மற்ற எந்தவொரு டூ-வீலர் இன்சூரன்ஸையும் போலவே, செகண்ட்-ஹேண்ட் பைக் இன்சூரன்ஸ் என்பது தேர்டு-பார்ட்டியினருக்கும், வண்டி உரிமையாளருக்கும் ஏற்படக் கூடிய சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்தும் பாதுகாக்கின்றது.
செகண்ட்-ஹேண்ட் பைக்-ஐ ஏன் இன்சூர் செய்ய வேண்டும்?
நீங்கள் வாங்கிய செகண்ட்-ஹேண்ட் பைக் நல்ல நிலைமையில் உள்ளதா? நன்றாகவே கூட இருக்கலாம், ஆனாலும் வண்டியின் முந்தைய உரிமையாளர் பயன்படுத்தியதால் உண்டான சேதங்கள் குறித்து நமக்கு தெரியாது. உங்கள் செகண்ட்-ஹேண்ட் பைக்-கிற்கு இன்சூரன்ஸ் அவசியமானது. ஏன்? கீழ்க்கண்ட அனுமானங்களைக் கொண்டு, இதனை நாம் புரிந்து கொள்ள முயலுவோம்:
# நீங்கள் வாங்கிய செகண்ட்-ஹேண்ட் பைக்கில் கியர் லூசாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் டிராஃபிக்கில் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிற போது, உங்கள் கியர் வேலை செய்யாமல் போய், நீங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் போய் விபத்து நேர்ந்து விடுகிறது. இந்த விபத்தின் காரணமாக உங்கள் பைக்-இன் மட்கார்டு (mudguard) சேதமடைந்து விட்டது, மற்றும் ஹேண்டில் திருகியிருக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தில், உங்கள் பைக்கிற்கு ஏற்பட்ட சேதங்களை பழுது நீக்குவதற்கான செலவுகளை இன்சூரன்ஸ் ஏற்றுக் கொள்கிறது. எனவே, எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் செகண்ட்-ஹேண்ட் பைக்-கிற்கு இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயமாகும்.
# ஒரு வேளை நீங்கள் சாலையைக் கடக்கும் ஏதேனும் ஒரு நபர் (தேர்டு-பார்ட்டி) மீது மோத நேர்ந்தால், இதனால் எழக் கூடிய சட்டச் சிக்கல்களிலிருந்து இன்சூரன்ஸ் கவர் உங்களை காக்கிறது. டிராஃபிக் லைட் மஞ்சள் நிற சிக்னலை காட்டிய கடைசி நிமிடங்களில், நீங்கள் பாதையை கடந்து செல்ல முயல்கிறீர்கள், அதே சமயத்தில், ஒரு பாதசாரியும் வேகமாக பாதையை கடந்து செல்கிறார். அடுத்த நொடியே நீங்கள் அவர் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. நீங்கள் மோதியதால் கீழே விழுந்து அடிபட்டு அவர் கையில் எலும்பு முறிவு ஏற்படுகிறது.
இங்கு தவறு முழுக்க உங்கள் மீது தான், எனவே நீங்கள் தான் இழப்பீடு வழங்குவதற்கு கடமைப்பட்டவராகிறீர்கள். தேர்டு பார்ட்டிக்கு உடல்ரீதியாக ஏற்படும் காயங்களுக்கு ஆகும் செலவுகளை இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்.
# வண்டி ஓட்டும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது, உங்களை பாதுகாப்பதற்கு மட்டுமின்றி, சாலையில் அடுத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருப்பதை தடுப்பதற்கும் மிகவும் கட்டாயமாகும்.
ஒரு மாலை வேளையில், இளைஞர்கள் பட்டாளம் வழக்கம் போல பைக் ஓட்டிச் செல்வதாக வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் தான் வாங்கியிருக்கும் செகண்ட்-ஹேண்ட் பைக்-ஐ வேகமாக ஓட்டிச் செல்கிறார். திடீரென்று, ஒரு கார் சாலையின் வலப்பக்கத்திலிருந்து வந்து அவரை இடித்து விடுகிறது. அந்த பைக்கை ஓட்டிய நபர் கீழே விழுந்து, இறந்து விடுகிறார். அவரிடம் உரிமையாளர்-ஓட்டுநருக்கான கட்டாயமான பிஏ (PA) கவர்-ஐ கொண்ட இன்சூரன்ஸ் கவர் இருக்கிறது. ஒரு வேளை மரணம் மற்றும் உடல் ஊனம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், இந்த இன்சூரன்ஸானது வாகனத்தின் உரிமையாளருடைய நாமினிக்கு (Nominee) இழப்பீடு வழங்குகிறது.
விபத்தின் காரணமாக ஏற்படும் காயங்களுக்கான மருத்துவ செலவுகள், வண்டியின் ரிப்பேர் செலவுகள் போன்ற நிதி நெருக்கடிகளை சமாளிப்பதற்கு, நமக்கு பைக் இன்சூரன்ஸ் தேவைப்படும். உங்கள் செகண்ட் ஹேண்ட் பைக் இன்சூரன்ஸிற்கான பிரீமியம் தொகையினை அறிந்து கொள்வதற்கு பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை உபயோகப்படுத்தவும்.