஈடுகட்ட உதவும்.

யாருக்கு பர்க்லரி இன்சூரன்ஸ் தேவை?

திருட்டுகள் எப்போது, எங்கு நடக்கும் என்பது கணிக்க முடியாது மற்றும் பெரும்பாலான நேரங்களில், இது திருடப்பட்ட பொருட்களைத் தாண்டி சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு வழிவகுக்கிறது. எனவே, கடை உரிமையாளர்கள் முதல் வீட்டு உரிமையாளர்கள் வரை அனைவரும் தங்கள் சொத்துக்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை எதிர்பாராத இழப்புகளிலிருந்து பாதுகாக்க பர்க்லரி இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டும்.

வீட்டு உரிமையாளர்கள்

பல ஆண்டுகளாக அது உங்கள் வீடாக இருந்தாலும் சரி, அல்லது உங்கள் புதிய கனவு இல்லமாக இருந்தாலும் சரி, வீடு என்பது எவருக்கும் மிகவும் விலையுயர்ந்த உடைமையாகும். மேலும், குடியிருப்பு கட்டிடங்களில் அடிக்கடி திருட்டு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, உங்கள் பணத்தையும் வீட்டையும் பாதுகாக்க நீங்கள் செய்யக்கூடிய மிக சிறிய வேலை திருட்டிலிருந்து அவற்றை பாதுகாப்பதாகும்.

வாடகைதாரர்கள்

சொத்துக்களை வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே பர்க்லரி இன்சூரன்ஸ்  என்று மக்கள் பொதுவாக கருதுகின்றனர். எவ்வாறாயினும், டிஜிட்டில் நாங்கள் வாடகை சொத்துக்களுக்கும் பர்க்லரி இன்சூரன்ஸை வழங்குகிறோம். எனவே, நீங்கள் வாடகை குடியிருப்பில் வசித்தாலும், உங்களுக்கு சொந்தமான பொருட்களை பர்க்லரி இன்சூரன்ஸ் மூலம் பாதுகாக்கலாம்.

சிறு தொழில் உரிமையாளர்கள்

நீங்கள் ஒரு சிறிய பொது அங்காடியை நடத்திக் கொண்டிருந்தாலும் அல்லது தனிப்பயனாக்கப்பட்ட ஃபேஷன் மற்றும் கைவினைப் பொருட்களுடன் சிறிய பொட்டிக்கை நடத்தினாலும், எங்கள் பர்க்லரி இன்சூரன்ஸ் அனைத்து வகையான தொழில்களுக்கும் ஏற்றது. நீங்கள் ஒரு தனிப்பட்ட, சிறு தொழிலை நடத்தும் ஒருவராக இருந்தால், திருட்டுகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான இழப்புகள் மற்றும் அபாயங்களிலிருந்து உங்கள் தொழிலைப் பாதுகாப்பது அவசியம்.

நடுத்தர தொழில் நடத்துபவர்கள்

நீங்கள் ஜெனரல் ஸ்டோர்கள், உணவகங்கள் அல்லது நடுத்தர அளவிலான நிறுவனங்களை நடத்தினால்; எங்களுடைய பர்க்லரி இன்சூரன்ஸ் திட்டம் நடுத்தர அளவிலான வணிக உரிமையாளர்களுக்கு ஏதேனும் திருட்டு காரணமாக ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு ஈடுசெய்ய ஏற்றது; உங்கள் தொழில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அல்லது பெரியதாக இருந்தாலும் சரி இத்திட்டம் மூலம் அவை பாதுகாக்கப்படும்.

பெரிய நிறுவனங்கள்

நீங்கள் பெரிய அளவில் பிசினஸ் செய்பவராக இருந்து பல ப்ராபர்டிகளுக்கு சொந்தகாரராக இருக்கும் பட்சத்தில், பர்க்லரி இன்சூரன்ஸ் உங்கள் அனைத்து ப்ராபர்டிக்களையும் பாதுகாப்பதற்கு அவசியமாகும். இது பிசினஸில் ஏற்படக் கூடிய அபாயங்களை குறைக்க உதவுவது மட்டுமின்றி, பொறுப்பான முறையில் உங்கள் நிறுவனத்தை நடத்துவதின் காரணமாக உங்கள் மீதான நல்லெண்ணத்தையும் பெருக்குகிறது.

