கார் இன்சூரன்ஸில் ஐடிவி/IDV என்றால் என்ன?
ஐடிவி என்பது, உங்கள் கார் திருடப்பட்டாலோ அல்லது முழுமையாக சேதப்படுத்தப்பட்டாலோ, உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர் உங்களுக்கு வழங்கக் கூடிய அதிகபட்ச தொகையை குறிக்கிறது.
இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவும், உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியமும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இதன் பொருள் என்னவென்றால், உங்கள் ஐடிவி அதிகமாக இருக்கும் போது, உங்கள் கார் இன்சூரன்ஸுக்கான பிரீமியம் தொகையும் அதிகமாக இருக்கும் - மற்றும் உங்கள் வாகனம் பழையதாகி அதன் ஐடிவி மதிப்பு குறையும் போது, உங்கள் பிரீமியம் தொகையும் குறைகிறது.
மேலும், உங்கள் காரை நீங்கள் விற்பதற்கு முடிவு செய்யும் போது, ஐடிவி அதிகமாக இருக்கும் பட்சத்தில், உங்கள் காருக்கு அதிக விலை கிடைக்கும். காரின் பயன்பாடு, முந்தைய கார் இன்சூரன்ஸ் கிளைம் அனுபவம் போன்ற பிற காரணிகளால் கூட அதன் விலை பாதிக்கக் கூடும்.
எனவே, உங்கள் காருக்கு சரியான கார் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் தேர்வு செய்யும் போது, பிரீமியம் தொகை மட்டுமின்றி, உங்கள் காருக்கு வழங்கப்படும் ஐடிவி-யையும் கவனிப்பதற்கு தவறாதீர்கள்.
ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு வழங்குகின்ற பிரீமியம் தொகை குறைவாக இருக்கிறதென்றால், அந்நிறுவனம் வழங்கும் ஐடிவி தொகை குறைவானதாக இருப்பது காரணமாக இருக்கலாம். ஒரு வேளை உங்கள் கார் முழுமையாக சேதமடையும் பட்சத்தில், அதிக ஐடிவி இருப்பது உங்களுக்கு அதிக இழப்பீட்டினை பெற்றுத் தரும்.
காரை விற்பதற்கு எண்ணும் போது, உங்கள் ஐடிவி தான் உங்கள் காரின் சந்தை மதிப்பை குறிப்பதாக அமைகிறது. எனினும், உங்கள் காரை நல்ல முறையில் பராமரித்திருக்கும் பட்சத்தில், அது புதியது போலவே பளிச்சென்று இருந்தால், உங்கள் ஐடிவி மதிப்பினை விடவும் உங்கள் காருக்கு அதிக விலையினை நீங்கள் தீர்மானிக்கலாம்.
முடிவில், உங்கள் காரை நீங்கள் எந்த அளவிற்கு நேசித்திருக்கிறீர்கள் என்பதை இவையெல்லாம் காட்டும்.
கார் இன்சூரன்ஸில் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.
கார் இன்சூரன்ஸில் நோ கிளைம் போனஸ் (என்சிபி/NCB) என்றால் என்ன?
என்சிபி-யின் (நோ கிளைம் போனஸ்) பொருள் வரையறை: என்சிபி என்பது பாலிசிதாரருக்கு கிளைம் பெறாத பாலிசி காலத்தின் போது பிரீமியத்தின் மீது வழங்கப்படும் தள்ளுபடியை குறிக்கிறது.
நோ கிளைம் போனஸ் என்பது 20-50% வரை தள்ளுபடி வழங்குகிறது. இது உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை பயன்படுத்தி நீங்கள் கார் விபத்திற்கான எந்தவொரு கிளைம்களையும் செய்திருக்காத பட்சத்தில், உங்கள் பாலிசி காலத்தின் இறுதியில் உங்களுக்குக் கிடைக்கப்பெறும்.
இதன் பொருள், உங்களுடைய முதல் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் வாங்கும் போது உங்களுக்கு நோ கிளைம் போனஸ் கிடைக்காது - உங்கள் பாலிசியை புதுப்பிக்கும் போது தான் இது உங்களுக்குக் கிடைக்கப்பெறும். கிளைம் செய்யாத ஒவ்வொரு வருடத்திற்கு பிறகும், உங்கள் பாலிசியை புதுப்பிக்கும் சமயத்தில் உங்கள் நோ கிளைம் போனஸ் அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு, உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ், முதல் வருடத்தில் எந்தவொரு கிளைமும் செய்திருக்காத பட்சத்தில் உங்களுக்கு 20% என்சிபி கிடைக்கப்பெறும். ஒவ்வொரு கிளைம் செய்யாத வருடங்களிலும் இந்த சதவிகிதம் உயரும், 5 வருடங்களுக்கு பிறகு 50% ஆகும் - பிறகு நீங்கள் கிளைம் செய்யும் போது ஜீரோவிற்கு சென்று விடும்.
