டிராக்டர் இன்சூரன்ஸ்

விவசாய/பண்ணை டிராக்டர்களுக்கு கமர்ஷியல் வாகன இன்சூரன்ஸ்
city taxi
Chat with an expert

I agree to the Terms & Conditions

Don’t have Reg num?
It’s a brand new vehicle

local_shipping Continue with

-

(Incl 18% GST)

டிராக்டர் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

டிராக்டர் இன்சூரன்ஸ் என்பது, உங்கள் டிராக்டரை விபத்துக்கள், மோதல்கள், இயற்கை பேரிடர்கள், தீ அல்லது திருட்டுக்கள் போன்ற சம்பங்கள் ஏற்படும் சமயங்களில் நேரக் கூடிய ஏதேனும் எதிர்பாராத சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒரு வகையான கமர்ஷியல் வாகன இன்சூரன்ஸ் பாலிசியாகும்.

டிராக்டர்களுக்கான தேர்டு பார்ட்டி லையபிலிட்டி (பொறுப்பு) பாலிசி என்பது தேர்டு பார்ட்டியினருக்கு நேரும் சேதங்களுக்கு மட்டுமே பாதுகாப்பளிக்கிறது. காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) டிராக்டர் இன்சூரன்ஸ் என்பது சொந்த சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கும் சேர்த்து பாதுகாப்பளிக்கிறது, இதன் மூலம் உங்களுக்கும், உங்கள் பிசினஸிற்கும் நீங்கள் உங்கள் டிராக்டர்களுக்கு விரும்புவது போன்ற சரியான பாதுகாப்பினை இந்த இன்சூரன்ஸ் வழங்குகிறது.

Read More

நான் ஏன் டிராக்டர் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?

டிஜிட்-இன் கமர்ஷியல் டிராக்டர் இன்சூரன்ஸை நாம் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களை விஐபி-க்கள் (VIP) போல நடத்துகிறோம், எப்படியென்று தெரிந்து கொள்ளவும்...

உங்கள் வாகன ஐடிவி-ஐ (IDV) தனிப்பயனாக்கவும்

உங்கள் வாகன ஐடிவி-ஐ (IDV) தனிப்பயனாக்கவும்

உங்கள் விருப்பப்படி, உங்கள் வாகன ஐடிவி-ஐ (IDV) எங்களுடன் இணைந்து தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்!

24*7 மணி நேர சேவை

24*7 மணி நேர சேவை

தேசிய விடுமுறைகளில் கூட 24*7 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வசதிகள்

அதி-வேக கிளைம்கள்

சில நிமிடங்களில் நிறைவடையக்கூடிய ஸ்மார்ட் ஃபோன் மூலம் செயல்படுத்தப்படும் எளிதான சுய-ஆய்வு செயல்முறை!

கமர்ஷியல் டிராக்டர் இன்சூரன்ஸில் என்னென்ன உள்ளடக்கப்பட்டுள்ளது?

விபத்துக்கள்

விபத்துக்கள்

விபத்து காரணமாக டிராக்டருக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகள்

திருட்டு

திருட்டு

திருட்டு நிகழும் சமயத்தில் டிராக்டருக்கு ஏற்படும் எந்தவொரு சேதங்களும், இழப்புகளும்

தீவிபத்து

தீவிபத்து

எதிர்பாராத விதமாக தீவிபத்தினால் டிராக்டருக்கு ஏற்படும் எந்தவொரு சேதங்கள் அல்லது இழப்புகள்

இயற்கை பேரிடர்கள்

இயற்கை பேரிடர்கள்

வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் பிற இயற்கை பேரிடர்களால் டிராக்டருக்கு ஏற்படும் எந்தவொரு சேதங்களும், இழப்புகளும்.

பர்சனல் ஆக்சிடன்ட் (தனிப்பட்ட விபத்து)

பர்சனல் ஆக்சிடன்ட் (தனிப்பட்ட விபத்து)

எந்தவொரு தனிப்பட்ட காயங்களுக்கும் அல்லது டிராக்டர் உரிமையாளர்-ஓட்டுநரின் மரணத்திற்கும் பாதுகாப்பு வழங்குகிறது.

தேர்டு பார்ட்டி இழப்புகள்

தேர்டு பார்ட்டி இழப்புகள்

விபத்து அல்லது மோதல் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், டிராக்டர் இன்சூர் செய்யப்பட்டிருப்பதால், தேர்டு பார்ட்டி வாகனம், சொத்து அல்லது நபருக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு பாதுகாப்பளிக்கிறது.

