பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்ஸ்

usp icon

2000+ Cashless

Network Garages

usp icon

96% Claim

Settlement (FY24-25)

usp icon

24*7 Claims

Support

Get Instant Policy in Minutes*

I agree to the Terms & Conditions

It’s a brand new vehicle
Disclaimer:Tata Capital Limited (“TCL”) registered with IRDAI (License No. CA0896, valid till 21-Jan-2027), acts as a Corporate Agent “Composite” for Go Digit General Insurance Limited. Please note that, TCL does not underwrite the risk or act as an insurer. For more details on the risk factors, terms and conditions please read sales brochure carefully of the Insurance Company before concluding the sale. Participation to buy insurance is purely voluntary.

The Registered office of TCL is Tata Capital Limited, 11th Floor, Tower A, Peninsula Business Park, Ganpatrao Kadam, Marg, Lower Parel, Mumbai-400013.
The Registered Office of Go Digit: Go Digit General Insurance Limited, 1st Floor, Fairmont, Hiranandani Business Park, Powai, Mumbai – 400076.
background-illustration

பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது ஒரு வகையான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும். இது, பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் கமர்ஷியல் வாகனங்களைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸானது விபத்து, இயற்கை சீற்றம் அல்லது தீ விபத்து போன்ற எதிர்பாராத நிகழ்வுகளினால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புக்களிலிருந்து வாகனங்களைப் பாதுகாக்கிறது.

பஸ் இன்சூரன்ஸ், வேன் இன்சூரன்ஸ், டேக்ஸி/கேப் இன்சூரன்ஸ் மற்றும் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் ஆகியவை பொதுவான பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஆகும். 

இதில் பாதுகாக்கப்படும் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கிலின் வகைகள்:

  • பஸ்கள்: ஸ்கூல் பஸ்கள், தனியார் சுற்றுலா / டூர் பஸ்கள் மற்றும் பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு கொண்டு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் இந்த பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசி பாதுகாக்கும்.
  • ஆட்டோ ரிக்ஷாக்கள்:  தொழிலுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து ஆட்டோ ரிக்ஷாக்களும், மக்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் ஆட்டோக்களையும் இந்த பாலிசி பாதுகாக்கும்.
  • டேக்ஸிக்கள், கேப்கள் மற்றும் கமர்ஷியல் கார்கள்: நீங்கள் அன்றாடம் பயணிக்கும் உபெர்(uber), ஓலா (ola) மற்றும் தொழிலுக்காகவும், பொதுப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் தனியார் கார்கள், கேப்கள் மற்றும் கமர்ஷியல் கார்கள் ஆகிய அனைத்தையும் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாதுகாக்கும்.
  • வேன்கள்: தொழிலுக்காக பயன்படுத்தப்படும் ஸ்கூல் வேன்கள் மற்றும் தனியார் டூர் / சுற்றுலா மினி பஸ்கள் போன்ற வேன்களும் இந்த பாலிசியில் அடங்கும்.

Read More

நான் ஏன் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

டிஜிட்டின் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும் ?

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிக்கள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...

Customize your Vehicle IDV

உங்கள் வாகன ஐடிவி(IDV)யைத் தனிப்பயனாக்குங்கள்

எங்கள் மூலம், உங்கள் விருப்பப்படி, உங்கள் வாகன ஐடிவியை நீங்கள் தனிப்பயனாக்கலாம்!

24*7 Support

24*7 மணி நேர ஆதரவு சேவை

24*7 மணி நேர அழைப்பு சேவை தேசிய விடுமுறை நாட்களிலும் உண்டு

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

ஸ்மார்ட் ஃபோன்-எனேபிள்டு செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் செயல்முறைகளுக்கு சில நிமிடங்களே போதும்!

பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்பீடு அளிக்கப்படுகிறது?

Accidents

விபத்துகள்

பயணிகளை ஏற்றி செல்லும் உங்கள் வாகனத்திற்கு விபத்தினால் ஏற்படும் பொதுவான சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு காப்பீடு வழங்கப்படும்.

Theft

திருட்டு

பயணிகளை ஏற்றி செல்லும் உங்கள் வாகனத்திற்கு திருட்டினால் ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படும்.

Fire

தீ

பயணிகளை ஏற்றி செல்லும் உங்கள் வாகனத்திற்கு துரதிருஷ்டமாக தீயினால் ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படும்.

