உங்கள் காரை பராமரிக்கின்ற அதே வேளையில், நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் ஒன்று என்னவென்றால், அது உங்களுடைய கார் இன்சூரன்ஸை சரியான நேரத்தில் புதுப்பிப்பது தான். உங்கள் காரை நல்ல முறையில் பராமரிப்பதற்கு நீங்கள் இவ்வளவு மெனக்கெடும் வேளையில், நீங்கள் உங்களுக்கு நேரக் கூடிய ஏதேனும் எதிர்பாரா சங்கடங்களிலிருந்து உங்கள் காரை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கும், வீண் பணச் செலவுகளை தவிர்ப்பதற்கும் இது உதவுகிறது.
கார் இன்சூரன்ஸ் வைத்திருப்பது, விபத்துகள், இயற்கை பேரிடர்கள், திருட்டு மற்றும் தீவிபத்து போன்ற எதிர்பாராமல் நேரும் சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்தும் உங்களுக்கு காப்புறுதி அளிப்பதற்கு உதவுகிறது. அது மட்டுமின்றி, சட்டத்தின் பிடியிலிருந்தும் உங்களை காப்பாற்றுகிறது.
பொதுவாக, கார் இன்சூரன்ஸ் என்பது ஒரு வருட காலம் அல்லது அதற்கு மேற்பட்ட பாலிசி காலத்துடன் வருகிறது. அதற்கு, பிறகு நீங்கள் அதனை காலாவதியாகும் தேதியன்று அல்லது அதற்கு முன்னதாகவே புதுப்பிக்க வேண்டியிருக்கும். எனினும், உங்கள் கார் இன்சூரன்ஸானது நீண்ட காலத்திற்கு முன்னரே காலாவதியாகி விட்டாலும் கூட, உங்கள் கார் இன்சூரன்ஸை நீங்கள் ஆன்லைனிலேயே தற்போது புதுப்பித்துக் கொள்ளலாம்.