டிஜிட் பார்ட்னர் ஆகுங்கள்

ஒன்றாகச் சேர்ந்து ஒரு அற்புதமான பயணத்தை தொடங்குவோம்

POSP (பாயிண்ட் ஆஃப் சேல்ஸ்பெர்சன்) என்பது இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்கும் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டுகளுக்கு கொடுக்கப்படும் பெயர் ஆகும்.

ஒரு POSP ஆவதற்கு, IRDAI வழங்கிய குறைந்தபட்ச கல்வித் தகுதிகளை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். மேலும், நாங்கள் வழங்கும் பயிற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். POSP ஆவது எப்படி மற்றும் அதனால்  பெறக்கூடிய பலன்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இதைப் படிக்கவும்.

POSPயாக இருப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

நீங்களே உங்களுக்கு முதலாளி - உங்கள் வசதிக்கேற்ப வேலை செய்யலாம். ஆம், நீங்கள் தான் உங்களுக்கு முதலாளி!

ஃபிக்ஸ்ட் டைமிங்ஸ் இல்லை - உங்களுக்கான வேலை நேரத்தை நீங்களே முடிவு செய்யலாம். இத்துடன் இதனை முழு நேர அல்லது பகுதி நேர வேலையாக செய்யலாமா என்பதையும் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

வீட்டில் இருந்தபடி வேலை - ஆன்லைன் செயல்முறைகளின் மூலம் பாலிசிகளை விற்கலாம். வீட்டிலிருந்து அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம்!

வெறும் 15 மணிநேர பயிற்சி - 15 மணிநேர பயிற்சியை மேற்கொண்டாலே போதும், நீங்கள் ஒரு இன்சூரன்ஸ் எக்ஸ்பர்ட் ஆகலாம். இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்திலும் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்!

அதிக வருமானத்தை ஈட்டுங்கள் - நீங்கள் விற்கும் பாலிசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து உங்களின் வருமானம் இருக்கும்.

முதலீடு எதுவும் தேவையில்லை - சேரும் போது முன்பணம் கட்ட வேண்டியதில்லை. உங்களிடம் ஸ்மார்ட்போன்/கணினி மற்றும் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே போதுமானது!

யாரெல்லாம் POSP ஆகலாம்?

கல்லூரி மாணவர்கள

நீங்கள் உங்கள் உயர் படிப்பின் போதே பணம் சம்பாதிப்பதற்காக சிறிது நேரம் செலவிட விரும்பினால், இது உங்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

வீட்டில் இருக்கும் கணவன் மற்றும் இல்லத்தரசிகள்

நீங்கள் வீட்டிலேயே இருக்கும் கணவன் அல்லது மனைவியாக இருந்து, வேலைக்கென உங்களுக்கு சிறிது நேரம் இருந்தால், நீங்களும் POSP ஆகலாம். இதன் மூலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கூடுதல் வருமானம் ஈட்டலாம்.

ஓய்வு பெற்றவர்கள்

ஓய்வு பெற்ற பிறகும், நீங்கள் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆகலாம். உங்களுக்கு ஏற்ற அளவிலான நேரத்தை இதற்காக நீங்கள் செலவிடலாம், உங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம், மேலும் நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் வேலை செய்யலாம்.

தொழிலதிபர்கள்/ பெண் தொழில்முனைவோர்

நீங்கள் ஏற்கனவே ஒரு பிசினஸ் செய்து கொண்டிருக்கும் பட்சத்தில், இன்னும் பல வேலைகளை செய்ய விரும்பினால், நீங்கள் POSP ஆகும் வாய்ப்பினை தேர்வு செய்யலாம். நீங்கள் விரும்பும் அளவிற்கு மட்டும் வேலை செய்து, கூடுதலாக சம்பாதியுங்கள்.

டிஜிட்-இல் POSP ஆவது எப்படி?

ஸ்டெப் 1

மேலே கொடுக்கப்பட்டுள்ள எங்களின் POSP படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்யுங்கள். மேலும் பல தகவல்களுடன் எங்கள் குழுவினர் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

ஸ்டெப் 2

உங்கள் 15 மணிநேர பயிற்சியை முடிக்கவும்.

ஸ்டெப் 3

பரிந்துரைக்கப்பட்ட தேர்வை முடிக்கவும்.

ஸ்டெப் 4

எங்களின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள். அவ்வளவு தான்! நீங்கள் சான்றிதழளிக்கப் பெற்ற ஒரு POSP ஆகிவிடுவீர்கள்.

டிஜிட் உடன் ஏன் பார்ட்னராக இணைய வேண்டும்?

டிஜிட் உடன் நேரடியாக வேலை செய்யுங்கள்

2019 ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றிடுங்கள்.