Natural Disasters

இயற்கை சீற்றங்கள்

பயணிகளை ஏற்றி செல்லும் உங்கள் வாகனத்திற்கு ஏதேனும் இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படும்.

Personal Accident

தனிநபர் விபத்து

பயணிகளை ஏற்றி செல்லும் உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்ட விபத்தினால் உரிமையாளருக்கு-ஓட்டுநர்களுக்கு ஏற்படும் காயம் அல்லது உயிரிழப்புகளுக்கு காப்பீடு வழங்கப்படும்.

Third Party Losses

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் இழப்புகள்

ஒருவேளை விபத்து அல்லது மோதல் ஏற்படும் போது இன்சூர் செய்யப்பட்ட பயணிகளை ஏற்றி செல்லும் வாகனத்தினால் தேர்டு பார்ட்டி வாகனம், சொத்து அல்லது நபருக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படும்

Towing Disabled Vehicles

இழுத்தல் வசதியில்லாத வண்டிகள்

கட்டி இழுத்து செல்லும் சூழ்நிலைகளில் உங்கள் பயணிகளை ஏற்றி செல்லும் வாகனத்திற்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படும்

இதில் எதற்கெல்லாம் காப்பீடு அளிக்கப்படுவதில்லை?

உங்கள் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது, எனவே, நீங்கள் கிளைம்  செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. காப்பீடு அளிக்கப்படாத சில சூழ்நிலைகள் பின்வருமாறு:

தேர்டு பார்ட்டி பாலிசியை வைத்திருப்பவருக்கு ஏற்படும் சொந்த சேதங்கள்:

நீங்கள் தேர்டு பார்ட்டி பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்ஸ் பாலிசி மட்டுமே வைத்திருக்கும் பட்சத்தில், உங்களின் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படாது.

குடிப்போதை அல்லது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

கிளைம் செய்யும் போது இன்சூர் செய்யப்பட்ட வாகனத்தின் உரிமையாளர்-ஓட்டுநர் குடிப்போதையிலோ அல்லது சரியான உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதாக தெரியவந்தால் காப்பீடு அங்கீகரிக்கப்படாது (கவர் செய்யப்படாது).

அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள்

உரிமையாளர்-ஓட்டுநரின் அலட்சியத்தால் வாகனத்திற்கு ஏற்படும் சேதம் அல்லது இழப்பு கவர் செய்யப்படாது. எடுத்துக்காட்டிற்கு, ஏற்கனவே நகரத்தில் வெள்ளம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அப்படியிருந்தும் ஒருவர் வாகனத்தை எடுத்து வெளியே ஓட்டக்கூடாது என்று பரிந்துரைத்தும் எடுத்துச்செல்வது.

பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள்

விபத்து, இயற்கை சீற்றம் அல்லது தீயினால் நேரடியாக ஏற்படாத சேதம் அல்லது இழப்பு கவர் செய்யப்படாது.

டிஜிட்டின் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்சின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

முக்கிய அம்சங்கள்

டிஜிட் பெனிஃபிட்

கிளைம் செயல்முறை

பேப்பர்லெஸ் கிளைம்ஸ்

வாடிக்கையாளர் சேவை

24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை

கூடுதல் கவரேஜ்

PA கவர்ஸ், லீகல் லயபிலிட்டி கவர், ஸ்பெஷல் எக்ஸ்க்லூஷன்ஸ் மற்றும் கட்டாய டிடக்டபிள்ஸ் மற்றும் பல,ry Deductibles, etc

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள்

தனிப்பட்ட சேதங்களுக்கு வரம்பற்ற லையபிலிட்டி, 7.5 லட்சங்கள் வரை சொத்து/வாகன சேதங்களுக்கு வழங்கப்படும்.

பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் பயணிகளை ஏற்றி செல்லும் வாகனத்தின் வகை பொறுத்து, அதாவது பேருந்து, ரிக்ஷா , வேன் மற்றும் பல ஆகியவற்றை பொறுத்து, நீங்கள் தேர்வு செய்ய இரண்டு வகை முக்கிய பாலிசிகளை வழங்குகிறோம்.

லையபிலிட்டி மட்டுமே

ஸ்டாண்டர்ட் பேக்கேஜ்

×

கிளைமைக் கோருவது எப்படி?

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை கேட்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது!

டிஜிட் கிளைம் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

இந்தியாவில் ஆன்லைன் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்