கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

வணிக வாகனக் காப்பீட்டுக் கொள்கையை ஆன்லைனில் வாங்கவும்/புதுப்பிக்கவும்

I agree to the Terms & Conditions

Don’t have Reg num?
It’s a brand new vehicle

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

உங்களுக்கு கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் ஏன் அவசியமானது?

டிஜிட்-ன் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபி-கள் போல நடத்துகிறோம், அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

High IDV per rupee

உங்கள் வாகனத்தின் ஐடிவி (IDV)-ஐத் தனிப்பயனாக்குக

எங்களிடத்தில், உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப , உங்கள் வாகனத்தின் ஐடிவி-ஐத் தனிப்பயனாக்கலாம்!

24*7 Support

24*7 மணிநேர வாடிக்கையாளர் சேவை

அரசு விடுமுறை நாட்கள் உட்பட எல்லா நாட்களிலும் 24*7 மணிநேரமும் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளலாம்

சூப்பர் ஃபாஸ்ட் கிளைம்கள்

ஸ்மார்ட்ஃபோன் மூலம் செய்யக்கூடிய சில நிமிடங்களே எடுக்கும் வாகன சுய சோதனை (செல்ஃப் இன்ஸ்பெக்ஷன்) செயல்முறை!

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் எந்தெந்த இழப்புகளுக்குக் காப்பீடு அளிக்கிறது?

Accidents

விபத்துக்கள்

விபத்தால் உங்கள் கமர்ஷியல் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கிறது.

Theft

திருட்டு

திருட்டால் உங்கள் கமர்ஷியல் வாகனத்திற்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கிறது.

Fire

தீ விபத்து

தீ விபத்தால் உங்கள் கமர்ஷியல் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கிறது.

Natural Disasters

இயற்கை பேரிடர்கள்

இயற்கை பேரிடர்களால் உங்கள் கமர்ஷியல் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கிறது.

Personal Accident

தனிநபர் விபத்து

உங்கள் கமர்ஷியல் வாகனம் விபத்துக்குள்ளானால், அதைப் ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது இறந்தாலோ காப்பீடு அளிக்கிறது.

Third Party Losses

மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் இழப்புகள்

உங்கள் கமர்ஷியல் வாகனத்தால் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கிறது.

Towing Disabled Vehicles

வாகனத்தை இழுத்துச் செல்லும் போது ஏற்பட்ட சேதம்

உங்கள் கமர்ஷியல் வாகனத்தை இழுத்துச் செல்லும் போது, வண்டிக்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கிறது.

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் உடன் கிடைக்கும் ஆட்-ஆன்கள்

கன்ஸ்யூமபில் கவர்

கன்ஸ்யூமபில் கவரானது சாதாரணமான கமர்ஷியல் இன்சூரன்ஸ்களில் கிடைக்கும் பயன்களைக் காட்டிலும் அதிக அளவிலான பாதுகாப்பை அளிக்கிறது. விபத்தில் உங்கள் வண்டியின் எந்த பாகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதனால் உங்களுக்கு ஏற்படும் இழப்புகளிலிருந்து இந்த கவரானது பாதுகாப்பு அளிக்கும். அதாவது நட்கள், போல்ட்கள், ஸ்குரூக்கள், என்ஜின் ஆயில் மற்றும் கிரீஸ் போன்ற எல்லா பாகங்களையும் இது கவர் செய்யும். 

பார்ட்ஸ் டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) புரொட்டெக்ட்

நாட்கள் நகர உங்கள் வண்டியும் , அதில் இருக்கும் பாகங்களும் தேய்மானம் அடையும். இதனால் அவற்றின் மதிப்பானது குறையும். கிளைம் செய்யும் போது இந்தத் தொகையானது கழித்துக் கொள்ளப்படும். விபத்தில் வண்டியின் பாகமானது சேதம் அடைந்திருந்தால் (ரப்பர் அல்லது ஃபைபர் கிளாஸ் போன்ற பாகங்கள்), அந்த பாகத்தை மாற்றும் போது அந்த பாகத்திற்கான டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) மதிப்பினை இது கவர் செய்யும் 