முழு நேர ஆதரவு

உங்களுக்காகவே இயங்கும் 24x7 மணி நேர உதவிக் குழு எங்களிடம் உள்ளது.

காகிதம் எதுவுமில்லாமல் பாலிசி வழங்கப்படுகிறது

எங்களின் அனைத்து செயல்முறைகளும் எவ்வித பேப்பர்வர்க்கும் இல்லாமல் இணையம் மூலமாக சுலபமாக நிகழ்கிறது.

உடனடியாக பாலிசி வழங்கப்படுகிறது

நீண்ட செயல்முறைகளோ அல்லது சோர்வூட்டும் பேப்பர்வர்க்குகளோ எதுவுமில்லை. நாங்கள் இன்சூரன்ஸ் பாலிசிகளை இணையம் வழியே எந்தவொரு சிரமமும் இல்லாமல்  உடனடியாக வழங்குகிறோம்.

விரைவாக கமிஷன் அளிக்கப்படுகிறது

நாங்கள் வழங்கும் கமிஷன்கள் அனைத்தும் அவரவர் கணக்கில் விரைவாக சேர்க்கப்படுகிறது. அதாவது பாலிசி வழங்கிய 15 நாட்களில் உங்கள் கமிஷனானது உங்கள் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

POSP ஏஜென்ட் ஆவதற்கான தகுதி வரம்பு என்ன?

நீங்கள் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக விரும்பினால், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரை முடித்திருக்க வேண்டும், மேலும் அரசால் வழங்கப்பட்ட ஆதார் (Aadhaar) கார்டு மற்றும் பான் (PAN ) கார்டு கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

எந்தெந்த ஆவணங்களை நான் சமர்ப்பிக்க வேண்டும்?

பதிவு செய்ய கீழுள்ள ஆவணங்கள் அனைத்தும் அவசியம். இவை அனைத்திலும் உங்களின் கையெழுத்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். 

  • 10 ஆம் வகுப்பு அல்லது மேல் படிப்பை முடித்ததற்கான சான்றிதழ்
  • பான் (PAN ) கார்டு மற்றும் ஆதார் (Aadhaar) கார்டின் நகல் (முன் மற்றும் பின் பக்கம்)
  • உங்கள் பெயர் கொண்டுள்ள கான்செல்ட் செக்
  • 1 புகைப்படம்.

பான் (PAN) கார்டு மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய இரண்டும் ஒருவருடையதாக இருக்க வேண்டுமா?

ஆம், செலுத்தப்படும் அனைத்து கமிஷன்களும் TDSக்கு உட்பட்டது. உங்கள் பான் (PAN) கார்டை வைத்து தான் வருமான வரி அதிகாரிகளுக்கு TDS செலுத்தப்படுகிறது.

நான் இன்சூரன்ஸை எப்போது விற்கத் தொடங்கலாம்?

நீங்கள் எங்களிடம் பதிவு செய்தவுடன், PoSP தேர்வுக்கான உங்கள் பயிற்சியைத் தொடங்கலாம். தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், உங்களுக்கு eCertificate (ஈ சான்றிதழ்) கிடைக்கும். அதற்குப் பின் நீங்கள் PoSP ஏஜென்ட் ஆகி இன்சூரன்ஸை விற்கத் தொடங்கலாம்.

POS ஆக சான்றிதழ் பெறுவதற்கு கட்டாயமாக ஏதேனும் பயிற்சி மேற்கொள்ள வேண்டுமா

ஆம், POSP ஆக நீங்கள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இன்சூரன்ஸின் அடிப்படைகள், பாலிசி வகைகள், பாலிசி வழங்குவதற்கான செயல்முறை மற்றும் கிளைம்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் போன்ற தலைப்புகள் யாவுமே இந்த பயிற்சியில் இடம்பெரும்.

டிஜிட்-ன் பார்ட்னராக நான் எவ்விதமான சேவைகளைப் பெறலாம்?

அனைத்து டிஜிட் பார்ட்னர்களுக்கும் ரிலேஷன்ஷிப் மேனேஜர் என்று ஒருவர் நியமிக்கப்படுவார். அவர் ஏஜென்ட்டுகளுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்குவார், மேலும் டிஜிட் தளத்தில் விற்கப்படும் பாலிசிகள் சார்ந்த கேள்விகளுக்கும் பதிலளிப்பார். ஏஜென்ட்டுகள் எங்களின் உதவிக் குழுவை தொடர்புகொள்ள,  partner@godigit.com என்கிற முகவரிக்கும் இமெயில் அனுப்பலாம்.

கார்ப்பரேட் மற்றும் தனிப்பட்ட முகவர்களின் பட்டியலுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.