5-ஆம் வருடத்தில் 50%-ஐ அடைந்ததும், உங்கள் என்சிபி சதவிகிதம் உயர்வது நிற்கிறது, பின்பு அப்படியே இருக்கிறது. இது நோ கிளைம் போனஸ் சன்செட் கிளாஸ் என்று அழைக்கப்படுகிறது.
காரைப் பொறுத்து என்றில்லாமல், நோ கிளைம் போனஸ் என்பது கார் இன்சூரன்ஸ் பாலிசிதாரரையே சேருகிறது. அதாவது, நீங்கள் உங்கள் காருக்கு பதிலாக வேறு காரை மாற்றி விட்டாலும் கூட, உங்கள் என்சிபி உங்களுடனே இருக்கும்.
நீங்கள் புது கார் வாங்க முற்படும் போது, உங்களுக்கு புது கார் இன்சூரன்ஸ் பாலிசி வழங்கப்படும். ஆனாலும் கூட, உங்கள் பழைய கார் அல்லது பாலிசியில் நீங்கள் சேர்த்து வைத்துள்ள என்சிபி-யின் நன்மைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
கார் இன்சூரன்ஸில் என்சிபி-ஐ பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.
கார் இன்சூரன்ஸில் ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர்
பம்பர்-பம்பர் அல்லது ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர் அல்லது பார்ட்ஸ் டிப்ரிஸியேஷன் கவர், 5 வருடங்களுக்கு குறைவாக பயன்படுத்திய கார்களுக்கு பொருந்தும். எல்லா பொருள்களையும் போலவே, காலப்போக்கில் பம்பர் அல்லது வேறு ஏதேனும் மெட்டல் அல்லது ஃபைபர் கிளாஸ் பாகங்கள் உள்ளிட்ட உங்கள் காரின் சில பாகங்களின் மதிப்பு குறையும்.
எனவே, சேதமேற்படும் போது, கிளைம் தொகையிலிருந்து டிப்ரிஸியேஷன் தொகை கழிக்கப்படுவதால், பாகங்களை மாற்றுவதற்கான இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படுவதில்லை. ஆனால் இந்த ஆட்-ஆனை வாங்குவதால், டிப்ரிஸியேஷன் தொகை கழிக்கப்படாது. மேலும் ரிப்பேர் செய்வதற்கு அல்லது பாகங்களை மாற்றுவதற்கான முழு தொகையும் உங்களுக்குக் கிடைக்கப்பெறும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், உங்கள் கார் ஓரளவிற்கு சேதமடைந்திருக்கும் போது, டிப்ரிஸியேஷனுக்கு கணக்கிடப்பட்டிருக்கும் தொகையை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை, உங்கள் இன்சூரரே அனைத்தையும் பார்த்துக் கொள்வார்.
மேலும் தெரிந்து கொள்ளவும்:
கார் இன்சூரன்ஸில் கேஷ்லெஸ் கிளைம்கள் என்றால் என்ன?
நீங்கள் டிஜிட்-இன் அங்கீகரிக்கப்பட்ட ரிப்பேர் சென்டரில் உங்கள் காரை ரிப்பேர் செய்ய தேர்வு செய்தால், உங்கள் காரினை ரிப்பேர் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட கிளைம் தொகையை நாங்கள் நேரடியாக ரிப்பேர் சென்டரிலேயே செலுத்தி விடுவோம். இது தான் கேஷ்லெஸ் கிளைம்.
கம்பல்சரி எக்ஸெஸ்/டிடக்டபிள் போன்ற டிடக்டபிள்ஸ் (கழிப்புத்தொகை) ஏதேனும் இருப்பின், அல்லது உங்கள் இன்சூரன்ஸால் பாதுகாப்பளிக்கப்படாத ரிப்பேர் செலவுகள் அல்லது டிப்ரிஸியேஷன் கட்டணங்கள் போன்றவை இருப்பினும், இவற்றையெல்லாம் இன்சூர் செய்யப்பட்ட நபரின் சொந்த செலவில் தான் செய்ய வேண்டும் என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.
கேஷ்லெஸ் கார் இன்சூரன்ஸை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.