டிராவல் இன்சூரன்ஸ் கவரேஜ்


Select Number of Travellers
I agree to the Terms & Conditions
Select Number of Travellers
I agree to the Terms & Conditions
#wanderlust, #travelgoals யுகத்தில், இன்றைய தலைமுறையினர் முன்பை விட அதிகமாக பயணிக்கின்றனர். உடமைகளுக்காக சேமிப்பதில் இருந்து, அனுபவங்களுக்காக சேமிப்பது வரை, பயணம் அனைவரின் பக்கெட் லிஸ்டிலும் முதலிடம் வகிக்கிறது; வழக்கமான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க விடுமுறை நாட்கள் முதல் உலகின் பிற பகுதிகளிலும், இந்தியா முழுவதிலும் வழக்கத்திற்கு மாறான அட்வென்ச்ர்கள் வரை.
நீங்கள் ஐரோப்பாவின் அழகான நாடுகளில் ஒரு சிறிய சிறந்த பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா அல்லது தாய்லாந்தின் பல தீவுகளுக்கு ஒரு கடற்கரை பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா, ஆம், பயணத்திற்காக ஒருவருக்கு இன்றைய காலகட்டத்தில் வழங்கப்படும் சாத்தியக்கூறுகள் முடிவற்றவை. டிராவல் பிளாக்கர்கள் மற்றும் டிராவல் வெப்சைட்களின் பல்வேறு வெளியீட்டிற்கு நன்றி, ஒரு பயணத்தைத் திட்டமிடுவது மற்றும் தனித்துவமான டிராவல் பிளான்களை உருவாக்குவது ஒரு வழக்கமாகிவிட்டது, அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருவதால், ஆன்லைனில் உங்கள் பயணத்தைப் பாதுகாப்பதும் சாத்தியமாகிவிட்டது, ஆன்லைன் டிராவல் இன்சூரன்ஸிற்கு நன்றி.
நாம் எத்தனை டிராவல் பிளாக்குகள் மற்றும் கைடுகளைப் படித்தாலும், எவ்வளவு திட்டமிட்டாலும், வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு நாட்டிற்கு செல்லும் போது ஒரு சில குளறுபடிகள் நடைபெறுவது சகஜம் தான். நீங்கள் உங்கள் லக்கேஜ்களுடன் சிக்கிக் கொண்டாலும் சரி அல்லது நீங்கள் விடுமுறையில் இருக்கும்போது மோசமான வானிலையை சந்திக்க நேரிட்டாலும் சரி; அவை ஒரு காரணத்திற்காக குளறுபடிகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை முன்னறிவிப்பின்றி வந்து திடீரென்று நிகழ்கின்றன; அதனால்தான் எல்லா குளறுபடிகளிலிருந்தும் உங்களைப் பாதுகாக்க டிராவல் இன்சூரன்ஸ் போன்ற ஒன்று இருக்கிறது!
டிராவல் இன்சூரன்ஸ் உங்கள் பயணத்தில் ஏற்படக்கூடிய இழப்புகள் மற்றும் கணிக்க முடியாத பயணக் குளறுபடிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது; விமான தாமதம் மற்றும் லக்கேஜ் இழப்புகள் முதல் திருட்டுகள், நோய்கள் மற்றும் விபத்துகள் வரை.
உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட நன்மைகளை நாங்கள் வழங்குகிறோம், இது உங்கள் பயணத்தை நீங்கள் விரும்பும் வழியில் வைத்திருக்க உதவுகிறது!
உங்கள் பயணத்தின் போது விபத்து காரணமாக நீங்கள் காயமடைந்தால்.
அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் நடவடிக்கைகளின் போது ஏற்படும் எந்தவொரு அவசரநிலைக்கும் கவர் செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக: ஸ்கூபா டைவிங் செய்யும் போது உங்களுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டால், அதற்காக மருத்துவரை சந்திக்க வேண்டும்.
மருத்துவ பிரச்சனைகள், குடும்ப உறுப்பினரின் மரணம் போன்ற அவசரநிலைகள் காரணமாக துரதிர்ஷ்டவசமாக உங்கள் பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தால், உங்கள் பயணத்தின் திருப்பித் தர முடியாத செலவுகளுக்கான கவர் செய்யப்படுகிறது.
