இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கவும்
Instant Policy, No Medical Check-ups

இந்தியாவில் இருந்து ஜெர்மனி விசா

இந்தியாவில் இருந்து ஜெர்மனி டூரிஸ்ட் விசா பற்றி அனைத்தும்

ஜெர்மனிக்கு பயணம் செய்ய ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கலாம். அதன் துடிப்பான மற்றும் கலைநயம் மிக்க நகரங்கள் முதல் அதன் விசித்திரமான மற்றும் ஆஃப்பீட் கிராமப்புறங்கள் வரை, ஜெர்மனி உங்கள் அடுத்த பயணத்தை அழைகாக்க ஓர் அழகான நாடாக இருக்கும். ஆக்டோபர்ஃபெஸ்ட் மற்றும் பெர்லின் திரைப்பட விழா போன்ற நிகழ்வுகளின் தாயகமான இது அனைத்து கலைகளின் பிரபலமான நாடாக திகழ்கிறது. ஆனால், உங்கள் பயணக் கனவுகளை அடையத் தொடங்குவதற்கு முன்- விசாவுக்கு விண்ணப்பிக்கவும், பின்னர், வானமே உங்கள் எல்லையாக இருக்கும்.

இந்தியர்களுக்கு ஜெர்மனிக்கு செல்ல விசா வேண்டுமா ?

ஆம், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஜெர்மனிக்கு செல்ல ஷெங்கன் விசா தேவை. இதன் மூலம், ஷெங்கன் பகுதியில் உள்ள மற்ற 25 நாடுகளுக்கும் நீங்கள் செல்ல முடியும். விசா பெற்ற பிறகு, இந்தியர்கள் அதிகபட்சம் 90 நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், உங்கள் பாஸ்போர்ட் ஜெர்மனிக்கு வந்த தேதியிலிருந்து குறைந்தது 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்திய குடிமக்களுக்கு ஜெர்மனியில் ஆன் அரைவல் விசா உள்ளதா?

இல்லை, ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் வருகையின் போது விசாவை வழங்குவதில்லை. ஜெர்மனி செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு ப்ரீ-அப்ரூவ்டு விசா தேவை.

ஜெர்மனி டூரிஸ்ட் விசாவிற்கு தேவையான ஆவணங்கள்

ஷெங்கன் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது, உங்களுக்கு பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்:

  • முறையாக நிரப்பப்பட்ட அப்ளிக்கேஷன் ஃபார்ம்

  • இரண்டு ஐடென்டிட்டிகள், கலர் போட்டோக்கள் 35X45mm. இது உங்கள் முகத்தில் 70-80% தெரிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • செல்லுபடியாகும் பாஸ்போர்ட் 10 வருடங்களுக்கு மேற்படாததாக இருக்க வேண்டும். இது ஜெர்மனி அல்லது வேறு எந்த ஷெங்கன் நாட்டிலிருந்தும் நீங்கள் புறப்படும் தேதியிலிருந்து குறைந்தது 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

  • இன்வார்ட்ஸ் மற்றும் அவுட்வார்ட்ஸ் விமான டிக்கெட்டுகளின் அடிப்படையில் பயணத்திற்கான சான்று.

  • ஹோட்டல் அல்லது ஏர்பிஎன்பி புக்கிங் அடிப்படையில் தங்குவதற்கான சான்று.

  • 30,000 யூரோக்களுக்கு குறைந்தபட்ச ஹெல்த் இன்சூரன்ஸ் கவரேஜ் கொண்ட டிராவல் இன்சூரன்ஸ் பாலிசி.

  • உங்களை சப்போர்ட் செய்ய போதுமான நிதி ஆதாரங்களுக்கான சான்று, இது கடந்த 6 மாதங்களின் பேங்க் ஸ்டேட்மெண்ட்டாக இருக்க வேண்டும்.

  • உங்கள் பயண நோக்கத்தை விளக்கும் கவர் லெட்டர்.

  • பள்ளி ஐ.டி (ID)/கல்லூரி ஐ.டி (ID)/ நிறுவனத்தின் ரெஜிஸ்டரேஷன்/ரிட்டையர்மெண்ட் ப்ரூஃப்.

  • அந்தந்த விசாவுக்கு ஃபீஸ் செலுத்தியதற்கான ப்ரூஃப்.

இந்திய குடிமக்களுக்கான ஜெர்மனி விசா ஃபீ

இந்திய குடிமக்களுக்கான ஜெர்மனி விசா ஃபீ விசா வகையைப் பொருட்படுத்தாமல் பெரியவர்களுக்கு சுமார் இ.யூ.ஆர் (EUR) 75 மற்றும் குழந்தைகளுக்கு இ.யூ.ஆர் (EUR) 37.50 ஆகும். ஆனால் ஃபீயிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட ஒரு சிலர் பின்வருமாறு:

ஜெர்மனி டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஜெர்மனி டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை எளிதானது, பின்வருமாறு:

  • விசா அப்ளிக்கேஷன் ஃபார்ம் டவுன்லோட் செய்து கவனமாக நிரப்பவும்.