என்ஜின் அன்ட் கியர் பாக்ஸ் புரொட்டெக்ட்

இந்த ஆட்-ஆன் ஆனது விபத்து ஏற்பட்டதன் பின் நிகழக்கூடிய பின்விளவுகளா ல்(விபத்தினால் ஏற்பட்ட சேதத்தினால் ஆன) உண்டான சேதங்கள் மூலம் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கும். அதாவது விபத்தில் லுபிரிகேஷன் ஆயில் லீக்கேஜ் போன்ற பிரச்சனைகளால் உங்கள் வண்டியின் என்ஜின் அல்லது கியர் பாக்ஸ் போன்றவை சேதம் அடைந்தாலோ அல்லது ஸ்டாண்டர்ட் பாலிசியில் கவர் ஆகாத ஹைட்ரோஸ்டாட்டிக் லாஸ் ஆல் என்ஜின் சேதம் போன்ற இழப்புக்களை இது கவர் செய்யும். 

பிரேக்டவுண் அசிஸ்டன்ட்ஸ் - பொதுவாக ரோட்ஸைட் அசிஸ்டன்ட்ஸ்

சிக்கலான சமயங்களில் குறிப்பிட்ட உதவி கிடைத்தால் நன்றாகத் தான் இருக்கும். விபத்து , டையர் பஞ்சர், பேட்டரி சரியாக வேலை செய்யாமல் போன காரணத்தால் நடு ரோட்டில் வண்டி நின்று விட்டால், அந்த சமயத்தில் பிரேக்டவுண் அசிஸ்டன்ட்ஸ் கைக்கொடுக்கும். இந்த ஆட்-ஆன்-ஐத் தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் 24x7 மணிநேரமும் எங்களின் உதவியைப் பெறலாம். 

வருமான இழப்பு

வண்டி இல்லாமல் சில தொழில்களை செய்ய முடியாது. உங்கள் கமர்ஷியல் வண்டியை ரிப்பேர் செய்வதற்காக கேரேஜ்-ல் விட்டிருக்கும் சமயம் உங்களால் தொழில் செய்ய முடியாது. இதனால் உங்கள் வருமானம் பாதிக்கப்படும். மேலும், இதனால் இழப்புகளும் ஏற்படலாம். இந்த ஆட்-ஆன்-ஐ தேர்வு செய்வதன் மூலம் இது போன்ற சமயத்தில் ஏற்படக்கூடிய  இழப்புகளை நீங்கள் சமாளிக்கலாம். 

வாகனத்தை இழுத்துச் செல்வதற்கு ஆகும் கூடுதல் செலவுகள்

உங்கள் வண்டியானது விபத்தில் சேதம் அடைந்திருந்தால், அதை ரிப்பேர் செய்வதற்கு அருகில் இருக்கும் கேரேஜுக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்போது வண்டியை இழுத்துச் செல்வதற்கு வண்டிக்கு ஆகும் கூடுதல் செலவினை இது கவர் செய்யும். விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து அருகில் இருக்கும் கேரேஜுக்கோ அல்லது பாதுகாப்பான இடத்திற்கோ கொண்டு செல்வதற்கு ஆகும் கூடுதல் செலவினை இந்த ஆட்-ஆன் கவர் செய்யும். 

இஎம்ஐ (EMI) புரொட்டெக்ஷன் கவர்

நீங்கள் உங்கள் வண்டிக்காக லோன் எடுத்திருக்கலாம். எதிர்பாராத விதமாக அது விபத்தில் சிக்கி சேதம் அடைந்து, ரிப்பேர் செய்வதற்காக கேரேஜில் இருப்பதினால் உங்கள் தொழிலில் இழப்பை சந்திக்கலாம். இதனால் உங்கள் இஎம்ஐ-ஐ (EMI) (மாதத் தவணையை) கட்ட முடியாமலும் போகலாம். பைனான்சியருக்கு நீங்கள் கட்ட வேண்டிய இஎம்ஐ (EMI)-யைத் (மாதத் தவணையை) தடையில்லாமல் கட்ட இந்த ஆட்-ஆன் உதவி செய்யும். 

