காம்ப்ரிஹென்சிவ் மோட்டார் இன்சூரன்ஸ்

காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) இன்சூரன்ஸ் பாலிசி

வாகனம் ஓட்டுவது என்பது ஒருவரது சௌகரியம் மற்றும் வசதிக்கானது. ஆனால், சில சமயங்களில் சாலையில் டூ வீலர் அல்லது ஃபோர் வீலர்களை ஓட்டிச் செல்வதால் எதிர்பாராத விபத்துகள்  நேரும். இதுபோன்ற தனிநபர் பயன்படுத்தும் வாகனமானது பழுதடைந்து போகும் நிகழ்வுகளின் போது, ஒரு காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) இன்சூரன்ஸை வாங்குவது என்பது தான் சிறந்த மாற்று வழியாகும்.

காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) இன்சூரன்ஸ் என்றால் என்ன?

தற்செயலாக வாகனம் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு (உடல் காயம் அல்லது சொத்து சேதத்திற்கு) சேதம் ஏற்படும் போது உரிமையாளருக்கு ஏற்படும் நிதி செலவுகளைக் காப்பீடு செய்வதே காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) இன்சூரன்ஸ் என குறிப்பிடப்படுகிறது.

இன்சூரன்ஸ் பாலிசிக்கான சந்தை தேவையைப் புரிந்துகொள்ள , ரெகுலேட்டர் ஐஆர்டிஏஐ மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்தியது. இது ஒரு காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) பேக்கேஜ் பாலிசி மற்றும் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி பாலிசி என இரண்டு வகைகளாகக் கிடைக்கிறது.

ஒரு காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) இன்சூரன்ஸ் என்பது பின்வரும் பாதுகாப்பிற்கான உத்தரவாதமாகும்:

a) சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதம்

b) விபத்துக்குள்ளான தேர்டு பார்ட்டி நபருக்கு ஏற்படும் இழப்புகளுக்கான சேதம்.

ஏதேனும் விபத்தின்போது இறப்பு ஏற்பட்டு இழப்பீடு வழங்கப்படாவிட்டாலே ஒழிய, இன்சூரன்ஸ் நிறுவனம் ரிப்பேர்களுக்கான கிளைம்களைத் தீர்க்கப் பொறுப்பாகும். சாலை விபத்து காரணமாக மரணம் ஏற்பட்டால், ஒரு தனிநபரின் பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு எம்ஏசிடி மூலம் இழப்பீடு வழங்கப்படும். காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) கவர் என்பது ஒருவர் தங்கள் வாகனத்திற்கு வாங்கக்கூடிய அதிகபட்ச இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஆகும்.

காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸில் என்னென்ன அடங்கும்?

தேர்டு பார்ட்டி நபரின் லையபிலிட்டி இன்சூரன்ஸைப் போலல்லாமல், காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸை வாங்குவது என்பது கட்டாயமில்லை. ஒருவர் தனது சொந்த சேதங்களைப் காப்பீடு செய்ய விரும்பினால், ஒரு காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸை வாங்குவது உரிமையாளரின் சொந்த விருப்பமாகும்.

விபத்தின் அளவு மற்றும் சேதத்தின் அளவு மிகப்பெரியதாக இருக்கலாம். பழுதுபார்க்க தேவையான தொகை மிக அதிகமாக இருக்கலாம். ஒரு காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பின்வருவனவற்றிக்கு கவரேஜ் வழங்குகிறது:

