டிரக் இன்சூரன்ஸ்

டிரக்கிற்கான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

I agree to the Terms & Conditions

Don’t have Reg num?
It’s a brand new vehicle

What is a Truck Insurance?

நான் ஏன் கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?

டிஜிட்-ன் கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபி-கள் போல நடத்துகிறோம், அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Customize your Vehicle IDV

வாகனத்தின் ஐடிவி(IDV)ஐ தனிப்பயனாக்குக

எங்களிடத்தில், உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப , உங்கள் வாகனத்தின் ஐடிவி-ஐ தனிப்பயனாக்கலாம்!

24*7 Support

24*7 மணி நேர வாடிக்கையாளர் சேவை

அரசு விடுமுறை நாட்கள் உட்பட எல்லா நாட்களிலும் 24*7 மணிநேரமும் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளலாம்

சூப்பர் ஃபாஸ்ட் கிளைம்கள்

சில நிமிடங்களே எடுக்கும் ஸ்மார்ட்ஃபோன் மூலம் செய்யக்கூடிய வாகன சுய சோதனை(செல்ஃப் இன்ஸ்பெக்ஷன்) செயல்முறை!

கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸ் எந்தெந்த இழப்புகளுக்குக் காப்பீடு அளிக்கிறது?

Accidents

விபத்துக்கள்

விபத்தால் உங்கள் டிரக்கிற்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கிறது.

Theft

திருட்டு

திருட்டால் உங்கள் டிரக்கிற்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கிறது

Fire

தீ விபத்து

தீ விபத்தால் உங்கள் டிரக்கிற்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கிறது.

Natural Disasters

இயற்கை பேரிடர்கள்

இயற்கை பேரிடர்களால் உங்கள் டிரக்கிற்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கிறது

Personal Accident

தனிநபர் விபத்து

உங்கள் டிரக் விபத்துக்குள்ளானால், அதைப் ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது இறந்தாலோ காப்பீடு அளிக்கிறது.

Third Party Losses

மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் இழப்புகள்

உங்கள் டிரக்கினால் மூன்றாம் தரப்பு தனிநபர், வண்டி அல்லது சொத்துக்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கிறது.

Towing Disabled Vehicles

வாகனத்தை இழுத்துச் செல்லும் (டோவ்விங்) போது ஏற்பட்ட சேதம்

உங்கள் டிரக்கை இழுத்துச் செல்லும் (டோவ்விங்) போது ஏற்படும் சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கிறது.

எவ்வித இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு காப்பீடு இருக்காது?

நீங்கள் கிளைம் செய்யும் போது ஏமாற்றத்தை தவிர்த்திட, உங்களின் கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸ் பாலிசியில் எவ்வித இழப்புகள் மற்றும் சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கப்படாது என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம். அதுபோன்ற சில சூழ்நிலைகள் பின்வருமாறு:

தேர்டு- பார்ட்டி பாலிசி வைத்திருப்பவருக்கு ஏற்படும் சொந்த சேதங்கள்

தேர்டு- பார்ட்டி லையபிலிட்டி பாலிசியை மட்டும்  வைத்திருந்தால், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் எதற்கும் காப்பீடு அளிக்கப்படாது.

குடிபோதையில் வண்டி ஓட்டுதல் அல்லது லைசன்ஸ் இன்றி வண்டி ஓட்டுதல்

கிளைம் செய்த டிரக்-ன் உரிமையாளர்-ஓட்டுநர்  குடித்துவிட்டு அல்லது செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் ஓட்டுவதால் ஏற்படும் சேதங்களுக்கு காப்பீடு அளிக்கப்படாது.

அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள்

உரிமையாளர்-ஓட்டுநர் அலட்சியத்தால் ஏற்படும் சேதங்களுக்கு (ஏற்கனவே வெள்ளம் இருக்கும்போது வாகனம் ஓட்டுவது போன்றவை) காப்பீடு அளிக்கப்படாது.

பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள்

விபத்து/இயற்கை சீற்றம் போன்றவற்றின்  நேரடி விளைவாக ஏற்படாத சேதங்களுக்கு காப்பீடு அளிக்கப்படாது. (உதாரணத்திற்கு: ஒரு விபத்துக்கு பின், சேதம் அடைந்த டிரக் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அதன் விளைவாக என்ஜின் சேதமடைந்தால், அந்த இழப்புகள் இதில் அடங்காது)

டிஜிட்-ன் கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

டிஜிட்-ல் இருக்கும் பயன்கள்

கிளைம் செயல்முறை

ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்க தேவையில்லாத கிளைம் செயல்முறை

வாடிக்கையாளர் சேவை

24*7 மணிநேர வாடிக்கையாளர் சேவை

கூடுதல் கவரேஜ்

பிஏ கவர்ஸ், லீகல் லையபிலிட்டி கவர் , சிறப்பு விலக்குகள்/ஸ்பெஷல் எக்ஸ்க்ளூஷன்ஸ் மற்றும் கட்டாயமான கழிப்புகள்/கம்பல்சரி டிடக்டபிள்ஸ் , இன்னும் பல

மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் இழப்புகள்

தனிப்பட்ட /தனிநபர் சேதங்களுக்கு வரம்புகள் இல்லாத லையபிலிட்டி, சொத்து/வாகன சேதங்களுக்கு 7.5 லட்சம் வரை இழப்பீடு

கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

உங்கள் டிரக்கின் வகை மற்றும் அதன் தேவைக்கு ஏற்ப, நாங்கள் இரண்டு வகையான பாலிசிகளை வழங்குகிறோம். இருப்பினும், வண்டிக்கு ஏற்படும் அபாயம் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வண்டி என்பதை கருத்தில் கொண்டு, உங்கள் டிரக் மற்றும் அதன் ஓட்டுநருக்கு ஏற்படும் இழப்புகளை ஈடு செய்யும் ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசியையும் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

லையபிலிட்டி ஒன்லி

ஸ்டாண்டர்ட் பேக்கேஜ்

×

கிளைம் செய்வது எப்படி?

Report Card

டிஜிட் இன்சூரன்ஸில் கிளைம்கள் எத்தனை விரைவாக கிடைக்கும்?

நீங்கள், உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுவாகத் தான் இருக்க வேண்டும். அதை நீங்கள் கேட்டதற்கு உங்களுக்கு ஒரு சபாஷ்!

டிஜிட்-ன் கிளைம் ரிப்போர்ட் கார்ட்-ஐ படிக்கவும்

எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்

பிரஜ்வல் Gs

முகமது ரிஸ்வான் என்னை நல்லா வழிநடத்தினார். என் வெஹிக்கில் இன்சூரன்ஸ்  ரின்நியூவல் பத்தின இன்ஃபர்மேஷன் எல்லாத்தையும் ஃபாலோ செஞ்சார்... அவருடைய வேலைய டெடிகேஷனோட செய்யறதுக்கு எனது பாராட்டுங்கள், கஸ்டமருக்கு  சொல்லி புரியவைப்பது என்பது  சுலபமான வேலை இல்லைனு எனக்குத் தெரியும், அதுக்காகவே டிஜிட் அவரைப் பாராட்டணும். இன்னொரு தடவை சொல்றேன் முகமது ரிஸ்வான் ரொம்ப அருமையா வேலை செய்றார்:)

அஜய் மிஷ்ரா

இந்த இன்சூரன்ஸ் கம்பெனி மார்க்கெட்கு புதுசு, ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல இது ஒரு பெரிய மோட்டார் இன்சூரன்ஸ் பிராண்டா ஆகுமுன்னு என்னால உறுதியா சொல்ல முடியும். நவம்பர் 25ஆம் தேதி என் வண்டி திருடு போச்சு. கம்ப்ளைண்ட் செஞ்சேன், அதுக்கு கோ-டிஜிட்-ன் பதில் நல்லா இருந்தது.  என் கஷ்டத்தைப் புரிஞ்சுகிட்டு, எனக்கு பெருசா எந்த தொந்தரவும் தராம கொஞ்ச நாளிலேயே அதை சரி செஞ்சிட்டாங்க. கிளைமை சீக்கிரம் கிடைக்க எனக்கு உதவிய   திரு. சிவ்ரின் மண்டல் (ரொம்ப சின்சியாரான ஊழியர்) அவருக்கு நன்றி. நான் கோ-டிஜிட் மோட்டார் இன்சூரன்ஸ் எடுத்ததில் ரொம்ப சந்தோஷம். எனது கிளைம் கிடைக்க ஹெல்ப் செய்ய சிவ்ரின் கிடைத்தது என்அதிர்ஷ்டம்.கோ-டிஜிட் மற்றும் சிவ்ரினுக்கு தாங்க்ஸ்!

சித்தார்த் மூர்த்தி

என்னுடைய 4வது வெஹிக்கிள் இன்சூரன்ஸை கோ-டிஜிட்டிலிருந்து வாங்கிய அனுபவம் சிறப்பாக இருந்தது. செல்வி.பூனம் தேவி பாலிசி குறித்த தகவல்களை நன்றாக விளக்கினார், அதே போல் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு என்ன என்பதையும் நன்கு அறிந்திருந்தார். என் தேவைகளுக்கு ஏற்ப தோராய மதிப்பீட்டினை (Quote) வழங்கினார். மேலும் ஆன்லைன் மூலம் பேமென்ட் செய்வதில் எந்த சிக்கலும்  இல்லை. இதை விரைவில் செய்து முடித்த பூனத்திற்கு நன்றி. வாடிக்கையாளர் உறவு மேம்பாட்டுக்  குழு (கஸ்டமர் ரிலேஷன்ஷிப் டீம்) நாளுக்கு நாள் மெருகு ஏறி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்!! சியர்ஸ்.

Show more

இந்தியாவிலுள்ள கமர்ஷியல் டிரக் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் டிரக் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குவது பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்