Premium Starting ₹395
24x7 Missed Call Facility
ஜெனரல்
ஜெனரல் பிராடக்ட்ஸ்
சிம்பிள் அண்ட் டிரான்ஸ்பேரன்ட்! பாலிசீஸ் தட் மேட்ச் ஆல் யோர் இன்ஷூரன்ஸ் நீட்ஸ்.
37K+ Reviews
7K+ Reviews
Scan to download
லைஃப்
லைஃப் பிராடக்ட்ஸ்
டிஜிட் லைஃப் இஸ் ஹியர்! டூ ஹெல்ப் யூ சேவ் அண்ட் ஸிக்யூர் யோர் லவ்ட் ஒன்ஸ் ஃப்யூச்சர் இன் த மோஸ்ட் சிம்ப்ளிஃபைட் வே.
37K+ Reviews
7K+ Reviews
Scan to download
கிளெயிம்ஸ்
கிளெயிம்ஸ்
We'll be there! Whenever and however you'll need us.
37K+ Reviews
7K+ Reviews
Scan to download
ரிசோர்ஸஸ்
ரிசோர்ஸஸ்
ஆல் த மோர் ரீசன்ஸ் டூ பீல் த டிஜிட் சிம்ப்ளிசிட்டி இன் யோர் லைஃப்!
37K+ Reviews
7K+ Reviews
Scan to download
37K+ Reviews
7K+ Reviews
எங்கள் வாட்ஸ்அப் எண் அழைப்புகளுக்காக பயன்படுத்த முடியாது. இது ஒரு மெசேஜ் மட்டுமே எண்.
Enter your Mobile Number to get Download Link on WhatsApp.
You can also Scan this QR Code and Download the App.
Premium Starting ₹395
24x7 Missed Call Facility
கொள்ளைக் கொள்ளும் நீலக் கடற்கரையில், அழகான தீவு மணலில் உல்லாசமாக தூங்கி எழுவதை நினைத்து பார்த்திருக்கிறீர்களா? உங்கள் அன்றாட வாழ்க்கை சலிப்பானதாக இருக்கிறதா, உச்ச கோடைக்காலத்தில் மழை வந்தால் இருக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை, அதுபோன்றதொரு அனுபவத்திற்கு, மாலத்தீவு உங்களுக்கான சரியான இடமாகும்.
இயற்கை சூழல் மற்றும் சுத்தமான காற்று தவிர, சாகச பிரியர்களுக்கு இது ஒரு கவர்ச்சிகரமான இடமாகும். ஸ்நோர்கெலிங், நீச்சல், ஜெட் ஸ்கீங், ஸ்கூபா டைவிங் மற்றும் ஃபிஷிங் ஆகியவை ஒருவர் ஈடுபடக்கூடிய சிறந்த செயல்பாடுகளாகும்.
இந்த வசீகரிக்கும் தீவில் விளையாட்டு, சாகசம் மற்றும் ஷாப்பிங் போன்ற பல விஷயங்கள் உள்ளன. மாலத்தீவில் சுமார் 1192 பவளத் தீவுகள் உள்ளன, அவை காண்போரை அங்கேயே வீடு கட்டிக்கொள்ளும் அளவிற்குக் கொள்ளை அழகுடன், அனைவரையும் ஈர்க்கும். இது ஹனிமூன் செய்பவர்களுக்கும் ஏற்ற இடமாகும். இப்போது மாலத்தீவு கண்ணில் வந்து வந்து போகிறதா?
இந்தத் தீவின் வசீகரம் அனைவரையும் கண் இமைக்கும் நேரத்தில் அங்கு செல்ல வேண்டும் என்ற உந்துதலை அளிக்கிறது. உங்கள் விடுமுறையை மாலத்தீவில் கழிக்க கனவு காண்பதற்கும் திட்டமிடுவதற்கும் முன், நீங்கள் விசா தேவைகளை சரிபார்க்க வேண்டும்.
