ப்ராபர்டி இன்சூரன்ஸ் உங்கள் வீடு, கடை மற்றும் வணிகத்திற்காக
property-insurance
usp icon

Zero

Documentation

usp icon

Quick Claim

Process

usp icon

Affordable

Premium

Terms and conditions apply*

back arrow
Home Insurance exchange icon
Zero Paperwork. Online Process.
home icon
shop icon
office icon
factory icon
Please enter property type
Please select property type
Enter Valid Pincode
+91
Please enter valid mobile number
I agree to the Terms & Conditions
background-illustration
background-illustration

ப்ராபர்டி இன்சூரன்ஸ் என்றால் என்ன?

வீடு, அபார்ட்மெண்ட், வணிகம், கஃபே அல்லது மருத்துவமனை என எதுவாக இருந்தாலும், ப்ராபர்டி இன்சூரன்ஸ் என்பது அந்த கட்டிடத்தையும் அதன் உள்ளடக்கங்களையும் பாதுகாப்பதற்கான ஒரு இன்சூரன்ஸ் பாலிசியாகும். தீ, திருட்டு, நிலச்சரிவுகள், பாறை சரிவுகள், இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் இன்சூர் செய்யப்பட்ட சொத்துக்கு ஏற்படும் இழப்பு/சேதம்/அழிவு ஆகியவற்றை இந்த பாலிசி உள்ளடக்குகிறது. 

எனவே, நீங்கள் பாதுகாக்க விரும்புவது உங்கள் கடையாக இருந்தாலும் அல்லது உங்கள் அழகான வீடாக இருந்தாலும், டிஜிட்-ல் இருந்து ப்ராபர்டி இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது அவசியம். துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளில் உங்களுக்கு பக்க பலமாக இருந்து சாத்தியமான சேதங்கள் மற்றும் இழப்புகளைத் தடுக்க இது உதவுகிறது. 

Read More

ப்ராபர்டி இன்சூரன்ஸ் ஏன் அவசியம்?

Burglary
2021 ஆம் வருடத்தில் மட்டும் இந்தியாவில் 1.6 மில்லியன் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.(1)
Loss of Property
இந்தியாவில் உள்ள 64% மக்களுக்கு வீட்டுப் பாதுகாப்புக்கு ஏற்படும் அபாயங்களைக் சரியாக கையாளத் தெரிவதில்லை. (2)
Fire Outbreak
தீ விபத்து தான் வணிக செயல்பாடுகளுக்கு 3வது பெரிய ஆபத்தாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. (3)
Home Theft
இந்தியாவில் நிகழும் திருட்டுக்களில் 70% வீட்டுத் திருட்டுகளே. (4)

டிஜிட்-ன் ப்ராபர்டி இன்சூரன்ஸின் சிறப்பம்சம் என்ன?

  • பணத்திற்கான மதிப்பு : ப்ராபர்டி இன்சூரன்ஸ் என்பது மிகப் பெரிய விஷயமாகும், ஏனென்றால் அது உங்கள் பில்டிங் மற்றும் அதனுள்ளே உள்ள பொருட்கள் அனைத்திற்கும் காப்புறுதி அளிக்கும் முக்கியமான நோக்கத்தை கொண்டது! எனவே, ப்ராபர்டி இன்சூரன்ஸ் பிரீமியம்கள் பொதுவாகவே அதிகமாக இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனினும், உங்கள் ப்ராபர்டியை இன்சூர் செய்வதற்கு ஏற்றவாறு கட்டுப்படியாகும் விலையில், முடிந்த வரை சிறப்பானதொரு பிரீமியத்தை உங்களுக்குக் கொடுப்பதற்கு நாங்கள் முயல்கிறோம்.