விமான தாமதத்திற்கான கவர்கள்; உள்நாட்டு விமானங்களில் குறைந்தபட்சம் 75 நிமிட தாமதமும், சர்வதேச விமான தாமதத்திற்கு 6 மணி நேரமும் தாமதம்.
உங்கள் செக்-இன் லக்கேஜ் 6 மணி நேரம் வரை தாமதமாகும் நேரங்களுக்கு கவர் செய்யப்படுகிறது.
உங்கள் செக்-இன் லக்கேஜ் தொலைந்து போகும்போது அல்லது வேறிடம் சென்றாலும் அதற்கான இழப்புகள் கவர் செய்யப்படுகிறது.
உங்கள் இணைப்பு விமானத்தை நீங்கள் தவறவிடும் துரதிர்ஷ்டவசமான நேரங்களுக்கு கவர் செய்யப்படுகிறது.
வெளிநாட்டில் உங்களின் தற்போதைய பாஸ்போர்ட்டை நீங்கள் இழக்கும்போது, புதிய பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கான செலவுகளை உள்ளடக்கும்.
உங்கள் பணம் மற்றும் வாலட் தொலைந்துபோனால் அல்லது திருடப்பட்ட துரதிர்ஷ்டவசமான நேரங்களுக்கு அவசர பணத்தை வழங்குகிறது.
அவசரநிலை காரணமாக உங்கள் பயணத்தை நீட்டிக்க வேண்டிய நேரங்களுக்கான கவர் செய்யப்படுகிறது. மிகவும் வேடிக்கையாக இருந்தாலும் அவசரநிலையாக கருதப்படுவதில்லை.
அவசரம் காரணமாக உங்கள் பயணத்தை முற்றிலுமாக கைவிட வேண்டிய நேரங்களில். உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் திரும்பப் பெற முடியாத அனைத்து பயணச் செலவுகளுக்கும் பணம் செலுத்துகிறது.
வெளிநாட்டில் உள்ள சட்ட சிக்கல்களை உள்ளடக்கியது. உங்கள் வாடகை கார் நேரமும் இதில் அடங்கும்.
விடுமுறையில் இருக்கும்போது ஒருவரின் மரணம் அல்லது இயலாமையால் ஏற்படும் செலவுகளுக்கான கவர் செய்யப்படுகிறது.
அவசர பல் சிகிச்சைகளுக்கான கவர் செய்யப்படுகிறது.
விபத்து சிகிச்சையால் ஏற்படும் செலவுகளை உள்ளடக்கியது.
நோய் தொடர்பான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் வெளியேற்றத்திற்கான செலவுகளுக்கான கவர் செய்யப்படுகிறது.
நீங்களோ அல்லது குடும்ப உறுப்பினரோ மருத்துவமனையில் இருக்கும்போது டெய்லி கேஷ் அலவன்ஸை வழங்குகிறது.
எங்களுடையது டிராவல் இன்சூரன்ஸ், விடுமுறை நாட்களில் எதிர்பாராமல் நிகழும் அனைத்தையும் உள்ளடக்குகிறது என்றாலும், நாங்கள் செய்யும் அனைத்திலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம். எனவே, உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியில் என்னென்ன கவர் செய்யப்படாது என்பதை அறிவது என்னென்ன கவர் செய்யப்படுகிறது என்பதை அறிவது போலவே முக்கியம். எனவே, எங்கள் டிராவல் இன்சூரன்ஸின் கீழ் எங்களால் கவர் செய்ய முடியாத சில சரியான விதிவிலக்குகள் பின்வருமாறு:
நாளின் முடிவில், டிராவல் இன்சூரன்ஸ் ஒரு அதிர்ஷ்ட தேவதை அல்ல, ஆனால் அது நிச்சயமாக பயணிக்கும் போது ஏற்படக்கூடிய எதிர்பாரா நிகழ்வுகளுக்கு நீங்கள் செய்யக்கூடிய பெரும் செலவுகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும் கருவியாக இருக்கும். 😉