பர்க்லரி இன்சூரன்ஸில் காப்புறுதி வழங்கப்பேறும் பர்ஸ்னல் ப்ராபர்டிக்களின் வகைகள்

இண்டிவிஜுவல் (தனிப்பட்ட) அபார்ட்மெண்ட்

இது ஹவுசிங் சொஸைட்டி அல்லது தனித்த பில்டிங்-ஐ சேர்ந்த தனிப்பட்ட ஃப்ளாட்களில் வசிப்பவர்களுக்கானது. இது உங்கள் சொந்த ஃப்ளாட்டாகவும் இருக்கலாம் அல்லது வாடகைக்கு குடியிருக்கும் ஃப்ளாட்டாக கூட இருக்கலாம். எங்கள் பிளான்கள் இரண்டுக்குமே பொருந்தும்!

இண்டிபென்டென்ட் பில்டிங்

ஒரு வேளை நீங்களும் உங்கள் குடும்பமும் ஒரு தனித்த பில்டிங்கில் வசிக்கலாம், ஒட்டுமொத்த பில்டிங்-கிலும் உள்ள ஃப்ளாட்களை சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ வைத்திருக்கலாம். இந்த வழக்கில், எஸ்எஃப்எஸ் (SFSP-ஸ்டாண்டார்டு ஃபையர் மற்றும் பெரில்ஸ் பாலிசி) இன் ஒரு பகுதியாக டிஜிட்-ன் ப்ராபர்டி இன்சூரன்ஸ் மூலம் அவை அனைத்திற்குமே நீங்கள் காப்புறுதிப் பாதுகாப்பளிக்கலாம்.

இண்டிபென்டென்ட் வில்லா

நீங்கள் ஒரு இண்டிபென்டென்ட் வில்லா அல்லது வீட்டினை சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ வைத்திருந்தால், கொள்ளைச் சம்பவங்கள் ஏற்படக் கூடிய அபாயங்களில் இருந்து உங்கள் வில்லா-வினையும், அதிலிருக்கும் உடைமைகளையும் காப்பதற்கு பர்க்லரி  இன்சூரன்ஸ் அவசியமானது.

பர்க்லரி இன்சூரன்ஸின் கீழ் அடங்கும் பிசினஸ் ப்ராபர்டிகளின் வகைகள்

மொபைல் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்கள்

மொபைல் ஃபோன்கள், மொபைல் சம்பந்தப்பட்ட துணைப்பொருட்கள் அல்லது பிற எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை முதன்மையாக விற்கும் பிசினஸ். க்ரோமா, ஒன்ப்ளஸ், ரெட்மி போன்ற கடைகள் இத்தகைய ப்ராபர்டிக்களுக்கு நல்ல உதாரணங்களாகும். இவ்வாறாக இருக்கும் பட்சத்தில், ப்ராபர்டி இன்சூரன்ஸ் கடைக்கும், அதிலிருக்கும் முக்கிய பொருட்களுக்கும் இழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும் பர்க்லரி இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது உதவும்.

பலசரக்கு மற்றும் பல்பொருள் அங்காடி

அருகிலுள்ள மளிகை கடைகள் முதல் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற சூப்பர்மார்க்கெட்களும் மற்றும் பல்பொருள் அங்காடிகளும்; அனைத்து மளிகை கடைகளுக்கும், பல்பொருள் அங்காடிகளுக்கும் கூட பர்க்லரி இன்சூரன்ஸில் காப்புறுதி பாதுகாப்பளிக்கப்படுகிறது. பிக் பசார், ஸ்டார் பசார் மற்றும் ரிலையன்ஸ் சூப்பர்மார்க்கெட் போன்ற கடைகள் இதற்கான சில உதாரணங்களாகும்.

