இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கவும்
Instant Policy, No Medical Check-ups

இந்தியக் குடிமக்கள் மாலத்தீவு செல்வதற்கான விசா

இந்தியக் குடிமக்கள் மாலத்தீவு செல்வதற்கான விசா பற்றிய அனைத்தும்

கொள்ளைக் கொள்ளும் நீலக் கடற்கரையில், அழகான தீவு மணலில் உல்லாசமாக தூங்கி எழுவதை நினைத்து பார்த்திருக்கிறீர்களா? உங்கள் அன்றாட வாழ்க்கை சலிப்பானதாக இருக்கிறதா, உச்ச கோடைக்காலத்தில் மழை வந்தால் இருக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை, அதுபோன்றதொரு அனுபவத்திற்கு, மாலத்தீவு உங்களுக்கான சரியான இடமாகும்.

இயற்கை சூழல் மற்றும் சுத்தமான காற்று தவிர, சாகச பிரியர்களுக்கு இது ஒரு கவர்ச்சிகரமான இடமாகும். ஸ்நோர்கெலிங், நீச்சல், ஜெட் ஸ்கீங், ஸ்கூபா டைவிங் மற்றும் ஃபிஷிங் ஆகியவை ஒருவர் ஈடுபடக்கூடிய சிறந்த செயல்பாடுகளாகும்.

இந்த வசீகரிக்கும் தீவில் விளையாட்டு, சாகசம் மற்றும் ஷாப்பிங் போன்ற பல விஷயங்கள் உள்ளன. மாலத்தீவில் சுமார் 1192 பவளத் தீவுகள் உள்ளன, அவை காண்போரை அங்கேயே வீடு கட்டிக்கொள்ளும் அளவிற்குக் கொள்ளை அழகுடன், அனைவரையும் ஈர்க்கும். இது ஹனிமூன் செய்பவர்களுக்கும் ஏற்ற இடமாகும். இப்போது மாலத்தீவு கண்ணில் வந்து வந்து போகிறதா?

இந்தத் தீவின் வசீகரம் அனைவரையும் கண் இமைக்கும் நேரத்தில் அங்கு செல்ல வேண்டும் என்ற உந்துதலை அளிக்கிறது. உங்கள் விடுமுறையை மாலத்தீவில் கழிக்க கனவு காண்பதற்கும் திட்டமிடுவதற்கும் முன், நீங்கள் விசா தேவைகளை சரிபார்க்க வேண்டும்.

மாலத்தீவிற்கு செல்ல இந்திய குடிமக்களுக்கு விசா தேவையா?

நீங்கள் விடுமுறைக்காக மாலத்தீவுக்குச் செல்ல திட்டமிட்டால், உங்களுக்கு பிரீ-அரைவல் விசா தேவையில்லை. செல்லுபடியாகும் அனைத்து பயண ஆவணங்களும் இருக்க வேண்டும். உங்கள் பாஸ்போர்ட் மாலத்தீவுக்கு வருகை தந்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு செல்லுபடியாக வேண்டும்.

மாலே விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இந்தியர்களுக்கு டூரிஸ்ட் விசா வழங்கப்படுகிறது, இது 30 நாட்கள் லிமிட்டுடன் வருகிறது. நீண்ட காலம் தங்குவதற்கு உங்களைத் தூண்டும் இடத்தின் மீது காதல் கொள்வது எளிது. அப்படியானால், அந்தந்த அதிகாரிகளின் அப்ரூவலுக்குப் பிறகு 90 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம். 

இந்த நீட்டிப்புக்கு இந்தியர்கள் விதிவிலக்கு என்பது உங்களுக்குத் தெரியுமா? நெருக்கமான மூலோபாய, இராணுவ, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளுக்கு இருநாட்டு அரசிற்கு நாம் நன்றி சொல்லவேண்டும். இது தவிர, புரூனியர்கள் 15 நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் சிறந்த பகுதி என்னவென்றால், விசாவுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

இந்திய குடிமக்களுக்கு மாலத்தீவுக்கான விசா ஆன் அரைவல் உள்ளதா?

ஒவ்வொருவருக்கும் மற்றொரு நாட்டிற்குள் நுழைய விசா தேவைப்படுகிறது, ஆனால் அதிர்ஷ்டவசமாக மாலத்தீவு போன்ற சில நாடுகள் விசா ஆன் அரைவலை வழங்குகின்றன. இந்த வசதி முற்றிலும் இலவசம்.

ஒவ்வொரு ஆண்டும் பார்வையாளர்களை ஈர்க்கும் தாராளவாத நாடுகளில் மாலத்தீவும் ஒன்றாகும். ஆனால் விசா அலுவலகத்தில் விவரங்களை சரிபார்க்க வேண்டியது நல்லது. சில நேரங்களில், விதிகள் மாறக்கூடும்.