ஓடாத வாகனங்களை கட்டியிழுப்பது

ஓடாத வாகனங்களை கட்டியிழுப்பது

உங்கள் டிராக்டரை ஏதேனும் ஒரு சமயத்தில் கட்டியிழுத்து வரும்படி வந்து, அதன் மூலம் உங்கள் டிராக்டருக்கு ஏற்படும் சேதங்களுக்கு பாதுகாப்பளிக்கிறது.

எவையெல்லாம் உள்ளடக்கப்படவில்லை?

உங்கள் கமர்ஷியல் டிராக்டர் இன்சூரன்ஸ் பாலிசியில் என்னவெல்லாம் உள்ளடக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொள்வதும் மிக முக்கியமாகும், அப்போது தான் நீங்கள் கிளைம் செய்யும் வேளையில் உங்களுக்கு ஏதும் சங்கடங்கள் நேராது. அது மாதிரியான சில சந்தர்ப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தேர்டு பார்ட்டி பாலிசிதாரருக்கு ஏற்படும் சொந்த சேதங்கள்

நீங்கள் உங்கள் டிராக்டருக்கு தேர்டு பார்ட்டி கமர்ஷியல் இன்சூரன்ஸ் மட்டுமே எடுப்பதாக இருந்தால், உங்களின் சொந்த சேதங்களுக்கும், இழப்புகளுக்கும் இதன் மூலம் பாதுகாப்பளிக்கப்படாது.

மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுவது, அல்லது செல்லத்தக்க லைசென்ஸ் இன்றி வண்டி ஓட்டுவது

கிளைம் செய்யும் சமயத்தில், ஓட்டுநர்-உரிமையாளர் செல்லத்தக்க ஓட்டுநர் லைசென்ஸ் இன்றி டிராக்டர் ஓட்டியிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது மது அருந்தி விட்டு ஓட்டியிருந்தாலோ, கிளைம் கோரிக்கை அங்கீகரிக்கப்படாது.

அலட்சியத்தின் காரணமாக விளைகிற சேதங்கள்

அலட்சியத்தின் காரணமாக டிராக்டருக்கு ஏற்படும் எந்தவொரு சேதங்களுக்கும் அல்லது இழப்புகளுக்கும் பாதுகாப்பளிக்கப்படாது. உதாரணத்திற்கு, ஊரில் வெள்ளம் வந்திருக்கும் சூழ்நிலையில், ஒருவர் வெளியே டிராக்டரை எடுத்துச் செல்வது.

பின்விளையும் சேதங்கள்

விபத்து, இயற்கை பேரிடர் அல்லது தீவிபத்து காரணமாக நேரடியாக ஏற்படாத எந்தவொரு சேதங்களுக்கும் அல்லது இழப்புகளுக்கும் பாதுகாப்பளிக்கப்படாது.

டிஜிட் வழங்கும் கமர்ஷியல் டிராக்டர் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

டிஜிட் பலன்கள்

கிளைம் நடைமுறை

ஆவணங்களற்ற கிளைம்கள்

வாடிக்கையாளர் சேவை

24 x 7 மணி நேர சேவை

கூடுதல் இன்சூரன்ஸ் பாதுகாப்பு

பிஏ (PA) கவர், லீகல் லையபிலிட்டி கவர்(legal liability cover), சிறப்பு விலக்கல்கள் மற்றும் கட்டாய கழிப்புத்தொகை போன்றவை

தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்படும் சேதங்கள்

தனிப்பட்ட சேதங்களுக்கான வரம்பற்ற பொறுப்பு, சொத்து/வாகன சேதங்களுக்கு ரூ.7.5 லட்சம் வரை பாதுகாப்பளிக்கப்படும்

கமர்ஷியல் டிராக்டர் இன்சூரன்ஸ் திட்ட வகைகள்

உங்கள் டிராக்டரின் வகை, மற்றும் நீங்கள் இன்சூர் செய்ய விரும்புகிற டிராக்டர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து, நாங்கள் இரண்டு முதன்மையான திட்டங்களை நீங்கள் தேர்வு செய்வதற்கு வழங்குகிறோம்.

பொறுப்பு மட்டும்

திட்டமான தொகுப்பு

×

எப்படி கிளைம் செய்வது?

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு சீக்கிரமாக தீர்த்து வைக்கப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தினை மாற்றும் நேரத்தில் உங்கள் மனதில் எழ வேண்டிய முதல் கேள்வி இது தான். இந்த கேள்வியை நீங்கள் எழுப்புவது சரியே!

டிஜிட் கிளைய்ம்களின் ரிப்போர்ட் கார்டினை வாசிக்கவும்

இந்தியாவிலுள்ள ஆன்லைன் டிராக்டர் இன்சூரன்ஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்