  • வாகனம்: சொந்த காரின் சேதத்திற்கு ஆகும் ரிப்பேர் செலவுகள் காம்ப்ரிஹென்சிவ் மோட்டார் பாலிசியின் கீழ் காப்பீடு அளிக்கப்படும். விபத்து காரணமாக இழப்பு ஏற்படலாம். வேறு சில வகையான இழப்புகளான கண்ணாடி சேதம் மற்றும் விண்டுஷீல்டு சேதம், ஏதேனும் வெளிப்புற தாக்கத்தினால் ஏற்படும் சேதம், விலங்குகளால் ஏற்படும் சேதம், முதலியன காரில் துளைகள் ஏற்படுத்தி கோரமானத் தோற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், கவலைப்பட வேண்டாம், இந்த திட்டத்தின் கீழ்- இவை அனைத்திற்கும் காப்பீடு அளிக்கப்படும்!
  • தேர்டு பார்ட்டி லையபிலிட்டி கவர்: இது காம்ப்ரிஹென்சிவ் கவரின் கட்டாயப் பகுதியாகும். டிபி லையபிலிட்டி என்பது இன்சூர் செய்யப்பட்ட காரின் காரணமாக தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் காயம் அல்லது அவர்களது சொத்துக்கு ஏற்படும் சேதத்திற்குக் காப்பீடு அளிக்கிறது.
  • பெர்சனல் ஆக்சிடென்ட் கவர்: இது உரிமையாளர்-ஓட்டுனரைப் பாதுகாக்கும் தனிப்பட்ட விபத்துக்கான கட்டாயக் காப்பீடு ஆகும். இதன் வரம்பு 2 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • கார் திருட்டு: உங்கள் கார் எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அது தொலைந்து போகலாம், திருடப்படலாம் அல்லது ரிப்பேர் செய்ய வேண்டிய அளவிற்கு சேதமடையலாம். உங்கள் கார் மற்றும் பாலிசியின் இன்சூரன்ஸ் தொகையின் அடிப்படையில் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் அதை ஈடுசெய்யும்.
  • இயற்கை சீற்றங்கள்: தீ, கலவரம் மற்றும் குண்டு வெடிப்பு, மரங்கள் மற்றும் பிற பொருட்கள் விழுதல், காரின் அருகில் விழும் பாறைகள்/ பிற பொருட்கள், புயல், வெள்ளம், சூறாவளி, ஆலங்கட்டி மழை, காற்று மற்றும் பூகம்பங்கள் போன்ற சில பேரழிவுகள் காரை சேதப்படுத்தலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ரிப்பேர் மற்றும் இழப்புக்கான செலவை இன்சூரன்ஸ் பாலிசி வழங்கும்.
  • ஆட்-ஆன் கவர்கள்: சில ஆட்-ஆன்களை பிரீமியத்தைச் செலுத்திய பிறகு, அடிப்படைக் கவரில் சேர்க்கலாம். ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர், ரோடுசைடு ஆசிஸ்டன்ஸ், என்ஜின் புரொட்டெக்ஷன், பேசஞ்சர் கவர் மற்றும் பிற இது போன்ற இன்சூரன்ஸ் கவர்களின் சில எடுத்துக்காட்டுகள்.

காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) மற்றும் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி பாலிசிக்கு இடையே உள்ள வேறுபாடு

காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி இன்சூரன்ஸ்
கவரேஜ் இது வாகனத்திற்கு ஏற்படும் சேதத்திற்கு கவரேஜ் வழங்குகிறது, உடலில் காயம் அல்லது சொத்து சேதத்திற்கான தேர்டு பார்ட்டி லையபிலிட்டிக்கும் காப்பீடு அளிக்கிறது. தேர்டு பார்ட்டியால் ஏற்படக்கூடிய உடல் காயம் அல்லது சொத்து சேதம் காரணமாக உண்டாகும் எந்தவொரு லையபிலிட்டிக்கும் காப்பீடு வழங்குகிறது
வாகனங்கள் ரிப்பேர் செய்ய அதிகப்படியாக செலவாக்கூடியப் புதிய வாகனம் அல்லது வாங்கி ஒரு சில ஆண்டுகளே ஆன வாகனத்திற்கு தான் காம்ப்ரிஹென்சிவ் காப்பீடு தேவைப்படும். இம்மாதிரியான ரிப்பேர்கள் பொதுவாக ஒரு அசம்பாவித நிகழ்வு அல்லது சாலை விபத்திற்கு பின் தேவைப்படலாம். வாங்கி 10 ஆண்டுகளுக்கு மேலான வாகனத்தின் ரிப்பேர் செலவுகளை உரிமையாளரே தாங்கிக்கொள்ள முடியும்போது தேர்டு பார்ட்டி லையபிலிட்டி இன்சூரன்ஸ் மட்டுமே போதுமானது. இதுபோன்ற வாகனங்களுக்கு செலவு அதிகமாக இருக்காது.
இன்சூரன்ஸ் செய்ய ஆகும் செலவு காயங்கள், சேதம் மற்றும் திருட்டுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குவதால், காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் கவர் விலை உயர்ந்ததாக உள்ளது. காம்ப்ரிஹென்சிவ் கவருடன் ஒப்பிடுகையில் ஒரு தேர்டு பார்ட்டி லையபிலிட்டி இன்சூரன்ஸ் மலிவானது.
விலை பல்வேறு காப்பீட்டாளர்கள் வழங்கும் விகிதங்கள் மற்றும் தள்ளுபடிகளைப் பொறுத்து காம்ப்ரிஹென்சிவ் கவரின் விலை மாறுபடும். தேர்டு பார்ட்டி லையபிலிட்டி இன்சூரன்ஸின் விலை ரெகுலேட்டரால் நிர்ணயிக்கப்படுகிறது.