கூடுதல் கவரேஜ்கள் அல்லது இதோடு கிடைக்கும் எண்டோர்ஸ்மென்ட்கள்

எல்லா சமயத்திலும் ஸ்டாண்டர்ட் கவரேஜ் கை கொடுக்காது. அதற்காகத் தான் உங்கள் கமர்ஷியல் வண்டிக்குத் தேவையான கூடுதல் பாதுகாப்பை வழங்கும் பல விதமான கவர்களை பாலிசி உடன் அளிக்கிறோம்.

பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

வண்டியை வைத்திருக்கும் ஒவ்வொருத்தரும் பர்சனல் ஆக்சிடன்ட் கவர் வைத்திருக்க வேண்டியது சட்டப்படி காட்டாயமாகும். உங்களிடம் பிஏ கவர் இல்லையென்றால், நீங்கள் உங்கள் கமர்ஷியல் இன்சூரன்ஸுடன் சேர்த்து இந்தக் கவரை வாங்கிக் கொள்ளலாம். விபத்து ஏற்பட்டால், அதில் உரிமையாளர்(ஓனர்)-ஓட்டுநரின் டிரைவர்) உடலில் காயம் ஏற்பட்டால், விபத்தில் இறந்தால் அல்லது இது போன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் இழப்புக்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும்.

அன்நேம்ட் பிஏ (PA) கவர்

ஒருபோதும் அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்று தான் நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால், சில சமயம் எதிர்பாராத விதமாக அவ்வாறு நேர்ந்தால், அதனை சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு அதில் உங்களுடன் வந்தவருக்கு இழப்பு ஏற்பட்டால், அந்த இழப்பினை இந்த கவரானது ஈடு செய்யும்.

லீகல் லையபிலிட்டி

உங்களின் பணியாளர்கள் / உங்களுக்காக பணிபுரியும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், அதன் காரணமாக உங்களுக்கு எதிராக எழும் லீகல் லையபிலிட்டிகளை சமாளிக்க இந்த கவர் உதவியாக இருக்கும்.

ஐஎம்டி 23 (IMT 23)

விபத்தில் உங்கள் வண்டியின் லைட்டுகள், டயர்கள், ட்யூப்கள், மட்கார்டுகள், பானட், பம்ப்பர்களின் சைட் பார்ட்ஸ், ஹெட்லைட்கள் மற்றும் பெயிண்ட்வொர்க்கிற்கு சேதம் ஏற்பட்டால், அதனால் ஏற்பட்ட சேதங்களை அல்லது இழப்புகளை இது கவர் செய்யும். உங்களின் வண்டியில் ஏற்பட்ட சிறு சேதங்களும் இது கவர் செய்யும். 

எலக்டிரிக்கல் அக்ஸசரீஸ்

வண்டியை தயாரித்த போது அந்த வண்டியில் இல்லாத எலக்டிரிக்கல் அக்ஸசரீஸை, வண்டியை வாங்கிய பின்பு அதை பொருத்தியவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். வண்டியில் கூடுதலாக பொருத்தப்பட்டிருக்கும் எலக்டிரிக்கல் அக்ஸசரீஸுக்கு ஏற்படும் பாதிப்பை இது கவர் செய்யும். 

நான்- எலக்டிரிக்கல் அக்ஸசரீஸ்

வண்டியின் உற்பத்தியாளர் தயாரித்த போது அந்த வண்டியில் இல்லாத நான்- எலக்டிரிக்கல் அக்ஸசரீஸை நீங்கள் பொருத்தி இருந்தால், அந்த அக்ஸசரீஸுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் அதனால் உங்களுக்கு ஏற்படும் இழப்புக்களை இது கவர் செய்யும். 