அலுவலகங்கள் மற்றும் கல்வி பயிலும் இடங்கள்

எங்கள் ப்ராபர்டி இன்சூரன்ஸின் ஒரு வகையான இது, அலுவலக வளாகங்கள் மற்றும் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கோச்சிங் கிளாஸ்கள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பர்க்லரியிலிருந்து இது போன்ற ப்ராபர்டியை இன்சூர் செய்வது இழப்புகளிலிருந்து உங்களை பாதுகாப்பதற்கு முக்கியமானது மட்டுமின்றி, உங்கள் ஊழியர்கள் அல்லது மாணவர்களுக்கு உங்கள் கல்வி நிறுவனத்தின் மீது அதிக நம்பிக்கையை அளிக்கும். 

வீட்டு ரிப்பேர் சர்வீஸ்கள்

கார்பென்ட்ரி (தச்சு வேலை) மற்றும் பிளம்பிங் ரிப்பேர்கள் (குழாய் பழுது நீக்குவது) முதல் மோட்டார் கேரேஜ்கள் மற்றும் என்ஜினியரிங் வொர்க் ஷாப்கள் வரையிலான அனைத்து பிசினஸ்களுக்கும் இது காப்புறுதி வழங்குகிறது.

பர்சனல் லைஃப்ஸ்டைல் மற்றும் ஃபிட்னஸ்

உங்களுக்கு விருப்பமான மால்கள் மற்றும் துணிக்கடைகளிலிருந்து, ஸ்பாக்கள், ஜிம்கள் மற்றும் பிற கடைகள்; பர்சனல் லைஃப்ஸ்டைல் மற்றும் ஃபிட்னஸ் துறையில் உள்ள அனைத்து பிசினஸ்களுக்கும் கூட டிஜிட்-ன் பர்க்லரி இன்சூரன்ஸ் காப்புறுதி அளிக்கிறது. என்ரிச் சாலோன்கள், கல்ட் ஃபிட்னஸ் சென்டர்கள், ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி போன்றவை இது போன்ற ப்ராபர்டிக்களுக்கு சில உதாரணங்கள்.

உணவு மற்றும் தின்பண்டங்கள்

ஆம், நாம் அனைவரும் உணவருந்தும் இடம்! காஃபி ஷாப்கள் மற்றும் ஃபுட் டிரக்-களிலிருந்து உணவகங்கள் மற்றும் பேக்கரிக்கள் வரை; உணவருந்தும் அனைத்து விதமான இடங்களுக்கும் கூட டிஜிட்-ன் பர்க்லரி இன்சூரன்ஸ் பொருந்தக் கூடியதாக அமைகிறது. ஃபுட் கோர்ட்டில் உள்ள உணவகங்கள், சாய் பாய்ன்ட் மற்றும் சாயோஸ் போன்ற டீ கடைகள் மற்றும் பர்கர் கிங் மற்றும் பிஸ்ஸா ஹட் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் போன்றவை இது போன்ற ப்ராபர்டிக்களுக்கான சில உதாரணங்கள்.

ஹெல்த்கேர்

இது திருட்டுகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டிய மிக முக்கியமான ப்ராபர்டிக்களுள் ஒன்று; டிஜிட்-ன் பர்க்லரி இன்சூரன்ஸ் மருத்துவமனைகள், கிளினிக்-கள், நோய் கண்டறியும் மையங்கள் மற்றும் மருந்துக் கடைகள் மற்றும் பிற மெடிக்கல் ஸ்டோர்கள் ஆகியவற்றுக்கும் காப்புறுதி அளிக்கிறது.

சேவைகள் & மற்றவை

மேற்குறிப்பிட்ட வகைகள் மட்டுமின்றி, டிஜிட்-ன் பர்க்லரி இன்சூரன்ஸ் எல்லா அளவுகள் மற்றும் இயல்புகளிலான பிசினஸ்களுக்கும் ஏற்றது. உங்களுடைய பிசினஸ் வகையை இந்த பட்டியலில் கண்டு கொள்ள முடியவில்லை என்றால், உங்கள் வீடு அல்லது பிசினஸிற்கு பொருந்துகிற படியான சிறப்பான பர்க்லரி இன்சூரன்ஸை தேர்வு செய்வதற்கு நாங்கள் உதவுவோம்.

இந்தியாவில் ஆன்லைன் பர்க்லரி இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்