எலக்ட்ரிக் பைக் இன்சூரன்ஸ் என்பது மின்னாற்றலினால் இயங்கும் இரு சக்கர வாகனத்திற்கு எதிர்பாராதவிதமாக விபத்தினால், இயற்கை பேரிடர்களினால் அல்லது தீயினால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து உங்களுக்கு நிதிப் பாதுகாப்பு தரும் ஒருவகையான மோட்டார் இன்சூரன்ஸ்.
இ-பைக்குகள் அல்லது எலக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்கள் என்றும் அழைக்கப்படும் எலக்ட்ரிக் பைக்குகள், சாலையில் செல்லும் போது சுற்றுச்சூழலலை பாதுகாக்கும் நண்பனாகவும், (பெரும்பாலும்!) வழக்கமாக உபயோகிக்கும் பைக்குகளுக்கு பதில் சத்தமில்லாத மாற்றீடுகளாகவும் சாலையில் மிகவும் பிரபலமாகி வருகின்றன என்று சொன்னால் மிகையாது.
வழக்கமாக உபயோகிக்கும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஃபியூவலாக பெட்ரோல் தேவைப்படுவது போலவே, இவற்றிற்கு மின்சாரம் மூலம் ஆற்றல் அளிக்கப்படவேண்டும்(அதாவது பெரிய ஸ்மார்ட் போன் போல). .
இந்தியாவில் எலக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்கள் என்பது இப்போதும் ஒரு புதுமையான அறிமுகமாகவே இருக்கிறது. ஆனால், உங்கள் வாகனத்திற்கு பைக் இன்சூரன்ஸ் பாலிசியை பெறுவதற்கும், வழக்கமாக பயன்படுத்தப்படும் ஃபியூவல் -மூலம் ஓடும் வாகனத்திற்குப் பெறுவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.