சிறப்பு விலக்குகள்/ஸ்பெஷல் எக்ஸ்க்ளூஷன்ஸ் & கட்டாயமான கழிப்புகள்/கம்பல்சரி டிடக்டபிள்ஸ்

உங்கள் வண்டிக்கு ஏற்படும் ஒவ்வொரு இழப்புக்கும் உங்களின் பங்கு என்று குறிப்பிட்ட தொகையை நீங்கள் செலுத்த வேண்டியதாக இருக்கும். இதுவே கட்டாயமான கழிப்புகள்/கம்பல்சரி டிடக்டபிள்ஸ் ஆகும். இது உங்கள் பிரீமியத்தைக் குறைக்கவும் உதவும். மேலும் உங்கள் வண்டியின் லைட்டுகள், டயர்கள், ட்யூப்கள், மட்கார்டுகள், பானட், பம்ப்பர்களின் சைட் பார்ட்ஸ், ஹெட்லைட்கள் மற்றும் பெயிண்ட்வொர்க்கிற்கு சேதம் ஏற்பட்டால், அதனால் ஏற்பட்ட சேதங்களை அல்லது இழப்புகளை இது கவர் செய்யும்.

எவ்வித காரணங்களால் இழப்பீடுகளை பெற முடியாது?

 நீங்கள் கிளைம் செய்யும் போது ஏமாற்றத்தை தடுக்க, உங்களின் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசியில் எந்தெவொரு காரணங்களால் நீங்கள் இழப்பீடுகளை பெற இயலாது என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம். அதுபோன்ற சில காரணங்கள் இங்கே:

தேர்டு- பார்ட்டி பாலிசி வைத்திருப்பவருக்கு ஏற்படும் சொந்த சேதங்கள்

தேர்டு- பார்ட்டி லையபிலிட்டி பாலிசியை மட்டும் வைத்திருந்தால், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் எதுவும் இதில் அடங்காது.

குடிபோதையில் வண்டி ஓட்டுதல் அல்லது லைசன்ஸ் இன்றி வண்டி ஓட்டுதல்

கிளைம் செய்த வாகனத்தின் உரிமையாளர்-ஓட்டுநர் குடித்துவிட்டு அல்லது செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் ஓட்டுவதால் ஏற்படும் சேதங்கள் எதுவும் இதில் அடங்காது

அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள்

ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்படும் சேதங்களுக்கு (வெள்ளம் இருக்கும்போது தேவையில்லாமல் நீங்களாகவே உங்கள் வாகனத்து எடுத்து ஓட்டுவது போன்றவை) காப்பீடு அளிக்கப்படாது.

பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள்

விபத்து/இயற்கை சீற்றம் போன்றவற்றின் நேரடி விளைவாக ஏற்படாத சேதங்களுக்கு காப்பீடு அளிக்கப்படாது. வருவாய் இழப்பு, மார்க்கெட் இழப்பு போன்ற பின்விளைவினால் ஏற்படும் இழப்புகள் அதாவது. வருமான இழப்பு, மார்க்கெட் சரிவு போன்ற பின்விளைவினால் ஏற்படும் இழப்புக்களுக்கு காப்பீடு அளிக்கப்படாது.

டிஜிட்-ன் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

டிஜிட்-ல் இருக்கும் பயன்கள்

டிஜிட்-ல் இருக்கும் பயன்கள்

ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்கத் தேவையில்லாத எளிமையான கிளைம் செயல்முறை

வாடிக்கையாளர் சேவை

24*7 மணிநேர வாடிக்கையாளர் சேவை

எந்த வகையான கமர்ஷியல் வாகனங்கள் இதன் மூலம் காப்பீடு செய்யப்படுகிறது

கேப்கள் (cabs) மற்றும் டாக்ஸிகள், டிரக்குகள்,லாரிகள், பேருந்துகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், பள்ளி வேன்கள் போன்றவை.

