டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது) மற்றும் ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) இன்சூரன்ஸுக்குமான வேறுபாடு

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது) இன்சூரன்ஸ் + ஜீரோ (தேய்மானம்) டிப்ரிஸியேஷன் = 100% திருப்தி ஜீரோ டிப்ரிஸியேஷன் என்பது ஒரு ‘ஆட்-ஆன் (Add-on)’ கவராகும், அதாவது, காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸுடன் சேர்த்து வாங்கக் கூடிய ஒரு கூடுதலான பெனிஃபிட் ஆகும். அடிப்படையில், ஜீரோ டிப்ரிஸியேஷன் என்பது காம்ப்ரிஹென்சிவ் மோட்டார் இன்சூரன்ஸின் ஒரு பகுதியே ஆகும். நீங்கள் மேலும் நன்றாக புரிந்து கொள்வதற்கு வசதியாக எல்லா விபரங்களையும் விரிவாக உங்களுக்குத் தருகிறோம். முதலில், காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம், சரியா😊!

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது) இன்சூரன்ஸ் என்றால் என்ன?

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது) இன்சூரன்ஸ் என்பது மோட்டார் வாகனங்களுக்கான, அதாவது கார்கள் மற்றும் பைக்குகள் ஆகிய இரண்டிற்குமேயான ஒரு ‘பிரீமியம் இன்சூரன்ஸ்’ பாலிசியாகும். இதன் பெயர் குறிப்பிற்கேற்றவாறு, இது ஒரு ‘முழுமையான பேக்கேஜ்’ ஆகும். அதாவது வாகனம், அதில் பயணம் செய்தவர்கள் ஆகியோருக்கு ஏற்படக் கூடும் எந்தவொரு சேதத்திற்கும், மற்றும் எதிர்பாராமல் நேரும் விபத்தினில் ‘தேர்டு பார்ட்டி’க்கு நேரும் சேதத்திற்கும் கூட இது இழப்பீடு அளித்து காப்புறுதி பாதுகாப்பளிக்கிறது. பொதுவாக, காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது) இன்சூரன்ஸ் கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் காப்புறுதியளிக்கிறது:

  • விபத்தின் காரணமாக உங்கள் வாகனத்திற்கு நேரும் சேதம்

  • விபத்தின் போது ஏற்படும் தனிப்பட்ட காயம்

  • உங்கள் வாகனம் திருடு போவது

  • தீவிபத்தின் காரணமாக உங்கள் வாகனத்திற்கு ஏற்படும் சேதம்

  • இயற்கை பேரிடர்களின் காரணமாக உங்கள் வாகனத்திற்கு ஏற்படும் சேதம்

  • விபத்தின் போது தேர்டு பார்ட்டியினரின் வாகனம் அல்லது சொத்திற்கு ஏற்படும் சேதம்

  • விபத்தின் போது தேர்டு பார்ட்டிக்கு நேரும் காயம்

இப்போது தான், ஜீரோ டிப்ரிஸியேஷனுக்கான அவசியம் வருகிறது!

காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் என்பது பிரீமியம் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியாக இருக்கும் காரணத்தால், பல்வேறு ‘ஆட்-ஆன்’ அல்லது ‘பெனிஃபிட்களிலிருந்து’ உங்களுக்கு வேண்டியவற்றை நீங்களே தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. அடிப்படையாக நீங்கள் செலுத்தும் இன்சூரன்ஸ் பாலிசி கட்டணத்துடன் சிறிது அதிகப்படியாக பிரீமியம் தொகையை செலுத்துவதன் மூலமாக நீங்கள் இந்த கவர்களை பெறலாம்.

 

ரோடுசைடு அசிஸ்டன்ஸ், என்ஜின் புரொட்டெஷன் கவர், கன்ஸ்யூமபில் கவர் போன்ற எண்ணற்ற ‘ஆட்-ஆன்’ கவர்கள் உள்ளன. எனவே, அடிப்படையில், ஜீரோ டிப்ரிஸியேஷன் என்பது உங்கள் வாகனத்திற்கு நீங்கள் தேர்வு செய்யக் கூடிய பல்வேறு இன்சூரன்ஸ் ‘ஆட் ஆன்’ கவர்களில் ஒன்றாகும்.