காம்ப்ரிஹென்சிவ் பாலிசி வாங்குவதின் நன்மைகள்

நிதி செலவுகளைத் தவிர்க்கும் செயல்முறையைச் செயல்படுத்த, உங்கள் வாகனத்திற்கு காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவது தான் சிறந்தது. இது அதிக நன்மைகளைக் கொண்டுள்ளது, ஏனெனில்:

  • வாகனத்தின் சொந்த சேதத்தை உள்ளடக்குகிறது: காம்ப்ரிஹென்சிவ் கவரின் கீழ், பேரழிவு நிகழ்வுகளால் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதத்திற்குயக் காப்பீடு அளிக்கப்படுகிறது. சாலையின் நடுவே உள்ள மரத்தில் உங்கள் காரை நீங்கள் மோதுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதனால், கார் சேதமடைந்து, அதனை பழுதுபார்க்க வேண்டும். இதுபோன்ற, சூழ்நிலையில் உங்களின் இன்சூரன்ஸ் பாலிசி அதை உங்களுக்காக சரி செய்யும்.
  • உடல் காயம் மற்றும் சொத்து சேதம் ஆகிய இரண்டிற்கு தேர்டு பார்ட்டி லையபிலிட்டிகளை உள்ளடக்குகிறது: ஒருக்கு உடல் ரீதியான காயம் மற்றும் சொத்து சேதத்தை ஏற்படுத்தியதற்காக இன்சூர் செய்யப்பட்டவர் தவறு செய்ததாகக் கருதப்படும் போது இது லையபிலிட்டி செலவுகளையும் இன்சூரன்ஸ் ஈடு செய்யும். நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும்போது நீங்கள் சமநிலையை இழந்து சாலையைக் கடக்கும் ஒரு மனிதர் மீது மோதுகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த நபருக்கு காயம் ஏற்பட்டு விட்டால், அது உங்கள் தவறு. காம்ப்ரிஹென்சிவ் பாலிசியின் கீழ் உங்களால் மூன்றாம் நபருக்கு ஏற்படும் இத்தகைய செலவுகளை நீங்கள் ஈடுகட்டலாம்.
  • ஆட்-ஆன் கவர்கள் வழங்கப்படுகின்றன: சில ஆட்-ஆன் கூடுதல் பாதுகாப்பிற்காக வாங்க வேண்டும். ஜீரோ டிப்ரிஸியேஷன், இன்ஜின் புரொட்டெக்ஷன் போன்றவை தேர்டு பார்ட்டி லையபிலிட்டி பாலிசியின் கீழ் அனுமதிக்கப்படாதவை ஆகும். மழை நீர் தேங்கிய சாலையில் வாகனம் ஓட்ட வேண்டிய சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள். காரின் இன்ஜின் மழைநீரில் மாட்டிக்கொண்டதால் அது வேலை செய்யாமல் போகலாம். நீங்கள் இன்ஜின் புரொட்டெக்ஷன் பாலிசியை ஒரு ஆட்-ஆனாக வாங்கியிருந்தால், ரிப்பேர் பார்க்க ஆகும் செலவை நீங்கள் நிச்சயமாக திரும்பப் பெறலாம்.

சமீபத்தில் இன்சூரன்ஸ் ரெகுலேட்டரானது உரிமையாளரான ஓட்டுநருக்கானக் கட்டாய பெர்சனல் ஆக்சிடென்ட் பாலிசியைச் சேர்ப்பதன் மூலம் மோட்டார் பாலிசியின் கீழ் கவரேஜை மேம்படுத்தியுள்ளது. இந்த பிஏ கவரின் குறைந்தபட்ச வரம்பு ரூ.15 லட்சமாகும்.