சாதாரணமான பாலிசிகளை விட 3 வருட டூ வீலர் இன்சூரன்ஸ் பல விதமான நன்மைகளை வழங்குகிறது. அவற்றுள் பின்வரும் முக்கிய நன்மைகளுக்காக நீங்கள் இந்த பாலிசியை வாங்கலாம்:
1. பாலிசியை புதுப்பிக்காததால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்த்திடலாம்
உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி முடிவடையும் தேதி மற்றும் நீங்கள் அதை புதுப்பிக்கும் வரை இருக்கும் இடைப்பட்ட காலத்தில் நீங்கள் பல விதமான அபாயங்களை சந்திக்க நேரிடலாம். உதாரணத்திற்கு, அந்தக் சமயத்தில் விபத்து ஏற்பட்டு, போக்குவரத்து விதிமீறலுக்காகவும் ஃபினான்ஷியல் லையபிலிட்டிக்காகவும் ஒரு பெரிய அபாராதத் தொகையை கட்டும் நிலை ஏற்பட்டால், அது உங்களுக்கு பெரும் இழப்பு ஆகும்.
3 வருடங்களுக்கான பைக் இன்சூரன்ஸை வாங்குவதன் மூலம் பாலிசி டேர்ம்மான 3 வருடங்களுக்கு இது போன்ற அபாயமான சூழல்லிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
2. வசதி
பெரும்பாலான சூழலில்,டூ வீலரின் உரிமையாளர்கள் தங்களது 1 வருட இன்சூரன்ஸ் பாலிசியை அதன் காலம் முடிவடைந்த பிறகு புதுப்பிக்க மறந்துவிடுகிறார்கள். 3 வருட பிளானை வாங்குவதன் மூலம், நீங்கள் உங்கள் பாலிசியை புதுப்பிப்பதை பற்றி 3 வருடங்களுக்கு கவலைக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
அதனால்தான், இந்தத் பிளான்கள் மிகவும் வசதியானவையாக கருதப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் நீங்கள் உங்கள் தேர்ட்-பார்டி இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
3. நீண்ட காலம் என்று பார்க்கும் போது இது மலிவானது
ஒரே நேரத்தில் 3 வருடங்களுக்கான பிரீமியத் தொகையை செலுத்தி 3-வருட இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கலாம். இதை மேலோட்டமாக பார்க்கும் போது பெரிய செலவாகத்தான் தெரியும், ஆனால், நீண்ட காலத்திற்கு என்று பார்க்கையில் நீங்கள் கட்டும் பிரீமியத் தொகையின் மூலம் நீங்கள் அதிகமாக சேமிக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரியும்.
ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் இன்சூரன்ஸ் பாலிசிகளின் பிரீமியத் தொகையினை சில சதவீதங்கள் அதிகரிப்பது வழக்கம். இந்த பிரீமியத் தொகையானது பணவீக்கம் காரணமாக 10-15% விகிதங்கள் வரை உயரலாம்.
3 வருட பாலிசி வைத்திருப்பதன் மூலம் நீங்கள் பாலிசி காலம் முடிவடையும் வரை வருடா வருடம் அதிகரிக்கும் பிரீமியத் தொகையிலிருந்து தப்பிக்கலாம். இந்த காரணத்தால் அதிக நாட்களுக்கு என்று பார்த்தால் இது மிகவும் மலிவானதாக இருக்கும்.
4. அதிகமான ஐடிவி ஐ பெறலாம்
இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ அல்லது ஐடிவி(IDV ) என்பது வண்டி தொலைந்த பின் , அதனால் ஏற்பட்ட இழப்புக்கு இன்சூரர் வழங்குவதாக உறுதியளித்த மொத்தத் தொகை ஆகும்.
ஐடிவி(IDV) =உற்பத்தியாளரின் பதிவு விலை – வண்டியின் டிப்ரிஸியேஷன் (தேய்மானம்). இந்தத் தொகையானது உங்கள் டூ வீலரின் டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால், நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்கும் போது இந்த மதிப்பீடானது மாறும்.
