ஐடிவி (IDV) கால்குலேட்டர்

அதிக ஐடிவி (IDV) மதிப்புடனான கார் இன்சூரன்ஸை பெற்றிடுங்கள்
Happy Couple Standing Beside Car

I agree to the  Terms & Conditions

Don’t have Reg num?
It's a brand new Car

கார் இன்சூரன்ஸில் ஐடிவி (IDV) பற்றி அனைத்தும்

ஐடிவி கால்குலேட்டர் - உங்கள் காருக்கான ஐடிவி-யை (IDV) கணக்கிடுங்கள்

ஐடிவி (IDV) கால்குலேட்டர் என்பது மிக முக்கியமான இன்சூரன்ஸ் கால்குலேட்டர் கருவிகளில் ஒன்றாகும், ஏனெனில் இது ஒருவரின் காரின் மார்க்கெட் மதிப்பை மட்டும் தீர்மானிக்க உதவவில்லை, உங்கள் கார் இன்சூரன்ஸுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத்தின் சரியான தொகையை தீர்மானிக்கவும்  உதவுகிறது

அதுமட்டுமின்றி இது எங்களுக்கு(காப்பீட்டாளர்) உங்கள் கார் திருடப்பட்டாலோ அல்லது பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடையும் சந்தர்ப்பங்களிலோ கிளைம் செய்யும் செலுத்த வேண்டிய சரியான தொகையை தீர்மானிக்கவும் உதவுகிறது.

உங்கள் காரின் தேய்மான கட்டணங்களைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ளுங்கள்

காரின் வயது

டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) %

6 மாதங்கள் மற்றும் அதற்கும் கீழ்

5%

6 மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை

15%

1 வருடம் முதல் 2 வருடங்கள் வரை

20%

2 வருடங்கள் முதல் 3 வருடங்கள் வரை

30%

3 வருடங்கள் முதல் 4 வருடங்கள் வரை

40%

4 வருடங்கள் முதல் 5 வருடங்கள் வரை

50%

எடுத்துக்காட்டு: உங்கள் காரை வாங்கி 6 மாத காலத்திற்கும் குறைவாக இருந்து, அதன் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 100 ஆக இருப்பின், அதன் தேய்மான விகிதம் 5% மட்டுமே ஆகும். 

அதாவது வாங்கிய பிறகு, ஐடிவி  (IDV) ரூ. 95-க்கு குறைகிறது, மேலும் 6 மாதங்களை கடந்து 1 வருடத்திற்கு உட்பட்டும் இருந்தால் ரூ. 85-க்கு குறையும், வாகனத்தின் வயது 1 ஆண்டுக்கு மேலும் ஆனால் 2 ஆண்டுகளுக்கு உட்பட்டும் இருப்பின் ரூ. 80 க்கு குறையும், வாகனத்தின் வயது 2 ஆண்டுகளுக்கு மேலும் ஆனால் 3 ஆண்டுகளுக்கு உட்பட்டும் இருப்பின் ரூ. 70 ஆக குறையும், இவ்வாறு அதன் 5வது ஆண்டில் 50% தேய்மானத்திற்குப் பிறகு ரூ.50 ஆக குறையும் வரை நடக்கும் .

உங்கள் காரை வாங்கி 5 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு இருந்தால், ஐடிவி (IDV) ஆனது காரின் நிலை - உற்பத்தியாளர், மாடல் மற்றும் அதன் உதிரி பாகங்களின் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து கணிக்கப்படும்.

மறுவிற்பனையின் போது, ​​உங்கள் ஐடிவி (IDV) உங்கள் காரின் மார்க்கெட்       மதிப்பைக் குறிக்கிறது. இருப்பினும், உங்கள் காரை நீங்கள் நன்றாகப் பராமரித்து, புதியது போல் பளபளப்பாக வைத்திருந்தால், உங்கள் ஐடிவி (IDV) உங்களுக்கு வழங்குவதை விடவும், கூடுதல் விலையை நீங்கள் எப்போதும் இலக்காக தீர்மானிக்கலாம். இறுதியாக, இது உங்கள் கார் நீங்கள் எவ்வளவு பத்திரமாக பாதுகாத்து இருக்கிறீர்கள் என்பதிலேயே இருக்கிறது.