நீங்கள் விடுமுறைக்காக மாலத்தீவுக்குச் செல்ல திட்டமிட்டால், உங்களுக்கு பிரீ-அரைவல் விசா தேவையில்லை. செல்லுபடியாகும் அனைத்து பயண ஆவணங்களும் இருக்க வேண்டும். உங்கள் பாஸ்போர்ட் மாலத்தீவுக்கு வருகை தந்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு செல்லுபடியாக வேண்டும்.
மாலே விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இந்தியர்களுக்கு டூரிஸ்ட் விசா வழங்கப்படுகிறது, இது 30 நாட்கள் லிமிட்டுடன் வருகிறது. நீண்ட காலம் தங்குவதற்கு உங்களைத் தூண்டும் இடத்தின் மீது காதல் கொள்வது எளிது. அப்படியானால், அந்தந்த அதிகாரிகளின் அப்ரூவலுக்குப் பிறகு 90 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம்.
இந்த நீட்டிப்புக்கு இந்தியர்கள் விதிவிலக்கு என்பது உங்களுக்குத் தெரியுமா? நெருக்கமான மூலோபாய, இராணுவ, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளுக்கு இருநாட்டு அரசிற்கு நாம் நன்றி சொல்லவேண்டும். இது தவிர, புரூனியர்கள் 15 நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் சிறந்த பகுதி என்னவென்றால், விசாவுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
ஒவ்வொருவருக்கும் மற்றொரு நாட்டிற்குள் நுழைய விசா தேவைப்படுகிறது, ஆனால் அதிர்ஷ்டவசமாக மாலத்தீவு போன்ற சில நாடுகள் விசா ஆன் அரைவலை வழங்குகின்றன. இந்த வசதி முற்றிலும் இலவசம்.
ஒவ்வொரு ஆண்டும் பார்வையாளர்களை ஈர்க்கும் தாராளவாத நாடுகளில் மாலத்தீவும் ஒன்றாகும். ஆனால் விசா அலுவலகத்தில் விவரங்களை சரிபார்க்க வேண்டியது நல்லது. சில நேரங்களில், விதிகள் மாறக்கூடும்.
இந்தியக் குடிமக்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும், மாலத்தீவு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் விசா ஆன் அரைவலை வழங்குகிறது. இது முற்றிலும் இலவசம் மற்றும் மறைக்கப்பட்ட உட்பிரிவுகளுடன் வரவில்லை. விசாவுக்கு விண்ணப்பிக்கும் எவரும் பாஸ்போர்ட்டுடன் சரியான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
மாலத்தீவு விசா ஆன் அரைவலை வழங்குகின்றன, இது ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். வெப்சைட்டில் உள்நுழைந்து வழக்கமான ப்ராசஸிங் அப்டேட்டை சரிபார்க்க வேண்டும். நீங்கள் மாலேவை அடைந்த பிறகு அந்த விசாவைப் பெற, பின்வரும் சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்
உங்கள் பயணம் முடிந்ததும் மாலத்தீவில் இருந்து பறக்க கன்ஃபர்மேஷன் டிக்கெட்டுகள்.
மாலத்தீவுக்கு வருகை தந்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.
கன்ஃபர்மேஷன் செய்யப்பட்ட ஹோட்டல் புக்கிங்ஸ் மற்றும் அதை உறுதிப்படுத்தும் வவுச்சர்கள். இமிக்ரேஷன் கவுண்டரில் நீங்கள் அதைக் காட்ட வேண்டியிருக்கும்.
இமிக்ரேஷன் டிபார்ட்மென்ட் எப்போதும் 30 நாட்களுக்கும் குறைவாக தங்குவதற்கு அனுமதிப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளது. நீங்கள் தங்குமிடத்தை நீட்டிக்க விரும்பினால், உங்கள் விசா காலாவதியாவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். அடுத்த 60 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கு நீங்கள் புதிய விசா அப்ரூவலைப் பெறலாம். டிபார்ட்மென்ட் அப்ளிக்கேஷனை நிராகரிக்கலாம் அல்லது அப்ரூவல் செய்யலாம் அல்லது விசாவிற்கு கோரலாம்.