நீங்கள் 3 வருட இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கினால் அந்த மூன்று வருட டேர்ம்மில் உங்களின் ஐடிவி (IDV)-இல் எந்தவித மாற்றமும் இருக்காது. நீங்கள் உங்கள் வண்டியை தொலைத்தால் அதற்காக அதிக இழப்பீட்டுத் தொகையை பெறலாம்.
5. அதிகமான நோ கிளைம் போனஸ்
முந்தைய ஆண்டில் நீங்கள் எந்தக் கிளைமும் செய்யாதிருந்தால், உங்கள் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் போது உங்கள் பாலிசி பிரீமியத்தில் கிடைக்கும் தள்ளுபடியே நோ கிளைம் போனஸ் எனப்படும்.
ஒரு வருட பாலிசிகளைக்காட்டிலும் மூன்று வருடங்களுக்கான டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் அதிக நோ கிளைம் போனஸ் பலன் அடையலாம்.
உதாரணத்திற்கு, உங்களின் முந்தைய பாலிசியின் என்சிபி (NCB) 20%ஆக இருந்தால், நீங்கள் 3 வருட பாலிசியை வாங்கும் போது நீங்கள் கட்டவிருக்கும் பாலிசி பிரீமியத்துக்கும் இந்த 20% என்சிபி (NCB) ஆனது பொருந்தும்.
இதைவிட, சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் பாலிசியின் காலம் முடிவடையும் போது தனது பாலிசிதாரர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தள்ளுபடி அளிக்கின்றனர். அதிலும் ஒரு வருடத்திற்கான பாலிசிகளுக்கான என்சிபி(NCB)ஐ விட லாங் டேர்ம் பாலிசிகளுக்கான என்சிபி(NCB)ஐ அதிகமாகத் தருகின்றனர்.
6. லாபகரமான தள்ளுபடிகள்
டூ வீலர் உரிமையாளர்களை லாங் டேர்ம் இன்சூரன்ஸை வாங்க வைக்கும் முயற்சியாக, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் லாபகரமான தள்ளுபடிகளை வழங்குகின்றன. வண்டியின் உரிமையாளர்கள் இன்சூரன்ஸ் கவரை தள்ளுபடியில் வாங்கும் போது அவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
7. இன்சூரன்ஸை புதுப்பிப்பதற்கு பிரேக்-இன் பாலிசி
உங்கள் இன்சூரன்ஸை புதுப்பிப்பதற்கும் பாலிசி காலம் முடிவடைந்த தேதிக்கும் நடுவே இடைவெளி இருந்தால், சில சமயம் உங்கள் பாலிசியை புதுப்பிக்கும் போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்கள் டூ வீலரை ஆய்வு செய்த பிறகே உங்கள் பாலிசியை புதுபிக்க ஒத்துக்கொள்கின்றன. இது பிரேக்-இன் பாலிசி என்றழைக்கப்படுகிறது. இதனால், பாலிசியை புதுப்பிக்கும் போது அதிகமான பிரீமியத் தொகை செலுத்த நேரிடலாம்.
3- வருட லாங் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி தேர்வு செய்வதன் மூலம் உங்கள் பாலிசியில் பிரேக்-இன் நிகழ்வதைத் தவிர்க்கலாம். மேலும், கூடுதலான பிரீமியத் தொகையை செலுத்தாமல் தொடரலாம்.
உங்கள் டூ வீலரால் ஏற்படும் எதிர்பாராத பண நெருக்கடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல விதமான பலன்களை ஒருசேர அளிக்கும் பல வருடங்களுக்கான டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குவது சிறந்த முடிவு ஆகும்.
லாங் டேர்ம் இன்சூரன்ஸ் கவர்களை நடைமுறைக்கு கொண்டு வந்த ஐஆர்டிஏ(IRDA)-ன் இந்த நடவடிக்கையை இந்தியாவில் உள்ள பெரும்பாலான முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வரவேற்கின்றன. எனவே, நீங்கள் உங்களின் தேவைக்கு ஏற்ப சரியான கவரை தேர்ந்தெடுக்க பலவகையான இன்சூரன்ஸ் தேர்வுகள் உள்ளது.
எதற்காக காத்துக்கொண்டிருக்கிறீர்கள்! 3 வருட பாலிசியைக் கொண்டு உங்களின் டூ வீலரை இன்றே இன்சூர் செய்யுங்கள்!