உங்கள் காரின் ஐடிவி-யைத் (IDV) தீர்மானிக்க உதவக்கூடிய காரணிகள் யாவை?

    •  காரின் வயது: உங்கள் காரின் மார்க்கெட் மதிப்பை ஐடிவி (IDV) குறிப்பதால், சரியான ஐடிவி-யை (IDV) தீர்மானிக்க உங்கள் காரின் வயது மிகவும் முக்கியமானது. உங்கள் கார் பழையதாக இருந்தால், அதன் ஐடிவி (IDV) குறைவாகவே இருக்கும்.

    • வாகனத்தின் உற்பத்தியாளர், தயாரிப்பு மற்றும் மாடல்: உங்கள் காரின் தயாரிப்பு மற்றும் மாடல் உங்கள் ஐடிவி-யை (IDV) நேரடியாகப் பாதிக்கக்கூடியது. எடுத்துகாட்டாக; லம்போர்கினி வெனினோ (Lamborghini Veneno) போன்ற ஒரு கார், அதன் தயாரிப்பு மற்றும் மாடலில் உள்ள வித்தியாசத்தினால் ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) காரை விட அதிக ஐடிவி-யைக் (IDV) கொண்டிருக்கும்,

    • நகரத்தின் பதிவு விவரங்கள்: உங்கள் கார் பதிவு விவரங்கள் உங்கள் பதிவுச் சான்றிதழில் கிடைக்கும். மேலும், உங்கள் கார் பதிவு செய்யப்பட்ட நகரமும் அதன் இன்சூர்ட் டிக்லேர்ட் ஐடிவி-ல் (IDV) தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மெட்ரோ நகரத்தில் உங்கள் காரின் ஐடிவி (IDV), அடுக்கு-II நகரத்தில் உள்ள ஐடிவி-யை (IDV) விடக் குறைவாக இருக்கலாம்.

    • நிலையான டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) (இந்திய மோட்டார் கட்டணத்தின்படி): நீங்கள் ஷோரூமை விட்டு வெளியே வந்த தருணத்திலிருந்தே உங்கள் காரின் மதிப்பின் டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) ஆரம்பிக்கிறது- மேலும் அதன் தேய்மானத்தின் சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. இதுவும் இறுதியில் உங்கள் ஐடிவி-யை (IDV) பாதிக்கிறது. உங்கள் காரின் வயதுக்கு ஏற்ப அந்தந்த தேய்மான விகிதங்களைப் புரிந்துகொள்ள உதவும் அட்டவணை பின்வருமாறு.

உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை எவ்வாறு ஐடிவி பாதிக்கிறது?

எனக்கு ஐந்து வயதாகிறது என்று எண்ணி அதற்கேற்ப விளக்குங்கள்

நாங்கள் மிகவும் எளிமையாக இன்சூரன்ஸ் செய்கிறோம், ஆம், இப்போது 5 வயது குழந்தைகளாலும் இதனைப் பற்றி எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

உங்களிடம் விலையுயர்ந்த கடிகாரம் உள்ளது. ஒரு நாள், நீங்கள் அதை விற்றால் உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள எண்ணுகிறீர்கள். நீங்கள் அதை ஒரு வாட்ச்மேக்கரிடம் எடுத்துச் செல்லுங்கள். வாட்ச்மேக்கர் உங்கள் கடிகாரத்தைப் பார்த்து, அது கண்ணாடி, உலோகம், தோல் மற்றும் ஸ்க்ரூக்களால் ஆனது என்று விளக்குகிறார். எனவே, அவர் முதலில் அந்த பொருட்களின் விலையை கூட்டுகிறார். அப்போது அவர் உங்களிடம் வாட்ச் எவ்வளவு பழையது என்று கேட்கிறார், அதற்கு 5 வயது என்று சொல்லுங்கள். அவர் அதையும் குறித்துக்கொள்கிறார். இதையெல்லாம் அடிப்படையாக வைத்து, உங்கள் கடிகாரத்தை விற்றால், உங்களுக்கு ரூ. 500 கிடைக்கும். இங்கு, ரூ. 500 தான் உங்கள்  ஐடிவி (IDV) ஆகும்!

கார் இன்சூரன்ஸில் ஐடிவி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்