பிரீமியம்

கமர்ஷியல் வாகனத்தின் வகை மற்றும் இன்சூர் செய்யப்பட வேண்டிய வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்டது

கூடுதல் கவரேஜ்

பிஏ கவர்ஸ், லீகல் லையபிலிட்டி கவர் , சிறப்பு விலக்குகள்/ஸ்பெஷல் எக்ஸ்க்ளூஷன்ஸ் மற்றும் கட்டாயமான கழிப்புகள்/கம்பல்சரி டிடக்டபிள்ஸ் , இன்னும் பல

மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் இழப்புகள்

தனிப்பட்ட /தனிநபர் சேதங்களுக்கு வரம்புகள் இல்லாத லையபிலிட்டி, சொத்து/வாகன சேதங்களுக்கு 7.5 லட்சம் வரை இழப்பீடு

இதில் பாதுகாக்கப்படும் கமர்ஷியல் வெஹிக்கிலின் வகைகள்:

பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

  • ஏற்றிச் செல்லும் வண்டிகளுக்கான இன்சூரன்ஸ் ஆகும். உதாரணத்திற்கு டாக்ஸிக்கள்,கேப்கள், ஆட்டோ ரிக்ஷா, ஸ்கூல் பஸ்கள், பிரைவேட் / தனியார் பஸ்கள் போன்ற வண்டிகள். 

  • தினமும் அதிக அளவிலான மக்களை ஏற்றிச் செல்லும் ஸ்கூல் பஸ்கள் மற்றும் கேப்கள் போன்ற பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில்களுக்கு அதிக பொறுப்புக்கள் உள்ளது. 

  • வண்டிகள் ஓட்டுவதையே இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்த கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸானது எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகளினால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்யும். 

கூட்ஸ் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

  • இது, பொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கும் வண்டிகளுக்கான இன்சூரன்ஸ். டிரக்குகள், டெம்போக்கள் மற்றும் லாரிக்கள் போன்ற வண்டிக்கள் இதில் அடங்கும். 

  • பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டியானது அளவில் பெரியதாக இருக்கும், அதே சமயம் ஆபத்துக்கள் நிறைந்துள்ளதாகவும் இருக்கும். கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், விபத்துக்கள், இயற்கை பேரிடர்கள் அல்லது இது போன்ற எதிர்பாராத சம்பவங்களால் ஏற்படும் இழப்புகளிலிருந்து உரிமையாளர்(ஓனர்) -ஓட்டுனர் (டிரைவர்) மற்றும் வாகனத்தையும் பாதுகாக்கிறது.

  •  உங்கள் தொழிலானது டிரக்குகளை பயன்படுத்தி சரக்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வேலையாக இருந்தால், கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸானது இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், தீ விபத்துகள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் சரக்குகளுக்கு ஏற்படும் இழப்புக்களிலிருந்தும் அல்லது சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. 

இதர வகை & ஸ்பெஷல் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

  •  கேப்கள், டாக்ஸிக்கள், டிரக்குகள் மற்றும் பஸ்களைத் தவிர தொழிலுக்காக அடிக்கடி பயன்படுத்தப்படும் பல வகையான வண்டிகள் உள்ளன. விவசாயம், சுரங்கம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் சிறப்பு வண்டிகள் அனைத்தும் இதில் அடங்கும்.

  • இத்தகைய வண்டிகளுக்கான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது இனசுர் செய்யப்பட்ட வண்டிக்கு / வண்டியினால் ஏற்பட்ட சேதங்களை மற்றும் இழப்புக்களை ஈடு செய்யும். இத்துடன் வண்டியின் உரிமையாளர்(ஓனர்) -ஓட்டுனர்(டிரைவர்) ஆகிய இருவரையும் பாதுகாக்கும். 

  •  இந்த வண்டிக்கான முதலீடு மற்றும் அதன் அளவு ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, அந்த வண்டிக்கு ஏற்ற கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பெறுவது பாதுகாப்பானது ஆகும். இதனால் எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகளால் ஏற்படக்கூடிய நிதி இழப்புகளிலிருந்து தொழிலையும் அல்லது அதன் உரிமையாளருக்கு (ஓனர்) ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைத்து, நிதி நெருக்கடியிலிருந்து அவர்களை பாதுகாக்கும். 