நீங்கள் விசா ஆன் அரைவலை பெறுவீர்கள், எனவே, ப்ராசஸிங் டைம் இல்லை. இமிக்ரேஷன் மற்றும் எமிக்ரேஷன் டிபார்ட்மென்ட் உங்கள் தங்குமிட விபரங்களைச் சரிபார்க்கும். அதிகாரிகள் எல்லாவற்றையும் சரிபார்த்தப்பின் அவை சரியாக இருந்தால், மாலத்தீவில் உங்கள் வாழ்க்கையின் பொன்னான நேரத்தை நீங்கள் உல்லாசமாக மனநிம்மதியுடன் கழிக்கலாம் :)
டிராவல் இன்சூரன்ஸ் என்பது சில சிக்கலான மற்றும் மோசமான காலகட்டங்களுக்கு உங்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது. டிராவல் இன்சூரன்ஸ் வாங்குவது உங்கள் துரதிர்ஷ்டத்தைத் தடுக்காது, ஆனால் நிச்சயமாக பெரும் உதவியாக இருக்கும். மாலத்தீவு ஒரு பவளத் தீவாகும், அங்கு மக்கள் முற்றிலும் ஓய்வெடுக்கவும் வேடிக்கையானவற்றை கண்டுகழிக்கவும் செல்கிறார்கள். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் வாலட் அல்லது உங்கள் பாஸ்போர்ட்டை இழக்க நேரிட்டால் என்னாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
குறிப்பாக நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்போது இது உங்களுக்கு ஒரு சோகத்தை கொடுக்கக்கூடும். இந்த தொந்தரவு மற்றும் வரிசை பற்றிய சிந்தனையே டிராவல் இன்சூரன்ஸை வாங்கும் அளவுக்கு தீர்மானமாக இருக்க உங்களைத் தூண்டும் என்று நான் நம்புகிறேன். டிராவல் பாலிசியை வாங்குவது எவ்வாறு உதவும் என்பதைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா? சில நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு முழு தகவலையும் பார்ப்போம்.
மாலத்தீவு நீர் விளையாட்டுகளுக்கு சிறந்தது, மேலும் தீவுக்கு வருகை தரும் அனைவரும் நீருக்கடியில் வாழும் வாழ்க்கையை ஆராய்கின்றனர். செயல்பாட்டின் போது, நீங்கள் காயமடையக்கூடும் மற்றும் சில மருத்துவ உதவி தேவைப்படலாம். உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் உங்களுக்கான செலவுகளை ஈடுசெய்யும்.
நீங்கள் விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், லக்கேஜ் கவுண்டரிலிருந்து உங்கள் பையை வேறு யாரோ தவறுதலாக எடுத்துச் சென்றதை நீங்கள் உணர்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் உடைகள் மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் அதில் இருந்தன. அதிர்ஷ்டவசமாக, உங்களிடம் பணம் உள்ளது, ஆனால் திருடப்பட்ட அல்லது தொலைந்த பேக்கிற்கு, உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு பணம் செலுத்தும்.
உங்கள் தற்செயலான மருத்துவ அவசரநிலைகள் ஏதேனும் ஏற்பட்டால் உங்கள் டிராவல் பாலிசி கவர் செய்யும். எனவே, கவனக்குறைவாக இருக்க வேண்டாம், ஆனால் எந்த மருத்துவ உதவிக்கும் பீதியடைய வேண்டாம் என்பதே யோசனை.
உறவினரின் எதிர்பாராத மரணம் போன்ற எந்தவொரு காரணத்திற்காகவும், உங்கள் பயணத்தைத் தொடங்க முடியாவிட்டால், டிக்கெட்டுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டியிருந்தால், உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் அதை உங்களுக்காக கவர் செய்யும்.
