கேஷ்லெஸ் கிளைம்கள் உண்மையில் 100% கேஷ்லெஸ் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்வது முக்கியம். இன்சூரர் கவர் செய்யாத டிடக்டபிள் மற்றும் தேய்மானம் என கிளைம் செய்யும் தொகையில் ஒரு சிறிய பகுதியை நீங்கள் செலுத்த வேண்டும்.
டிப்ரிஸியேஷன் (தேய்மானம்)
டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) என்பது பயன்பாட்டின் காரணமாக உங்கள் கார் மற்றும் அதன் பாகங்களின் மதிப்பு குறைவதே ஆகும்.
உண்மையில், ஒரு புதிய காரை நீங்கள் ஷோரூமில் இருந்து எடுத்து வந்தாலே, அது 5% மதிப்பு மதிப்பிழந்ததாகக் கருதப்படுகிறது!
நீங்கள் கிளைம் செய்யும் போது, இன்சூரர் பொதுவாக பணம் செலுத்துவதற்கு முன் இந்த தேய்மான செலவைக் கழித்து விடுவார்.
கார் இன்சூரன்ஸில், இரண்டு வகையான தேய்மானம் உள்ளன - காரின் தேய்மானம் மற்றும் காரின் பல்வேறு பாகங்களுக்கான தேய்மானம். தேய்மானம் எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும் என்பதற்கான விதிகளை ஐஆர்டிஏஐ (IRDAI) அமைத்துள்ளது.
ஏதேனும் சிறிய அளவிலான வாகன சேதம் போன்று பகுதி அளவில் இழப்பு ஏற்படும் பட்சத்தில், கார் பாகங்கள் மீதான தேய்மானம் கிளைமின் போது பரிசீலிக்கப்படும். ஒரு காரின் பாகங்கள் பின்வருமாறு வெவ்வேறு விகிதங்களில் மதிப்பிழக்கும்:
- ரப்பர் பாகங்கள், பிளாஸ்டிக் பாகங்கள், பேட்டரி, டியூப்கள் மற்றும் டயர்கள் போன்ற அதிக தேய்மானம் அடையக் கூடிய பாகங்கள். - 50%
- ஃபைபர்கிளாஸ் பாகங்கள் - 30%
- மெட்டாலிக் பாகங்கள் - 0% to 50%, வெஹிக்கிலின் வயதைப் பொறுத்து மாறுபடும்
கார் திருடு போவது போன்ற முழு-இழப்பு ஏற்படும் பட்சத்தில் தான் வாகனத்தின் தேய்மானம் செயல்பாட்டிற்கு வருகிறது. இது உங்கள் வாகனத்தின் வயதை அடிப்படையாகக் கொண்டது.
டிடக்டபிள்ஸ்
இன்சூரர் மீதமுள்ளவறிற்கு பணம் செலுத்துவதற்கு முன்பு உங்கள் சொந்த செலவில் நீங்கள் செலுத்த வேண்டிய இன்சூரன்ஸ் செலவினத்தின் ஒரு பகுதியே டிடக்டபிள்ஸ் ஆகும்.
கார் இன்சூரன்ஸில், இந்த டிடக்டபிள்ஸ் வழக்கமாக ஒரு கிளைம் அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, நீங்கள் ₹15,000 மதிப்புள்ள சேதங்களுக்கான கிளைம் செய்தால் மற்றும் டிடக்டபிள்ஸ் ₹1,000 என்றால்- இன்சூரர் உங்கள் கார் பழுதுபார்ப்புகளுக்கு ₹14,000 மட்டுமே செலுத்துவார்.
டிடக்டபிள்ஸ் இரண்டு வகைப்படும் - அவை டிடக்டபிள்ஸ் மற்றும் வாலண்ட்டரி ஆகும் .
உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது நீங்கள் எவ்வளவு செலுத்த தயாராக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும், இது ஒவ்வொரு கிளைமுக்கும் பயன்படுத்தப்படும்.
உங்கள் இன்சூரர் மொத்த வாலண்ட்டரி மற்றும் கம்பல்சரி டிடக்டபிள் தொகைக்கு மேல் உள்ள கிளைம் தொகையின் பகுதியை மட்டுமே செலுத்துவார்.
கம்பல்சரி டிடக்டபிள் - இந்த வகையான டிடக்டபிள்களில், பாலிசிதாரருக்கு மோட்டார் இன்சூரன்ஸ் கிளைமின் ஒரு பகுதியை செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
ஐஆர்டிஏஐ (IRDAI) வரையறுத்துள்ளதன் படி, கார் இன்சூரன்ஸில் கம்பல்சரி டிடக்டிபிளின் நிலையான மதிப்பு என்பது கார் என்ஜினின் கியூபிக் கேபாசிட்டியைப் பொறுத்து அமையும். தற்போது, அது பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.
- 1,500 சிசி (cc) வரை - ரூ.1,000
- 1,500 சிசி (cc)-க்கு மேல்- ரூ. 2,000
வாலண்ட்டரி டிடக்டபிள் - வாலண்ட்டரி டிடக்டபிள் என்பது பொதுவாக இன்சூரர் செலுத்தும் தொகை தான், ஆனால் நீங்கள் அதனை சொந்தமாக செலவு செய்ய தேர்வு செய்து உள்ளீர்கள்.
நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் கவரில் வாலண்ட்டரி டிடக்டபிள் என்பதை தேர்வு செய்து இருந்தால், இது உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தைக் குறைக்கிறது, ஏனெனில் இது இன்சூரர் பக்கத்தில் உள்ள ஆபத்துக்களைக் குறைக்கிறது.
ஆனால், உங்கள் காருக்கு ஏதேனும் சேதம் நேர்ந்தால் (இது மற்ற செலவுகளையும் பாதிக்கலாம்) நீங்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.