  • டிஜிட்டல் மயமானது : இந்தியாவின் முதல் ஆன்லைன் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான நாங்கள், எங்கள் அனைத்து ப்ராஸஸ்களையும், ப்ராபர்டி இன்சூரன்ஸ் வாங்குவதிலிருந்து கிளைம் செய்வது வரை, எல்லாவற்றையும் டிஜிட்டலாகவே வைத்திருக்க முயன்றிருக்கிறோம். எனவே ப்ராபர்டி இன்சூரன்ஸ் கிளைம்களின் போது கூட, ஆய்வு செய்வது அவசியப்படும் போதும், நீங்கள் இதனை ஆன்லைனிலேயே செய்யலாம்! (ரூ.1 லட்சத்திற்கும் மேற்பட்ட கிளைம்களை தவிர்த்து. ஏனெனில், இதற்கு இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏஐ/IRDAI) ஆணைப்படி நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்)

  • அனைத்து வகையான பிசினஸ்களுக்கும் காப்புறுதி அளிக்கிறது : உங்கள் குடும்ப பிசினஸ், மளிகை கடை அல்லது கடையின் பல கிளைகளையும் நீங்கள் பாதுகாக்க விரும்பினாலும், சிறியதோ அல்லது பெரியதோ, அனைத்து விதமான பிசினஸ்களுக்கும் எங்கள் ப்ராபர்டி இன்சூரன்ஸ் ஏற்றது.
  • வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கான பிளான்கள் : இன்றைய தலைமுறையினர் சொந்தமாக வாங்குவதை விடவும், அதிகப்படியாக வாடகைக்கு எடுத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். எனவே தான், நாங்கள் வாடகைக்கு இருப்பவர்களுக்கும் அவர்தம் சொந்தமான பொருட்களுக்கு மட்டும் காப்புறுதி அளிக்கின்ற பிளான்களையும் வழங்குகிறோம்.

டிஜிட்-ன் ப்ராபர்டி இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்புறுதி அளிக்கப்படுகிறது?

Fires

தீ

தீயின் காரணமாக ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து உங்கள் சொத்து மற்றும் அதில் உள்ளவற்றை பாதுகாக்கிறது!

Explosion & Aircraft Damage

வெடிவிபத்து & கசிவு

வெடிவிபத்து அல்லது கசிவு காரணமாக உங்கள் சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் அல்லது இழப்புகள் இந்த பாலிசி மூலம் பாதுகாக்கப்படும்.

Storms

புயல்

ஒரு சில நேரங்களில் புயலானது உங்கள் சொத்துக்கு கூட ஆபத்தானதாக விளையலாம்! ஆபத்தான புயல், சூறாவளி, சூறைக்காற்று அல்லது மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது.

Floods

வெள்ளம்

கட்டுக் கடங்காத மழை காரணமாக ஏற்படும் வெள்ளத்தினால் உங்கள் சொத்திற்கு சேதங்கள் மற்றும் இழப்புகள் ஏற்பட்டால் கூட இந்த இன்சூரன்ஸ் பாலிசி காப்புறுதியளிக்கிறது.

Earthquakes

நிலநடுக்கம்

இயற்கை சீற்றங்கள் என்பது எவராலும் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களால் வரக்கூடிய சாத்தியமான இழப்புகளில் இருந்து உங்களை பாதுக்காக்க அதற்கேற்ற இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

Impact Damage of any kind

ஏதேனும் வகையான விளைவு சேதம்

வாகனம், மரம் விழுதல் போன்ற வெளிப்புறப் பொருள்களால் சொத்து அல்லது அதிலுள்ள பொருட்களுக்கு ஏற்படும் சேதமும் இந்த பாலிசி மூலம் பாதுகாக்கப்படும்.

தீவிரவாதம்

தீவிரவாதம்

தீவிரவாத மற்றும் கெடு நோக்குடன் செய்யப்படும் செயல்களால் இன்சூர் செய்யப்பட்ட சொத்துக்கு ஏற்படும் சேதம் இந்த பாலிசி மூலம் பாதுகாக்கப்படும்.

