பம்பர் டூ பம்பர் கவர் பொதுவாகவே காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியுடன் சேர்ந்த ஒரு ‘ஆட்-ஆனாகவே’ (Add-on), சிறிது கூடுதல் பிரீமியம் தொகையுடன் வருகிறது. பம்பர் டூ பம்பர் கவர் என்றால் என்ன என்பதை பற்றி முதலில் புரிந்து கொள்வோம்.
பாமரருக்கும் புரிவது போல சொல்ல வேண்டுமென்றால், இது சிற்சில என்ஜின் சேதங்கள், டயர்கள், பேட்டரிகள் மற்றும் கண்ணாடி போன்றவற்றை மட்டும் தவிர்த்து, உங்கள் காரின் மற்ற எல்லா பாகங்களுக்கும் பாதுகாப்பளிக்கின்ற ஒரு கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆன் (Add-on) ஆகும்.
இது ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) அல்லது நில் டிப்ரிஸியேஷன் (Nil Depreciation) கார் இன்சூரன்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால், இது இன்சூரன்ஸ் கவரிலிருந்து டிப்ரிஸியேஷனை தவிர்த்து விட்டு, முழுவதுமாக காப்புறுதியளிக்கிறது.
இந்த இன்சூரன்ஸானது இந்தியாவில் 2009-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, அப்போதிலிருந்து கார் உரிமையாளர்களுக்கு, குறிப்பாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு, இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாகவே இருந்து வருகிறது:
- புதிய கார் உரிமையாளர் அல்லது 5 வருடத்திற்கும் குறைவாக காரை பயன்படுத்தியிருப்பவர்
- புதிய அல்லது அனுபவமில்லாத ஓட்டுநர்கள்
- விலையுயர்ந்த உதிரி பாகங்களை உடைய உயர்தர சொகுசு கார்களின் உரிமையாளர்கள்
- விபத்துகள் அதிகமாக நடைபெறும் பகுதிகளில்/பகுதிகளின் பக்கத்தில் குடியிருக்கும் உரிமையாளர்கள்
- வண்டியில் ஏற்படும் சின்னஞ்சிறிய கீறல்கள் மற்றும் சொட்டைகள் குறித்து கவலைப்படும் நபர்கள்
தங்கள் புத்தம் புதிய காரில் சிறிய கீறல் அல்லது சொட்டை விழுவது பற்றி கவலை கொள்கின்ற நபர்கள் மற்றும் அரிய, விலையுயர்ந்த உதிரி பாகங்களை கொண்ட உயர்தர விலையுயர்ந்த கார்களை வாங்க விரும்பும் புதிய கார்களின் உரிமையாளர்களிடத்தில் தான் குறிப்பாக இந்த இன்சூரன்ஸ் திட்டம் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த உரிமையாளர்களிடத்தில் தங்களுடைய காருக்கு 100% காப்புறுதி வழங்கப்படுவதன் பொருட்டு, கூடுதல் பிரீமியம் தொகையை கேட்கும் போது, அவர்கள் தங்கள் காரின் பாதுகாப்பிற்கு தாங்கள் செலுத்தும் சிறிய தொகையாகவே இதனை எண்ணுகின்றனர்.
பயன்படுத்துக : பம்பர் டூ பம்பர் கவருடன் கூடிய கார் இன்சூரன்ஸின் பிரீமியத்தினை கணக்கிடுவதற்கான கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்