  • விசா அப்ளிக்கேஷன் மையம் அல்லது தூதரகத்தில் அப்பாயின்மெண்ட் செய்யுங்கள்.

  • குறிப்பிட்டுள்ளபடி விசா ஃபீஸ் செலுத்தவும்.

  • குறிப்பிட்ட தேதியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுங்கள்.

  • தேவையான அனைத்து தகவல்களையும் பயோமெட்ரிக்ஸையும் சமர்ப்பிக்கவும்.

  • பிரதிநிதிகளின் பதிலுக்காக காத்திருங்கள்.

  • உங்கள் பாஸ்போர்டை சேகரித்து, விசாவின் அப்ரூவல்/நிராகரிப்பைப் பெறுங்கள்.

ஜெர்மனி டூரிஸ்ட் விசா ப்ராசஸிங் டைம்

ஜெர்மனி டூரிஸ்ட் விசா ப்ராசஸிங்கிற்கு சுமார் 15 நாட்கள் ஆகும். ஆனால் சில சந்தர்ப்பங்களில், இது 30 நாட்கள் வரை கூட நீட்டிக்கப்படலாம்.

ஜெர்மனிக்கான டிராவல் இன்சூரன்ஸை நான் வாங்க வேண்டுமா?

ஷெங்கன் விசா ரெக்கியூர்மெண்ட், அனைத்து இந்திய பயணிகளுக்கும் ஜெர்மனிக்கான டிராவல் இன்சூரன்ஸ் கட்டாயமாகும். இருப்பினும், அதைப் பெறுவதற்கான உங்கள் காரணமாக அது இருக்கக் கூடாது! நாம் எவ்வளவுதான் திட்டமிட்டாலும் சில விஷயங்கள் நடக்கும். ஜெர்மனிக்கான ஒரு டிராவல் இன்சூரன்ஸ் அத்தகைய சூழ்நிலைகளில் உங்களை பாதுகாக்கும் - அனைத்து எதிர்பாராத சூழ்நிலைகளிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும். இந்த சூழ்நிலைகள் ஃப்ளைட் தாமதம் போன்ற சிறிய விஷயங்களிலிருந்து மருத்துவ அவசரநிலை அல்லது பயண ரத்து போன்ற பெரிய விபத்துகள் வரை எதுவாகவும் இருக்கலாம்.

நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய சில சூழ்நிலைகள் பின்வருமாறு, மேலும் டிராவல் இன்சூரன்ஸ் அதன் காரணமாக ஏற்படும் இழப்புகளிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாக்க முடியும்:

இருந்து ஜெர்மனி டூரிஸ்ட் விசா பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

விசா அப்ளிக்கேஷன் ப்ராசஸின் போது டிராவல் இன்சூரன்ஸுக்கு அப்ளிகேஷன் செய்வது அவசியமா?

உங்கள் விசா அப்ளிக்கேஷன் மற்றும் ஏற்றுக்கொள்ளும் செயல்முறையை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கு டிராவல் இன்சூரன்ஸ் வைத்திருப்பது சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிராவல் இன்சூரன்ஸ் இல்லாததன் விளைவாக விசா நிராகரிக்கப்படலாம்.

அப்ளிக்கேஷன் ப்ராசஸஸின் போது எனது நிதி நிலையை நான் குறிப்பிட வேண்டுமா?

ஆம், நீங்கள் முந்தைய 3 மாதங்களின் உங்கள் பேங்க் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரிகள் அவற்றை ஆராய்ந்து நீங்கள் விசாவுக்கு தகுதியானவரா என்பதை தீர்மானிப்பார்கள்.

இந்தியப் பார்வையாளர்கள் ஜெர்மனிக்கு வந்த பிறகு போது விசா பெற முடியுமா?

இல்லை கிட்டத்தட்ட எல்லா ஐரோப்பிய நாடுகளையும் போலவே ஜெர்மனியிலும் ஆன் அரைவல் விசாவுக்கு எந்த ஸ்கீம்களும் இல்லை. ரீஜினல் ஜெர்மன் தூதரகத்தில் முன்கூட்டியே அப்ளை செய்ய வேண்டும்.

நான் ஷெங்கன் விசாவில் ஜெர்மனி செல்ல முடியுமா?

ஆம், ஜெர்மனி ஷெங்கன் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். நீங்கள் ஷெங்கன் விசாவில் ஜெர்மனி செல்லலாம். அப்ளிக்கேஷன் ப்ராசஸஸ் ஒரே மாதிரியாக இருக்கும்.

எனது விசா அப்ளிக்கேஷன் மற்றும் ப்ராசஸிங்கான சார்ஜகள் என்ன என்பதை நான் எவ்வாறு அறிவது?

ஜெர்மனியின் சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பார்வையிடுவதன் மூலம் அவற்றை எளிதாக அறிந்து கொள்ளலாம். சில நேரங்களில், கட்டண மாற்றம் ஏற்படும் போது, மாற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முக்கிய பப்ளிகேஷன்களில் விளம்பரங்கள் வழங்கப்படுகின்றன.