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது) பாலிசி மற்றும் ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) ஆகிய இரண்டிற்குமான வேறுபாடு

ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) கவருடன் கூடிய காம்ப்ரிஹென்சிவ் பாலிசி ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) கவர் இல்லாத காம்ப்ரிஹென்சிவ் பாலிசி
பிரீமியம் தொகை சாதாரண காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது) பாலிசியை விடவும் சிறிது அதிகம் ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) ஆட்-ஆனை (add-on) கொண்ட பாலிசியை விடவும் குறைவு
கிளைம் செட்டில்மெண்ட் தொகை டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததால் அதிகமாக இருக்கும் ரிப்பேர் செய்ய வேண்டிய அனைத்து பாகங்களுக்கும் டிப்ரிஸியேஷன் கணக்கிடப்படுவதால் குறைவாக இருக்கும்
பிளாஸ்டிக் பாகங்களை ரிப்பேர் செய்வது ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) ஆட்-ஆன் இருப்பதால், பிளாஸ்டிக் பாகங்களுக்கு டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) கணக்கிடப்படுவதில்லை கிளைம் தொகையை செலுத்துவதற்கு முன்னர் பிளாஸ்டிக் பாகங்களுக்கு 50% டிப்ரிஸியேஷன் தொகை கணக்கிடப்படும்
காப்புறுதி செய்யப்பட்ட காரின் வயது ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) ஆட்-ஆன் (add-on) இருப்பதால், டிப்ரிஸியேஷன் தொகை கணக்கிடப்படுவதில்லை வயது ஏறும் போது, உங்கள் காரின் டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) அதிகரித்துக் கொண்டே வருகிறது, மேலும் கிளைமின் போது காப்புறுதி வழங்கப்படுவதில்லை

ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) கவரை வாங்குவதால் ஏற்படும் நன்மைகள்

வயது ஏறும் போது குறைபாடுகளும் சேர்ந்தே வருகின்றது. இது உங்கள் வாகனத்திற்கும் பொருந்தும். பழையதாக ஆகும் போது, உங்கள் கார் அல்லது பைக்கின் மதிப்பும் குறைந்து கொண்டே வருகிறது அல்லது ‘டிப்ரிஸியேட் ஆகிறது’. ஆயினும், நீங்கள் கவலைப்பட வேண்டாம், இந்த ‘ஆட்-ஆனை’ (add-on) தேர்வு செய்யும் போது உங்கள் வாகனத்தை வாங்கிய போது இருந்த மதிப்பினை நீங்கள் அப்படியே பெற்றுக் கொள்ளலாம்!

ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) என்பது நில் டிப்ரிஸியேஷன் அல்லது பம்பர் டூ பம்பர் கவர் என்றும் அழைக்கப்படுகின்றது, இது காப்புறுதியிலிருந்து ‘டிப்ரிஸியேஷன்’ என்பதையே நீக்கி விடுகிறது.

அடிப்படையில் இதன் பொருள் என்னவென்றால், உங்கள் கார் அல்லது பைக் எதன் மீதோ மோதி விபத்துக்குள்ளாகும் போது, பயன்பாட்டின் காரணமாக உங்கள் வண்டியில் ஏற்படும் எந்தவொரு பாகங்களுக்குமான சேதங்களுக்கு டிப்ரிஸியேஷன் தொகையானது கழிக்கப்பட மாட்டாது.

இன்சூரன்ஸ் நிறுவனமானது, உங்கள் வண்டியில் ரிப்பேர் செய்யப்பட வேண்டிய அல்லது மாற்றப்பட வேண்டிய பாகத்திற்கு 100% முழுத் தொகையையும் (டிடக்டிபிள்ஸை கழித்த பிறகு தான்) வழங்கிவிடும்.

எனவே, உண்மையில் சொல்ல போனால் நம்மால் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது) இன்சூரன்ஸையும், ஜீரோ டிப்ரிஸியேஷனையும் (தேய்மானம்) ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஏனென்றால், ஜீரோ டிப்ரிஸியேஷன் என்பது காம்ப்ரிஹென்சிவ் கவருடன் சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு ஆட்-ஆன் (add-on) மட்டுமே ஆகும். எனினும், உங்கள் காரை பாதுகாப்பதற்கான அனைத்து விடயங்களும் ஜீரோ டிப்ரிஸியேஷனில் உள்ளது.

ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) கவரின் மூலம், உங்கள் பிரியமான வாகனமானது எப்போதுமே 100% புதியது போலவே சிறப்பாக இருக்கும்!