Riots, Strikes

கலவரங்கள்,வேலை நிறுத்தங்கள்

கலவரங்கள்,வேலை நிறுத்தங்கள் காரணமாக உங்கள் சொத்துக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ப்ராப்பர்டி இன்சூரன்ஸ் பாலிசி மூலம் பாதுகாக்கப்படும்.

எங்கள் ப்ராபர்டி இன்சூரன்ஸ் என்னென்ன வழங்குகிறது

Home Insurance

ஹோம் இன்சூரன்ஸ்

ஹோம் இன்சூரன்ஸ் என்பது உங்கள் வீட்டிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது; அது அபார்ட்மெண்ட், வில்லா அல்லது தனி வீடாக இருந்தாலும் சரி; தீ, வெடிப்புகள், வெள்ளம், புயல் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளிலிருந்து உங்கள் வீட்டையும் அதில் உள்ளவற்றையும் இன்சூர் செய்ய ஹோம் இன்சூரன்ஸ் உதவுகிறது.

Business & Shop Insurance

பிசினஸ் & ஷாப்பிங் இன்சூரன்ஸ்

பிசினஸ் அல்லது ஷாப்பிங் இன்சூரன்ஸ் பாலிசி என்பது சிறு கடைகள், அழகு சாதனக் கடைகள், ஜெனரல் ஸ்டோர்கள், அலுவலக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற வணிகம் தொடர்பான சொத்துக்களை இயற்கைப் பேரிடர்கள் மற்றும் தீ விபத்துகளால் ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

ப்ராபர்டி இன்சூரன்ஸ் பிளானின் வகைகள்

தீ விபத்து, வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராக டிஜிட்-ல் உள்ள கோ டிஜிட் பாரத் லகு உத்யம் சுரக்ஷா, கோ டிஜிட் பாரத் சூக்ஷ்ம உத்யம் சுரக்ஷா பாதுகாப்பு வழங்குகிறது மற்றும் வீட்டைப் பாதுகாக்க டிஜிட்-ல் கோ டிஜிட் பாரத் க்ரிஹ ரக்ஷா பாலிசி உள்ளது. சொத்துக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் திருடப்படும் அபாயத்தில் உள்ளதால், நாங்கள் டிஜிட்-ல் பர்க்லரி இன்சூரன்ஸ் என்ற தனிப் பாலிசியின் கீழ் திருட்டில் இருந்தும் காப்புறுதி வழங்குகிறோம். அதனால், உங்கள் சொத்துக்கு, தீ விபத்து மற்றும் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து மட்டுமல்ல, திருட்டுகளிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது. நீங்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், வெவ்வேறு கவரேஜ் விருப்பங்களை உங்களுக்கு இங்கே வழங்கியுள்ளோம்

விருப்பத்தேர்வு 1

விருப்பத்தேர்வு 2

விருப்பத்தேர்வு 3

உங்கள் வீடு அல்லது பிசினஸ் சம்மந்தமான உள்ளடக்கங்களை மட்டும் இது உள்ளடக்குகிறது

உங்கள் வீடு அல்லது பிசினஸ் கட்டிடம் மற்றும் அதில் உள்ளவற்றை இது உள்ளடக்குகிறது.

உங்கள் கட்டிடத்தை மட்டும் உள்ளடக்குகிறது.

ப்ராபர்டி இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

  • உள்ளடக்கம் - ப்ராபர்டி இன்சூரன்ஸில் ‘உள்ளடக்கங்கள்’ என்றால் என்ன என்பது குறித்து உங்களுக்கு சற்று குழப்பமாக இருந்தால், அது உங்கள் வளாகத்தில் நிரந்தரமாக இணைக்கப்படாத அல்லது உங்கள் வளாகத்தின் கட்டமைப்பில் நிலையாக பொருத்தப்படாத பொருட்களைக் குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
  • கட்டடம்/அமைப்பு– உங்கள் ப்ராபர்டி இன்சூரன்ஸில் உள்ள ‘கட்டடம்’ or ‘அமைப்பு’ என்பது நீங்கள் இன்சூர் செய்திருக்கும் ஒட்டுமொத்த ப்ராபர்டியையும் குறிக்கிறது. உதாரணத்திற்கு, உங்கள் வீடு அல்லது தனித்த வில்லாவினை நீங்கள் பாதுகாக்க விரும்பினால், இங்கு காப்புறுதி அளிக்கப்பட்டிருக்கும் ‘கட்டடம்’ என்பது உங்கள் ஒட்டுமொத்த வில்லாவையும் குறிக்கிறது.

