கேஸ் 1: நீங்கள் ஒரு புதிய சொகுசு பைக்கை வாங்கியிருந்தால்
ஒரு சொகுசு பைக்கின் உரிமையாளராக இருப்பது உங்களை பெருமையாக உணர வைக்கலாம், ஆனால் நிறைய ரெஸ்பான்சிபிளிட்டிகளும் வருகிறது. முதலாவதாக, ஒரு காம்ப்ரிஹென்சிவ் டூ வீலர் இன்சூரன்ஸை பெறுவதன் மூலம் அனைத்து வகையான டேமேஜ்கள் மற்றும் விபத்துக்களிலிருந்தும் அதைப் பாதுகாக்க வேண்டும். இது தேர்டு பார்ட்டி லையபிளிட்டி மற்றும் ஓன் டேமேஜ் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. உங்கள் விலையுயர்ந்த வாகனத்தின் மேம்பட்ட பாதுகாப்பிற்கு, நீங்கள் பொருத்தமான ஆட்-ஆன்களை வாங்க வேண்டும்.
ஜீரோ டிப்ரிஸியேஷன் கவரானது அதன் விலையுயர்ந்த பாகங்களின் டிப்ரிஸியேஷனைக் கருத்தில் கொள்ளாமல் அதிகபட்ச கிளைம் தொகையைப் பெற்றுத்தரும். திருட்டு அல்லது மொத்த நஷ்டம் ஏற்பட்டால், ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர் மூலம் உங்கள் டாப்-எண்ட் பைக்கைப் பாதுகாக்கலாம்.
என்ஜின் புரட்டெக்ஷன் கவரைப் பெறுவதன் மூலம் உங்கள் பைக்கின் விலையுயர்ந்த என்ஜினை ரிப்பேர் பார்க்கும்போது ஏற்படும் பெரும் செலவைத் தவிர்க்கலாம். மேலும், சொகுசு பைக்கின் லூப்ரிகண்டுகள், எண்ணெய்கள், நட்டுகள், போல்ட்கள், திருகுகள், வாஷர்கள், கிரீஸ் போன்றவற்றின் ரீப்லேஸ்மெண்ட் காஸ்ட்டை ஈடுகட்ட கன்ஸ்யூமபில் ஆட்-ஆனைப் பெறுவது நல்லது.
கேஸ் 2: 8 ஆண்டு கால பைக்கை நீங்கள் தினமும் ஓட்டினால்
பல மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் 8 வருட பைக்கிற்கான டூ வீலர் இன்சூரன்ஸின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொள்வதில்லை, ஆனால் அதற்கு சட்டப்பூர்வமாக குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். உங்கள் பைக்கின் வயதைக் கருத்தில் கொண்டு, விபத்துக்கள், திருட்டு, தீ, இயற்கை பேரழிவுகள் மற்றும் பலவற்றின் போது ரிப்பேர் பார்க்கவும் அல்லது ரீப்லேஸ்மெண்ட் பாதுகாப்பை வழங்கும் ஓன் டேமேஜ் கவரேஜ் வைத்திருப்பது நல்லது.
மாற்றாக, நீங்கள் தினமும் உங்கள் பைக்கை ஓட்டுவதால் ஒரு காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸைப் பெறுவது நல்லது, ஏனெனில் இது உங்கள் பைக்கை பல காரணிகளிலிருந்து பாதுகாக்கும்.
கேஸ் 3: பயன்படுத்தாத பல ஆண்டு கால ஸ்கூட்டரை வைத்திருந்தால்
தலைமுறை தலைமுறையாக உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஸ்கூட்டர் போன்ற சில உடைமைகள் உணர்வுப்பூர்வமான மதிப்பைக் கொண்டுள்ளன. இது அரிதாகவே பயன்படுத்தப்பட்டாலும், சட்டத் தேவைகளுக்கு இணங்க குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸாவது வைத்திருப்பது அவசியம். நீங்கள் ஸ்கூட்டரை பயன்படுத்தாததால், காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் மற்றும் ஆட்-ஆன்களைத் தவிர்க்கலாம்.