சில ஆக்டிவிட்டியின்போது நீங்கள் காயமடைந்தால், அப்போது வலி அல்லது எலும்பு முறிவு காரணமாக உங்களால் நகர முடியவில்லை என்று சிந்தியுங்கள். மாலத்தீவில் சிகிச்சை பெற விரும்பவில்லை, இந்தியா திரும்ப விரும்புகிறீர்கள். அவசர மருத்துவ வெளியேற்றத்திற்கு டிராவல் பாலிசி உங்களை உள்ளடக்கும்.
நீங்கள் சில தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளையும் எதிர்பாராமல் டேமேஜ் செய்ய நேர்ந்தால், மாலத்தீவு டிராவல் இன்சூரன்ஸ் உங்களுக்கு ஏற்படும் லையபிளிட்டியை கவர் செய்யும்.
இதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும்:
இல்லை, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் மாலத்தீவுக்கு பயணம் செய்யும் போது விசா வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அந்நாட்டை அடைந்ததும் இது வழங்கப்படும்.
இல்லை, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் மாலத்தீவுக்கு பயணம் செய்யும் போது விசா வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அந்நாட்டை அடைந்ததும் இது வழங்கப்படும்.
மாலத்தீவு அரசு இந்திய குடிமக்களுக்கு விசா ஆன் அரைவலை வழங்குவதற்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. இருப்பினும், உங்கள் விசாவை நீட்டிக்க, நீங்கள் ரூ. 3,350 செலுத்த வேண்டும்.
மாலத்தீவு அரசு இந்திய குடிமக்களுக்கு விசா ஆன் அரைவலை வழங்குவதற்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. இருப்பினும், உங்கள் விசாவை நீட்டிக்க, நீங்கள் ரூ. 3,350 செலுத்த வேண்டும்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டுடன், மாலத்தீவு செல்லும் ஒரு இந்தியர் ரிட்டர்ன் டிக்கெட், ஹோட்டல் அல்லது டூரிஸ்ட் ரிசார்ட்டில் தங்குவதற்கான புக்கிங் கன்ஃபர்மேஷன், போதுமான நிதி, அதாவது ஒவ்வொரு நாளுக்கும் 100 அமெரிக்க டாலர் மற்றும் 50 டாலர் ஐ கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டுடன், மாலத்தீவு செல்லும் ஒரு இந்தியர் ரிட்டர்ன் டிக்கெட், ஹோட்டல் அல்லது டூரிஸ்ட் ரிசார்ட்டில் தங்குவதற்கான புக்கிங் கன்ஃபர்மேஷன், போதுமான நிதி, அதாவது ஒவ்வொரு நாளுக்கும் 100 அமெரிக்க டாலர் மற்றும் 50 டாலர் ஐ கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
மாலத்தீவு செல்லும் இந்தியர்களுக்கு அதிகபட்சம் 30 நாட்கள் வரை விசா ஆன் அரைவல் வழங்கப்படுகிறது, இது 60 நாட்கள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
மாலத்தீவு செல்லும் இந்தியர்களுக்கு அதிகபட்சம் 30 நாட்கள் வரை விசா ஆன் அரைவல் வழங்கப்படுகிறது, இது 60 நாட்கள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து இந்திய குடிமக்களின் விசா அப்ரூவல் மாலத்தீவை அடைந்தவுடன் நிராகரிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்தாது. இருப்பினும், கண்கவர் தீவில் கவலையற்ற தங்குமிடத்தை அனுபவிக்க தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து இந்திய குடிமக்களின் விசா அப்ரூவல் மாலத்தீவை அடைந்தவுடன் நிராகரிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்தாது. இருப்பினும், கண்கவர் தீவில் கவலையற்ற தங்குமிடத்தை அனுபவிக்க தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.