யாருக்கு ப்ராபர்டி இன்சூரன்ஸ் தேவைப்படும்?

நீங்கள் குடியிருக்கும் வீடு அல்லது உங்கள் பிசினஸின் ஒரு பகுதியான உங்கள் அலுவலகம் போன்ற ஏதேனும் ஒரு வகையான ப்ராபர்டியை வைத்திருப்பவர்களுக்கு இது தேவைப்படும்; ப்ராபர்டி இன்சூரன்ஸ் வைத்திருப்பது என்பது ஒருவரை இயற்கை பேரிடர், குண்டுவெடிப்பு, தீ விபத்து அல்லது கொள்ளைச் சம்பவம் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படக் கூடிய பெரிய அளவிலான சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கிறது!

வீட்டு உரிமையாளர்கள்

நீங்கள் பல வருடங்களாக வாழும் வீடாக இருப்பினும், அல்லது உங்கள் புத்தம் புதிய கனவு இல்லமாக இருப்பினும், வீடு என்பது அனைவருக்குமே மிகவும் விலைமதிப்பற்ற சொத்தாக கருதப்படுகிறது. எனவே, உங்கள் கட்டுப்பாட்டிற்கு மீறிய சூழ்நிலைகளிலிருந்து அதற்கு பாதுகாப்பளிப்பது தான் குறைந்தபட்சம் உங்கள் கையிருப்பையும், வீட்டினையும் பாதுகாப்பதற்கு நீங்கள் செய்யக் கூடியதாகும்.

வாடகைக்கு குடியிருப்பவர்கள்

பொதுவாகவே, ப்ராபர்டி இன்சூரன்ஸ் என்பது சொந்தமாக சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே என்ற கருத்து இருக்கிறது. ஆனால், டிஜிட்-ல், வீடுகளை வாடகைக்கு எடுத்திருப்பவர்கள் அல்லது தங்களின் பிசினஸிற்காக அலுவலகங்களை வாடகைக்கு எடுத்திருப்பவர்களுக்கு கூட நாங்கள் ப்ராபர்டி இன்சூரன்ஸ் பாலிசிக்களை வழங்குகிறோம். எனவே, நீங்கள் இந்த வகையை சேர்ந்தவராக இருந்தால், ப்ராபர்டி இன்சூரன்ஸ் உங்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது!

சிறு வணிக உரிமையாளர்கள்

நீங்கள் ஒரு சிறிய ஜெனெரல் ஸ்டோர் அல்லது தனிப்பயனாக்கப்பட்ட ஃபேஷன் மற்றும் கைவினைப்பொருட்கள் கொண்ட சிறிய பொட்டிக் என எந்த வணிகத்தை நிர்வகித்தாலும், டிஜிட் உங்கள் அனைத்து வகையான வணிகங்களுக்கும் ஏற்ற இன்சூரன்ஸ் பாலிசியை வழங்குகிறது. நீங்கள் தனியாகவே ஒரு சிறு வணிகத்தை நடத்துபவர் என்றால், சாத்தியமான இழப்புகள் மற்றும் அபாயங்களிலிருந்து உங்கள் வணிகத்தைப் பாதுகாக்க ப்ராபர்டி இன்சூரன்ஸ் பாலிசி முக்கியமானதாகும்.   