இந்தியக் குடிமக்கள் மாலத்தீவு செல்வதற்கான விசா ஃபீ

இந்தியக் குடிமக்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும், மாலத்தீவு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் விசா ஆன் அரைவலை வழங்குகிறது. இது முற்றிலும் இலவசம் மற்றும் மறைக்கப்பட்ட உட்பிரிவுகளுடன் வரவில்லை. விசாவுக்கு விண்ணப்பிக்கும் எவரும் பாஸ்போர்ட்டுடன் சரியான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

மாலத்தீவு சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

மாலத்தீவு விசா ஆன் அரைவலை வழங்குகின்றன, இது ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். வெப்சைட்டில் உள்நுழைந்து வழக்கமான ப்ராசஸிங் அப்டேட்டை சரிபார்க்க வேண்டும். நீங்கள் மாலேவை அடைந்த பிறகு அந்த விசாவைப் பெற, பின்வரும் சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்

மாலத்தீவு டூரிஸ்ட் விசா ப்ராசஸிங் டைம்

நீங்கள் விசா ஆன் அரைவலை பெறுவீர்கள், எனவே, ப்ராசஸிங் டைம் இல்லை. இமிக்ரேஷன் மற்றும் எமிக்ரேஷன் டிபார்ட்மென்ட் உங்கள் தங்குமிட விபரங்களைச் சரிபார்க்கும். அதிகாரிகள் எல்லாவற்றையும் சரிபார்த்தப்பின் அவை சரியாக இருந்தால், மாலத்தீவில் உங்கள் வாழ்க்கையின் பொன்னான நேரத்தை நீங்கள் உல்லாசமாக மனநிம்மதியுடன் கழிக்கலாம் :)

நான் மாலத்தீவு டிராவல் இன்சூரன்ஸை வாங்க வேண்டுமா?

டிராவல் இன்சூரன்ஸ் என்பது சில சிக்கலான மற்றும் மோசமான காலகட்டங்களுக்கு உங்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது. டிராவல் இன்சூரன்ஸ் வாங்குவது உங்கள் துரதிர்ஷ்டத்தைத் தடுக்காது, ஆனால் நிச்சயமாக பெரும் உதவியாக இருக்கும். மாலத்தீவு ஒரு பவளத் தீவாகும், அங்கு மக்கள் முற்றிலும் ஓய்வெடுக்கவும் வேடிக்கையானவற்றை கண்டுகழிக்கவும் செல்கிறார்கள். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் வாலட் அல்லது உங்கள் பாஸ்போர்ட்டை இழக்க நேரிட்டால் என்னாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

குறிப்பாக நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்போது இது உங்களுக்கு ஒரு சோகத்தை கொடுக்கக்கூடும். இந்த தொந்தரவு மற்றும் வரிசை பற்றிய சிந்தனையே டிராவல் இன்சூரன்ஸை வாங்கும் அளவுக்கு தீர்மானமாக இருக்க உங்களைத் தூண்டும் என்று நான் நம்புகிறேன். டிராவல் பாலிசியை வாங்குவது எவ்வாறு உதவும் என்பதைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா? சில நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு முழு தகவலையும் பார்ப்போம்.

இந்தியக் குடிமக்கள் மாலத்தீவு செல்வதற்கான டூரிஸ்ட் விசா பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மாலத்தீவு செல்லும் போது நான் விசா வைத்திருக்க வேண்டுமா?

இல்லை, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் மாலத்தீவுக்கு பயணம் செய்யும் போது விசா வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அந்நாட்டை அடைந்ததும் இது வழங்கப்படும்.

மாலத்தீவுக்கு விசா ஆன் அரைவலைப் பெறும்போதும் ரீனியூவல் செய்யும்போதும் என்னென்ன கட்டணங்கள் விதிக்கப்படும்?

மாலத்தீவு அரசு இந்திய குடிமக்களுக்கு விசா ஆன் அரைவலை வழங்குவதற்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. இருப்பினும், உங்கள் விசாவை நீட்டிக்க, நீங்கள் ரூ. 3,350 செலுத்த வேண்டும்.

மாலத்தீவுக்கு பயணிக்கும் போது பாஸ்போர்ட்டுடன் வேறு என்ன எடுத்துச் செல்ல வேண்டும்?

அடுத்த ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டுடன், மாலத்தீவு செல்லும் ஒரு இந்தியர் ரிட்டர்ன் டிக்கெட், ஹோட்டல் அல்லது டூரிஸ்ட் ரிசார்ட்டில் தங்குவதற்கான புக்கிங் கன்ஃபர்மேஷன், போதுமான நிதி, அதாவது ஒவ்வொரு நாளுக்கும் 100 அமெரிக்க டாலர் மற்றும் 50 டாலர் ஐ கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

மாலத்தீவுகளுக்குச் செல்வதற்காக இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் வழங்கப்படும் காலம் என்ன?

மாலத்தீவு செல்லும் இந்தியர்களுக்கு அதிகபட்சம் 30 நாட்கள் வரை விசா ஆன் அரைவல் வழங்கப்படுகிறது, இது 60 நாட்கள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

மாலத்தீவை அடைந்த பிறகு எனது விசா நிராகரிக்கப்படுவது குறித்து நான் கவலைகொள்ள வேண்டுமா?

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து இந்திய குடிமக்களின் விசா அப்ரூவல் மாலத்தீவை அடைந்தவுடன் நிராகரிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்தாது. இருப்பினும், கண்கவர் தீவில் கவலையற்ற தங்குமிடத்தை அனுபவிக்க தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.