கார் இன்சூரன்ஸை 4 எளிய படிகளில் புதுப்பிக்கவும்
படி 1 - உங்கள் வாகனத்தின் தயாரிப்பு, மாடல், வேரியன்ட், ரெஜிஸ்ட்ரேஷன் தேதி, மற்றும் நீங்கள் ஓட்டுகின்ற நகரம் போன்றவற்றை பூர்த்தி செய்யவும். ‘தோராய மதிப்பீட்டினை(quote) பெறவும்’ என்பதனை அழுத்தி, உங்களுடைய பிளானைத் தேர்ந்தெடுக்கவும்
படி 2 - தேர்ட் பார்ட்டி லையபிலிட்டி மட்டும் அல்லது ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் (விரிவான காப்பீடு) ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்யவும்.
படி 3 - உங்களின் முந்தைய இன்சூரன்ஸ் பாலிசி பற்றிய விவரங்களை எங்களிடம் அளிக்கவும் - காலாவதியாகும் தேதி, கடந்த ஆண்டில் செய்த கிளைம், கிடைத்த நோ கிளைம் போனஸ்.
படி 4 - உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை இப்போது உங்களுக்குக் காண்பிக்கப்படும். நீங்கள் ஸ்டாண்டர்ட் பிளானை தேர்வு செய்திருந்தால், கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்களை தேர்வு செய்வது, ஐடிவியை அமைத்துக் கொள்வது மற்றும் உங்களிடம் சிஎன்ஜி கார் இருப்பது பற்றி உறுதிப்படுத்திக் கொள்வது போன்றவற்றின் மூலம் உங்கள் பிளானை, நீங்கள் மேலும் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். நீங்கள் தேர்வு செய்த ஆட்-ஆன்-களை சேர்த்த பின்னர் வரும் இறுதி பிரீமியத் தொகையை அடுத்த பக்கத்தில் காண்பீர்கள்.