நடுத்தர வணிக உரிமையாளர்கள்

நீங்கள் பல ஜெனரல் ஸ்டோர்கள், உணவகங்கள் அல்லது நடுத்தர அளவிலான நிறுவனங்களை நிர்வகித்தால்; தீ விபத்து, வெடிப்பு அல்லது வெள்ளம், புயல் மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படக்கூடிய சாத்தியமான சேதங்கள் மற்றும் இழப்புகளை ஈடுகட்ட நடுத்தர அளவிலான வணிக உரிமையாளர்களுக்கு ப்ராபர்டி இன்சூரன்ஸ் பொருத்தமானதாக அமையும்.

பெரிய நிறுவனங்கள்

நீங்கள் மிகப் பெரிய நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தால், உங்கள் வணிகத்தின் பெரிய அளவிலான செயல்பாடுகளின் காரணமாக, ப்ராபர்டி இன்சூரன்ஸ் உங்கள் எல்லா சொத்துக்களையும் பாதுகாப்பதில் முக்கியமானதாகும்.

காப்புறுதி வழங்கப்பேறும் ஹோம் ப்ராபர்டிக்களின் வகைகள்

இண்டிவிஜுவல் (தனிப்பட்ட) அபார்ட்மெண்ட்

இது ஹவுசிங் சொஸைட்டி அல்லது தனித்த பில்டிங்-ஐ சேர்ந்த தனிப்பட்ட ஃப்ளாட்களில் வசிப்பவர்களுக்கானது. இது உங்கள் சொந்த ஃப்ளாட்டாகவும் இருக்கலாம் அல்லது வாடகைக்கு குடியிருக்கும் ஃப்ளாட்டாக கூட இருக்கலாம். எங்கள் பிளான்கள் இரண்டுக்குமே பொருந்தும்!

 

தனிப்பட்ட கட்டிடம்

ஒருவேளை நீங்களும் உங்கள் குடும்பமும் ஒரு தனி கட்டிடத்தில் வசிக்கலாம், முழு கட்டிடத்திலும் பிளாட்களை சொந்தமாக அல்லது வாடகைக்கு எடுத்து இருக்கலாம். இந்தச் சந்தர்ப்பத்தில், டிஜிட் மூலம் ப்ராபர்டி இன்சூரன்ஸ் பாலிசியைக் கொண்டு அதனை நீங்கள் பாதுகாக்கலாம்.

தனிப்பட்ட வில்லா

நீங்கள் ஒரு தனி வில்லா அல்லது வீட்டைச் சொந்தமாக வைத்திருந்தால் அல்லது வாடகைக்கு எடுத்திருந்தால், உங்கள் வில்லாவையும் அதில் உள்ளவற்றையும் சாத்தியமான அபாயங்களிலிருந்து பாதுகாக்க ப்ராபர்டி இன்சூரன்ஸ்  அவசியமாகும்.

கடைகள் மற்றும் பிசினஸ் ப்ராபர்டிகளின் வகைகள்

மொபைல் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்கள்

மொபைல் ஃபோன்கள், மொபைல் சம்பந்தப்பட்ட துணைப்பொருட்கள் அல்லது பிற எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை முதன்மையாக விற்கும் பிசினஸ். க்ரோமா, ஒன்ப்ளஸ், ரெட்மி போன்ற கடைகள் இத்தகைய ப்ராபர்டிக்களுக்கு நல்ல உதாரணங்களாகும். இவ்வாறாக இருக்கும் பட்சத்தில், ப்ராபர்டி இன்சூரன்ஸ் கடைக்கும், அதிலிருக்கும் முக்கிய பொருட்களுக்கும் இழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும்; இது போன்ற கடைகளில் பொதுவாக நடக்கும் அசம்பாவிதங்களில் ஒன்று கொள்ளைச் சம்பவங்கள் தான்.