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசிகளின் வகைகள்

உங்கள் கமர்ஷியல் வாகனத்தின் தேவைக்கு ஏற்ப, நாங்கள் இரண்டு வகையான பாலிசிகளை வழங்குகிறோம். இருப்பினும், கமர்ஷியல் வண்டிக்கு ஏற்படும் அபாயத்தையும் அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு, உங்கள் கமர்ஷியல் வாகனம் மற்றும் உரிமையாளர் (ஓனர்)-ஓட்டுநர் (டிரைவர்) ஆகியோருக்கு ஏற்படும் இழப்புகளையும் ஈடு செய்து, அவர்களையும் பாதுகாக்கும் ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசியையும் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

லையபிலிட்டி ஒன்லி

ஸ்டாண்டர்ட் பேக்கேஜ்

×

கிளைம் செய்வது எப்படி?

Report Card

டிஜிட் இன்சூரன்ஸில் கிளைம்கள் எத்தனை விரைவாக கிடைக்கும்?

நீங்கள், உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். இந்த கேள்வியை நீங்கள் கேட்பதும் நன்மைக்கே!

டிஜிட்-ன் கிளைம் ரிப்போர்ட் கார்ட்-ஐ படிக்கவும்

எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்

அமன் ஜஸ்வல்

கிளைம் ஈசியா செய்யலாம். இன்சூரன்ஸ் பாலிசியில் இருக்குற நம்பர்கு கால் பண்ணனும். டிஜிட் இன்சூரன்ஸ் குழுக்கு கால் போகும். அவங்க 5 நிமிஷத்துல கிளைம் பதிவு செய்வாங்க. அப்புறம் வண்டியை ரிப்பேர் செய்ய வொர்க் ஷாப்கு எடுத்துட்டு போகணும் அவ்வளவு தான். அதே நாளே சர்வே செஞ்சு முடிச்சுட்டாங்க. பிராசஸ் முழுசும் அபிஷேக் சார் தான் புரிய வச்சார், கிளைமும் சீக்கிரமா கிடைக்கும்படி பாத்துகிட்டார். 

 

ரோஹித் கோட்

Mr. சித்தேஷ் மக்தும் அவர்கள் எனக்கு அளித்த சர்வீஸ் எனக்கு திருப்தியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. அவருடன் தொடர்புகொண்டு பேசி, தேவையான விஷயங்களை தெரிந்து கொண்டது ரொம்ப சிறப்பா இருந்தது. ஆட்டோ துறையை பற்றி நல்லா தெரிந்து வச்சிருக்கார். அமைதியான, வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார். என்னோட சிக்கலை தீர்த்து வைக்க நெறையா ஹெல்ப் பண்ணினார். எங்களோட பிரச்சனைகளை தீர்ப்பதற்காக இது போல துறையில் சிறந்த அறிவையும் அனுபவத்தையும் கொண்ட குழுவை வைத்திருக்கும் டிஜிட்டுக்கு நன்றிகள் பல.சித்தேஷ் சார் இதே போல நீங்க உங்க வேலையை சிறப்பாக செய்யுங்க. உங்க வேலைல சிறந்து விளங்க என்னுடைய விஷ்ஷஸ். 

 

ஜெயந் திரிபாதி

டிஜிட் இன்சூரன்ஸ் என் கேஸ்-ஐ ஹாண்டில் செய்த விதத்தை நினைப்பதில் சந்தோஷமாக இருக்கிறது. கோ டிஜிட் (Go Digit) Mr. ரத்ன குமார் என் கேஸ்-ஐ ஹாண்டில் செய்த விதத்தை பற்றி இங்கு ஷேர் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கேரேஜ் சேர்ந்தவர்களிடம் என் வண்டியை பற்றிய தகவல்களை கேட்டு அதை உடனடியாக என்னிடம் ஷேர் செய்வார். ரத்ன குமார் போன்ற பொறுப்பானவர் கையில் டிஜிட்-ன் வளர்ச்சி இருக்கு. மறுபடியும் என் இன்சூரன்ஸ்-ஐ டிஜிட்ல தான் ரிநியூ பண்ணுவேன். என்னோட இன்னொரு Creta வண்டிக்கும் இங்க தான் இன்சூரன்ஸ் வாங்குவேன். டிஜிட்-ஐ கண்டிப்பா ரெகமண்ட் செய்வேன். ஆல் தி பெஸ்ட் டிஜிட்.

 

Show more

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் இருக்கு கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பற்றிய கேள்விகள்(எப்ஏகயூஸ்)