பலசரக்கு மற்றும் பல்பொருள் அங்காடி

அருகிலுள்ள மளிகை கடைகள் முதல் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற சூப்பர்மார்க்கெட்களும் மற்றும் பல்பொருள் அங்காடிகளும்; அனைத்து மளிகை கடைகளுக்கும், பல்பொருள் அங்காடிகளுக்கும் கூட ப்ராபர்டி இன்சூரன்ஸில் காப்புறுதி பாதுகாப்பளிக்கப்படுகிறது. பிக் பசார், ஸ்டார் பசார் மற்றும் ரிலையன்ஸ் சூப்பர்மார்க்கெட் போன்ற கடைகள் இதற்கான சில உதாரணங்களாகும்.

அலுவலகங்கள் மற்றும் கல்வி பயிலும் இடங்கள்

எங்கள் ப்ராபர்டி இன்சூரன்ஸின் ஒரு வகையான இது, அலுவலக வளாகங்கள் மற்றும் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கோச்சிங் கிளாஸ்கள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற ப்ராபர்டியை இன்சூர் செய்வது இழப்புகளிலிருந்து உங்களை பாதுகாப்பதற்கு முக்கியமானது மட்டுமின்றி, உங்கள் ஊழியர்கள் அல்லது மாணவர்களுக்கு உங்கள் கல்வி நிறுவனத்தின் மீது அதிக நம்பிக்கையை அளிக்கும்.

வீட்டு ரிப்பேர் சர்வீஸ்கள்

கார்பென்ட்ரி (தச்சு வேலை) மற்றும் பிளம்பிங் ரிப்பேர்கள் (குழாய் பழுது நீக்குவது) முதல் மோட்டார் கேரேஜ்கள் மற்றும் என்ஜினியரிங் வொர்க் ஷாப்கள் வரையிலான அனைத்து பிசினஸ்களுக்கும் இது காப்புறுதி வழங்குகிறது.

தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் உடற்தகுதி

உங்களுக்குப் பிடித்த மால் மற்றும் துணிக்கடைகளில் இருந்து ஸ்பா, ஜிம் மற்றும் பிற கடைகள் வரை; டிஜிட் வழங்கும் ப்ராபர்டி இன்சூரன்ஸ் பாலிசியானது அனைத்து தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சித் துறை சார்ந்த வணிகங்களையும் காப்பீடு செய்ய உதவுகிறது. 

உணவு மற்றும் உணவுப் பொருட்கள்

அனைவருக்கும் பிடித்தமான இடம்! கஃபே மற்றும் ஃபுட் டிரக் முதல் உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் வரை; டிஜிட் வழங்கும் ப்ராபர்டி இன்சூரன்ஸ் பாலிசிகள் அனைத்து வகையான உணவகங்களுக்கும் மிகவும் பொருத்தமானவை ஆகும்.

சுகாதாரம்

மருத்துவமனைகள், கிளினிக்குகள், நோயறிதல் மையங்கள் மற்றும் மருந்தகங்கள் போன்ற மிக முக்கியமான சொத்துக்கள் யாவும் டிஜிட் வழங்கும் ப்ராபர்டி இன்சூரன்ஸ் பாலிசிகள் கீழ் காக்கப்படுகின்றன. 

மற்றவை

மேலே குறிப்பிட்டுள்ள வகைகளைத் தவிர, டிஜிட்-ன் ப்ராபர்டி இன்சூரன்ஸ் பாலிசியானது பல்வேறு வகைகள், இயல்புகள் மற்றும் அளவிலான வணிகர்களுக்கு ஏற்றதாகும். பட்டியலில் உங்கள் பிசினஸ் வகையை உங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால், தயங்காமல் எங்களைத் தொடர்பு கொள்ளவும், உங்கள் வணிகத்திற்கு பொருத்தமான மற்றும் சிறந்த ப்ராபர்டி இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பதில் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.

இந்தியாவிலுள்ள ப்ராபர்டி இன்சூரன்ஸ் பிளான்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்க

இந்தியாவில் ப்ராபர்டி இன்சூரன்ஸ் பாலிசி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்